ஹைதராபாத், இந்தியா, December 11, 2015 /PRNewswire/ --
Renewable Energy India Expo (REI India) வழங்குவோரிடமிருந்து
இரண்டு நாள் (17 - 18 டிசம்பர்2015) நடைபெறுகின்ற புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி வர்த்தகக் கண்காட்சியான RenewX 2015-ன் முதல் பதிப்பை ஹைதராபாதிலுள்ள ஹைடெக்கில் UBM India நடத்தும். தனது பிரபலமான பாரம்பரிய கண்காட்சியான Renewable Energy India Expo (REI India)-ஆல் தூண்டப்பெற்ற UBM India, RenewX 2015 மூலம், லாபகரமான தென்னிந்திய புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி சந்தைக்குள் பிரவேசித்து பயனடைவதற்கான தொழில்துறை தளம் ஒன்றை நிறுவனங்களுக்கு வழங்கும். தொழில்துறையின் போக்குகள், சவால்கள் மற்றும் இந்திய ஒழுங்கமைப்பு கட்டமைப்பு உள்ளிட்ட சந்தை குறித்த கணிப்புகளை கலந்தாலோசிப்பதற்காக, இந்தியாவின் பசுமை பொருளாதார சமுதாயம் ஒன்றுகூடுகின்ற இடமாகவும் இக்கண்காட்சி அமையும்.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
தெலிங்கானா அரசின் எரிசக்தித் துறை மற்றும் Solar Power Producers Association, Indian Biomass Association (IBA), Indo German Energy Forum (IGEF), New & Renewable Energy Development Corporation (NREDCAP), Electronic Industries Association A.P. (ELIAP), Federation of Telangana மற்றும் Andhra Pradesh Chambers of Conference and Industry (FTAPCCI) ஆகியவை உள்ளிட்ட கூட்டமைப்புகள், RenewX 2015-க்கு ஆதரவளிக்கின்றன.
உற்பத்தியாளர்கள், EPC-க்கள் மற்றும் சேவை வழங்குனர்களை ஒன்று சேர்த்துள்ள, RenewX 2015, தெலிங்கானா அரசின் மாநில அரங்கு, Mytrah Energy (India) Limited, Sova Power Limited, Waaree Energies Ltd, Surana Solar Limited, Chemtrols Solar Private Limited, Nuevosol Energy Pvt. Ltd, Premier Solar Systems Pvt Ltd, Goldi Green Technologies Pvt Ltd, Cirus Solar Private Limited, Galileisolar India Pvt Ltd, Fronius India. மற்றும் Topsun Energy Limited ஆகியவை உள்ளிட்ட முக்கிய பங்கேற்கும் காட்சியாளர்களைக் கொண்டுள்ளது.
இக்கண்காட்சியின் சிறப்பம்சங்களில், ஆற்றல்மிக்க, "காற்றை அடக்கிய சூரியோதய மண்டலம்"
("A Sunrise Region that tamed the Wind") என்ற இரண்டு நாள் மாநாடும் அடங்கும், இது தொழில்துறை எதிர்கொண்டுள்ள சவால்களையும், தொழில்துறை நாடும் தீர்வுகளையும் எடுத்துக்காட்டும்.
அறிவிப்பு குறித்து பேசும்போது, UBM இந்தியாவின் நிர்வாக இயக்குனரான திரு. Yogesh Mudras கூறியதாவது, "நிறுவப்பட்டது முதலே, தெலிங்கானா மாநிலம் சூரிய எரிசக்தியை தீவிரமாக ஆதரித்து வருகிறது மற்றும் தென்னிந்தியாவின் இதர மாநிலங்கள் புதுப்பிக்கக்கூடிய எரிசக்திக்கு ஊக்கமளித்து வருகின்ற நிலையில், இதன் லாபகரமான மற்றும் சாதகமான அரசு மற்றும் தொழில்துறை கொள்கைகள் காரணமாக, இம்மண்டலம் இத்துறைக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். இதன் விளைவாக, இம்மண்டலத்தில் இத்துறை சர்வதேச ஆர்வத்தையும் ஈர்த்துள்ளது மற்றும் அதைத் தொடர்ந்து வந்த முதலீடுகள், மிகப் பெரிய திட்டங்களின் அறிமுகத்திற்கு வழிவகுத்துள்ளன. இச்சூழலில், தென்னிந்தியாவில் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி தொழில்துறையின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதையும், நாட்டின் நிலையான பொருளாதார முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதையும் RenewX 2015 நோக்கமாகக் கொண்டுள்ளது."
UBM India பற்றி
UBM India, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM India, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM Asiaவின் ஒரு நிறுவனமான UBM India, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM plc-க்கு சொந்தமான UBM Asia, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM Asia, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் ubmindia.in.
ஊடகத் தொடர்பு:
மியூச்சுவல் PR
அனாகா ரௌட்
[email protected]
+91-9930375203
மிலி லால்வானி
[email protected]
+91-22-61727000
UBM India Pvt. Ltd.
Share this article