மும்பை, December 8, 2015 /PRNewswire/ --
4[வது] பதிப்பு, கடந்த ஆண்டைக் காட்டிலும் 30% அதிக வருகையாளர்களைக் கண்டது
மும்பையில், இரண்டு நாள் பாதுகாப்பு கண்காட்சியான ஆக்யுபேஷனல் சேஃப்டி & ஹெல்த் (OSH) இந்தியாவின் 4[வது] பதிப்பை, நவம்பர் 26 மற்றும் 27 அன்று, மும்பையிலுள்ள பாம்பே எக்ஸிபிஷன் சென்டரில் UBM India வெற்றிகரமாக நிறைவு செய்தது. இக்கண்காட்சி, உலக அளவிலான சிறந்த செயல்முறைகளைப் பரிமாறிக் கொள்வதற்கும், பணியிடப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்த மிகத் தீவிரமான சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கும், சர்வதேசப் புகழ்பெற்ற காட்சியாளர்கள், ஆலோசகர்கள், தொழில் நிபுணர்கள் மற்றும் முக்கிய அரசு அலுவலர்களை ஒரே தொழில்துறைத் தளத்தில் ஒன்றுகூடச் செய்தது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20151201/10135722-a )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20151201/10135722-b )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20150810/10128411 )
OSH India 2015-ன் தொடக்க விழா, UBM இந்தியாவின் நிர்வாக இயக்குனரான திரு. Yogesh Mudras, சிறப்பு விருந்தினரான, மஹாராஷ்டிர அரசின் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய இயக்ககத்தின் இயக்குனரான திரு. Jayendra M Motghare; இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தைச் சேர்ந்த, Directorate General Factory Advice Service and Labour Institutes (DGFASLI)-ன் தலைமை இயக்குனர் டாக்டர் Avneesh Singh; இந்திய அரசின் ஜவுளித் துறையைச் சேர்ந்த இநதிய தொழில்நுட்பம்சார் ஜவுளிக் கூட்டமைப்பின் செயலதிகார இயக்குனர் டாக்டர் Anup Rakshit; Euro Safety Footwear India Pvt Ltd.-ன் இயக்குனர் திரு. Varun Budhiraja; IOSH கட்டமைப்பின் ஸ்டிரான்ட் தலைவரான மிஸ். Kirsty Iliffe மற்றும் Drager South Africa Pty Ltd.-ன் மண்டலப் பிரிவு மேலாளர், மின்னிங், மத்திய கிழக்கு/ஆப்பிரிக்கா/தென் மேற்கு ஆசியா மற்றும் மண்டல மார்க்கெட்டிங் மேனேஜர் திரு. Reinhold Eisenbarth ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
வாய்ப்புகள் மிகுந்த மற்றும் இன்னும் பயன்படுத்தப்படாத வளஆதாரங்கள் நிறைந்த இந்தியச் சந்தையில் தங்கள் புதுமைத் தயாரிப்புகளையும், அறிவாற்றலையும் காட்சிப்படுத்துவதற்கு உலகெங்கிலும் உள்ள ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு சப்ளையர்கள் மற்றும் சேவை வழங்குனர்களுக்கு அளவற்ற வாய்ப்பினை வழங்கியது மட்டுமின்றி, நிறுவனங்களுக்கான முன்னுரிமையாக தொழில்சார் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு ஊக்கமளிக்கும் ஓர் இரண்டு - நாள் மாநாட்டையும் OSH India 2015 கொண்டிருந்த அதே நேரத்தில், தனது பணியாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்காக முதலீடு செய்வதிலுள்ள முக்கியத்துவம் மற்றும் தொழில்சார் நன்மைகள் மற்றும் அதன் மூலம் தனது சொந்த நிறுவனம் மற்றும் பொருளாதாரம் அனைத்திற்குமே கிடைக்கின்ற நன்மைகளையும் அது எடுத்துரைக்கும்.
UBM இந்தியாவின் நிர்வாக இயக்குனரான திரு. Yogesh Mudras கூறியதாவது, "இந்திய நிறுவனங்களிடையே பணிசார் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு இத்தனை ஆண்டுகளில் மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது. இத்துறையில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் கண்டுள்ள வளர்ச்சி மட்டுமின்றி, உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் பணியிட பாதுகாப்பை வழங்குதலின் முக்கியத்துவத்தை அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தும் நிலையில், தங்கள் தயாரிப்புகளையும், தீர்வு வழங்கல்களையும் காட்சிப்படுத்துவதற்கு உலகெங்கிலும் உள்ள சப்ளையர்கள் மற்றும் சேவை வழங்குனர்களுக்கு அளவற்ற வாய்ப்புள்ளது. OSH India மூலம், இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதற்கான சரியான தளத்தை நாங்கள் தொழில்துறைக்கு வழங்குகிறோம்."
தொழில்துறை முழுவதிலிருந்தும் முன்னணி காட்சியாளர்களின் பங்கேற்பானது, ஒரு தொழில்துறை நிகழ்ச்சியாக OSH India-வின் தேவை மற்றும் கவனத்தை மீண்டும் உறுதி செய்வதாக அமைந்தது. இதில் பங்கேற்ற முக்கிய நிறுவனங்களில், Euro Safety Footwear (India) Pvt. Ltd. (also presenting partner); Acme Safetywears Limited, Acme Fabrik Plastic Co, BATA India Limited, Drager Safety India Pvt Ltd, Joseph Leslie & Co. LLP, Jayco Safety Products Pvt Ltd, Karam Industries, Kimberly Clark Hygiene Products, Lifegear Safetech Pvt Ltd, Honeywell Safety Products, Rahman Industries Ltd, Venus Safety & Health Pvt Ltd, Shree Lalita, E.I.Dupont India Pvt Ltd, Arvind Limited, Fall Arrest Systems & Technologies Pvt. Ltd, Teijin India Pvt Ltd, Mallcom safety Pvt Ltd மற்றும் Sure Safety ஆகியவை அடங்கும்; மேலும் IOSH மற்றும் NEBOSH, பயிலரங்கப் பங்காளர்களாக இருந்தன.
வடோதராவில் அமைந்துள்ள தொழில்சார் பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் தீர்வுகள் வழங்குனர் மற்றும் OSH India 2015-ன் முன்னணி காட்சியாளர்களில் ஒன்றான Sure Safety (India) Private Limited, ISRO-ன் விண்வெளி காப்சூல் மீட்பு பரிசோதனைக்காக, அட்வான்ஸ்ட் க்ரூ எஸ்கேப் சூட் என்று தொழில்நுட் முறையில் அழைக்கப்படும் முதல் இந்திய விண்வெளி சூட்டை உருவாக்கும் பொருட்டு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்புடன் (ISRO) ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொண்டுள்ளது. விண்வெளி சூட்டை இந்நிறுவனம் தொடக்கத்திலிருந்தே வடிவமைத்தது மற்றும் இதன் உருவாக்கம் ஓராண்டு காலம் நீடித்தது.
ஒரு முக்கிய பார்ட்னராக தங்கள் கூட்டமைப்பைப் பற்றி பேசும்போது, Honeywell Industrial Safety (PPE & Gas Detection)-ன் இந்தியப் பொது மேலாளரான திரு. Kamal Jha, கூறியதாவது, "OSH India தொடங்கப்பட்டது முதலே Honeywell காட்சிப்படுத்தி வருகிறது. ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கவும், புதிய மற்றும் தற்போதுள்ள வாடிக்கையாளர்களுடன் இணைத்துக் கொள்ளவும் உதவும் ஒரு பிரமாதமான தளத்தை OSH India வழங்குகிறது. OSH 2015-ல், பாதுகாப்பான பணிபுரியும் சூழலை ஊக்குவிப்பதற்காகவும், இந்தியாவில் பாதுகாப்புக் கலாச்சாரத்தை உருவாக்குவதற்காக நாங்கள் ஏற்றுள்ள பொறுப்புறுதியை காட்டுவதற்காகவும், தனது பாதுகாப்பு வகைகள் மற்றும் தீர்வுகளின் தயாரிப்புகள் ஏராளமானவற்றை Honeywell காட்சிப்படுத்தியது. சந்தையின் போக்குகள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புள்ள பிரிவுகளைப் புரிந்து கொள்வதற்காக, இறுதிப் பயனர்கள் மற்றும் சேனல் பார்ட்னர்களுடன் எங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் நம்பிக்கையும் எங்களுக்கு உள்ளது."
தொழில்துறை பற்றிப் பேசிய, EURO Safety Footwear (I) Pvt. Ltd.-ன் இயக்குனரான திரு. Varun Budhiraja, கூறியதாவது, "உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறைகள் இந்தியாவில் வலுவடைந்து வரும் நிலையில், பாதுகாப்பு சாதனங்களுக்கான தேவை அதிகரிப்பதை நாம் காண்கிறோம். தொழில்துறைகளில் PPE-யை ஒழுங்கமைத்து, விதிமுறைகளை பலப்படுத்தி, நிறுவனங்கள் சாதனங்களைப் பயன்படுத்துவதையும், பாதுகாப்பு சாதனங்களைத் அவை தங்கள் பணியாளர்களுக்கு வழங்குவதையும் கட்டாயமாக்குவதன் மீது அரசு அதிகக் கவனம் செலுத்துகிறது. இந்தியாவில் பாதுகாப்புக் காலணி என்பது வலைத்தளத்தில் அல்லது ஒரு ஷாப்பிங் மாலில் ஒருவரால் விற்கப்படக்கூடிய ஒரு வர்த்தகத் தயாரிப்பல்ல; இத்தகைய கண்காட்சிகள் மூலமாகத்தான் ஒரு PPE உற்பத்தியாளரால் தன்னிடம் வாங்கக்கூடியவரை சந்திக்க முடியும். இந்தியாவில் உற்பத்தியாகும் பாதுகாப்புக் காலணிகளில் 90% ஏற்றுமதி செய்யப்படுகிறது, இது உள்நாட்டுச் சந்தையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, இந்திய சந்தைக்கு சேவை செய்யக்கூடிய வாய்ப்பை உற்பத்தியாளர்களுக்கு வழங்குகிறது. உள்நாட்டு சந்தையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையுடன், Eurosafety Footwear-ஐ சேர்ந்த நாங்கள், இந்தியாவில் எங்கள் பிராண்டான 'EURO SECURITY'-யின் அறிமுகத்தைப் பெருமையுடன் அறிவிக்கிறோம், அதே நேரத்தில் பாதுகாப்பான இந்தியாவிற்காகவும் உறுதிமொழி ஏற்கிறோம்."
நிகழ்ச்சியில் பேசும்போது, Dräger Medical India Pvt. Ltd. Dräger Safety India Pvt. Ltd. நிறுவனத்தின் தேசிய மேலாளரான திரு. Nikil Rao கூறியதாவது, "பாதுகாப்பு என்பது, மனித உயிர்களை காத்தல் மற்றும் பாதுகாத்தலில் உள்ள ஓர் உள்ளார்ந்த அம்சமாகும். இந்தியாவின் விரிவடைந்துவரும் தொழில்துறை எல்லைகள், பணியாளர்களின் அளவற்ற அதிகரிப்பைக் கண்டுள்ளன. இது, பாதுகாப்புத் தீர்வுகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் தேவையை அதிகரித்துள்ளது. பாதுகாப்பின் தொழில்நுட்பம் சார்ந்த போக்குகளைக் கலந்தாலோசிப்பதற்காக, முக்கியமானவர்கள் மற்றும் தங்கள் சக ஊழியர்களின் பாதுகாப்பு மீது அக்கறை காட்டுகின்றவர்களுக்கான ஒரு தளத்தை OSH India வழங்குகிறது. பாதுகாப்பை மேலும் வலியுறுத்தும் பொருட்டு, National Safety Council உடன் இணைந்து, பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் பயணிக்கும் ஒரு சாலைக் காட்சி டிரக் உடனான 'மிஷன் சுரக்ஷா' என்ற இயக்கத்தை Dräger தொடங்கியுள்ளது."
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 27%-க்கும் அதிகமாகப் பதிவுகள் உயர்ந்து, ஆசியாவில் NEBOSH கல்வித் தகுதிகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில், தற்போது நாற்பத்தி ஏழு NEBOSH சான்றளிக்கப்பட்ட பாடப்பயிற்சி வழங்குனர்கள் நாட்டில் உள்ளனர். இதை எதிரொலிக்கும் வகையில், NEBOSH-ன் சர்வதேச மேலாளரான ஸ்டூவர்ட் நெய்லர் கூறியதாவது, "இந்தியாவில் NEBOSH கல்வித் தகுதிகளுக்காக தொடர்ந்து அதிகரித்துவரும் தேவையானது, மும்பையில் நடைபெறும் இவ்வாண்டின் OSH இந்தியா மாநாட்டில் மீண்டும் பங்கேற்று, ஆதரவளிப்பதற்கு நாங்கள் முடிவெடுக்கும்படி தூண்டியது."
UBM India பற்றி
UBM India, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM India, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM Asiaவின் ஒரு நிறுவனமான UBM India, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM plc-க்கு சொந்தமான UBM Asia, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM Asia, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் ubmindia.in.
ஊடகத் தொடர்பு:
ப்ரியா பாட்ஷா
[email protected]
+91-22 6172 7353
Share this article