பெங்களூர், December 7, 2015 /PRNewswire/ --
- இவ்வகையிலேயே முதலாவதாக மனித உயிரி செயல்பாடுள்ள கூறுகளுடன் வரும் இந்த இந்திய சருமப் பராமரிப்புத் தயாரிப்பானது, மூப்பு எதிர்ப்பு சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தப்போகிறது
- 5 தனித்துவமான நன்மைகளைக் கொண்டுள்ளது, அவை (1) மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களைக் குறைத்தல் (2) கரும்புள்ளிகளைக் குறைத்தல் /மங்கச் செய்தல் (3) தோலின் திண்மையை சீராக்குதல் (4) சருமத்தின் உறுதியை மேம்படுத்துதல் (5) சருமத்தின் நீர்ச்சத்தை மேம்படுத்துதல்
- சர்வதேச காற்றில்லா பேக்கில் வருவது, பயன்படுத்தும் காலத்தில் அத்தயாரிப்பின் ஆற்றலை உறுதி செய்கிறது. குளிர்ச்சியான மற்றும் உலர்வான சூழல்களில், இத்தயாரிப்பு பதினெட்டு மாதங்களுக்கு நிலையாக உள்ளது
உலக அளவிலான மருந்து தயாரிப்பு நிறுவனமான Cipla Ltd, Stempeutics உருவாக்கியுள்ள புதுமையான '5 இன் 1' ஆன்டி ஏஜிங் ஸ்கின் கேர் தயாரிப்பான Cutisera™-ஐ அறிமுகப்படுத்தியுள்ளதாக இன்று அறிவித்தது. மூப்படையும் சருமத்திற்கு புத்துயிரளிப்பதற்காக, மனித முதிர்ந்த ஸ்டெம் செல்களிலிருந்து பெறப்படும் உயிரி செயல்பாடுள்ள கூறுகளைப் பயன்படுத்தி, Cutisera™ உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயல்பாடுமிக்க உட்பொருட்கள் ஆற்றலுக்காக ஆய்வுக்கூடத்திலும், இயற்கை முறையிலும் சோதிக்கப்பட்டுள்ளன. மூப்படைந்துவரும் சருமப் பண்புகளைக் கொண்ட மனித தன்னார்வலர்களைக் கொண்டு இத்தயாரிப்பு தோலியல் சார்ந்த முறையில் 3 மாதங்களுக்கு சோதிக்கப்பட்டது, இக்காலத்தில் இத்தயாரிப்பு ஒரு நாளைக்கு இருமுறை தடவப்பட்டது. இந்த மனித ஆய்வானது, இந்திய மூலத்தைக் கொண்ட அனைத்து சருமங்களுக்கும் Cutisera™-ன் ஆற்றலை, சக்திமிக்க, ஆனால் அதே சமயத்தில் இதமான மூப்பு எதிர்ப்பு சருமப் பராமரிப்புத் தயாரிப்பாக எடுத்துக்காட்டியது. இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள தயாரிப்பில் ஸ்டெம் செல்கள் ஏதும் கிடையாது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20150903/263587LOGO)
(Logo: http://photos.prnewswire.com/prnh/20150323/735846)
Cutisera™ அறிமுகத்தைப் பற்றிக் கருத்து தெரிவிக்கையில், Cipla New Ventures-ன் தலைவரான திரு. Chandru Chawla கூறியதாவது, "அடுத்த தலைமுறை உயிரி சார்ந்த சருமப் பராமரிப்புத் தயாரிப்பான Cutisera™-ஐ அறிமுகப்படுத்துவது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது. நமக்கு வயதாகி, சுற்றுச்சூழல் நெருக்கடிகளுக்கு வெளிப்படுத்தப்படும்போது, சருமத்திற்குள் உள்ள மனித வளர்ச்சிக் கூறுகளின் உற்பத்தி குறைகிறது, இது சருமம் மூப்படைகின்ற தன்மைகளை ஏற்படுத்துகிறது. Cutisera™-ஐ தினசரி தடவுவதன் மூலம் இக்கூறுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுவதால், சேதமடைந்த சரும செல்கள் சீரமைக்கப்பட்டு, சருமம் புத்துயிர் பெறுவதற்கு வழிவகுக்கிறது."
"Cutisera™-ஐ எங்கள் JV பார்ட்னர் Cipla மூலம் சந்தைப்படுத்துவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சித் தருகிறது," என்றார் Stempeutics-ன் CEO திரு. BN Manohar. "ஏற்கனவே Cutisera™ மீது மருத்துவர்களும், நுகர்வோரும் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும், குறிப்பிட்ட அளவுகளில் வளர்ச்சிக் கூறுகளையும், சைட்டோகைன்களையும் கொண்டுள்ள நிலையான முக்கிய உட்பொருட்களை உருவாக்கும் ஒரு தனித்தன்மை வாய்ந்த, தனியுரிமை பெற்ற, காப்புரிமை நிலுவையிலுள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி Cutisera™ உருவாக்கப்பட்டுள்ளது. இது உலக அளவில் சிறப்பு வாய்ந்த, தொடர்ந்து உயர் தரம் கொண்ட தயாரிப்பிற்கு வழிவகுத்துள்ளது."
Cipla-வின் முக்கிய மருத்துவ அதிகாரியான டாக்டர் Jaideep Gogtay கூறியதாவது, "மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் அதிகரித்த விழிப்புணர்வு மக்களை தங்களுடைய சருமத்தைப் பற்றி அதிகமாகக் கவலை கொள்ளச் செய்துள்ளது, இது, மூப்படையும் செயல்முறையை மெதுவாக்குவது மட்டுமின்றி, நீண்ட காலத்திற்கு தங்கள் இளமையான தோற்றத்தையும் பராமரிக்கின்ற சருமப் பராமரிப்பு தயாரிப்புகளைத் தேடும்படி அவர்களைத் தூண்டியுள்ளது. எது வயதான தோற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை முதலில் புரிந்து கொண்டு, அதன்பின் அடிப்படைக் காரணங்களைக் கையாள்வது முக்கியமாகும். அதைத்தான் Cutisera™ மிகச் சரியாகச் செய்கிறது. அது, சேதமடைந்த சருமத்திற்கு சிகிச்சையளித்து, மேலும் சேதமடைவதைத் தடுப்பதற்காக, உடலின் இயற்கையான உயிரிசார் புனரமைப்புச் செயல்முறைக்கு உதவுகிறது."
Cipla Limited பற்றி:
Cipla ஓர் உலக அளவிலான மருந்து தயாரிப்பு நிறுவனமாகும், இது அனைத்து நோயாளிகளின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் புத்தமைவை பயன்படுத்துகிறது. 80 ஆண்டுகளாக, இந்தியாவிலும், 150-க்கும் அதிகமான நாடுகளிலும் மிகவும் மதிப்புக்குரிய மருந்து உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக Cipla பெயர் பெற்றுள்ளது. எங்கள் தயாரிப்பு வகைகளில், சிகிச்சைப் பிரிவுகள் முழுவதிலும் 1500-க்கும் அதிகமான தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன, இவை உலக அளவில் ஒரே தரநிலையைக் கொண்டவையாகும். நீண்ட கால நிலைத்த தன்மை கொண்ட தொழிலை வழங்குகின்ற அதே நேரத்தில், அனைவராலும் வாங்க முடியக்கூடிய மருந்துகளை வழங்குவது தனது கடமையென்பதை Cipla அங்கீகரிக்கிறது. நோயாளிகளின் அணுகலுக்கு Cipla முக்கியத்துவமளித்து, ஆப்பிரிக்காவில் ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் குறைவாக மூன்று கலவை ஆன்டிரெட்ரோவைரல் (ARV) வழங்கியதன் மூலம், 2001 முதல் பல மில்லியன் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கியதன் வாயிலாக HIV/AIDS சிகிச்சையில் அது வகித்த முன்னோடி பங்கிற்காக இந்நிறுவனம் உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. Ciplaவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுமைத் தயாரிப்புகள் மற்றும் மருந்து டெலிவரி அமைப்புகளை உருவாக்குவதன் மீது தீவிர கவனம் செலுத்துகிறது.
Stempeutics பற்றி:
Stempeutics, பெங்களூரில் அமைந்துள்ள ஒரு மேம்பட்ட மருத்துவ நிலையிலான உயிரிதொழில்நுட்ப நிறுவனமாகும். அதனை 2006-ல் Manipal Education and Medical Group (MEMG) நிறுவியது, அதன்பின் அது 2009-ல் Cipla உடன் ஓர் யுக்திசார் கூட்டினை உருவாக்கிக் கொண்டது. Stempeutics-ன் பலம், தனது மிக உயர்ந்த தகுதிபெற்ற குழுவின் ஈடுபாடுமிக்க முயற்சிகள் மூலம் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் மருத்துவப் பயன்பாடுகளைப் பயன்படுத்தி புதுமையான ஸ்டெம் செல் தயாரிப்புகளை உருவாக்குவதில் அடங்கியுள்ளது. இந்தியா முதலில், உலகம் பின்னர் என்ற அணுகுமுறையுடன், இதுவரை தீர்க்கப்படாத மருத்துவத் தேவைகளைக் கையாளும் புதுமையான ஸ்டெம் செல் மருந்துகளை உருவாக்குவதே அதன் இலக்காகும்.
Manipal Education & Medical Group பற்றி:
Manipal Education and Medical Group (MEMG), கல்வி மற்றும் உடல்நலப் பராமரிப்பு சேவைகள் துறையில், நாட்டின் முன்னணி அமைப்புகளில் ஒன்றாகும், இது உலக அளவில் கால்பதித்துள்ளது. தனது துணை நிறுவனங்கள் மூலம், MEMG, இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் கல்வி மற்றும் உடல்நலப் பராமரிப்பு சேவைகளை வழங்கி வருகிறது. அது, மருத்துவக் கல்லூரிகள், கற்பிக்கின்ற மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட, பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்சார் அமைப்புகளை நிர்வகித்து வருகிறது, இவை மூலம் அது பல்வேறு பிரிவுகளிலும் பட்டயம் மற்றும் முதுநிலை பட்டயங்களுக்கான பாடத்திட்டங்களை வழங்குகிறது. அதுமாணவர் தங்குமிட வசதி, ஹாஸ்டல் நிர்வாகம் மற்றும் உணவு மற்றும் கேட்டரிங், பொறியியல் மற்றும் பராமரிப்பு , பாதுகாப்பு மற்றும் உள்நிர்வாகம் உள்ளிட்ட இதர சேவைகள் பலவற்றையும் உள்ளடக்கிய Manipal Integrated Services (MIS) என்ற வசதி மேலாண்மை நிறுவனத்தையும் நடத்துகிறது. இந்நிறுவனம், உடல்நலப் பராமரிப்பு நிறுவனங்கள், சூப்பர் ஸ்பெஷாலிட்டி பராமரிப்பு மருத்துவமனைகள், கிராமப்புற மகப்பேறு மற்றும் குழந்தை நல இல்லங்கள் ஆகியவற்றையும் நிர்வகித்து வருகிறது. கூடுதலாக, இந்நிறுவனம் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, பல்வேறு மருந்து மற்றம் சிகிச்சைப் பிரிவுகளில், ஸ்டெம் செல் தொழில்நுட்பங்களை உருவாக்குகிறது. 1953-ம் ஆண்டு, இந்தியாவிலுள்ள பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு Manipal Education and Medical Group International India Pvt. Ltd. நிறுவப்பட்டது, இது ஆன்டிகுவா, துபாய், மலேசியா மற்றும் நேபாளத்தில் கல்விக் கல்லூரிகள் மற்றும் வளாகங்களைக கொண்டுள்ளது.
ஊடகத் தொடர்புகள்:
கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ்
Cipla
Charlotte Chunawala
மொபைல்: +91 7506257377
மின்னஞ்சல்: [email protected]
Pallavi Golar
மொபைல்: +91 9833641788
மின்னஞ்சல்: [email protected]
Vijayaraghavan
[email protected]
மொபைல் - +91-9535688118
பொது மேலாளர்- HR & பகிரப்படும் சேவைகள்
Stempeutics Research Pvt. Ltd.
Share this article