மும்பை, December 4, 2015 /PRNewswire/ --
ZenFan-கள் பரிமாற்றம் செய்வதற்காகவும், தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்காகவும், ASUS மொபைல் தயாரிப்புகள் குறித்த தங்கள் யோசனைகள், கருத்துக்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு குழுவான ZenTalk, இந்தியாவில் 70K சந்தாதாரர்கள் என்ற மைல்கல்லை எட்டியிருப்பதை ASUS இன்று உறுதி செய்தது. ZenFones, PadFones, FonePads, ZenPad வகைகள் மற்றும் ZenUI உள்ளிட்ட ASUS மொபைல் தயாரிப்புகள் அனைத்தின் தொடர்பாகவும் இக்குழுவில் ZenFan-கள் கலந்தாலோசிக்கலாம்.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20151203/10135944 )
ZenTalk முதலில் 2014 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் இதற்கு உலக அளவில் 284,015 செயல்பாடுமிக்க பயனர்கள் உள்ளனர். இந்தியாவில், 2015 மார்ச்சில் இக்குழு அலுவல்சார் முறையில் அறிமுகப்படுத்தப்பட்டு, அப்போது முதல் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த மைல்கல்லைப் பற்றி கருத்துத் தெரிவிக்கையில், ASUS India - System Business Group -ன் மண்டலத் தலைவரும், தென்னாசிய மற்றும் நாட்டின் மேலாளருமான திரு. Peter Chang, கூறியதாவது, "இது எங்களுக்கு மிகவும் பெரிய சாதனையாகும். இந்தியாவில் 70K சந்தாதாரர்கள் என்பது, சிக்கனமான விலையில் ஓர் உயர்தர தயாரிப்புக்குண்டான ஏராளமான அம்சங்கள் மற்றும் வடிவமைப்புப் பண்புகளுடன் வருகின்ற எங்கள் சாதனங்கள் மற்றும் சேவைகளை இந்தியர்கள் ஏராளமான எண்ணிக்கையில் பயன்படுத்துகிறார்கள் என்பதையே குறிக்கிறது. இவை உண்மையில் எங்களுக்கு உற்சாகமூட்டுகின்ற காலகட்டங்களாகும் மற்றும் இது, இந்தியாவில் எங்கள் பிராண்ட் பிரமாதமான முன்னேற்றம் காணப்போவதை உறுதிப்படுத்துவதாகவும் அமைகிறது."
ZenTalk-ன் முக்கிய அம்சங்கள்:
மேலும் தகவல்களுக்கு, அணுகவும் http://www.asus.com/zentalk/in/index_in.php
ASUS India Pvt. Ltd பற்றி
ASUS, ஓர் உலகளாவிய, முதல் மூன்று நுகர்வோர் நோட்புக் விற்பனையாளரும், உலகின் விற்பனையில் சாதனை படைக்கின்ற, விருது வெல்லும் மதர்போர்டுகளின் உற்பத்தியாளரும் ஆகும். புதிய டிஜிட்டல் தலைமுறையின் முன்னணி நிறுவனமான ASUS, மதர்போர்டுகள், கிராஃபிக்ஸ் கார்டுகள், ஆப்டிகல் டிரைவ்கள், டிஸ்பிளேக்கள், டெஸ்க்டாப் மற்றும் அனைத்தும் அடங்கிய பிசிக்கள், நோட்புக்குகள், நெட்புக்குகள், சர்வர்கள், மல்டிமீடியா சாதனங்கள், ஒயர்லெஸ் தீர்வுகள், வலையமைப்பு சாதனங்கள், டாப்லெட்டுகள், ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் அணியத்தக்கவை உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளுடன், இன்றைய டிஜிட்டல் சார்ந்த வீடு மற்றும் அலுவலகத்தின் தேவைகளைக் கச்சிதமாகப் பூர்த்தி செய்கின்ற பொருட்களை வடிவமைத்து, உற்பத்தி செய்கிறது. புத்தமைவினால் தூண்டப்பட்டு, தரத்திற்கு பொறுப்புறுதி ஏற்றுள்ள ASUS, 2014-ல் 4,326 விருதுகளை வென்றுள்ளதுடன், தனது Eee PC™ மூலம் PC தொழில்துறையை புரட்சிகரமாக ஆக்கியதற்கான மிகப்பெரிய பெருமையையும் பெற்றுள்ளது. ASUS, உலகம் முழுவதும் 16,000-க்கும் அதிகமான பணியாளர்களுடன், 5,200 பொறியாளர்கள் இடம்பெற்றுள்ள உலகத்தரம் வாய்ந்த ஓர் R&D குழுவையும் கொண்டுள்ளது. 2014-க்கான இந்நிறுவனத்தின் வருமானம் சுமார் US$14.5 பில்லியன் ஆகும்.
ஊடகத் தொடர்பு:
Manoj Kumar
[email protected]
+91-9818520082
Asus India Pvt Ltd
Share this article