-விசாலமான, குடியேறுவதற்குத் தயாராக உள்ள, பிரீமியம் வீடுகள் மற்றும் பிராண்டட் குடியிருப்புகளின் வரையறுக்கப்பட்ட இருப்புநிலை; பெரிய வீடுகள் வாங்க வேண்டும் என்பதற்கான வாங்குபவர்களின் விருப்பம் வலுவான தேவையை ஏற்படுத்துகிறது
புனே, இந்தியா, செப். 3, 2021 /PRNewswire/ -- இன்று இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் டெவலப்பர்களாக விளங்குகின்ற பஞ்ச்ஷில் ரியால்டி, புனேவில் தனது உயர்நிலைக் குடியிருப்பு வகையைச் சார்ந்த வீடுகளின் விற்பனையில் இந்த ஆண்டு தனது வலிமையான ஆண்டுகளில் ஒன்றாகப் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
வலுவான விற்பனை ஏறுமுகம் பற்றிய தனது கண்ணோட்டத்தைப் பகிர்ந்துகொண்ட பஞ்ச்ஷில் ரியால்டி நிறுவனத்தின் இயக்குநர், திரு. சாகர் சோர்டியா கூறியதாவது: "கடந்த 18 மாதங்களாக, மும்பையின் மிகவும் வலுவான தேவைகளின் பின்னணியில் எங்கள் குடியிருப்புப் பிரிவில் வியக்கத்தக்க விற்பனை வளர்ச்சியை நாங்கள் கண்டிருக்கிறோம்.
"பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள வாழ்க்கைமுறை மாற்றங்கள் வாங்குபவரின் விருப்பங்களை கணிசமான அளவு மாற்றியுள்ளன மற்றும் வடிவமைத்துள்ளன. வீடு வாங்குபவர்கள் இப்போது வீட்டிலிருந்தே வேலை செய்வதற்குப் போதிய இடவசதியுடன், ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் போதுமான தனிப்பட்ட இடம் கொண்ட அதிக விசாலமான வீடுகளை எதிர்பார்க்கிறார்கள். அதிக பரப்பு கொண்ட வீடுகள் வழங்குகின்ற நலவாழ்வு மற்றும் ஆரோக்கியத்தில் செலுத்தப்படும் கவனம் அதிகரித்துள்ளது."
"பஞ்ச்ஷில் பொதுவாக வழங்குவதைப் போன்ற 2000 சதுர அடிக்கும் மேற்பட்ட பரப்பளவு கொண்ட குடியேறுவதற்குத் தயாராக உள்ள பிரீமியம் வீடுகள் மிகவும் குறைந்த அளவிலேயே கிடைக்கின்றன. ஏராளமான வாழ்க்கைமுறை வசதிகள் மற்றும் வாழ்வு நலங்களுடன் வருகின்ற எங்களுடைய பிரத்தியேக குடியிருப்பு வகைகளில் ஒன்றாகிய இந்த பிரீமியம் வீடுகள் மற்றும் பிராண்டட் குடியிருப்புகள் விற்பனை வளர்ச்சியில் இந்த வலுவான ஏறுமுகத்துக்கு முக்கிய பங்களித்துள்ளன," என அவர் மேலும் கூறினார்.
இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் முக்கியப் பொருள்களாகிய ஸ்டீல், சிமெண்ட், அலுமினியம் மற்றும் காப்பர் போன்றவற்றின் விலைகள் பெருமளவு அதிகரித்துள்ள சூழ்நிலையிலும் கூட, பல்வேறு சவால்களுக்கிடையே இந்த பிரம்மிக்கத்தக்க விற்பனை வளர்ச்சி அடையப்பட்டுள்ளது. உள்ளீட்டு செலவுகளில் ஏற்பட்டுள்ள இந்த அபரிமிதமான அதிகரிப்பை ஈடுசெய்ய, வீட்டின் விலைகள் 10% முதல் 12% வரை மட்டுமே அதிகரிக்கப்பட்டன.
குறிப்பாக ஒரு பஞ்ச்ஷில் வீடு வாங்குவதை மொத்தத்தில் மிக வலுவான திட்டமாக ஆக்குவதற்கு, குத்தகை உள்ளிட்ட வாங்குபவர்களின் அனைத்துத் தேவைகளிலும் அக்கறை கொண்டு பஞ்ச்ஷில் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்குகிறது.
பஞ்சஷிலின் விருது பெற்ற குடியிருப்புத் திட்டத்தில் உள்ளடங்குவன:
பஞ்ச்ஷில் டவர்ஸ் என்பது தொழில்நுட்பமும் ஆடம்பரமும் ஒருங்கிணைந்த, 60% திறந்தவெளிப் பரப்பைக் கொண்ட 14 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள 9 டவர்களைக் கொண்ட பிரீமியம் குடியிருப்பு வளர்ச்சித் திட்டம் ஆகும். இந்தத் திட்டம் 3.5 மற்றும் 4.5 படுக்கையறை-கூடம்-சமையலறை (BHK) குடியிருப்புகளைக் கொண்டதாகும். 9-இல் நான்கு டவர்கள் குடியேறுவதற்குத் தயாராக உள்ளன மற்றும் அங்கு ஏற்கனவே 250 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
yoopune என்பது உலகின் புகழ்பெற்ற வடிவமைப்பாளராகிய பிலிப் ஸ்டார்க் என்பவரால் வடிவமைக்கப்பட்ட, குடியேறுவதற்குத் தயாராக உள்ள 4.5 BHK பிராண்டட் குடியிருப்புகளின் பிரம்மிக்க வைக்கும் தொகுப்பு ஆகும். yoo என்பது உலகெங்கிலும் உள்ள முக்கிய இடங்களில் அமைந்துள்ள ஆடம்பர சொத்தைக் குறிக்கும் சொல்லாகும்.
YOO Villas Pune (யூ வில்லாஸ் புனே) ஆனது இந்தியாவின் முதலாவது மற்றும் ஒரேயொரு குடியேறுவதற்குத் தயாராக உள்ள யூ பிராண்டட் வில்லா என்கிளேவ் ஆகும். மேலும் இது புகழ்பெற்ற வடிவமைப்பாளர் கெல்லி ஹோப்பனால் வடிவமைக்கப்பட்ட உலகின் முதலாவது யூ வில்லாஸ் திட்டம் ஆகும். இந்தத் திட்டம் 4 BHK மற்றும் 5BHK விருப்பத்தேர்வுகளைக் கொண்டுள்ளது.
டிரம்ப் டவர்ஸ் புனே பிரம்மிக்கத்தக்க ஒற்றை மாடி 4.5 BHK குடியிருப்புகளுடன், ஒவ்வொன்றும் 23 மாடிகளுடன் இரண்டு கண்கவர் கண்ணாடி முகப்பு கோபுரங்களைக் கொண்டுள்ளது. இன்டீரியர்கள் முன்னணி இத்தாலிய வடிவமைப்பாளர் மேட்டியோ நுன்ஸியாடி (Matteo Nunziati) என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் இந்திய பசுமை கட்டிட கவுன்சிலின் பிளாட்டினம் சான்றிதழ் பெற்றுள்ளது.
ஈயான் வாட்டர்ஃபிரண்ட் பிரத்தியேகமான 4.5 BHK குடியிருப்புகளைக் கொண்டுள்ளது மற்றும் இது ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ளது.
பஞ்ச்ஷில் ரியால்டியின் முற்றிலும் நிறைவுபெற்ற ரியல் எஸ்டேட் திட்டம் சுமார் 23 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது, மற்றொரு திட்டம் 20 மில்லியன் சதுர அடி பரப்பளவில் தற்போது நடைபெற்று வருகிறது.
குடியிருப்பு, வர்த்தகம் மற்றும் விருந்தோம்பல் ஆகியவை பஞ்ச்ஷில் ரியால்டியின் மூன்று முக்கிய வணிகப் பிரிவுகள் ஆகும்.
வணிகத் திட்டம் சில்லறை விற்பனை மற்றும் உணவு மற்றும் பானத்தை உள்ளடக்கியதாகும். இதில் பயனருக்குப் பொருத்தமான அலுவலக இடங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஐ.டி. பூங்காக்கள், ஒருங்கிணைந்த பணியிடங்கள், மால்கள் மற்றும் கலப்பு பயன்பாட்டு முன்னேற்றங்கள் ஆகியவை உள்ளடங்கும்.
பஞ்ச்ஷிலின் விருந்தோம்பல் திட்டம் தி ரிட்ஸ்-கார்ல்டன், JW மேரியோட், மேரியோட் சூட்ஸ், கோர்ட்யார்ட் பை மேரியோட், ஓக்வுட் மற்றும் டபுள் ட்ரீ பை ஹில்டன் போன்ற முன்னணி பிராண்டுகளுடன் சுமார் 1200 அறைகளைக் கொண்டுள்ளது.
பஞ்ச்ஷில் ரியால்டியின் அலுவலகத் திட்டத்தின் கணிசமான அங்கமானது பிளாக்ஸ்டோன் குரூப் LP-ஆல் நிதியாதரவு அளிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்ற பிளாக்ஸ்டோன் ரியல் எஸ்டேட் பிரைவேட் ஈக்விட்டி ஃபண்ட் மூலம் ஆதரிக்கப்படுகிறது.
பஞ்ச்ஷில்ரியால்டிபற்றி
2002-இல் துவக்கப்பட்ட பஞ்ச்ஷில் ரியால்டி இந்தியாவின் மிகச்சிறந்த ஆடம்பர ரியல் எஸ்டேட் பிராண்டுகளில் ஒன்றாகும். ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் தலைமை மற்றும் சிறப்புத்தன்மைக்குப் புகழ்பெற்ற குழுமத்தின் அணுகுமுறை திட்டமிட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது, மதிப்புச் சொத்துகளை உருவாக்குகிறது மற்றும் வடிவமைப்பு மற்றும் கட்டிடக்கலை மூலம் வாழ்க்கைமுறை அனுபவங்களை வடிவமைக்கிறது. கூடுதல் தகவல்களுக்கு, தயவுசெய்து www.panchshil.com-ஐப் பார்வையிடவும்
பொறுப்புத் துறப்புகள்: படங்கள், இமேஜ்கள் ஆகியவை எடுத்துக்காட்டு நோக்கங்களுக்காக மட்டுமே. முகப்புத் தோற்றம் மற்றும் காட்சிகள் ஆகியவை உத்தேசமானவை மற்றும் குறிப்புக்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. இவை மாற்றங்களுக்கு உட்பட்டவையாகும். ஒவ்வொரு திட்டத்துக்கும் உரிய பொறுப்புத் துறப்புகள் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து இங்கே கிளிக் செய்யவும்.
Share this article