Panchshil Foundation மற்றும் Dr. Cyrus Poonawalla இணைந்து COVID-19 நோயாளிகளைக் கையாளும் பூனே மருத்துவப் பணியாளர்களுக்கு விடுதி இடவசதியை அளிக்கின்றன
பூனே, இந்தியா, May 20, 2020 /PRNewswire/ -- Panchshil Foundation COVID-19 நோயாளிகளுக்கு பூனே-யில் உள்ள Sassoon Hospital மற்றும் Naidu Hospital-ல் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கும் செவலியர்களுக்கும் விடுதி இடவசதியை வழங்குவதில் Dr. Cyrus Poonawalla-உடன் கைகோர்த்திருப்பதாக இன்று அறிவித்தது.
இந்த மருத்துவர்களும் செவிலியர்களும் பூனே ரயில் நிலையத்தின் அருகில் அமைந்துள்ள ஹோட்டல் Lemon Tree Premier-ல் தங்க வைக்கப்படுவார்கள்.
இந்த முன்முயற்சி பற்றிப் பேசிய Panchshil Realty-யின் தலைவரான Atul Chordia பேசும்போது, "கொரோனாவைரஸ் என்ற பேராபாயமுள்ள பெருந்தொற்றுக்கு எதிரான போர்க்களத்தில் முன்னணியில் நின்று ஓய்வில்லாமலும் தன்னலமில்லாமலும் தொடர்ந்து நம்முடைய வீரமிக்க கொரோனா போர்வீரர்கள் போராடுகிறார்கள். நம்முடைய பாராட்டுகளையும் ஆழமான நன்றிகளையும் தெரிவிக்கும் விதத்தில் Panchshil Foundation மற்றும் Dr. Cyrus Poonawalla இணைந்து Sassoon Hospital மற்றும் Naidu Hospital-ல் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்கவும், தேவையான ஓய்வையும், உணவையும் எடுத்துக்கொள்ளவும் Lemon Tree Premier ஹோட்டல்-ல் தங்கும் வசதியை ஏற்பாடு செய்துள்ளன. இந்த வீரமிக்க வீரர்களின் முயற்சிக்கு நாங்கள் தலைவணங்குகிறோம்."
Panchshil Foundation COVID-19-ன் தாக்கத்தைப் போக்க பல முனைத் தாக்குதல் அணுகுமுறையைக் கையாளுகிறது.
நம்முடைய ஃபவுண்டேஷன் 15,000-க்கும் மேற்பட்ட PPE கிட்டுகளை Force Motors Ltd.- உடன் இணைந்து கடந்த சில வாரங்களில் மருத்துவமனைகள் பூனே நகர போலீஸ் மற்றும் பூனே மாநகராட்சி மன்றம் ஆகியவற்றுக்கு வழங்கியுள்ளது.
இதுவரை ஃபவுண்டேஷன் எந்த வருவாயும் இல்லாமல் திக்கற்றவர்களாக உள்ள தினக்கூலிகளுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் முட்டை அடங்கிய 35,000-க்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்களை வழங்கியிருக்கிறது.
ஃபவுண்டேஷனுடன் இணைந்து பூனேயில் இருக்கும் National Disaster Response Force (NDRF)-ன் 5-வது எலைட் பட்டாலியன்-உடன் இணைந்து COVID-19 பற்றிய விழிப்புணர்வையும், சமூக அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பொதுமக்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை அளித்துவருகிறது.
ஒரு சக்திவாய்ந்த சமூக, பரஸ்பர சொந்தம் மற்றும் உரிமைத்துவ உணர்வைக் கட்டியெழுப்புவதையே Panchshil Foundation இலக்காக வைத்திருக்கிறது. மக்கள் சிறந்த வாழ்க்கை வாழும்போது சிறந்த சமூகங்கள் உருவாகின்றன என்பதுதான் எங்களுடைய நம்பிக்கை. கல்வி, சுகாதாரம், கலை மற்றும் கலாச்சாரம், விளையாட்டு, உட்கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் சார்புடைய சமூக முன்முயற்சிகள் சம்பந்தமான முன்முயற்சிகள் Foundation-ன் செயல்பாடுகளில் அடங்கும்.
Panchshil Realty பற்றி
2002-ல் நிறுவப்பட்ட Panchshil Realty என்பது இந்தியாவின் மிகச்சிறந்த சொகுசு ரியல் எஸ்டேட் பிராண்டுகளில் ஒன்றாகும். திட்டமிடப்பட்ட வளர்ச்சி, மதிப்புமிக்க சொத்துக்களை உருவாக்குதல், மற்றும் வடிவமைப்பு மற்றும் கட்டடக்கலை வழியாக வாழ்க்கைப்பாணி அனுபவங்களை ஏற்படுத்துவதில் ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் தன்னுடைய முன்னிலைக்கும் செயல்திறனுக்கும் புகழ்பெற்ற இக்குழுவின் அணுகுமுறையாக உள்ளது. Panchshil Realty-யின் ரியல் எஸ்டேட் 23 மில்லியன் சதுர அடிக்கும் அதிகமாக உள்ளது. இன்னும் 20 மில்லியன் சதுர அடிப் பரப்பு கட்டுமானத்தில் உள்ளது.
Panchshil-ன் பிரதான தொழிலாக வர்த்தக அலுவலக கட்டடங்கள், விருந்தோம்பல் மற்றும் இருப்பிட ரியல் எஸ்டேட் தொழில் உள்ளது. Panchshil Realty-யின் குறிப்பிடத்தக்க ஆஃபீஸ் போர்ட்ஃபோலியோவில் Blackstone Group LP-யினால் நிர்வகிக்கப்படும் Blackstone Real Estate Private Equity Fund அடங்கும்.
Panchshil பற்றி மேலும் அறிந்துகொள்ள www.panchshil.com என்ற வலைதளத்தைப் பாருங்கள்.
லோகோ: https://mma.prnewswire.com/media/1169295/Panchshil_Foundation_Logo.jpg
Share this article