Panchshil Foundation & Force Motors இணைந்து COVID-19 நோயாளிகளைக் கையாளும் பூனே மருத்துவமனைகளுக்கு PPE கருவிகளை வழங்குகின்றன
PUNE, India, April 23, 2020 /PRNewswire/ --Panchshil Foundation COVID-19 நோயாளிகளைக் கையாளும் மருத்துவமனைகளுக்கு Personal Protective Equipment (PPE) கருவிகளை வழங்குவதில் Force Motors Ltd-உடன் கைகோர்த்திருப்பதாக இன்று அறிவித்தது.
இன்று தொடங்கி அடுத்த ஏழு நாட்களுக்கு 15,000 PPE கருவிகள் Pune யில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ஒட்டோரினோலேரிஞ்சாலஜிஸ்டுகளுக்கும் (ENT மருத்துவர்கள்) வழங்கப்படும்.
சரியான பாதுகாப்பு சாதனங்கள் இல்லாத காரணத்தினால் அச்சமூட்டும் வைரஸின் தாங்குதலுக்கு ஆளான குடும்பத்தினர் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றி நெஞ்சை நெகிழவைக்கும் அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. வைரஸ் தொற்றுக்குப் பலியானவரின் குடும்பத்தினர் தங்களுடைய இறுதிச் சடங்குகளை நிறைவேற்றி இறந்தவருக்கு இறுதி மரியாதை செய்வதை உறுதி செய்வதற்காக, PPE கருவிகள் பூனே மாநகராட்சி மன்றத்திற்கும் அளிக்கப்படும். அப்போதுதான் பாதுகாப்பாகவும், சரியான முறையிலும் மாண்புடனும் இறந்தவரின் உடலை அவர்கள் அடக்கம் செய்ய முடியும்.
இந்த முன்முயற்சி பற்றிப் பேசிய Panchshil Realty-யின் Chairman-ஆன Atul Chordia, பேசும்போது, "அச்சமூட்டும் நாவல் கொரோனாவைரஸூக்கு எதிரான போர்க்களத்தில் முன்னணியில் நிற்கும் உண்மையான கதாநாயகர்கள் மருத்துவர்களும், செவிலியர்களும், மற்றும் சுகாதாரப் பணியாளர்களுமே. அப்படிச் செய்யும்போது, சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளில் இருப்பதால் ஏற்படும் அபாயங்களை துணிவோடும் மனமுவந்தும் அவர்கள் சந்திக்கிறார்கள். இந்தக் கொள்ளை நோய்க்கெதிராக நாம் இணைந்து சண்டையிடும் இந்த சமயத்தில், நம்முடைய சுகாதாரப் பராமரிப்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்தான் மிகவும் முக்கியம்."
"தாங்கள் வேலை செய்யும் இடத்தில் தொற்றக்கூடிய நோய்க்கு ஆளாகும் ஆபத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கக்கூடிய சிறப்புப் பாதுகாப்பு சாதனத்தைக்கொண்டு நம்முடைய சுகாதாரப் பராரிப்புக் கதாநாயகர்களுக்கு சரியான முறையில் பாதுகாப்பளிப்பதும், PPE-யின் சரியான பயன்பாட்டின் வழியாக தங்களுடைய தனிப்பட்ட பாதுகாப்பை மேம்படுத்துவதும்தான் இந்த முன்முயற்சியின் இலக்கு. இந்த முயற்சியில் எங்களோடு கைகோர்த்திருக்கும் Force Motors-க்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.
Panchshil Foundation COVID-19-ன் தாக்கத்தைப் போக்க பல முனைத் தாக்குதல் அணுகுமுறையைக் கையாளுகிறது.
இதுவரை ஃபவுண்டேஷன் எந்த வருவாயும் இல்லாமல் திக்கற்றவர்களாக உள்ள தினக்கூலிகளுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் முட்டை அடங்கிய 30,000-க்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்களை வழங்கியிருக்கிறது.
ஃபவுண்டேஷன் -உடன் இணைந்து பூனேயில் இருக்கும் 5-வது Battalion of the elite National Disaster Response Force (NDRF)-உடன் இணைந்து COVID-19 பற்றிய விழிப்புணர்வையும், சமூக அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பொதுமக்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை அளித்துவருகிறது.
ஒரு சக்திவாய்ந்த சமூக, பரஸ்பர சொந்தம் மற்றும் உரிமைத்துவ உணர்வைக் கட்டியெழுப்புவதையே Panchshil Foundation இலக்காக வைத்திருக்கிறது. மக்கள் சிறந்த வாழ்க்கை வாழும்போது சிறந்த சமூகங்கள் உருவாகின்றன என்பதுதான் எங்களுடைய நம்பிக்கை. கல்வி, சுகாதாரம், கலை மற்றும் கலாச்சாரம், விளையாட்டு, உட்கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் சார்புடைய சமூக முன்முயற்சிகள் சம்பந்தமான முன்முயற்சிகள் ஃபவுண்டேஷன்-ன் செயல்பாடுகளில் அடங்கும்.
2002-ல் நிறுவப்பட்ட Panchshil Realty என்பது இந்தியாவின் மிகச்சிறந்த சொகுசு ரியல் எஸ்டேட் பிராண்டுகளில் ஒன்றாகும். திட்டமிடப்பட்ட வளர்ச்சி, மதிப்புமிக்க சொத்துக்களை உருவாக்குதல், மற்றும் வடிவமைப்பு மற்றும் கட்டடக்கலை வழியாக வாழ்க்கைப்பாணி அனுபவங்களை ஏற்படுத்துவதில் ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் தன்னுடைய முன்னிலைக்கும் செயல்திறனுக்கும் புகழ்பெற்ற இக்குழுவின் அணுகுமுறையாக உள்ளது. Panchshil Realty-யின் ரியல் எஸ்டேட் 23 மில்லியன் சதுர அடிக்கும் அதிகமாக உள்ளது. இன்னும் 20 மில்லியன் சதுர அடிப் பரப்பு கட்டுமானத்தில் உள்ளது.
Panchshil-ன் பிரதான தொழிலாக வர்த்தக அலுவலக கட்டடங்கள், விருந்தோம்பல் மற்றும் இருப்பிட ரியல் எஸ்டேட் தொழில் உள்ளது. Panchshil Realty-யின் குறிப்பிடத்தக்க ஆஃபீஸ் போர்ட்ஃபோலியோவில் Blackstone Group LP-யினால் நிர்வகிக்கப்படும் Blackstone Real Estate Private Equity Fund அடங்கும்.
Panchshil பற்றி மேலும் அறிந்துகொள்ள www.panchshil.com என்ற வலைதளத்தைப் பாருங்கள்.
லோகோ - https://mma.prnewswire.com/media/1157878/Panchshil_Foundation_Force_Motors_Logo.jpg
புகைப்படம் - https://mma.prnewswire.com/media/1157879/Panchshil_Force_Motors_Kit.jpg
Share this article