முதலாவது Occupational Safety & Health India (OSH) Virtual Expo: Informa Markets in India-வினால் ஒரு பிரீமியர் டிஜிட்டல் ஆஃபரிங்
வேலை செய்யும் இடத்தில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை அதிகப்படுத்தும் கொள்கைகள், புத்தாக்கங்கள் & வாய்ப்புகளை எடுத்துக்காட்டும் மிக முக்கியமான நிகழ்வு
மும்பை, July 23, 2020 /PRNewswire/ -- Informa Markets in India (முன்னர் UBM India)-வினால் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறைக்காக நடத்தப்படும் தெற்காசியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கண்காட்சியான Occupational Safety and Health (OSH) India Virtual Expo ஜூலை 16, 2020 நடத்தப்படும் தன்னுடைய மெய்நிகர் வர்த்தகக் கண்காட்சி மற்றும் மாநாட்டைத் தொடங்கியிருப்பதாக அறிவித்துள்ளது.
COVID-19 தொற்றினால் உலகமே பீதியடைந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து எடுக்கப்படும் பயணக் கட்டுப்பாடுகள் உட்பட கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாகவும் கண்காட்சித் துறை மிகப் பெரிய பாதிப்பை அடைந்திருக்கிறது. OSH India நடத்தும் இந்த Virtual Expo தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையின் தேவைகளைத் தொடர்ந்து பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், நிபுணர்கள் தங்களுடைய முக்கிய வர்த்தக உரையாடல்களை நடத்த உதவுவதோடு சாத்தியமான தீர்வுகளை வழங்கவும் உதவுகிறது.
இந்தக் கண்காட்சிக்கு British Safety Council ஆதரவு நல்குகிறது, மேலும், Hindsiam, Mac Machine Tools & Automation, Motorola, Mallcom மற்றும் Venus Health & Safety ஆகியோர் சில்வர் பார்ட்னர்களாகவும், மற்றும் Swan Environmental Pvt Ltd. இதன் எக்சிபிட்டிங் பார்ட்னர்களாக இருக்கிறார்கள், ஒரு பொதுவான மெய்நிகர் தளத்தின்கீழ் தொழில்பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரபலமான பிராண்டுகள், ஆலோசகர்கள், தொழில்துறை நிபுணர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை இந்தக் கண்காட்சி ஒரு குடையின்கீழ் இணைக்கும். இந்தக் கண்காட்சியின் மெய்நிகர் தொடக்க நிகழச்சியின் தலைமை விருந்தினராக கேரள அரசின் தொழிலாளர், திறன்கள் & தீர்வைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரான Shri Satyajeet Rajan, IAS, அவர்கள் உள்ளார்; மேலும், தொழிற்சாலைகள், பாய்லர்கள் துறையின் தொழில் பாதுகாப்பு & சுகாதாரப் பிரிவின் இயக்குநரான Shri K. Srinivas, மற்றும் தேசிய பாதுகாப்புக் கவுன்சிலின் பொது இயக்குநரான Shri Lalit Gabhane; Informa Markets in India-ன் மேலாண் இயக்குநரான Mr. Yogesh Mudras, மற்றும் Informa Markets in India-ன் பாதுகாப்புப் பிரிவின் குழு இயக்குநரான Mr. Pankaj Jain, ஆகியோர் முக்கிய விருந்தினர்களாகக் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த Virtual Expo யில் கார்ப்பரேட் ஹௌஸ்களிலும் தொழிற்சாலைகளிலும் வேலை செய்யும் இடங்களில் உள்ள பாதுகாப்பினை மிகச் சிறப்பானதாக்கும் வெல்லமுடியாத தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களும் இதில் அடங்கும். இவற்றில் தனியர் காப்புக் கருவிகள் (PPEs), உருக்கிய உலோகப் பாதுகாப்பு சார்ந்த பாதுகாப்பு உடைகள் மற்றும் அக்சஸரிகள், எலக்ட்ரிக் ஆர்க் பாதுகாப்பு மற்றும் அர்பன் சேர்ச் & ரெஸ்கியூ, சவுண்ட் லெவல் மீட்டர்கள், டோசிமீட்டர்கள், ஹீட் ஸ்டிரெஸ் மானிட்டர்ஸ், வைப்ரேஷன் அனலைசர்ஸ், லைட் மீட்டர், ஏர் & டஸ்ட் சேம்ப்ளர்ஸ், சேம்ப்ளிங் மீடியா, சிங்கிள் மற்றும் மல்டி-கேஸ் டிடெக்டர்ஸ், ஆல்கஹால் பிரெத் அனலைசர்ஸ், இன்டோர் ஏர் குவாலிட்டி மானிட்டர்ஸ், பயோ சேம்ப்ளர்ஸ், அனிமோமீட்டர்ஸ், ஓடோர் மீட்டர்ஸ், ஏரோசால் மானிட்டர்ஸ், ஃபையர் ஃபைட்டிங் ஹெல்மெட்ஸ் மற்றும் கிளவுஸ், கட் ரெசிஸ்டன்ட் கிளவுஸ், ஆன்டி ஃபிளாஷ் ஹூடு, ஃபையர் அன்டு வெல்டிங் பிளாங்கெட்ஸ் & ஃபையர் எஸ்கேப் மாஸ்க்ஸ் ஆகியவை அடங்கும். உயிர், சுற்றுச்சூழல் மற்றும் உடமைகளைப் பாதுகாப்பதற்கான பல்வேறு சுகாதாரத் தீர்வுகளும் கண்காட்சியில் முதன்மையிடம் பிடிக்கின்றன.
அன்லாக் சமயத்தில் அலுவலகங்களைத் திறந்திருக்கும் சமயத்தில், இந்தியாவில் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் என்பது குறிப்பாக நடப்புப் பெருந்தொற்றுச் சூழலில் மிகவும் கஷ்டமான பணியாகத் தொடர்ந்து இருக்கிறது. காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை அரசு அதிகாரிகள், HSE நிபுணர்கள், தொழில்துறை சங்கங்கள், மற்றும் OSH நற்செய்தியாளர்கள் பங்கேற்கும் மாநாட்டினையும் OSH India Virtual Expo-வில் சேர்ப்பதால் உலகளாவிய பணியிடப் பாதுகாப்புச் சந்தையில் கிடைத்துள்ள உரிய தெளிவுகளை இங்கு கொண்டுவர முடிவெடுத்துள்ளது. லீடர்ஷிப் இன் எம்ப்ளாயீ ஹெல்த் & வெல்பீயிங்; பிராக்டிசிங் எர்கனோமிக்ஸ் அட் நியூ ஏர் ஒர்க்பிளேய்சஸ்; டேக்லிங் மென்டர் ஹெல்த் அட் ஒர்க்பிளேய்சஸ் போஸ்ட் COVID-19; தி எஃபெக்ட் ஆஃப் COVID-19 பேண்டமிக் ஆன் தி சேஃப்டி ஆஃப் குளோபல் ஒர்க்ஃபோர்ஸ்; மற்றும் ஹசார்டு ஐடென்டிஃபிக்கேஷன் & ரிஸ்க் கண்ட்ரோல்: ஸ்டிரேடஜீஸ் ஃபார் சக்சஸ்ஃபுல் ஆக்ஸிடென்ட் பிரிவென்ஷன் போன்ற தலைப்புகளில் வெபினார்கள் நடக்கும்.
OSH India-வின் முதலாவது Virtual Expo யை அறிவித்துப் பேசிய Informa Markets in India-வின் Managing Director-Mr. Yogesh Mudras, "OSH India-வின் முதலாவது மெய்நிகர் கண்காட்சி யை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நடப்பு பெருந்தொற்று பொது முடக்கத்தின் மத்தியில் பணியிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையினருக்கு உதவும் வகையில் இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது. கண்காட்சி மற்றும் மாநாடு வழியாக தயாரிப்புகளையும் பட்டறிவையும் நெட்வொர்க்கிங்கினையும் ஒருங்கிணைக்கும் வகையில் உலகத் தரத்திலான வலைதள அடிப்படையிலான தளத்தில் இந்தக் கண்காட்சி நடக்கும். தொழில் பாதுகாப்பின்மீது கவனம் செலுத்துவது என்பது இன்றைய காலத்தின் கட்டாயமாக உள்ளது. பெருந்தொற்றுக்கு மத்தியில் பணியிடத்துக்கு சிறிது சிறிதாகத் திரும்புவது புதிய இயல்பாகிறது. உழைக்கும் பெண்களுக்கான தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், உயரங்களில் வேலை செய்வோர் அல்லது ஆபத்தான பொருட்களை வேலையின்போது கையாளுதல், பணியிட எர்கனாமிக்ஸ், மற்றும் மிக முக்கியமாக, அறநெறி குறைவாக உள்ள நிலையில் தொழிலாளர் நலன் போன்ற விஷயங்களில் விழிப்புணர்வைப் பரப்பவும் OSH Virtual Expo விரும்புகிறது. எம்முடைய முயற்சி மிகவும் பொருத்தமானதாக இத்துறையினர் காண்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்"என்றார்.
Hindsiam-ன் இயக்குநரான Mr. Sunil Kumar Agrawal, பேசும்போது, "COVID-19 தொற்று தொடங்கியதிலிருந்து, தனியர் பாதுகாப்பு சாதனங்கள் அனைத்தும் உலக அளவில் குறைவாகவே கிடைக்கின்றன. இது தனிநபர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கு மிகவும் கேடுவிளைவிக்கக்கூடும். பெருந்தொற்றினால் துன்புறும் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் பெருகிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய சுகாதாரத் துறை கடுமையாகப் போராடி வருகிறது. இருப்பினும், COVID-19 மட்டுமே வேலை செய்வோருக்கு கவலையளிக்கும் விஷயமல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பல்வேறு துறைகளை திறப்பதற்கான அரசு ஒழுங்குமுறைகளைக் கொடுக்கும்போது, தொழில் துறை தீ, எலக்ட்ரிக் ஆர்க், உருக்கிய உலோகங்கள், ஃபிளாஷ் ஃபையர், லிக்விட் கெமிக்கல் ஸ்பிளாஷஸ், காடு மற்றும் சாகுபடியில் ஏற்படும் தீ, நிலை மின்சாரம், வீடுகளில் ஏற்படும் தீ, புகை மற்றும் வெப்பம் தொடர்பான தொழில் பாதுகாப்பு மற்றும் சுகதாரத்தின்மீதும் (OSH) கவனம் செலுத்த வேண்டும். போதுமான PPE இல்லாதிருப்பது மற்றும் போதுமான பாதுகாப்பு இல்லாதிருப்பது போன்றவை நாட்டின் உழைப்பாளர்களின் உயிருக்கு ஆபத்தானதாக இருக்கும். தலைமுதல் கால்வரை மறைக்கும் மற்றும் சர்வதேச தரச் சான்று பெற்ற தன்னுடைய முழுமையான தனியர் காப்பு துணி மற்றும் கருவிகளைக்கொண்டு Hindsiam தொழில்துறைக்கும், வீடுகளுக்கும் சேவைத் துறைக்கும் முழுமையான மன நிம்மதியைக் கொடுக்கிறது.
தேசிய பொது முடக்கத்தின் எதிர்மறை விளைவுகளில் ஒன்றான மன நலப் பிரச்சனைகள் பற்றிப் பேசிய British Safety Council-ன் Chief Audit Analyst-ஆன திரு. Suresh Tanwar இந்தியத் தொழிலாளர்களின் மன நலனுக்கு உதவவும் மேம்படுத்தவும் முதலாளிகள் எடுக்க வேண்டிய நடைமுறை வழிமுறைகள் பற்றிப் பேசும்போது, "நீட்டிக்கப்பட்ட பொது முடக்கத்தின் காரணமாக மனநலப் பிரச்சனைகள் மேலோங்கியுள்ளன. மனதளவில் அதிர்ச்சிக் கட்டத்தில் உள்ள தனிநபர்களுக்கான ஆற்றுப்படுத்துதல் அமர்வுகளுடன் EAP (எம்ப்ளாயீ அசிஸ்டன்ஸ் புரோகிராம்), மனஅழுத்த மதிப்பீட்டுக் கருவி, மனஅழுத்தம் மற்றும் பதற்ற மேலாண்மை பற்றிய பயிற்சித் திட்டங்கள் போன்ற திட்டங்களை மூத்த தலைவர்கள் அமுல்படுத்த வேண்டும். மனநலப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நிர்வாகம் இந்த எல்லா விஷயங்களையும் நம்பகமான முறையில் செய்ய வேண்டும்."
வைரஸ் தொற்றைப் பெறாமலும் மற்றவர்களுக்குப் பரப்பாமலும் பாதுகாப்பாக இருப்பதற்கான வழிகளைப் பற்றி Mr. Tanwar பேசும்போது, "நிறுவனங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் மூலமாக பணியாளர்கள் பாதுகாக்கப்படலாம். முகக்கவசம் அணிதல், 2 மீட்டர் சமூக இடைவெளியைப் பராமரிப்பது, 20 நொடிகளுக்குக் கைகளைக் கழுவுவது போன்ற பொதுவான நடவடிக்கைகளைப் பற்றி எல்லாரும் அறிந்துள்ளனர். இந்தக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இடர் மதிப்பீட்டிலிருந்து தொடங்க வேண்டுமேயன்றி, தளங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் அணுகுமுறையாக இருக்கக்கூடாது. இந்த முழுமையான அணுகுமுறையில் மூத்த தலைமையின் தகவல் தொடர்பு, எல்லா நடவடிக்கைகளின் அபாய மதிப்பீடு மற்றும் உரிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், இடர் மேலாண்மை மற்றும் தொழில் தொடர்ச்சி மற்றும் திறன்மிக்க சீராய்வு முறைகள் அடங்கும். British Safety Council-ல் நாங்கள் இந்த அணுகுமுறையைப் பின்பற்றுகிறோம், அதே விதத்தில்தான் எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறோம், மதிப்பிடுகிறோம்."
COVID-19 மற்றும் அதைத் தொடர்ந்து அமுல்படுத்தப்படும் பொது முடக்கம் உள்ள சூழலில், இந்தியாவில் உள்ள உழைப்பாளிகளின் மன நலன் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்பது ஒரு மோசமான உண்மைநிலை. அதை மேம்படுத்த முதலாளிகள் எடுக்கக்கூடிய நடைமுறைகள் பற்றிப் பேசிய The Healthy Work Company-யின் நிறுவனரும் இயக்குநருமான Heather Beach கூறுகையில், "மன அழுத்தத்தை உருவாக்கும் அமைப்புசார்ந்த காரணிகளைப் போக்குவதும், மக்கள் துன்பப்படும்போது அதைப் போக்குவதற்கு அமைப்புக்குள் கிடைக்கும் ஆதரவுகள் எவை எனப் பார்ப்பதும் மிகவும் முக்கியம், பதற்றத்தைக் கையாளவும், தங்களுடைய சொந்த தாங்குதன்மையை நிர்வகித்தல் பற்றிய விழிப்புணர்வை அளிக்கவும் ஊழியர்களிடம் தனிநபர் உரையாடல்களை நடத்துவதற்கு உங்களுடைய மேலாளர்களுக்குத் தேவைப்படும் கருவிகளைக் கொடுத்து உதவுங்கள்."
OSH Virtual Expo-வில் மாநாட்டு வெபினாரின் பேச்சாளர்களில் Mr. Shiv Khera, இந்திய ஆசிரியர், ஆக்டிவிஸ்ட் மற்றும் தொழில்முறை பேச்சாளர்; Heather Beach, நிறுவனர் & MD, The Healthy Work Company; Shankar R., ஹெட் - சேஃப்டி, குவாலிட்டி, சிஸ்டம்ஸ், சஸ்டெய்னபிலிட்டி மற்றும் பிராசஸ் இம்ப்ரூவ்மென்ட்ஸ், Sterling and Wilson Solar; Srinivasu M., GM-CHSE (ஃபார்முலேஷன்ஸ்) & ஹெட்-சஸ்டெய்னபிலிட்டி, Hetero Labs Ltd; Hitesh Lachhwani, நேஷனல் ஹெட் - சேஃப்டி அட் Hindustan Coca-Cola Beverages Pvt Ltd.; Ravindra Dhapola, கார்ப்பரேட் ஹெட்-SHE, CSR & சஸ்டெய்னபிலிட்டி, Tata Coffee Ltd; Karan Vir Singh, பொது மேலாளர் - ஃபையர் & சேஃப்டி-மும்பை ரிஃபைனரி, Hindustan Petroleum; Mohan V.C., ஜெனரல் மேனேஜர் - EHS, Bosch Ltd; Avinash Harde, வைஸ் பிரெசிடென்ட்- IMS HCC Ltd; Shivakumara C., ஹெட்-HSE, Project and Development Services, Jones Lang LaSalle; Sri Arockiasamy, சீனியர் ஜெனரல் மேனேஜர்-EHS, JMC Projects India Ltd மற்றும் Suresh Tanwar, ஹெட் ஆஃப் ஆடிட் & கன்சல்டன்சி, British Safety Council, India LLP போன்றவர்கள் சிலர்.
Informa Markets பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை Informa Markets உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் 365 வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
Informa Markets மற்றும் இந்தியாவில் எம்முடைய தொழில் பற்றி
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும். Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் எலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம். இந்தியாவில் மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னை -யில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informa.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
புகைப்படம்: https://mma.prnewswire.com/media/1214852/OSH_India_Virtual_Expo.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
Share this article