Millennial mothers மற்றும் generation alpha-வுக்கான ஒரு அறிவுசார் மன்றத்தை Mumbai-யில் வரும் 19 மற்றும் 20 மார்ச் 2020-ல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது
MUMBAI, Feb. 26, 2020 /PRNewswire/ -- Fi India மற்றும் Children Baby Maternity Expo (CBME) போன்ற முன்னணி கண்காட்சிகளை ஒருங்கிணைத்து நடத்தியிருக்கும் Informa Markets வரும் 19-20 மார்ச் 2020-ல் Mumbai-யில் உள்ள The Orchid-ல் 'Maternal and Child Nutrition' மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த மாநாடு DSM Nutrition Company-யினால் வழங்கப்படுகிறது. உணவு மற்றும் மருந்துத் துறைக்கு விட்டமின்களையும் ஊட்டச்சத்து பிரிமிக்ஸ்களையும் அளிப்பதில் DSM முன்னணியில் உள்ளது.
ஊட்டச்சத்து மீட்சி, வளர்ந்துவரும் வருவாய், பதிய யோசனைகளும், தொழில்நுட்பங்களும் உருவாகி வருவது போன்றவற்றின் காரணமாக தொழில்துறை தயாரிப்புகளின்மீது அதிகமான சார்புள்ள, குறிப்பாக பெருநகரங்களில் உள்ள மில்லேனியல் அம்மாவாகப் போக உள்ளவர்களின் மாறிவரும் வாழ்க்கைப்பாணி தாய்ப்பேறு ஊட்டச்சத்துத் துறையை முக்கியத்துவமிக்கதாக ஆக்கியிருக்கிறது. கூடுதலாக, Alpha generation-ன் மோசமான உணவுப்பழக்கம் சவால்களை மேலும் அதிகரித்திருக்கிறது.
இந்த சவால்களைக் கருத்தில்கொண்டு, Informa Markets in India தன்னுடைய முதலாவது 'Maternal & Child Nutrition Conference'-ஐ நடத்தத்த திட்டமிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களும் தயாரிப்பாளர்களும் கூடுமிடமாகவும், தங்களுடைய அறிவையும், சமீபத்திய தங்களுடைய பாணிகளையும், புத்தாக்கங்களையும் பகிர்ந்துகொள்ளவும், அறிவியல், புத்தாக்கம் & தொழில்நுட்ப பிரிவுகளில் சமீபத்திய மேம்பாடுகளையும் தீர்வுகளையும் பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளும் இடமாகவும் இது இருக்கும்.
ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள், புத்தாக்கங்கள் மற்றும் ஆராய்ச்சி போன்ற அம்சங்களின்மீது அதிக கவனம் செலுத்தும் இந்த மாநாட்டில் AFSTI (The Association of Food Scientists and Technologists (India)) மற்றும் IDA (Indian Dietetic Association), மற்றும் GSK, Marico, Fresenius Kabi, Nestle போன்ற MNC-களிலிருந்து 20-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் இத்துறையின் பல்வேறு அம்சங்கள் பற்றிப் பேச Informa Markets in India ஏற்பாடு செய்திருக்கிறது. மருந்து, உணவு அல்லது பொது ஊட்டச்சத்துத் துறையிலிருந்து 120-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிபுணர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு தங்களுடைய பங்களிப்புகளைக் கொடுக்க இருக்கின்றனர்.
இந்த தனித்துவமான 2-நாள் நிகழ்ச்சி பற்றிப் பேசிய Informa markets in India-ன் Managing Director- ஆன Mr. Yogesh Mudras, பேசும்போது, "இந்த 2-நாள் மாநாட்டின்போது, இந்தியாவில் தாய்ப்பேறு மற்றும் குழந்தை ஊட்டச்சத்துத் துறையில் உள்ள சவால்களைத் தீர்ப்பதற்கான முக்கியமான யுத்திகளைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து தீர்வுகளை அடைய முயற்சிக்கும். வாழ்க்கையின் இந்தக் காலக்கட்டத்தில் ஊட்டச்சத்தின் தேவையை யாரும் புறக்கணிக்க முடியாது. இலக்கு மக்களின் சுகாதாரம் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ற விதத்தில் தங்களுடைய தயாரிப்புகளை புதுமையான முறையில் அளிப்பறத்கு நம்முடைய ஊட்டச்சத்து உணவுகளைத் தயாரிக்கும் நிறுவனங்களை இந்த மாநாடு ஊக்குவிக்கும். CBME மற்றும் Fi India போன்ற கண்காட்சிகள் வழியாக Informa Markets in India பேரண்டிங்கை சுலபமாக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, ஊட்டச்சத்து மற்றும் புதுமையான தயாரிப்புகளின் தேவையை அதிகப்படுத்துவதில் கடந்த சில ஆண்டுகளாக முக்கியமான பங்காற்றியிருக்கிறது. DSM-உடன் இணைந்த நாங்கள் ஏற்பாடு செய்திருக்கும் இந்த மாநாடு, இந்தத் துறைக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் என்றும், ஒப்பிட முடியாத அளவு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, மில்லேனியல் அம்மாக்களுக்கும் ஜெனரேஷன் ஆல்ஃபா-வுக்கும் ஒரு ஆரோக்கியமான வாழ்வை உறுதிப்படுத்தும் என்றும் நம்புகிறோம்.
Informa Markets பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை Informa Markets உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் 365 நாட்களும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
Informa Markets மற்றும் இந்தியாவில் எம்முடைய தொழில் பற்றி
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும். Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம். இந்தியாவில் Mumbai, New Delhi, Bangalore மற்றும் Chennai-யில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informa.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
DSM பற்றி:
இணை உணவுகள், உணவு மற்றும் மருந்துத் துறைகளுக்கு விட்டமின்களையும், கரோட்டினாய்ட்ஸ், ஒமேகா-3 & 6 நுட்ரீஷனல் லிபிட்ஸ், ஊட்டமருந்து உட்பொருட்களையும், ஊட்டச்சத்து பிரிமிக்ஸ்களையும் அளிப்பதில் DSM முன்னணியில் உள்ளது. புதுமையான டெலிவரி வடிவங்கள், ஊட்டச்சத்து மற்றும் ஃபங்க்ஷனல் இன்கிரேடியன்ட்ஸ் சம்பந்தமான அறிவியல்பூர்வமான மற்றும் தொழில்நுட்பரீதியான நிபுணத்துவம், சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை குழுக்கள் உலகளாவிய அளவில் இருப்பதோடு, ஆதரவுப் பணிகளையும் செய்யக்கூடியவையாக உள்ள எங்களுடைய தனித்துவமான அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி முற்றிலும் புதிய தயாரிப்புகளை உருவாக்கி வெளிக்கொண்டுவருவதற்கு நாங்கள் முழுமையான ஆதரவை வழங்குகிறோம். DSM-ன் பரந்த நிபுணத்துவமும் திறனும் இலக்கு வாடிக்கையாளர்களால் விரும்பப்படும் தயாரிப்புகளையும் புதிய பிராண்டுகளையும் உருவாக்க தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு உதவுகின்றன.
மாநாடு சம்பந்தமான விசாரணைகளுக்கு தயவுசெய்து இவர்களைத் தொடர்பு கொள்ளவும்:
Moosab Shaikh:
+91-9773517958
[email protected]
ஊடக விசாரணைகளுக்குத் தயவுசெய்து தொடர்பு கொள்ளுங்கள்:
Roshini Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
Informa Markets in India
லோகோ : https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
லோகோ : https://mma.prnewswire.com/media/1094998/Maternal_and_Child_Nutrition.jpg
Share this article