மெய்நிகர் கண்காட்சிக்கு Informa Markets in India திரும்பியிருப்பதை திறன்மிக்க இ-ஷோஸ் காட்டுகின்றன
IFSEC India, Renewable Energy India-வும் OSH-ம் இணைந்து இந்த ஜூன் மாதம் தொடங்கி டிஜிட்டல் மீடியம் வழியாக காட்சிகளை நடத்தவிருக்கின்றன.
MUMBAI, April 30, 2020 /PRNewswire/ -- ஒரு முன்னணி B2B கண்காட்சி ஏற்பாட்டளரான Informa Markets in India (முன்னர் UBM India), இந்த ஆண்டு தொடர்ச்சியாக மெய்நிகர் வர்த்தகக் கண்காட்சிகள், மாநாடுகள் மற்றும் பயிற்சிகளை நடத்தி தன்னுடைய டிஜிட்டல் தளத்தை மேம்படுத்துவதுடன் மெய்நிகர் கண்காட்சி உலகத்திற்குத் திரும்பியிருப்பதாக அறிவித்துள்ளது. COVID-19 தொற்றினால் உலகமே பீதியடைந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து எடுக்கப்படும் பயணக் கட்டுப்பாடுகள் உட்பட கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாகவும் கண்காட்சித் துறை மிகப் பெரிய பாதிப்பை அடைந்திருக்கிறது. Informa Markets in India-வின் டிஜிட்டல் தளத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட இ-கண்காட்சிகள் வழியாக, தான் சேவையளிக்கும் பல்வேறு துறைகளின் தேவைகளை தொடர்ந்து பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், நிபுணர்கள் தங்களுடைய முக்கிய வர்த்தக உரையாடல்களையும் ஈடுபாடுகளையும் நடத்த உதவுகிறது. குறிப்பாக, சமூக இடைவெளி, பாதுகாப்பு நடவடிக்கைகள், பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் தொழில் தொடர்ச்சி போன்ற தடைகளை வெற்றிகொள்ள இவை தொடர்ச்சியான தீர்வுகளை அளிக்கின்றன.
மெய்நிகர் வர்த்தகக் கண்காட்சி மென்பொருள் தொழில்நுட்பத்தில் உள்ள மேம்பாடுகள் அனைத்து மெய்நிகர் வர்த்தக அனுபவங்களை நோக்கிய மிகவும் பிரபலமான இயக்கத்திற்க வழிவகை செய்திருக்கின்றன. இ-வர்த்தகக் காட்சிகளை ஒரு இயலக்கூடிய, கவர்ச்சிகரமான மற்றும் இப்போது கண்காட்சிகளின் தவிர்க்கமுடியாத அங்கமாக ஆக்குவதற்குப் பல காரணிகள் உள்ளன. இவற்றில் முயற்சிகளையும் ஆதார வளங்களையும் உகப்பாக்குவது, மற்றும் வெவ்வேறு நாடுகளிலிருந்து எளிதில் பங்கேற்கும் வசதி ஆகியவை அடங்கும். தங்களுடைய புத்தாக்கங்களையும் தீர்வுகளையும் முடிவெடுப்பாளர்களுக்கும் தாக்கம் ஏற்படுத்துபவர்களுக்கும் பிராண்டுகள் உரிய ஆன்லைன் பார்வையாளர்களுக்குக் காட்சிப்படுத்த கண்காட்சியாளர்களையும் பார்வையாளர்களையும் கவர்ந்திழுங்க மெய்நிகர் வர்த்தகக் கண்காட்சியகளால் இயலுகிறது.
இந்த மேம்பாடு பற்றிப் பேசிய Informa Markets in India-வின் மேனேஜிங் டிரெக்டரான திரு. Yogesh Mudras பேசும்போது, "பல திட்டமிடப்பட்ட கண்காடசிகள் இந்த ஆண்டின் இறுதிக்கு ஒத்திப் போடப்பட்ட நிலையில், சில குறிப்பிடத்தக்க கண்காட்சிகளும் மாநாடுகளும் மெய்நிகர் அணுகுமுறையை எடுத்துள்ளனர். மீண்டும் இயல்புநிலை திரும்பும்போது அவற்றின் ஆஃப்லைன் கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன. அரசின் வழிகாட்டுதல்களை நாங்கள் தீவிரமாகப் பின்பற்றுகிறோம், எம்முடைய கண்காட்சியாளர்கள், கொள்முதலாளர்களின் பாதுகாப்பு Informa Markets in India-வின் முதன்மையான நோக்கமாக இருந்து வந்திருக்கிறது. InterOp-ஐகொண்டு மெய்நிகர் கண்காட்சிக்கு தொடக்கத்திலேயே சென்றவர்கள் நாங்கள். இதை நாங்கள் 2011-ல் ஒரு மூன்று நாள் தொழில் நுட்பக் கண்காட்சியை ஆன்லைனில் நடத்தியிருக்கிறோம். தற்போது, உலகளாவிய அளவில் மிகப்பெரிய நிறுவனம் என்ற முறையில் திறம்பட்ட தொழில்நுட்பங்களை நாங்கள் பயன்படுத்தி COVID-19 நமக்குக் கொடுத்திருக்கும் சவால்களை எதிர்கொள்ளும் நிபுணத்துவத்தை கட்டமைக்கிறோம். மெய்நிகர் தொடர்பு தளங்களை நடைமுறைப்படுத்துவதால் கூட்டாளித்துவத்தையும், கண்காட்சியாளர்களுக்கும் கொள்முதலாளர்களுக்குமிடைய புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும். எதிர்காலத்திற்கும்கூட, மெய்நிகர் ஃபார்மேட்டினால் ஆதரவளிக்கப்படும் ஆஃப்லைன் கண்காட்சிகளின் கலப்பு வடிவம் நம்முடைய மதிப்புமிக்க பங்குதாரர்களின் தேவைகளுக்கு முழுமையான தீர்வினை அளிப்பதாக அமையும்.
இந்த முன்னேற்றத்தைக்கொண்டு கண்காட்சியாளர்கள் தங்களுடைய தயாரிப்புகளை மெய்நிகர் வடிவில் காட்சிப்படுத்த முடிவதையும், மாநாட்டு அமர்வுகளின் அங்கமாக வாடிக்கையாளர்களுடன் திறம்பட்ட வகையில் தனிப்பட்ட முறையில் ஆடியோ / வீடியோ அழைப்புகள் வழியாகப் பேச முடிவதையும் Informa Markets in India உறுதிசெய்கிறது. வழக்கமாக வாடிக்கையாளர்களுடன் கண்காட்சியாளர்கள் பகிர்ந்துகொள்ளும் வெள்ளைத் தாள்கள், நிகழ்வு ஆய்வுகள், PPT-கள், பிரவ்ஷர்கள் மற்றும் பிற எந்த தகவலளிக்கும் விஷயங்களும் தடையின்றி பங்குதார்களுக்கு அவர்களுடைய வீட்டில் வசதியயான இடத்திலேயே கிடைக்கும்.
இதைத் தொடங்கும் வகையில் Informa Markets in India தன்னுடைய அடுத்து வரவிருக்கும் ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கும் மெய்நிகர் வர்த்தகக் கண்காட்சிகளின் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்தக் கண்காட்சிகள் இந்த ஆண்டின் இறுதியில் வருடாந்திர ஆஃப்லைன் கண்காட்சியாக நடைபெறும். அவை - Renewable Energy India REI, International Fire & Security Exhibition and Conference (IFSEC) India and Occupational Health and Safety ( OSH ) India expo. பார்மா தொழில்துறையும் Biolytica and Nitrosamine Impurities மெய்நிகர் மாநாட்டை இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடத்தவிருக்கிறது.
Informa Markets பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை Informa Markets உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் 365 நாட்களும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள் .
Informa Markets மற்றும் இந்தியாவில் எம்முடைய தொழில் பற்றி
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும். Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் எலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம். இந்தியாவில் Mumbai, New Delhi, Bangalore மற்றும் Chennai-யில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informa.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
எந்த ஒரு ஊடக விசாரணைகளுக்கும் தயவுசெய்து இவர்களைத் தொடர்பு கொள்ளவும்:
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
+91-98332-79461
லோகோ: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
Share this article