- இங்கு தங்களுடைய அலுவலகங்களை அமைக்க இருப்பவர்களுள் Qualys, VMWare & Veritas போன்றோர் முக்கியமானவர்கள்
பூனே, இந்தியா, Jan. 15, 2021 /PRNewswire/ -- மேற்கு பூனேயின் முக்கியமான தொழில் மாவட்டமாக உள்ள பானெர்-பாலிவாடி-யில் Panchshil Business Park-ன் பேஸ்-II-வை பூனேயில் அமைந்துள்ள Panchshil Realty-யின் ஒரு அலகான Panchshil Office Parks திறந்திருக்கிறது.
இங்கு அலுவலகத்தை அமைத்திருக்கும் முதலாவது நிறுவனமான T-Systems 419,000 சதுரடி அலுவலகப் பரப்பினை எடுத்திருக்கிறது, வரும் வாரங்களில் அலுவலகங்களைத் திறக்கவிருக்கும முக்கியமான நிறுவனங்களாவன:
இங்கு தங்களுடைய அலுவலகங்களைத் திறக்க ஒப்பந்தம் செய்திருக்கும் T-systems, Siemens, Fundtech, Thyssenkrupp, Nutanix, Redbrick மற்றும் The Executive Centre போன்ற நிறுவனங்கள் Panchshil Business Park-ன் பேஸ் II-வில் நீண்ட காலத்திற்கு குத்தகை எடுத்திருக்கின்றன. 1.6 மில்லியன் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்தப் பூங்காவினை Panchshil Realty மற்றும் Blackstone Real Estate Partners இணைந்து கூட்டாக உருவாக்கியுள்ளனர், உரிமையாளர்களாகவும் உள்ளனர்.
2.7 மில்லியன் சதுர அடி கொண்ட Panchshil Business Park மிக முக்கியமான மும்பை -பெங்களூரு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 1.1 மில்லியன் சதுர அடிக்கும் மேல் உள்ள இந்தப் பூங்காவின் பேஸ்-I-ஐ Panchshil Realty உருவாக்கி Cummins அதனுடைய இந்திய தலைமை அலுவலகத்தை அமைப்பதற்காக விற்று விட்டது.
இதுபற்றிப் பேசிய Panchshil Realty-யின் தலைவரான Atul Chordia பேசும்போது, "Panchshil Business Park-ன் பேஸ்-II செயல்படத் தொடங்கியிருப்பது பற்றி அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன், இதில் தங்களுடைய அலுவலகங்களை அமைக்கவிருக்கும் எம்முடைய கூட்டாளிகளை வரவேற்கிறேன். Panchshil Business Park--ல் உள்ள எம்முடைய அலுவலக இடங்களை குத்தகைக்கு விடுவதில் நாங்கள் பெறும் வெற்றியும், முக்கியமான கார்ப்பரேட் நிறுவனங்கள் எம்முடைய அலுவலகங்களை விரும்பி எடுத்துக் கொள்ளுவதும், அதில் அவர்கள் காட்டும் ஆர்வமும், பூனே அலுவலகச் சந்தையின் தொடர் கவர்ச்சியையும் மீண்டெழும் திறனையும் Panchshil-ன் தனித்திறனையும் காட்டுகின்றன. நாட்டில் சில முக்கிய அலுவலகச் சந்தையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க போக்கினை இது பிரதிபலிக்கிறது. எம்முடைய வரவிருக்கும் திட்டங்களிலும் வரவிருக்கும் மாதங்களிலும் குத்தகை நடவடிக்கையும், நிறுவனங்களின் தேவையும் வீரியமாகத் தொடரும் என எதிர்பார்க்கிறோம்."
Panchshil Business Park-ன் முக்கியமான அம்சங்களில் அடங்குவன:
U.S Green Building Council (USGBC)-னால் LEED Gold-கான முன்-சான்றினை பெற்றுள்ளது. சர்வதேச அளவில் மிக முக்கியமான பசுமைக் கட்டுமான நீடிப்புத்திறன் ரேட்டிங்காக இது கருதப்படுகிறது.
உலகளாவிய அளவில் பசுமைக் கட்டுமானங்கள் மற்றும் சமூகங்களுக்கும் உரிய முன்னணி திட்டமான LEED-ன் நோக்கம் - சுற்றுச்சூழல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பொறுப்பான, ஆரோக்கியமான, மற்றும் செழிப்பான சூழலுக்கு உதவும் வகையில் கட்டடங்களும் சமூககங்களும் வடிவமைக்கப்பட்டு, கட்டப்பட்டு, இயக்கப்படும் முறையை மாற்றுவதேயாகும்.
இந்திய அரசு மற்றும் British Safety Council வழிகாட்டுதல்களின்படி பணி செய்யும் இடங்களுக்குள் COVID-19-ஐ கட்டுப்படுத்துவது தொடர்பாக சரியான மற்றும் போதுமான கொள்கைகளையும், செயல்முறைகளையும் ஏற்பாடுகளையும் நடைமுறைப்படுத்தியிருப்பதை British Safety Council மதிப்பிட்டு, தணிக்கை செய்து சான்று வழங்கியிருக்கிறது.
ஆசிய-பசுபிக் வட்டாரம் முழுவதிலும் குறிப்பாக இந்தியாவில் உள்ள ரியல் எஸ்டேட் குழுக்களில் தன்னுடைய பணியிடங்களில் COVID-19 சார்ந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு தரக்குறியிட்டு தனியாக மதிப்பீடு செய்திருக்கும் முதலாவது ரியல் எஸ்டேட் நிறுவனம் Panchshil Realty-யாகும்.
இங்கு வழங்கப்பட்டிருக்கும் தொழில் உதவி வசதிகளில் 80,000 சது அடி பல உணவு வகைகளைத் தயாரித்து வழங்கும், உணவகங்கள், அரங்கங்கள், ஹெல்த் கிளப், பல F&B மற்றும் லைஃப்ஸ்டைல் அவுட்லெட்டுகளும் பல அடுக்கு பார்க்கிங் பகுதிகளும் அடங்கும்.
Qualys என்பது கலிபோர்னியாவின் ஃபாஸ்டர் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்டும் தகவல் பாதுகாப்பு மற்றும் கம்ப்ளையன்ஸ் க்லௌடு சொலூஷன்ஸை வழங்கும் .ஒரு முன்னணி நிறுவனமாகும். சிறந்த அஜிலிட்டிக்கும், சிறந்த தொழில் விளைவுகளுக்கும், கணிசமான செலவு சேமிப்புக்கும் டிஜிட்டல் மாற்றத்திற்கு உதவுவதற்காக 130-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 15,700-க்கும் மேற்பட்ட உலகளாவிய தொழில் நிறுவனங்கள் Qualys-ஐ நம்பியுள்ளன.
1999-ல் நிறுவப்பட்ட Qualys முன்னணி சேவையாளர்களுடனும், Accenture, BT, Cognizant Technology Solutions, Deutsche Telekom, Fujitsu, HCL, HP Enterprise, IBM, Infosys, Tata Communications, Verizon மற்றும் Wipro உட்பட்ட ஆலோசனை நிறுவனங்களுடனும் யுத்திசார் கூட்டாளித்துவத்தை ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறது. Cloud Security Alliance (CSA)-ன் நிறுவன உறுப்பினராகவும் இந்நிறுவனம் உள்ளது.
Veritas Technologies என்பது ஒரு தரவுப் பாதுகாப்பு, கிடைக்குந்தன்மை மற்றும் இன்சைட்ஸில் உலகளாவிய அளவில் முன்னிலை வகிக்கிறது. இந்தியாவின் ஐடி வளர்ச்சியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக Veritas ஒரு முக்கியமான நிலையான கூட்டாளியாக இருந்து வருகிறது. அபாயத்தைக் குறைக்கவும், செலவை உகந்ததாக்கவும், ரேன்சம்வேர் ரெசிலியன்சியை வலுப்படுத்தவும், டிஜிட்டல் இணக்கத்தை அடையவும், பல-க்லௌடு சூழல்களை மேலாண்மை செய்யவும் வாடிக்கையாளர்களுக்கு உதவி வருகிறது. தொடக்கத்திலிருந்தே, இந்தியாவில் உள்ள Veritas குழு புத்தாக்கக் கலாச்சாரத்தை வளர்த்து வந்திருக்கிறது. 500-க்கும் மேற்பட்ட பதிப்புரிமைகளைப் பெற உதவியிருக்கிறது, Fortune Global 500-ன் 87% மக்களால் பயன்படுத்தப்படும் Veritas-ன் முன்னணித் தயாரிப்புகளுக்குப் பின்னால் உள்ள தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது..
மகாராஷ்டிரா மாநிலத்தில் பூனேயின் பாலிவாடி வட்டாரத்தில் உள்ள புதிய Veritas Center of Excellence (CoE) உள்நாட்டு மற்றும் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு உதவும் முன்னணி சந்தைத் தீர்வுகளை அளிக்கும் Veritas-ன் தொடர் ஈடுபாட்டை நிரூபிக்கிறது. முழுமையாகத் தனித்தியங்கும் இந்தப் புதிய CoE-யில் பொறியியல், தொழில்நுட்ப ஆதரவு, ஐடி, விற்பனை செயல்பாடுகள், நிதி, மனிதவளம், மற்றும் சட்டத்துறை உட்பட்ட உலகளாவிய அளவில் வாடிக்கையாளர்களுக்குச் சேவையளிக்கும் துறைகளிலிருந்து 2,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களையும் வாடிக்கையாளர்களையும் நிர்வகிக்க முடியும். Veritas Enterprise Data Services Platform நம்பகத்தன்மைக்கு புகழ் பெற்றது, எந்த ஒரு தேவைக்கும் பொருந்தக்சுடிய விநியோக மாடலைக் கொண்டது. 60-க்கும் மேற்பட்ட பல்வேறு கிளௌடு பிளாட்ஃபார்ம்களிலும், 1,400-க்கும் மேற்பட்ட சேமிப்பு இலக்குகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட 800-க்கும் மேற்பட்ட பல்வேறு தரவு ஆதாரங்களுக்கும் உதவுகிறது,
VMware software உலகின் சிக்கலான டிஜிட்டல் உட்கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறது. நிறுவனத்தின் க்லௌடு, ஆப் மாடர்னைசேஷன், நெட்வொர்க்கிங், செக்கியூரிட்டி, மற்றும் டிஜிட்டல் ஒர்க்ஸ்பேஸ் சலுகைகள் எந்த ஒரு கருவியிலும் உள்ள எந்த ஒரு கிளௌடிலும் உள்ள எந்த ஒரு செயலியிலும் வழங்க வாடிக்கையாளர்களுக்கு உதவுகின்றன. கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவினைத் தலைமையிடமாகக் கொண்டிருக்கும் VMware அதனுடைய தொழில்நுட்பப் புதுமையாக்கங்கள் முதல் அதனுடைய உலகளாவிய தாக்கம்வரை சிறப்பாகச் செயல்படுகிறது.
Panchshil Office Parks
பூனேயில் Panchshil Realty-யின் அலுவலகப் போர்ட்ஃபோலியோவில் 17.5 மில்லியன் சதுர அடிக்கும் மேற்பட்ட பரப்புள்ள EON Free Zone, World Trade Centre, Business Bay மற்றும் International Convention Centre ஆகியவை அடங்கும், இதன் வளாகங்களில் உலகப் பெரிய கார்ப்பரேஷன் நிறுவனங்களான Allianz, Citibank, Cognizant, Concentrix, Credit Suisse, Deutsche Bank, HSBC, MasterCard, Michelin, UBS மற்றும் Vodafone போன்ற பல நிறுவனங்கள் அமைந்துள்ளன.
Panchshil-ன் தொழில்கள் - முக்கியமான விஷயங்கள்
Panchshil Realty-யின் ரியல் எஸ்டேட் 23 மில்லியன் சதுர அடிக்கும் அதிகமாக உள்ளது. இன்னும் 20 மில்லியன் சதுர அடிப் பரப்பு கட்டுமானத்தில் உள்ளது.
Panchshil-ன் பிரதான தொழிலாக வர்த்தக அலுவலக கட்டடங்கள், விருந்தோம்பல் மற்றும் இருப்பிட ரியல் எஸ்டேட் தொழில் உள்ளன.
Panchshil Realty-யின் குறிப்பிடத்தக்க ஆஃபீஸ் போர்ட்ஃபோலியோவில் Blackstone Group LP-யினால் நிர்வகிக்கப்படும் Blackstone Real Estate Private Equity Fund அடங்கும்.
2002-ல் நிறுவப்பட்ட Panchshil Realty என்பது இந்தியாவின் மிகச்சிறந்த சொகுசு ரியல் எஸ்டேட் பிராண்டுகளில் ஒன்றாகும். திட்டமிடப்பட்ட வளர்ச்சி, மதிப்புமிக்க சொத்துக்களை உருவாக்குதல், மற்றும் வடிவமைப்பு மற்றும் கட்டடக்கலை வழியாக வாழ்க்கைப்பாணி அனுபவங்களை ஏற்படுத்துவதில் ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் தன்னுடைய முன்னிலைக்கும் செயல்திறனுக்கும் புகழ்பெற்ற இக்குழுவின் அணுகுமுறையாக உள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.panchshil.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
Share this article