ஜெயின் (நிகர்நிலை பல்கலைக் கழகமாக உள்ளது) பி.டெக் மற்றும் எம்.டெக் பாடப்பிரிவுகளுக்கான JET 2021 யின் தேதிகளை அறிவிக்கிறது
பெங்களூரு, இந்தியா, June 15, 2021 /PRNewswire/ -- தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஜெயின்(நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக உள்ளது), பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளுக்கான ஆசிரியர்கள், JU-FET ற்காக, ஜூன் 27, 28 மற்றும் 29 அன்று பி.டெக்-ற்கும், ஜூன் 29 அன்று எம்.டெக் பொறியியல் பாடப்பிரிவுகளுக்கும், 2021 ரிமோட் புரொக்டோர்டு மோட் (ஆன்லைன்) மூலமாக ஜெயின் நுழைவுத் தேர்வினை(JET) நடத்துகிறார்கள். பி.டெக் விண்ணப்பதாரர்கள் JET 2021 ஐ எழுதுவதற்கு இங்கே கொடுக்கப்பட்ட மூன்று நாட்களில் ஏதாவது ஒரு நாளை தங்களின் வசதிக்கேற்ப தேர்ந்தெடுக்க வேண்டும்.
JU-FET வழங்கும் பல UG மற்றும் PG பொறியியல் பாடப்பிரிவுகளில் சேர்வதற்கு JET கட்டாயமாகும். உதவித்தொகை மற்றும் தகுதி அடிப்படையிலான இடங்கள் மூலமாக விண்ணப்பதாரர்கள் சேர வேண்டுமென்றால் அதற்கு JET எழுதுவது கட்டாயமாகும். JET மூலமாக, முதலிடம் பெற்றவர்கள் தங்களுடைய முதலாவது ஆண்டு படிப்பிற்கு சுமார் 1 கோடி வரைக்கும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவர்களாவார்கள். பாதுகாப்பு, SC/ST, மற்றும் விளையாட்டு பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் JET மூலம் உதவித்தொகை பெற தகுதியுடையவர்களாவார்கள்
பி.டெக் பாடப்பிரிவுகளுக்கு, JET 2021 தேர்வு முறையில் மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் (MCQக்கள்) 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கும் இது மொத்தம் 150 மதிப்பெண்களைக் கொண்டது. எம்.டெக் பாடப்பிரிவுகளுக்கான JET 2021 MCQ களின் தேர்வுத்தாள், பி.டெக் தேர்வுகளுக்கு வழங்கப்படுவதைப் போலவே இருக்கும் மேலும் இது மொத்த மதிப்பெண்களுடன் (மதிப்பெண்) டொமைன் அடிப்படையிலான கேள்விகளை உள்ளடக்கிய கூடுதல் பிரிவுடன் இருக்கும். JET தேர்வின் பயிற்று மொழியானது ஆங்கிலத்தில் இருக்கும்.
JET க்கான முடிவுகள் JAIN-ன் (நிகர்நிலைப் பல்கலைக்கழமாக உள்ளது) அதிகாரப்பூர்வ வலைத்தளமான (http://jainuniversity.ac.in/) இல் தெரிவிக்கப்படும். தேர்விற்கான வரைமுறைகளைப் பார்ப்பதற்கு, விண்ணப்பதாரர்கள் இங்கே பார்வையிடலாம்: www.jainuniversity.ac.in/jet-btech-mtech .
ஜெயின் (நிகர்நிலை பல்கலைக்கழகமாக உள்ளது) இயற்பியல் துறையின் இணை பேராசிரியர் டாக்டர். நவீன் எஸ்., "தற்போதைய கோவிட்-19 நிலைமை மற்றும் கோவிட் வழக்குகள் நாட்டில் மிகவும் அதிகமாக உயர்ந்துள்ள நிலையில், நாங்கள் JET ஐ ஆன்லைன் மற்றும் ரிமோட் புரொக்டரிங் மூலமாக நடத்துவதர்கு முடிவு செய்துள்ளோம், என்று கூறியுள்ளார். இரண்டாவது அலை ஆனது நாட்டில் உள்ள ஏராளமான மக்களை குறிப்பாக நமமுடைய் தேசத்தின் பிரகாசமான எதிர்காலமாகக் கருதப்படும் இளைஞர்களை மிக அதிகமாக பாதித்துள்ளது. எனவே, அவர்களுடைய உடல்நலம் மற்றும் பாதுகாப்பை பாதிக்காமல், ஆனால் அதே சமயம், கல்வியின் தரம் உயர்த்தப்படுவதை உறுதிசெய்வதற்காக, நாங்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளோம்."
JU-FET ஐ பற்றி:
இந்தியாவில் 2020 ஆம் ஆண்டில் NIRF தரவரிசையில் ஜெயின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக உள்ளது) 85 வது இடத்தைப் பிடித்துள்ளது. ஜெயின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக உள்ளது), பொறியியல் மற்றும் தொழில்நுட்ப ஆசிரியர்கள் அல்லது (JU-FET) இதில் குறிப்பிடப்படுவது போல், இது பெங்களூரில் சிறந்த மற்றும் மிகவும் புகழ்பெற்ற பொறியியல் நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. FET இளங்கலை, முதுகலை மற்றும் பிற சிறப்புத் திட்டங்களை வழங்குகிறது. JU-FET யும் 2020 ஆம் ஆண்டில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது இதில் ஒரு மாணவர் 36 லட்சம் வரைக்குமான வருடாந்திர தொகுப்பை வெற்றிகரமாகப் பெற்றுள்ளார்.
ஜெயின் பற்றி (நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக உள்ளது)
ஜெயின் குழுமத்தால் ஊக்குவிக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் உலகெங்கிலும் இருக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இது மிகவும் விருப்பமான கற்றல் மையமாக உள்ளது. கல்வி, தொழில்முனைவோர், ஆராய்ச்சி மற்றும் விளையாட்டு ஆகியவற்றிற்கு ஜெயின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக உள்ளது) முக்கியத்துவம் கொடுப்பதோடு, கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் சிறப்பானதைக் கொண்டுள்ளது, மேலும் தொழில் முனைவோர் மற்றும் புதுமையான சிந்தனையை ஊக்குவிக்கும் மையங்களையும் கொண்டுள்ளது.
கூடுதல் விபரங்களுக்கு தயவு செய்து இங்கே பார்க்கவும் : www.jainuniversity.ac.in
ஊடகத் தொடர்பு:
ஊடக ஒருங்கிணைப்பாளர்
[email protected]
08043432500
ஜெயின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக உள்ளது
Share this article