India Health Exhibition வரும் ஏப்ரல் 14-16, 2020-ல் Arab Health ஒருங்கிணைப்பாளர்கள், Informa Markets-னால் புதுடெல்லியில் நடத்தப்பட உள்ளது
இந்தியாவின் சுகாதாரப் பராமரிப்புத் துறை 2022-க்குள் US$ 372 பில்லியன் அளவுக்கு மும்மடங்காக அதிகரிக்கத் தயாராகி வருகிறது
நாட்டின் சுகாதாரப் பராமரிப்பு யுத்தி மற்றும் மேம்பாடுகள் பற்றிய மாநாட்டை அறிமுகம் செய்கிறோம்
புது டெல்லி, Nov. 29, 2019 /PRNewswire/ -- மிகப் பெரிய சர்வதேச கண்காட்சி ஏற்பாட்டளரான Informa Markets வரும் ஏப்ரல் 14-16, 2020-ல் India Health Exhibition-ஐ நடத்தத் தயாராகி வருகிறது. உலகளாவிய தொழில்துறையினர் இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்துவரும் சந்தையில் தொழிலை வளர்க்க ஆசைப்படுவதால் அதற்கான பதில் நடவடிக்கை இது. இந்தக் கண்காட்சியில் தனித்துவமான முழு அளவிலான கண்காட்சியோடு, உள்ளூர் முன்னணி அமைப்புகளின் ஒத்துழைப்போடு பல வகையான கல்விசார் கருத்தரங்குகளும் நடைபெறும்.
Arab Health Exhibition மற்றும் Congress, மத்திய கிழக்கு நாடுகளில் மிகப்பெரிய சுகாதாரப் பராமரிப்புக் கண்காட்சி, மற்றும் Africa Health மற்றும் Florida International Medical Expo (FIME) போன்ற சந்தை சார்ந்த கண்காட்சிகளை 44 ஆண்டுகளுக்கும் மேல் நடத்தியிருக்கும் அனுபவத்துடன், Informa's events ஏற்கனவே முயற்சிக்கப்பட்ட, பரிசோதிக்கப்பட்ட வழிமுறையில் உயர் தரமான இயலத்தக்க கல்வியை அளிப்பதோடு, மருத்துத் துறையில் உலகின் மிகச் சமீபத்திய புத்தாக்கங்களைச் செய்தவர்களின் முழுமையான கண்காட்சியையும் நடத்துகிறது. UBM-ஐ Informa Group இணைத்துக்கொண்டதால், வருடாந்திர CPhI India நிகழ்ச்சியின் வலிமையும் இணைந்துள்ளது. இதனால், இந்தியாவின் மருந்துத் துறையில் முக்கிய நிறுவனங்களும் இதில் ஒன்றிணைகின்றன.
கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய Informa Markets-ன் Executive Vice President Healthcare-ஆன Mr. Wouter Molman, பேசும்போது: "இந்தக் கண்காட்சி India Health-னை Arab Health Exhibition மற்றும் Congress உட்பட்ட உகலாளவிய சுகாதாரப் பராமரிப்புக் கண்காட்சி பிராண்டுகளின் குழுமத்திற்குள் இறுக்கமாகப் பிணைக்கிறது. தரமான சுகாதாரப் பராமரிப்புக்கான வளர்ந்துவரும் தேவையின் முக்கியத்துவத்தையும், இந்தியாவில் அதற்கு இணையான மருத்துவம் வழங்கல் நுட்பங்கள் இல்லாதிருப்பதையும் சமீபத்திய அறிக்கைகள் காட்டுகின்றன. வளர்ந்துவரும் இந்திய சுகாதாரப் பராமரிப்புச் சந்தைக்குள் தொழில் உறவை இது வளர்க்கும், வளர்ச்சி ஊக்குநகர்களுக்கு இது ஒரு ஸ்பிரிங் போர்டை அளிக்கும்" என்றார்.
மேலும் அவர் பேசுகையில், "இந்திய சுகாதாரப் பராமரிப்புச் சந்தையில் நிறுவனங்கள் சந்திக்கும் மற்றொரு பொதுவான சவால் இந்தியாவில் சரியான சுகாதாரப் பராமரிப்பு நிறுவனங்களை, அதிகாரிகளை, சங்கங்களைக் கண்டறிவது. India Health இந்த இடைவெளியைப் போக்க உதவும்" என்றார்.
இந்த மூன்று நாள் நிகழ்ச்சி புதுடெல்லியில் உள்ள Pragati Maidan-ல் நடைபெறும். இதில், பல்வேறு துறைகளைச் சார்ந்த டிஸ்போசபுள் மற்றும் கன்சூமபுள்ஸ் தொடங்கி உயர் தொழில்நுட்பமுள்ள இமேஜிங் மற்றும் டயக்னோஸ்டிக் சாதனங்கள்வரை 300-க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளூர் கண்காட்சியாளர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்தக் கண்காட்சியில், மருத்துவமனை இயக்குநர்கள், மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், கொள்கை உருவாக்குபவர்கள், மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பப் பணியாளர்கள், விநியோகிப்பாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் உட்பட்ட 4,000-க்கும் மேற்பட்ட முக்கிய முடிவுகளை எடுப்பவர்கள், பங்குரிமையாளர்கள் கலந்துகொள்வார்கள்.
இந்த நிகழ்ச்சியின் மூன்று CME-சான்றளிக்கப்பட்ட கருத்தரங்குகள் நாட்டின் சுகாதாரப் பராமரிப்பு யுத்தி சம்பந்தமானதாக இருக்கும், அது சந்திக்கும் சவால்கள், மற்றும் அவற்றை வெற்றிகொள்ளத் தேவையான புத்தாக்கங்கள் பற்றி விரிவாக விவாதிக்கும். Association of Healthcare Providers (India), Healthcare Federation of India மற்றும் பல முக்கிய சங்கள் இவற்றுக்கு ஆதரவளிக்கும்.
பில்லியன் டாலர் சந்தையினால் உருவாக்கப்பட்டுள்ள வாய்ப்புகளைப் பாருங்கள்
உலகிலேயே மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா, உலக அளவில் வருவாய் ரீதியாகவும் வேலை வாய்ப்பு ரீதியாகவும் மிக வேகமாக வளரும் சுகாதாரப் பராமரிப்புச் சந்தைகளுள் ஒன்றாக வளர்ந்துள்ளது.
நாட்டின் சுகாதாரப் பராமரிப்புத் துறை 2022-க்குள் US$ 372 பில்லியன் அளவுக்கு மும்மடங்காக அதிகரிக்கத் தயாராகி வருகிறது
கூடுதல் வளர்ச்சியைப் பொருத்தவரை முதல் மூன்று சுகாதாரப் பராமரிப்புச் சந்தைகளுக்குள் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் 2020-க்குள் 40 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
2024-க்குள் மருத்துவ உட்கட்டமைப்புகளுக்காக US$ 200 பில்லின் செலவிடப்படும் என மதிப்பிடப்படுகிறது.
2022-க்குள் US$ 11 பில்லியன் அளவுக்கு மருத்துவ சாதனங்களின் சந்தை மதிப்பு இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
மருத்துவ ஆராய்ச்சிக்கு குறைந்த செலவே ஆவதால் சர்வதேச நிறுவனங்களின் R&D நடவடிக்கைகளின் மையமாக இந்தியா மாறியிருக்கிறது.
இந்தியா சுமார் 80 விழுக்காடு மருத்துவக் கருவிகளை இறக்குமதி செய்கிறது.
அமெரிக்காவில் அறுவை சிகிச்சைக்கான செலவை ஒப்பிடுகையில் இந்தியாவில் பத்தில் ஒரு பங்கே ஆகிறது. இதன் காரணமாக மருத்துவச் சுற்றுலா அதிகரித்திருக்கிறது. இந்திய மருத்துவ சுற்றுலாத் துறை 2020-க்குள் US$ 9 பில்லியன் அளவுக்கு இருக்கும் என கணிக்கப்படுகிறது.
India Health இந்த அம்சங்களின்மீதும் கவனம் செலுத்தும், இந்த யுத்திகளைச் செயல்படுத்த அனுமதிக்கும் உரையாடல்களுக்கு உதவும். இந்தக் கண்காட்சி சர்வதேச பங்கேற்பை கவர்ந்திழுத்து இந்த பரந்த சந்தைப் பரப்பில் இன்னும் நுழையாதவர்களுக்கும் ஒரு வாய்ப்பை அளிக்கும்.
Informa Markets India-ன் Managing Director-ஆன Mr. Yogesh Mudras, இதுபற்றிப் பேசுகையில்: "பல காரணங்களுக்காக இந்தியாவின் சுகாதாரப் பராமரிப்புத் துறையின் Compound Annual Growth Rate (CAGR) தற்போது 15.8 விழுக்காடு அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது. உலகளாவிய சந்தையில் உள்ள முக்கிய நிறுவனங்கள் சந்திக்கவும், இந்திய சுகாதாரப் பராமரிப்புத் துறையில் தொழில் செய்யவும், இந்த வளர்ச்சியை பயன்படுத்திக்கொள்ளவும் அவர்களை India Health ஒருங்கிணைக்கும்" என்றார்.
"மருத்துவக் கருவிகளை வாங்குபவர்களின் குறிப்பிடத்தக்க விழுக்காட்டினர் தனியார் மருத்துவ நிலையங்களும் மருத்துவமனைகளுமே. கட்டமைப்பு I நகரங்களில் உள்ள போட்டி அதிகமாக இருப்பதன் காரணமாக, தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் இதுவரை அதிகம் பயன்படுத்தப்படாத கட்டமைப்பு II மற்றும் கட்டமைப்பு III நகரங்களின்மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. தனியார் நிறுவனங்கள் குறைவாகவே பயன்படுத்தப்பட்டுள்ள சந்தைகளில் தங்களுடைய சேவைகளை விரிவுபடுத்துகையில், அதற்கேற்ப மருத்துவக் கருவிகளுக்கான தேவை அதிகரிக்கும், India Health அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள உதவும்" என்று மேலும் தெரிவித்தார்.
R&D-க்கும், மருத்துவ சுற்றுலாவுக்கும், சுகாதாரப் பராமரிப்பு மேம்பாடுகளில் முதலீட்டுக்கும் அளப்பரிய வாய்ப்புகள் இருக்கும்போது, India Health-ல் கலந்துகொள்வது என்பது உலகின் மிகப் பெரிய சுகாதாரப் பராமரிப்புச் சந்தையைப் புரிந்துகொள்ளவும் செயல்படவும் அவசியமானதாகிறது.
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை இன்ஃபோர்மா மார்க்கெட் உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம்.
Informa Markets மற்றும் இந்தியாவில் எம்முடைய தொழில் பற்றி
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும்.
Informa Markets in India(முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம். இந்தியாவில் மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது.
Share this article