இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் இன் இன்டியாவின் ரீட்டெய்ல் கில்ட் அவார்ட்ஸ் (RJGA) இந்தியா முழுவதும் உள்ள மிகச்சிறந்த ரீட்டெய்ல் ஜூவல்லர்களுக்கு வழங்கப்பட்டது
புது டெல்லியில் ஒரு ஜொலிக்கும் நிகழ்ச்சியில் இந்த 5-வது விருது வழங்கும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது
புது டெல்லி, Nov. 7, 2019 /PRNewswire/ -- கடந்த 29 செப்டம்பர் அன்று புது டெல்லியில் உள்ள தி லலித் ஹோட்டலில் Informa Market in India-வின் 5-வது Retail Jewellers Guild Awards ஜூவல்லரி துறையில் தங்களுடைய சிறந்த பங்களிப்பை வழங்கிய இந்தியாவின் மிகச் சிறந்த சில்லறை வர்த்தக ஜூவல்லர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த கண்கவர் விருதுவழங்கும் நிகழ்ச்சியில் துறையின் நிபுணர்களும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். Gem & Jewellery Export Promotion Council (GJEPC)-ன் வடக்கு வட்டாரத் தலைவரான Shri Ashok Seth, டெல்லியில் உள்ள Bullion Jewellers Association-ன் President-ஆன Shri Yogesh Singhal, மற்றும் டெல்லி, Bullion Jewellers Association-ன் Chairman-னான Shri Ramavtar Verma ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முக்கியமானவர்கள்.
Informa Markets in India-வின் ஒரு தனித்துவமான முன்முயற்சியான RJGA-தான் மிகச் சிறந்த வெளிப்படையான தேர்வு முறையைக்கொண்ட விருது என்று மதிக்கப்படுகிறது. தொடக்கத்தில், வட இந்தியச் சந்தைக்காகத் தொடக்கப்பட்ட RJGA மிகவும் பிரபலமான விருது என்ற தன்னுடைய ஸ்டான்டர்டை பராமரிக்கிறது. ஜூவல்லர்களிடமிருந்து 600 நாமிநேஷன்கள் வந்தன.
பிராசஸ் ஆலோசகர்களான Ernst & Young மற்றும் அதன் புகழ்பெற்ற நடுவர்களான Ms Shanoo Bijlani, Ms. M.A. Noushija, Ms Rosy Ahluwalia, Ms. Rohini Bhowmick, Ms. Sonal Narang, Ms. Prerna Khurana, Mr. Ashok Seth, Mr. Navin Sadarangani ஆகியோர் இணைந்த RJGA நடுவர் குழு சில்லறை வர்த்தக ஜூவல்லரி துறையில் சிறந்து விளங்கும் இந்தியாவின் மிகச் சிறந்த திறமையாளரைத் தேர்ந்தெடுத்தனர். இதில் முதன்மைச் சுற்று மற்றும் இறுதிச் சுற்று என்ற இரு சுற்றுகள் நடைபெற்றன. இறுதிச் சுற்றின்போது நடுவர்கள் முன்னால் உண்மையான ஆபரணங்களை ஜூவல்லர்கள் காட்சிப்படுத்த வேண்டியதிருந்தது.
சில்லறை ஜூவல்லரி துறையின் பல்வேறு செயல்பாடுகளை மனதில் கொண்டு இந்த ஆண்டு விருதுகள் பல்வேறு விதமாகப் பிரிக்கப்பட்டிருந்தன. 'Store of the Year', 'Employer of the Year', 'Most Innovative Marketing Campaign', 'Excellence in Customer Service' மற்றும் 'Excellence in Design' போன்ற விருதுகள் இவற்றில் அடங்கும். சில்லறை வர்த்தகர்கள் வளையல்/பிரேஸ்லெட், நெக்லஸ்/மங்கல்சுத்ரா, காதணிகள், மோதிரம் & மற்றும் பிறவற்றுக்கு தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம், ஜடாவ், வண்ண ஜெம்ஸ்டோன் வகைகளில் தங்களுடைய நாமிநேஷன்களை நிரப்பி அனுப்பினர். நடுவர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் வடிவமைப்பு வகையில் 24 விருதுகளும், பிற வகைகளில் 15 விருதுகளும் வழங்கப்பட்டதோடு, நடுவர்களின் அங்கீகாரத்தையும் பெற்றனர்.
500-க்கும் மேற்பட்ட ஜூவல்லரி வர்த்தகர்கள், தயாரிப்பாளர்கள், HNI-கள் கலந்துகொண்ட விருதுவழங்கும் நிகழ்ச்சியில் துறைசார் நிபுணர்கள் பலர் கலந்துகொண்டு உரையாற்றினர், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும், நெட்வொர்க்கிங் அமர்வுகளோடு, ஆட்டோமொபைல் பார்ட்னராக இருந்த T&T மோட்டார்ஸின் சொகுசு கார் கண்காட்சி போன்ற பல நிகழ்ச்சிகள் இதில் இடம் பெற்றிருந்தன.
Informa Markets (இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ்) பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை இன்ஃபோர்மா மார்க்கெட் உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து இந்த வலைதளத்தைப்
இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் (Informa Markets) மற்றும் இந்தியாவில் எம்முடைய தொழில் பற்றியும்
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும்.
Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் எலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம். இந்தியாவில் மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informa.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
எந்த ஒரு ஊடக விசாரணைகளுக்கும் தயவுசெய்து இவர்களைத் தொடர்பு கொள்ளவும்:
Informa Markets in India
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
புகைப்படம்: https://mma.prnewswire.com/media/1023254/Winners_at_RJGA_2019.jpg
புகைப்படம்: https://mma.prnewswire.com/media/1023255/RJGA.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
Share this article