India's Most Preferred Jewellers-ன் (IMP) 2-வது பதிப்பு மீண்டும் வந்துவிட்டது
இந்தியாவின் விருப்பமான ரீட்டெய்ல் ஜூவல்லர்களை அடையாளம் காணவும் கொண்டாடவும் ஒரே தீர்க்கமான தேசிய அளவிலான தேடல்
புது டெல்லி, Aug. 8, 2019 /PRNewswire/ -- தன்னுடைய முதலாவது பதிப்பில் பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னனி B2B நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் இன் இன்டியா (Informa Markets in India) (முன்னர் UBM India என அழைக்கப்பட்டது) ரீட்டெய்ல் ஜூவல்லரி துறைக்காக இன்டியாஸ் மோஸ்ட் பிரிஃபெர்டு (IMP)-ஐ நடத்தத் தயாராகியுள்ளது.
இந்த தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பிரச்சாரத்தின் வழியாக, , Informa Markets in India (இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் இன் இன்டியா) ஆண்டு முழுவதும் நீடிக்கும் தன்னுடைய பட்டியலில், கண்காட்சிகள் வணிகத்தில் இணையில்லாத ஜூவல்லரி போர்ட்ஃபோலியோவை இணைத்துள்ளது.
IMP முன்முயற்சியின் நோக்கம் ஒரு தேசிய அளவிலான இந்தியாவின் மிகவும் பிரபலமான ஜூவல்லரி பிராண்டுகளை அடையாளம் காண்பதும், இரு ஆண்டு காலத்திற்கு பெருமைமிக்க ÍMP லோகோவைக் கொண்டிருக்கும் தனித்துவமான சிறப்புரிமையை அவர்களுக்கு அளிப்பதும் ஆகும்.
கண்கவரும் வகையில் வடிமைக்கப்பட்ட நுகர்வோரின் அன்பு முத்திரையை, அவர்கள் தங்களுடைய ஆன்லைன் பிரச்சாரங்கள், ஹோர்டிங்குகள், பத்திரிக்கையாளர் அறிவிப்புகள், தயாரிப்பு பேக்கேஜிங்குகள் மற்றும் விளம்பரம் போன்ற அனைத்து சந்தைப்படுத்தும் முயற்சிகளிலும் பயன்படுத்தலாம். ஒரு உயர்நுட்பமான காஃபி டேபிள் புத்தகமும் உருவாக்கப்பட்டு, இந்த அதிகமாக விரும்பப்படும் பிராண்டுகள் பற்றிய தகவல்கள் அதில் சேர்க்கப்பட்டு, அவர்களுடைய ஊக்கமூட்டும் வளர்ச்சிக் கதைகளும், தங்களுடைய உயரிய இடத்தை எப்படி அவர்கள் செதுக்கினார்கள் என்பதைப் பற்றியும், பிரபலக் குறியீட்டில் எப்படி உயர்ந்த இடத்தைப் பிடித்தனர், எதிர்காலத்திற்கான அவர்களுடைய பார்வை என்ன என்பன பற்றியும் அதில் விவரிக்கப்பட்டிருக்கும்.
குறிப்பிடத்தக்க வகையில், இந்த காலா இன்டியாஸ் மோஸ்ட் பிரிஃபெர்டு அன்வெய்லிங் நிகழ்ச்சியில், தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் கண்கவர் பொழுதுபோக்கு, கொண்டாட்டம் ஆகியவை இடம்பெறும் மற்றும் இவற்றுடன் தரத்தை நிர்ணயித்த ஜுவல்லர்கள் இத்துறையின் நிபுணர்கள் மத்தியில் பெருமைப்படுத்தப்படுவார்கள். The Lalit, New Delhi (தி லலித், புது டெல்லி) - யில் 28 செப்டம்பர், 2019 அன்று Delhi Jewellery & Gem Fair (டெல்லி ஜூவல்லரி & ஜெம் கண்காட்சியின்) ன் முதல் நாளன்று இந்த காலா இரவு கண்கவர் நிகழ்ச்சி நடைபெறும்.
5,00,000-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருக்கும் இந்தியாவின் ஜெம்ஸ் அன்டு ஜூவல்லரி (G&J) சந்தை பெருமளவு சிதறிக்கிடக்கிறது. இருப்பினும், சமூகப் பொருளாதாரக் காரணிகளோடு இணைந்து நுகர்வோரிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக அதிக எண்ணிக்கையிலான விரும்பப்படும் உலகளாவிய, தேசிய அல்லது வட்டார பிராண்டுகள் வேகமாக வளர்ந்திருக்கின்றன.
சமூகத்தை இணைப்பதிலும் அதில் சிறந்த தரங்களை ஏற்படுத்துவதிலும் தனது செயல்பாட்டிலிருந்து இந்த IMP முன்முயற்சி தோன்றியுள்ளது. மிகவும் விரும்பப்படும் பிராண்டுகளைக் கண்டறிவதற்கான கள ஆய்வு இந்தியாவில் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின்கீழ் பட்டியலிடப்பட்டுள்ள ஒரே சந்தை ஆராய்ச்சி நிறுவனமான MRSS-ன் துணையோடு நடத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஆண்டுக்கு 12 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட குடும்ப வருவாய் உள்ள SEC A1 மற்றும் A2-வினரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஜூவல்லரின் மீதுள்ள நம்பிக்கை, அவர்களிடம் உள்ள சேகரிப்புகள் , தயாரிப்புகளின் வரம்பு , பிராண்டு பரிந்துரை, தயாரிப்பு மற்றும் சேவைத் தரம், ஒட்டுமொத்த பிராண்டின் நன்மதிப்பு போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இன்டியாஸ் மோஸ்ட் பிரிஃபெர்டு எனத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அந்த பிராண்டுகளுக்கு சிறப்புரிமையளிக்கும் லோகோ அளிக்கப்பட்டு, எளிதில் அடையாளம் காணத்தக்க தனிச்சிறப்பு லேபிள் கொடுக்கப்படும்.
India Most Preferred initiative (இன்டியாஸ் மோஸ்ட் பிரிஃபெர்டு முன்முயற்சியைத்)ஐத் தொடங்கி வைத்துப் பேசிய , Managing Director, Informa Markets in India (இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் இன் இன்டியாவின் மேலாண்மை இயக்குநரான) திரு. யோகேஷ் முத்ராஸ் பேசும்போது, "ஜூவல்லரி துறையில் உள்ள எம்முடைய நிபுணர்களின் வழியாக, நகர்ப்புற, இளைசர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள உலகளாவிய, தேசிய அளவிலான அல்லது வட்டார அளவிலான பிராண்டுகளுக்கான விருப்பத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை நாங்கள் கண்டறிந்தோம். நுகர்வோரிடம் ஏற்பட்டுள்ள இந்த துடிப்பை கேட்பதிலும், அவர்களுடைய மிகவும் விருப்பமான பிராண்டுகள் எவை என்று என்று அறிந்துகொள்ள ஆர்வம் காட்டினோம். IMP வழியாக, நம்பகத்தன்மை, கலெக்ஷன், பிராண்டு ரீகால் மற்றும் அங்கீகாரம் ஆகியவைதான் அவர்களுடைய விருப்பமான பிராண்டு எதுவாக இருக்கும் என்பதைத் தீர்மானிப்பதில் முக்கிய காரணிகளாக இருக்கும் என்று கண்டறிந்தோம்.
இந்த பிரச்சார வடிவத்தில் இந்த தனித்துவமான வழிமுறை, அதனுடன் இணைந்த கண்காட்சிகள், விருதுகள், மாநாடுகள், ரோடு ஷோஸ் மற்றும் சொகுசு மற்றும் மினி ஷோஸ் வழியாக ஜூவல்லரி துறையை ஊக்குவிக்க உள்ளோம்."
Informa Markets (இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ்) பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை Informa Markets (இன்ஃபோர்மா மார்க்கெட் ) உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
பட்டியலில் ஒரு குறிப்பிட்ட பிராண்டு இடம்பெற்றுள்ளதா என்பதை அறிய, தயவுசெய்து Ritesh Indulkar (ரித்தேஷ் இந்துல்கர்) அவர்களை +91-9664-21-9292 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்
ஊடகத் தொடர்பு:
ரோஷினி மித்ரா
[email protected]
மிலி லால்வாணி
[email protected]
+91-22-61727117
Informa Markets in India
(இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் இன் இன்டியா)புகைப்படம் - https://mma.prnewswire.com/media/956843/Awards_IMP.jpg
புகைப்படம் - https://mma.prnewswire.com/media/956844/IMP_Jewellers.jpg
லோகோ - https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
Share this article