IIT-களில் டாடா பிராஜெக்ட்ஸ் அளப்பரிய பதிலைப் பெற்றுள்ளது
மும்பை, Dec. 9, 2019 /PRNewswire/ -- இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்துவரும், மற்றும் மிகவும் போற்றப்படும் உட்கட்டமைப்பு நிறுவனமான டாடா பிராஜெக்ட்ஸ் லிமிடெட் (TATA Projects Limited), இந்தியாவின் முதன்மையான IIT- களான - டெல்லி, மும்பை, சென்னை, கான்பூர் மற்றும் காரக்பூர் ஆகியவற்றிலிருந்து 50 சிறந்த பொறியாளர்களை பணியமர்த்தியுள்ளது.
இந்த IIT-களிலிருந்து படித்து வெளிவரும் சுமார் இந்தியாவின் சிறந்த இளம் பொறியாளர்களில் சுமார் 600 பேர் நிறுவனத்தின் புதிய எக்செக்கியூட்டிவ் டிரெய்னீ புரோகிராமிற்கான ஆள் சேர்ப்பு முகாம்களில் கலந்து கொண்டனர். தொழில்துறையில் முன்னிலை வகிப்பதன் காரணமாக எல்லா IIT-களிலும் நடப்பு கேம்பஸ் பிளேய்ஸ்மென்ட் சீசன் சமயத்தில் நிறுவனத்திற்கு 1-வது & 2-வது நாட்கள் ஒதுக்கப்பட்டன.
திட்டமிட்ட பயிற்சி, கிராஸ் ஃபங்ஷனல் பிராஜெக்ட்ஸ் மற்றும் நேரடி களப் பயிற்சி பணிகள் வழியாக திட்ட மேலாண்மை மற்றும் தொழில் தலைமைத்துவத்துக்காக புதிதாகப் பட்டப்படிப்பு முடித்தவர்களைத் தயாரிப்பதற்காக இந்த ஆழ்ந்த எக்செகியூட்டிவ் டிரெய்னீ புரோகிராம் நடத்தப்படுகிறது. உலகின் மிகச்சிறந்த நிறுவனங்களில் பயிற்சி பெறும் வாய்ப்பையும் இது உள்ளடக்கும்.
டாடா பிராஜெக்ட்ஸ் லிமிடெட்டின் CHRO-வான திரு. கணேஷ் சந்தன் பேசும்போது, "எம்முடைய எதிர்கால குவிப்படுத்தப்பட்ட யுத்திக்கு படைப்பாக்கத் திறன்கொண்ட, உணர்ச்சிமிக்க மற்றும் பேரார்வமுள்ள புதிய திறமைசாலிகள் தேவைப்படுகின்றனர். எம்முடைய வளர்ந்துவரும் தொழில் தேவைகளை பூர்த்தி செய்யவும், அதிகரித்துவரும் சிக்கலான விஷயங்களை கையாளவும் உயர் தர திறமைசாலிகளை தொடர்ந்து கவர்ந்திழுக்க விரும்புகிறோம். எம்முடைய திறமைசாலிகளையும் உள்ளிழுக்கும் யுத்திக்கு ஏற்ப, கற்றல் மற்றும் வளர்ச்சி முன்முயற்சிகளுக்காக, நாட்டில் உள்ள முக்கியமான நிறுவனங்களுடன் கைகோர்த்திருக்கிறோம். இந்தியாவின் முன்னணி உட்கட்டமைப்பு நிறுவனம் என்ற முறையில், திறமையுள்ளவர்களின் குழுவை பெருக்குவது மட்டும் எம்முடைய நோக்கமல்ல, மாறாக, தரத்தையும் உற்பத்தியையும் தொடர்ந்து மேம்படுத்துவதும் எங்களுடைய நோக்கமாக உள்ளது. இதனால், மிகந்த வளர்ச்சி உறுதிப்படுத்தப்படுவதோடு, எல்லா பயனார்களுக்கும் பலனளிக்கும், மேலும், "இந்தியாவின் முன்னேற்றத்தையும் விரைவுபடுத்தும்" என்றார்.
கடந்த சில ஆண்டுகளில், டாடா பிராஜெக்ட்ஸ் நாட்டில் பல பெரிய திட்டங்களை முன்னெடுத்து நடத்தியுள்ளது. உரிய நேரத்தில் நிறைவேற்றுவதன்மீது கவனம் செலுத்தும் அதே வேளையில், தன்னுடைய ஆணைப் புத்தகத்தை தொடர்ந்து வளர்த்து வந்துள்ளது. தன்னுடைய வளர்ச்சிக்கு உதவும் வகையிலும், தன்னுடைய திறமைசாலிகள் குழுவை அதிகரிக்கவும், IIT-கள் மற்றும் NIT-களிலிருந்து இந்த ஆண்டு 130-க்கும் மேற்பட்ட புதிய பட்டதாரிகளை பணிக்கு எடுத்திருக்கிறது.
சமூகத்திற்கு திருப்பி பங்களிப்பு செய்யவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நிறுவனம் பல மாற்று கட்டுமான நுட்பங்களையும் முன்னெடுத்துள்ளது "கிரீன் தம்ப்" போன்ற தனித்துவமான முன்முயற்சிகளையும் தொடங்கியிருக்கிறது.
டாடா பிராஜெக்ட்ஸ் லிமிடெட் பற்றி
Tata Projects என்பது இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்துவரும், மற்றும் மிகவும் போற்றப்படும் உட்கட்டமைப்பு நிறுவனமாகும். அதனிடம் மிகப்பெரிய மற்றும் சிக்கலான நகர்ப்புற மற்றும் தொழில்துறை உட்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றும் நிபுணத்துவம் உள்ளது.
டாடா பிராஜெக்ட்ஸ் Industrial Systems SBG, Core Infra SBG, Urban Infra SBG, மற்றும் Services SBG என்ற தன்னுடைய நான்கு யுத்திசார் தொழில் குழுக்கள் (Strategic Business Groups (SBGs)) வழியாக செயல்படுகிறது.
மின் உற்பத்தி நிலையங்கள், பவர் டிரான்ஸ்மிஷன் & விநியோக அமைப்புகள், முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட ரெயில் & மெட்ரோ சிஸ்டங்கள், வர்த்தக கட்டடங்கள் மற்றும் விமான நிலையங்கள், இரசாயன தொழிற்சாலைகள், நீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை தீர்வுகள், முழுமையான சுரங்க மற்றும் உலோக சுத்திகரிப்பு அமைப்புகளை அமைப்பதற்கு நிறுவனம் முழுமையான தீர்வுகளை வழங்கி வருகிறது.
உலகத் தரமான திட்ட மேலாண்மை யுத்திகளையும், பாதுகாப்பு மற்றும் நிலைப்புத்திறனுக்கான சமரசமற்ற தரங்களைப் பயன்படுத்தியும், திட்டங்களை உரிய நேரத்தில் முடிப்பதில் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது
ஊடகத் தொடர்பு:
Sandeep Menezes
[email protected]
+91-9920074163
மார்க்கெட்டிங் கம்யூனிக்கேஷன்ஸின் மேலாளர்
டாடா பிராஜெக்ட்ஸ் லிமிடெட்
Naresh Sharma
[email protected]
+91-9010680747
மார்க்கெட்டிங் கம்யூனிக்கேஷன்ஸின் தலைவர்
டாடா பிராஜெக்ட்ஸ் லிமிடெட்
புகைப்படம்: https://mma.prnewswire.com/media/1040353/Ganesh_Chandran.jpg
Share this article