IFSEC India மற்றும் OSH India Virtual Expos பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் தொழில் பாதுகாப்பு & சுகாதாரத் துறைகளை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்கின்றன
38 நாடுகளிலிருந்து 5075-க்கும் மேற்பட்ட வாங்குபவர்கள் கலந்து கொண்டனர்
மும்பை, இந்தியா, Oct. 14, 2020 /PRNewswire/ -- இந்தியாவின் முன்னணி B2B கண்காட்சி ஏற்பாட்டளரான Informa Markets in India (முன்னர் UBM India), இரண்டாவது IFSEC India Virtual Expo மற்றும் OSH India Virtual Expo-வை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. இந்த மெய்நிகர் கண்காட்சிகள் உள்நாட்டிலிருந்தும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஹாங்காங், சிங்கப்பூர், இலங்கை, பங்களாதேஷ் போன்ற 38-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்தும் 5075 வாங்குபவர்களை ஒருங்கிணைத்ததோடு, உலக அளவில் புகழ்பெற்ற கண்காட்சியாளர்கள், முக்கிய அரசு அதிகாரிகள், ஆலோசகர்கள், மற்றும் தொழில்துறை நிபுணர்கள் ஆகியோர் ஒன்று கூடி பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் தொழில் பாதுகாப்பு & சுகாதாரத் துறை சார்ந்த விஷயங்களில் உலகளாவிய சிறந்த நடைமுறைகளைப் பற்றிப் பேசவும் இதில் உள்ள மிகக் கடுமையான சவால்களில் சிலவற்றுக்கான தீர்வுகளைத் தேட ஒரு பொதுத் தளமாக அமைந்தது.
6 முக்கிய துறைகளுக்கான 6 டிஜிட்டல் கண்காட்சிகளை செப்டம்பர் 2020-ல் ஏற்பாடு செய்யும் Informa Markets in India-ன் சூப்பர் செப்டம்பர் - விர்ச்சுவல் B2B கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக இந்த டிஜிட்டல் நிகழ்வுகள் அமைந்தன. உரிய சமூகங்களும் தொழில்களும் பொதுமுடக்கத்தின் கட்டுப்பாடுகளை வெற்றிகொள்ளவும், தொழில் இலக்குகளை எட்டவும் பொருளாதாரம் தன்னுடைய பாதையில் திரும்பி வரத் தயாராகும் வேளையில் ஒரு உந்துதலைத் தரவும் இந்த விர்ச்சுவல் B2B கொண்டாட்ட முயற்சி உதவும்.
IFSEC Virtual Expo-வின் தொடக்க நிகழச்சியின் தலைமை விருந்தினராக கேரள அரசின் தொழிலாளர், திறன்கள் & தீர்வைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரான திரு. Satyajeet Rajan, IAS, அவர்கள் இருந்தார்; National Security Guards-ன் முன்னாள் பொது மேலாளராக இருந்து ஓய்வுபெற்ற திரு. Rajan Medhekar, IPS (Retd) அவர்கள் முன்னிலை வகித்தார். யு.கே-யில் International Foundation for Protection Officers-ன் இயக்குநரான திரு. Mike Hurst, CPP முக்கிய விருந்தினராகக் கலந்துகொண்டார். இதே போன்று OSH India Virtual expo-வின் தொடக்க நிகழச்சியின் தலைமை விருந்தினராக தெலுங்கானாவின் அடிஷனல் டிரெக்டர் ஆஃப் ஃபயர் சர்விசஸ்-ஆன டாக்டர் C. Lakshmi Prasad இருந்தார். Indian Association for Occupational Health-ன் நேஷனல் பிரசிடென்ட்-ஆன டாக்டர். S. K. Raut, Safety Appliances Manufacturers Association-ன் தலைவரான திரு. Hemant Sapra மற்றும் Informa Markets in India-ன் மேனேஜிங் டிரெக்டரான திரு. Yogesh Mudras, மற்றும் Informa Markets in India-ன் செக்கியூரிட்டி & சேஃப்டி போர்ட்ஃபோலியோவின் குரூப் டிரெக்டரான திரு. Pankaj Jain ஆகியோரும் முக்கிய விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
IFSEC India மற்றும் OSH India Virtual Expos வெற்றிகரமாக நடந்து முடிந்தது பற்றிப் பேசிய Informa Markets in India-வின் Managing Director-ஆன Mr. Yogesh Mudras பேசும்போது, "ஸ்மார்ட் தொழில்நுட்பம் மற்றும் பட்ஜெட் நெருக்கடிகளின் யுகத்தில், டிஜிட்டல் மாற்றங்கள் பற்றியும், செக்யூரிட்டி யுத்தியை மீட்டமைப்பது பற்றியும், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பற்றியும் பேசுவது தொழில்முறை நிறுவனங்களுக்கு இன்றைய அவசியமாகியுள்ளது. மேலும், தொலைதூரத்திலிருக்கும் பணியாளர்களை நிர்வகித்தல் தொடர்புடைய சிக்கலான சவால்களை அவர்கள் சந்தித்து வருகிறார்கள். இதனால் எழும் கூடுதல் அழுத்தம் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது, சப்ளை செயினில் உள்ள இடையூறுகள், அல்லது புதிய டிஜிட்டல் தளங்களை மேற்கொள்வது போன்ற சிக்கல்களைத் தொடர்ந்து சந்தித்து வருகின்றன. 2025-க்குள் உலகளாவிய அளவில் செக்யூரிட்டி சந்தை 4.3% அளவுக்கு CAGR வளர்ச்சியைக் கண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் வளாகங்கள், பொது உட்கட்டமைப்பு, குடியிருப்பு வளாகங்கள் போன்ற கூடுதல் உட்கட்டமைப்புகளும், 'Smart Cities' மற்றும் 'Make in India "போன்ற அரசின் முன்முயற்சிகள் வழங்கும் மிகப்பெரிய வாய்ப்புகளும் இந்த வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உழைக்கும் பெண்களுக்கான தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், உயரங்களில் வேலை செய்வோர் அல்லது ஆபத்தான பொருட்களை வேலையின்போது கையாளுதல், பணியிட எர்கனாமிக்ஸ், மற்றும் மிக முக்கியமாக, அறநெறி குறைவாக உள்ள நிலையில் தொழிலாளர் நலன் போன்ற விஷயங்களில் விழிப்புணர்வைப் பரப்புவதும் முக்கியம்" என்றார்.
"IFSEC India மற்றும் OSH India என்பது அது நேரடி கண்காட்சியாக இருக்கட்டும் அல்லது மெய்நிகர் கண்காட்சியாக இருக்கட்டும், அவை உலகம் முழுவதும் பாதுகாப்புப் பிரிவில் உள்ள நிபுணர்களுக்காக ஏற்படுத்தப்பட்டவை. எங்களுடைய இரண்டாவது இரண்டு-நாள் மெய்நிகர் கண்காட்சிகள் xx-க்கும் மேற்பட்ட வாங்குபவர்களையும் பார்வையாளர்களையும் ஈர்த்துள்ளன. xx-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து மாநாட்டில் கலந்துகொண்டிருக்கின்றனர். "தொழில் வாய்ப்புகளைப் பெருக்க பல்வேறு தொழில்துறையினருக்கும் சாத்தியமான வாங்குவோருக்கும் சேவையளித்துள்ள எம்முடைய சூப்பர் செப்டம்பர் - விர்ச்சுவல் B2B கொண்டாட்டத்திற்கு இந்தக் கண்காட்சிகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளன" என்று அவர் மேலும் பேசும்போது தெரிவித்தார்.
IFSEC India Virtual Expo-வைப் பற்றிய ஒரு சுருக்கமான பார்வை
International Fire & Security Exhibition and Conference (IFSEC) India Expo-னால் நடத்தப்படும், ASIS டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், OSAC டெல்லி மற்றும் மும்பை சேப்டர்கள், IISSM மற்றும் GACS ஆகியவற்றின் ஆதரவைப் பெற்றுள்ள தென்னிந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு, குடிமைப் பாதுகாப்பு மற்றும் தீ பாதுகாப்புக் கண்காட்சியான 2-வது IFSEC India Virtual Expo பிரபலமான பிராண்டுகள், ஆலோசகர்கள், தொழில்துறை நிபுணர்கள் மற்றும் முக்கியமான அரசு அதிகாரிகளை ஒரு பொதுவான விர்ச்சுவல் தளத்தின்கீழ் ஒருங்கிணைத்துள்ளது. கண்காணிப்பு, அடையாள மேலாண்மை, இன்ட்ரூஷன் கண்ட்ரோல், ஐபி வீடியோ சர்வேய்லன்ஸ் மேனேஜ்மெண்ட் சாஃப்ட்வேர், ஸ்டோரேஜ் சொலூஷன்ஸ், யுனிஃபைடு கம்யூனிக்கேஷன்ஸ், டிஜிட்டல் சைனேஜஸ், அக்சஸ் கண்ட்ரோல், பேக்கிங் ஆட்டோமேஷன், பெரிமீட்டர் புரொட்டெக்ஷன், IoT, ஹோம் செக்கியூரிட்டி மற்றும் இன்டகிரேட்டட் சொலூஷன்ஸ் ஃபார் சேஃப் சிட்டீஸ், சேனல் பார்ட்னர்கள் மற்றும் தீர்வளிப்பவர்கள் சார்ந்த பல தயாரிப்புகளும் தொழில்நுட்பங்களும் இடம் பெற்றன. இந்த மெய்நிகர் கண்காட்சிக்கு Prama Hikvision, HID, Western Digital, Milestone systems ஆகியோர் பிளாட்டினம் பார்ட்னர்களாகவும், Genetec & Globus Infocom கோல்டு பார்ட்னராகவும், eSSL & Matrix Comsec ஆகியோர் எக்சிபிட் பார்ட்னர்களாகவும் இருந்தனர்.
இந்த IFSEC விர்ச்சுவல் எக்ஸ்போவின் ஒரு அங்கமாக இரண்டு நாட்கள் மாநாடும் நடைபெற்றது. இதில் - 'செக்கியூர் கம்யூனிக்கேஷன் டிரென்ட்ஸ் இன் அக்சஸ் கண்ட்ரோல் இன்டஸ்ட்ரி', 'த நியூ நார்மல் இன் செக்கியூரிட்டி அன்ட் தி குரூசியல் ரோல் பிளேய்டு பை டெக்னாலஜி'; 'எமர்ஜிங் டெக்னாலஜீஸ் இன் செக்கியூரிட்டி சிஸ்டம்ஸ்', 'புரொமோட்டிங் டைவர்சிட்டி அன்டு இன்குளூஷன் இன் கார்ப்ரேட் செக்கியூரிட்டி, சேஃப்டி மற்றும் லாஸ் பிரிவென்ஷன், 'பிரிபேரிங் ஃபார் டுமாரோஸ் நார்மல் இன் டுடேய்ஸ் ஒர்க்பிளேய்ஸ்' போன்ற தலைப்புகளில் உரைகள் நடைபெற்றன
இந்த மாநாட்டில் கல்வியாளரும், பிசினஸ் கன்சல்டன்ட்டும் நூலாசிரியருமான திரு. Shiv Khera, National Security Guards-ன் ஓய்வுபெற்ற முன்னால் பொது மேலாளரான திரு. Rajan Medhekar, IPS (Retd), Foundation for Defense of Democracies-ன் இன்டோ-பசிபிக்குக்கான நான்-ரெசிடென்ட் சீனியர் ஃபெல்லோவான செல்வி. Cleo Paskal, PepsiCo India-வின் அசோசியேட் டிரெக்டர் - குளோபல் செக்கியூரிட்டியான திரு. Harendra Bana, Goldman Sachs-ன் விபி - கார்ப்பரேட் செக்கியூரிட்டியும், ASIS பெங்களூரு சேப்டரின் சேர்மேனுமான திரு. Vivek Prakash போன்றவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
OSH India Virtual Expo-வைப் பற்றிய ஒரு சுருக்கமான பார்வை
Occupational Safety and Health (OSH) India Expo-வினால் நடத்தப்படும், International Power Access Federation (IPAF)-ன் ஆதரவு பெற்ற, தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறைக்குச் சேவையளிக்கும் தெற்காசியாவின் மிகப்பெரிய கண்காட்சியான OSH Virtual expo-வும் OSH South India-வும், Ansell India Protective Products Private Limited மற்றும் ID Overseas Private Limited ஆகியவற்றைக் கோல்டு பார்ட்னர்களாகவும்; DuPont, Hindsiam Protective Equipment LLP, JLG, Tara Lohia Pvt. Ltd, Venus Safety & Health Pvt. Ltd ஆகியவற்றை சில்வர் பார்ட்னர்களாகவும்; Ketty Apparels, Magnum Health & Safety Pvt. Ltd, NIST Institute Pvt. Ltd, Reflectosafe, Teijin India Pvt. Ltd, Torpedo Shoes India Pvt. Ltd, ஆகியவற்றை எக்சிபிட் பார்ட்னர்களாகவும் ஒருங்கிணைத்தன. கடின தொப்பி, கண்ணாடிகள், கையுறைகள், மாஸ்குகள், பாதுகாப்பு ஷூக்கள், தீ & எரிவாயு கண்டுணரும் கருவிகள், சேஃப்டி சைனேஜ், சுவாச பாதுகாப்பு, ஃபால் புரொட்டெக்ஷன் கருவிகள், மற்றும் ஹைட் சேஃப்டி பிராடக்ட்டுகள், சேஃப்டி அக்சஸரிகள் மற்றும் ஒர்க் வேர்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பேற்றன.
பொது முடக்கம் 4.0-க்குப் பின்னர் தொழிலாளர்கள் தங்களுடைய அலுவலகங்களுக்குத் திரும்பினாலும், இந்தியாவில் தொழில் நலம் மற்றும் பாதுகாப்பு என்பது கடினமான வேலையாகத் தொடர்ந்து இருக்கிறது. பிரபலமான சர்வதேச பேச்சாளர்கள் பங்கேற்கும் மாநாட்டினையும், முன்னணி பிராண்டுகளினால் நடத்தப்படும் கண்காட்சிகள் மற்றும் ஒர்க்ஷாப்புகள் ஆகியவற்றின் வழியாக உரிய தெளிவுகள் OSH India Virtual Expo-வினால் கிடைத்தன. மாநாட்டு உரைகளின் தலைப்புகளில் சில; 'தி எஃபெக்ட் ஆஃப் COVID-19 பேண்டமிக் ஆன் தி சேஃப்டி ஆஃப் குளோபல் ஒர்க்ஃபோர்ஸ்'; 'டிஃபரன்ஸ் பிட்வீன் கம்ப்ளையன்ஸ் அன்டு கெட்டிங் சர்டிஃபைடு'; 'லெசன்ஸ் ஃபிரம் லாக்டவுன் - ஹௌ டு ஸ்டே ரெசிலியன்ட் இன் டைம்ஸ் ஆஃப் கிரைசிஸ்'; மற்றும் 'ஹசார்டு ஐடென்டிஃபிக்கேஷன் & ரிஸ்க் கண்ட்ரோல்: ஸ்டிரெடஜீஸ் ஃபார் சக்சஸ்ஃபுல் ஆக்சிடென்ட் பிரிவென்ஷன்', ஆகிய தலைப்புகள் முக்கியமானவை.
Indian Association for Occupational Health-ன் நேஷனல் பிரெசிடென்ட்-ஆன டாக்டர் S. K. Raut; ஒர்க்பிளேய்ஸ் ஹெல்த் வித்தவுட் பார்டஸ் - யு.கே, டாக்டர். Sean Young; Adani Group-ன் ஜாய்ண்ட் பிரசிடென்ட் அன்டு குரூப் ஹெட் சேஃப்டி-யான திரு. Birendra Verma, மற்றும் Tata Consultancy Services-ன் என்விரன்மென்டல் சஸ்டெய்னபிலிட்டி, ஹெல்த் & சேஃப்டி-யான டாக்டர் Aniruddha Agnihotri போன்றவர்கள் முக்கியமான பேச்சாளர்களில் அடங்குவர்.
IFSEC India மற்றும் OSH India Virtual expos-ல் துறை நிபுணர்களின் உரைகள்:
- Genetec Inc.-ன் கன்ட்ரி மேனேஜர், இன்டியா-வான திரு. Anand Thirunagari
"IFSEC - India-வில் நாங்கள் முதன் முறையாகப் பங்கேற்கிறோம். பருநிலைப் பாதுகாப்புப் பிரிவில் மிகச் சிறந்த பேச்சாளர்கள் கலந்துகொண்ட மாநாடு மற்றும் மெய்நிகர் வர்த்தகக் கண்காட்சிகள் சமநிலையில் இணைந்த ஒரு அருமையான நிகழ்ச்சியாக இருந்தது. எங்களுடைய தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்த எங்களுக்கு ஒரு வாய்ப்பளித்ததோடு, எங்களுடைய வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ளவும், புதிய கூட்டாளித்துவங்களை ஏற்படுத்தவும் இது எங்களுக்கு வாய்ப்பளித்தது".
- MitKat Advisory-யின் இணை-நிறுவனரும் & MD-யுமான திரு. S. M. Kumar
"சுற்றுச்சூழல், பலவானதாகவும், விரவியதாகவும், நெருக்கமானதாகவும் மற்றும் சிக்கலானதாகவும் ஆகி அச்சுறுத்துவதாக மாறியிருக்கிறது. தொழில் பாதுகாப்பின் எதிர்காலம் குறைவான அளவிலேயே மனிதனைச் சார்ந்ததாக இருக்கும்; அதிகமாக தொழில்-மையப்பட்டதாகவும், தொழில்நுட்பம் சார்ந்ததாகவும், அறிவுசார்ந்ததாகவும், செயல்முறை நோக்கியதாகவும், செலவு குறைந்ததாகவும் இருக்கும். அறிவுசார், ஊகிக்கக்கூடிய மற்றும் தொடர்பற்ற தொழில்நுட்பங்கள் அதிகமாகப் பயன்படும்."
- Goldman Sachs-ன் VP - கார்ப்பரேட் செக்கியூரிட்டி-யும், ASIS Bangalore Chapter-ன் தலைவருமான திரு. Vivek Prakash
"இப்போது, செக்கியூரிட்டி துறைக்கு மிகப்பெரிய வாய்ப்பு பெருகிவருகிறது. இந்தப் புதிய சூழலில் பாதுகாப்புத் தொழில்நுட்பம் தொழில்களுக்கு உதவுவதற்குப் பல வழிகள் உள்ள சூழலில், இத்துறை மிக வேகமாக வளர்வது நிச்சயம். மாறிவரும் சூழலுக்கு ஏற்ப நம்மையே மேம்படுத்திக் கொள்வது பாதுகாப்பு நிபணர்களான நமக்கு முக்கியம்!"
- Rustomjee Constructions-ன் தீ & பாதுகாப்புக்கான தலைவரான திரு. Suvek Salankar
"கொள்ளைநோய்களும், பெருந்தொற்றுகளும் மனித சமூகத்தை மீண்டும் மீண்டும் அச்சுறுத்தி வருகின்றன. ஆனால், சில நேரங்களில் நாம் அத்தகைய எதிர்பாராத சவால்களை எதிர்த்துப் போராடி அதைச் சமாளிப்பது எப்படி என்பதற்கான வழிகளையும் கற்றுக்கொள்கிறோம். தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது, நம் அனைவருக்குமே மிக மிக அவசியமாக உள்ள உகந்த சூழல் இதுதான். HSE பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்கு இத்தகைய ஒரு சக்திவாய்ந்த டிஜிட்டல் தொழில்நுட்பத் தளத்தைப் பயன்படுத்தியதற்காக OSH India-விற்கு நன்றி தெரிவிப்பதோடு அதைப் பாராட்டுகிறேன்."
- Torpedo Shoes Pvt. Ltd-ன் இயக்குநரான திரு. Rehan Ajmal
"தோல் & தொழில் பாதுகாப்புக் காலணிகளைத் தயாரித்து & ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனமாக Torpedo shoes உள்ளது. எம்முடைய மதிப்புமிக்க வாடிக்கையாளர்களைச் சென்றடைய சிறந்த வாய்ப்பாகவும் புதிய பாணியாகவும் OSH India virtual expo இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். எங்களுடைய மிகச் சமீபத்திய புதிய தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தவும், சந்தையின் தேவைகளைப் புரிந்துகொள்ளவும் ஒரு நல்ல இணைப்புத் தளமாக இருக்கிறது."
Informa Markets பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை Informa Markets உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் 365 நாட்களும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்
Informa Markets மற்றும் இந்தியாவில் எம்முடைய தொழில் பற்றி
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும். Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் எலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம். இந்தியாவில் Mumbai, New Delhi, Bangalore மற்றும் Chennai-யில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informa.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்
எந்த ஒரு ஊடக விசாரணைகளுக்கும் தயவுசெய்து இவர்களைத் தொடர்பு கொள்ளவும்:
Roshni Mitra - [email protected]
Mili Lalwani - [email protected]
லோகோ : https://mma.prnewswire.com/media/1310901/IFSEC_Virtual__Logo.jpg
லோகோ : https://mma.prnewswire.com/media/1310900/OSH_virtual_expo_Logo.jpg
லோகோ : https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
லோகோ : https://mma.prnewswire.com/media/1245301/Super_September.jpg
Share this article