Hyderabad Jewellery, Pearl மற்றும் Gem Fairன் 12வது பதிப்பில் அற்புதமான தொகுப்புகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன
ஹைதராபாத், இந்தியா, June 17, 2019 /PRNewswire/ --
450 க்கும் மேற்பட்ட பிராண்டுகள் மூன்று நாள் B2B கண்காட்சியில்
தங்களுடைய பிரத்யேக நகைகளின் வரம்பை வழங்குகின்றன
Hyderabad Jewellery, Pearl and Gem Fair (HJF 2019), இந்தியாவின் உயர் மதிப்பு கொண்ட B2B நகைகளின் வர்த்தக கண்காட்சி, அதன் 12 வது பதிப்பை Hyderabad International Convention Centre (HICC), Novotel, Hyderabad ல் இன்று தொடங்கியது. சிறப்பு விருந்தினர்கள் - ஸ்ரீ. T. Padma Rao Goud, துணை சபாநாயகர், Telangana; திரு. Mahendra Tayal, தலைவர், Hitech City Jewellers Manufacturers Association; திரு. Mukesh Agarwal, Convener, Hitech City Jewellers Manufacturers Association; திரு. Yogesh Mudras, நிர்வாக இயக்குனர், UBM India மற்றும் திரு. Abhijit Mukherjee, குழு இயக்குனர், UBM India ஆகியோர் நகை வர்த்தகத்தைச் சேர்ந்த மற்ற பிரமுகர்கள் முன்னிலையில் கண்காட்சியைத் தொடங்கினர்.
(Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/898194/HJF_2019_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/902938/Inauguration_12th_edition_HJF.jpg )
UBM இந்தியாவால் ஏற்பாடு செய்யப்பட்டது, Hyderabad Jewellery, Pearl மற்றும் Gem Fair இந்திய நகரின் சந்தைக்கு ஒரு சிறந்த தளமாக விளங்குகின்றது, தொழில்முறை வீரர்கள் தங்களுடைய வடிவமைப்பாளர் நகைகளை வழங்குவதற்கு மற்றும் வாங்குபவர்களுக்கு பிரத்யேக கலைஞர்களின் சேகரிப்பிலிருந்து தங்கள் விருப்பத்திற்ற்றவாறு நகைகளை பார்த்து, அனுபவித்து ஆர்டர் செய்வது போன்ற அனைத்தையும் ஒரே இடத்தில் மேற்கொள்ளும் தீர்வை வழங்குகிறது.
இந்தியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளரான Hyderabad Jewellery, Pearl மற்றும் Gem Fair, ஆந்திராவின் 200+ மாவட்ட சங்கங்கள், தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், தில்லி & உத்திரபிரதேசத்துடன் சேர்ந்து Hitech City Jewellery Manufacturers Association (HJMA) மற்றும் Telangana Bullion Gems & Jewellery Federation ஆகியவற்றுடன் ஒன்றினைந்து நடைபெறுகிறது.
நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 450 க்கும் மேற்பட்ட முன்னணி பிராண்டுகள் தங்களின் மிகச்சிறந்த நகைகள் மற்றும் கைவினைஞர்களின் சேகரிப்பை HJF 2019 இல் பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தியுள்ளன. கண்காட்சிகளில் சிறந்த நகை பிராண்டுகள், சிறந்த முடிக்கப்பட்ட நகை உற்பத்தியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள், நகை உற்பத்தியாளர்கள், இயந்திர உற்பத்தியாளர்கள், வைரம், ரத்தின மற்றும் முத்து உற்பத்தியாளர்கள், விலைமதிப்பற்ற உலோக மற்றும் நகைகளை ஏற்றும் வர்த்தகர்கள், பேக்கேஜிங் மற்றும் காட்சி, ஹால்மார்க்கர்கள், வர்த்தக மற்றும் அரசாங்க அமைப்புகளின் மதிப்பீட்டாளர்கள் மற்றும் பிரதிநிதிகளை கொண்டிருந்தது.
இந்த ஆண்டு நிகழ்ச்சியின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக முதன் முதலாக கலந்துகொள்ளும் இந்தோனேஷியா, 4 உயர்ந்த பிராண்டுகளை இந்தோனேஷியாவிலிருந்து கொண்டுவருகிறது: அவை Nahdi Jewellery, Mira, Ellyhan Jewellery, Indah Mutiara Lambok. கண்காட்சியின் பிற முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக வடிவமைப்பாளர் தளம், இதில் இந்தியாவின் முக்கிய தலைசிறந்த நகை படைப்புகளைக் காட்சிப்படுத்தியது; B2B சந்திப்புகளுக்கு பிரத்தியேகமாக முதன்முதலாக Regalia தளம் மற்றும் இந்திய மற்றும் சர்வதேச பிராண்டுகளிலிருந்து புதிய வடிவமைப்பு மற்றும் தொடக்கத்தினை கண்காட்சியில் காணலாம்.
HJFன் 12வது பதிப்பின் தொடக்க விழாவில் பேசிய UBM இந்தியாவின் நிர்வாக இயக்குனர் திரு. Yogesh Mudras அவர்கள், "உலகளாவிய நகை நுகர்வோரில் இந்தியா 29 சதவீத பங்களிப்பை வழங்குவதில் உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாகும், மேலும் இது குறைந்த விலை மற்றும் அதிக திறமையான தொழிலாளர்கள் கிடைப்பதால் உலகளாவிய நகை சந்தையின் மையமாக கருதப்படுகிறது. ஹைதராபாத் பெரிய மற்றும் வளர்ந்து வரும் தென்னிந்திய உற்பத்தி மற்றும் சில்லறை சந்தைகளை பிரநிதித்துவப்படுத்துகிறது மேலும் HJF இன் 12 வது பதிப்பில் பிராந்தியத்தில் ஒரு முக்கிய பங்கை வகிப்பதிலும் விற்பனையை உருவாக்கி, சிறந்த வணிக உறவுகளை உருவாக்குவதில் பெருமிதம் கொள்கிறோம். தென்னிந்தியாவின் வடிவமைப்பாளர் நகைகள் வரம்பின் மீது சிறப்பு கவனம் செலுத்துவதுடன், இந்த நிகழ்ச்சி வாங்குபவர்களுக்கும் சப்ளையர்களுக்கும் ஒரு சிறந்த தளமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது மற்றும் தொடர்ந்து உலக நகைக்கடை துறையில் முக்கியமானவர்களை ஈர்க்கிறது. இந்த ஆண்டு, United Kingdom (UK), United States of America (USA), Dubai, Singapore மற்றும் India மற்றும் பல நாடுகளிலிருந்து நன்கு அறியப்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வாங்குபவர்களிடமிருந்து நாங்கள் பங்கேற்பை பார்க்கிறோம், இது உலகெங்கிலும் உள்ள தொழில்துறைக்கு நிரூபிக்கப்பட்ட மற்றும் நம்பகமான ஆதார மையமாக எக்ஸ்போவின் நிலையை வலுப்படுத்துகிறது." என்று கூறினார்.
இந்த ஆண்டு, B2B கண்காட்சியில் Anmol Jewellers, Swaroop Jewellers, Chintamani Gold, Sri Shubam Jewellers, Gupta Gold, Vinati Jewellers, JKS Jewels Pvt Ltd, KK Ornaments, Jewel Park, Shree Kalpataru Jewellers Pvt Ltd, Mukti Gold, Anmol Swarn, Nahar Diamonds, SK Jewels, Hreenkar Jewellers, South India Jewellers, SK Seth, Dantara Jewellery, Rajendra Jewellers, Bhindi Jewellers போன்றவர்கள் மற்றவர்கள் மத்தியில் முக்கிய கண்காட்சியாளர்களாக பங்கு பெறுவதை காணலாம். விஜயவாடா, குண்டூர், விசாக், நெல்லூர் மற்றும் வாரங்கல் போன்ற II அடுக்கு மற்றும் பல நகரங்களில் இருந்தும் நகைகளில் படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை HJF முன்னிலைப்படுத்துகிறது.
UBM இந்தியா ஆண்டு முழுவதும் நடத்தும் நான்கு நகர நகைக் கண்காட்சிகளில் (Kolkata, Chennai, Hyderabad மற்றும் Delhi) HJF ஒன்றாகும். சர்வதேச அளவில், UBM PLC உலகின் மிகப்பெரிய ஜூவல்லரி வர்த்தக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறது - The Hong Kong Jewellery & Gem Fair.
HJF 2019 ல் தொழில்துறை பேச்சு:
முக்கிய கண்காட்சியாளர்களின் மேற்கோள்கள்:
- HJFல் பேசுகையில், திரு. Mahender Tayal, HJMA தலைவர், Regional Chairman South GJEPC கூறியது, "Hyderabad Jewellery, Pearl and Gem Fair ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தொழில்துறையின் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த மேடையானது இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலிருந்தும் பிற வர்த்தகர்களுடன் ஈடுபட எங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. நகைக்கடைத் தொழிலில் சமீபத்திய போக்குகள், பிரீமியம் நகைகளின் வரிசை, முத்து, மாணிக்கம், மரகதம் மற்றும் வைரங்கள் ஆகியவற்றை காண முடிந்தது, மேலும் பெரிய எண்ணிக்கையிலான பார்வையாளர்களை சந்திக்கின்றோம்.
- திரு.Mukesh Agarwal, துணைத் தலைவர்- Hitech City Jewellery manufacturers Association (HJMA) & Director, Swaroop Jewellers கூறியது - "கடந்த 11 ஆண்டுகளில் முதல் UBM உடன் இணைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஹைதராபாத் நகை உற்பத்தியாளர்களுக்கான முக்கிய நிகழ்ச்சிகளில் HJF ஒன்றாகும், ஆண்டுதோறும் இது பெரும் புகழ் பெற்று வருகிறது, இது உண்மையில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய நகைக் கண்காட்சிகளில் ஒன்றாகும். இந்த 12 வது பதிப்பில், நாங்கள் பரந்த அளவிலான மாணிக்கங்கள் மற்றும் மரகதங்களால் பதிக்கப்பட்ட C.Z. pachi நகைகள், மாணிக்கங்கள் மற்றும் மரகதங்கள் மற்றும் C.Z.ஆகியவற்றால் பதிக்கப்பட்ட கோயில் நகைகளில் ஒரு முழுமையான வரம்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். "
- திரு. Preetham Jain, கூட்டாளி, Kala Mandir Collection - "ஹைதராபாத் எங்களுக்கு சாத்தியமான சந்தை மற்றும் Hyderabad Jewellery Pearl மற்றும் Gem Fair சிறிய மற்றும் பெரிய அளவிலான வர்த்தகர்களுடன் இணைவதற்கு எங்களுக்கு சரியான தளமாகும், இல்லையெனில் எங்கள் தயாரிப்புகளை சுயாதீனமாக சந்தைப்படுத்த முடியாது. இந்த ஆண்டு, குறிப்பிட்ட தனித்துவமான மிகவும் முடிக்கப்பட்ட எங்கள் கோயம்புத்தூர் வார்ப்பு ஆபரணங்களை HJF 2019 இல் அறிமுகப்படுத்தியுள்ளோம்."
- திரு. Roshni Prasad, CEO - JKS Jewels Pvt Ltd- "UBM HJF எங்கள் நகைகளை சந்தைப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு சிறந்த தளமாக இருந்து வருகிறது. HJF இல், புதிய வாங்குபவர்களுடன் ஈடுபடுவதற்கான வாய்ப்பையும், தொழில்துறையின் சமீபத்திய போக்குகளையும் காண்கிறோம். எங்கள் கொல்கத்தா கைவினை நகைகள் தொகுப்புக்கு நாங்கள் நன்கு அறியப்பட்டோம், மேலும் எங்கள் சமீபத்திய வடிவமைப்புகளை HJF 2019 இல் காட்சிப்படுத்தியுள்ளோம்".
HJF பற்றி
UBM ஆல் ஏற்பாடு செய்யப்படும் HJF, இது ஜூன் 2019 ல் Informa PLC உடன் இணைந்து B2B தகவல் சேவைகள் குழுவாகவும், உலகின் மிகப்பெரிய B2B நிகழ்வுகள் அமைப்பாளராகவும் மாறும். HJF பற்றிய கூடுதல் தகவல்களுக்கு https://hyderabad.jewelleryfair.in/ மற்றும் ஆசியாவில் எங்கள் இருப்பை பற்றி தெரிந்துகொள்ள http://www.ubm.com/global-reach/ubm-asia / https://www.informamarkets.com/en/home.html க்குச் செல்லவும்.
UBM Asia பற்றி:
UBM ஆசியா சமீபத்தில் Informa PLC இன் ஒரு பகுதியாக மாறியது, இது ஒரு முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் உலகின் மிகப்பெரிய B2B நிகழ்வுகள் அமைப்பாளர் ஆகும். ஆசியாவில் எங்கள் இருப்பை அறிய http://www.ubm.com/asia / https://www.informamarkets.com/en/home.html க்கு தயவுசெய்து செல்லவும்.
ஊடக கேள்விகளுக்கு:
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
+91-9833279461, UBM India
Share this article