Hyderabad Jewellery Pearl and Gem Fair (HJF) 12வது பதிப்பில் 450க்கும் அதிகமான பிராண்டுகளின் கண்காட்சி
ஹைதராபாத், இந்தியா, June 7, 2019 /PRNewswire/ --
முத்துக்களின் நகரத்தில் இந்தியாவின் முன்னணி ஜூவல்லர்களின் மிகப்பிரம்மாண்டமான மூன்று நாள் கண்கவர் கண்காட்சி
Hyderabad Jewellery, Pearl and Gem Fair (HJF 2019), தென் இந்தியாவின் ப்ரீமியம் ஜூவல்லரி வர்த்தக கண்காட்சி, மிகச்சிறந்த ஜூவல்லரி, மிக மேன்மையான ஜூவல்லர்களின் கைவினைஞர்கள் சேகரிப்பு, வியாபாரிகளின் இறக்குமதி & ஏற்றுமதி மற்றும் முத்துகளின் நகரத்தில் உள்ள தொழில்துறை அமைப்புகள் ஆகியோர் காட்சிப்படுத்தலை அமைக்க தயாராக உள்ளனர். சிறப்புமிக்க இந்த கண்காட்சியானது, இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளரான UBM India ஆல் ஒருங்கிணைக்கப்பட்டு, Hitech City Jewellery Manufacturers Association (HJMA) மற்றும் Telangana Bullion Gems & Jewellery Federation உடன் இணைந்து ஆந்திரப்பிரதேசம்,தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, குஜராத், டெல்லி & உத்திரப்பிரதேசம் ஆகியவற்றிலிருந்து 200க்கும் அதிகமான மாவட்டங்களிலிருந்து அமைப்புகள் பங்கேற்கின்றன. மிகச்சிறந்த தளத்தின் மீது இந்தியாவின் மிகச்சிறந்த தொழில்திறமையை HICC, Novotel, Hitech Cityல் 14 ஆம்தேதி - 16 ஆம்தேதி ஜூன் வரை HJF ன் 12th anniversary மூன்று நாள் கண்காட்சி , காட்சிப்படுத்துவதாக அமையும்.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/898194/HJF_2019_Logo.jpg )
இந்த வருடம் 200க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள் பங்கு பெறுவார்கள், ஜூவல்லரி பிராண்டுகள், ஃபைன் ஃபினிஷ்டு ஜூவல்லரி உற்பத்தியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லரை விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள், ஜூவல்லரி உற்பத்தியாளர்கள், இயந்திரம் மற்றும் உற்பத்தியாளர்கள், வைரம், நவரத்தினங்கள் மற்றும் முத்துகள் உற்பத்தியாளர்கள், மதிப்புமிக்க உலோகம் மற்றும் ஜூவல்லரி மௌன்டிங் வியாபாரிகள், பேக்கேஜிங் மற்றும் காட்சிப்படுத்தல், ஹால்மார்க்கர்ஸ், மதிப்பீட்டாளர்கள் மற்றும் வர்த்தக மற்றும் அரசாங்க அமைப்புகள் ஆகியோர் பங்கேற்பார்கள்.
இந்த வருட கண்காட்சியின் முக்கிய மேற்கோளாக இந்தோனேசியாவிலிருந்து பங்கேற்கும் நான்கு பிராண்டுகளின் பங்களிப்பு விளங்குகிறது அவை: Nahdi Jewellery, Mira, Ellyhan Jewellery, Indah Mutiara Lambok. இந்தியாவின் முக்கிய ஜூவல்லரியின் தலைசிறந்த படைப்புகள் இந்த கண்காட்சியில் இடம்பெறுகிறது; B2B சந்திப்புகளுக்கான முதன்முதல் அறிமுகங்கள் மற்றும் இந்திய மற்றும் சர்வதேச பிராண்டுகளின் புதிய வடிவமைப்புகள் மற்றும் அறிமுகங்களின் அணிவகுப்பையும் காட்சிப்படுத்துகிறது.
நகை சந்தையின் வாயிலாக விளங்கும் இந்த கண்காட்சியானது தெற்கு இந்தியாவின் டிசைனர் ஜூவல்லரியில் சிறப்பு கவனத்தை கொண்டு வரும், மேலும் வாங்குபவர் கள் மற்றும் சப்ளையர்களை இணைக்க, நெட்வொர்க் மற்றும் கருத்துகளை பரிமாற, எதிர்கால போக்குகளை கண்டறிய மற்றும் வர்த்தக வாய்ப்புகளை உருவாக்க சிறந்த தளத்தை வழங்குகிறது. மிகப்பிரபலமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வாங்குபவர்கள் முதல் United Kingdom (UK), United States of America (USA), Dubai, Singapore மற்றும் இந்தியா ஆகியவற்றிலிருந்து உலகில் உள்ள தொழில்துறைக்கான நம்பிக்கையான மற்றும் மரியாதையான ஹப் -ஆக விளங்குவதாக கண்காட்சியின் நிலை உள்ளது.
Hyderabad Jewellery, Pearl and Gem Fair 2019ல் அறிவிப்பில் பேசுகையில், Mr. Yogesh Mudras, Managing Director, UBM India கூறுகையில், "உலக ஜூவல்லரி சந்தையாக விளங்கும் இந்தியா, உலகிலேயே வைரங்களின் மிகப்பெரிய கட்டிங் மற்றும் பாலிஷிங் மையமாக விளங்குகிறது மேலும் உலகில் தங்க நகையின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. அரசாங்கத்தால் நன்றாக ஆதரவு தரப்பட்ட, நவரத்தினங்கள் மற்றும் ஜூவல்லரி பிரிவின் சந்தை அளவு 2025க்குள் US$ 100 பில்லியன் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கத்திய வாழ்க்கைமுறை ஏற்பினால் நுகர்வோரின் விருப்பங்களில் மாற்றங்களை இந்த பிரிவு காட்சிப்படுத்துகிறது. நுகர்வோர் புதிய வடிவமைப்புகள், புதுமை மற்றும் நகையின் பல்வேறு வகைகள் மற்றும் பிராண்டட் நகைகளில் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப உள்ளூர் ஒருங்கிணைக்கப்படாத வியாபாரிகளை விட தரத்துடன் வழங்குகிறது. இருந்தாலும் இந்தியாவில் தகுதி சின்னமாக நகை விளங்குவதால் தனிநபர் வருமான அதிகரிப்பின் காரணமாக நகைகளின் விற்பனை அதிகரிக்கும். இந்த எல்லைகளுக்கு எதிராக, நாம் நமது பெருமைமிகு Hyderabad Jewellery Pearl and Gem Fair ன் 12 வது பதிப்பு இந்தியா முழுவதுமான தரமான வியாபார உறவுகளை உருவாக்கி இந்த ஆண்டு சர்வதேச பங்களிப்பையும் கொண்டு வருகிறது."
HJFல் பேசும்போது , Mr. Mahender Tayal, President HJMA, Regional Chairman South GJEPC கூறுகையில், " Hyderabad Jewellery, Pearl and Gem Fairன் 12வது பதிப்பில் UBM India-க்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். தெற்கு பிராந்தியத்திலேயே இந்த துறையின் மிகச்சிறந்த பலனளிக்கும் தளமாக இது விளங்குகிறது மேலும் சில்லறை சமூகத்துடன் கூடிய வர்த்தகர்களை இணைப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்கிடையே நீண்ட நாள் உறவையும் ஏற்படுத்தும். குறிப்பாக, எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் பொருளாதார நிலையில், வியாபாரம் நடத்துவதற்கும் மற்றும் தேவையான திறனை பகிர்வதற்கும் HJF ஊக்கப்படுத்துகிறது. ப்ரீமியம் ஜூவல்லரி, முத்துகள், பவளம், மரகதம் மற்றும் வைரங்கள் பதிக்கப்பட்ட நகைகள் காண HJF 2019 பார்வையாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் மற்றும் பருவகாலத்தின் சமீபத்திய நோக்குகளுடன் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்வார்கள்."
இந்த வருடம், B2B கண்காட்சியில் முக்கிய கடைகளான Anmol Jewellers, Swaroop Jewellers, Chintamani Gold, Sri Shubam Jewellers, Gupta Gold, Vinati Jewellers, JKS Jewels Pvt Ltd, KK Ornaments, Jewel Park, Shree Kalpataru Jewellers Pvt Ltd, Mukti Gold, Anmol Swarn, Nahar Diamonds, SK Jewels, Hreenkar Jewellers, South India Jewellers, SK Seth, Dantara Jewellery, Rajendra Jewellers, Bhindi Jewellers மற்றும் பலரும் கண்காட்சியாளர்களாக பங்கேற்பர். பல நகரங்களிலிருந்து ஜூவல்லரியில் கண்டுபிடுப்பு மற்றும் புதுமையை HJF காட்சிப்படுத்துகிறது மற்றும் விஜயவாடா, குண்டூர், விசாகப்பட்டினம்,நெல்லூர் மற்றும் வாரங்கல் போன்ற நகரங்களின் பங்கேற்பும் நடைபெறும்.
நான்கு- நகர நகை கண்காட்சிகளில் ஒன்றான HJF (கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத் மற்றும் டெல்லி) UBM India ஆல் வருடம் முழுவதும் நடத்தப்படுகிறது. சர்வதேச அளவில், UBM plc உலகின் மிகப்பெரிய நகை வர்த்தக நிகழ்ச்சியான The Hong Kong Jewellery & Gem Fairஐ ஒருங்கிணைக்கிறது.
HJF பற்றி
உலகின் முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் மிகப்பெரிய B2B நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளராக விளங்கும் Informa PLC உடன் ஜூன்2018ல் இணைந்த UBM ஆல் HJF ஒருங்கிணைக்கப்படுகிறது. HJF பற்றிய கூடுதல் தகவலுக்கு தயவுசெய்து வருகை தரவும் https://hyderabad.jewelleryfair.in/ மற்றும் ஆசியாவில் எங்களது இருப்பை பற்றிய கூடுதல் தகவலுக்கு வருகை தரவும் http://www.ubm.com/global-reach/ubm-asia / https://www.informamarkets.com/en/home.html
UBM Asia பற்றி:
உலகின் முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் மிகப்பெரிய B2B நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளராக விளங்கும் Informa PLC உடன் UBM Asia சமீபத்தில் ஒரு பாகமாக இணைந்தது. ஆசியாவில் எங்களது இருப்பை பற்றி கூடுதல் தகவலுக்கு வருகை தரவும் http://www.ubm.com/asia / https://www.informamarkets.com/en/home.html .
ஊடகம்தொடர்பான கேள்விகளுக்கு தொடர்பு கொள்ளவும்:
UBM India
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
+91-22-6172-7117
UBM India
Share this article