GorakhpurOnline.in மற்றும் Gorakhpur Mahotsav 2020 ஆகியவை 3-வது ஆண்டாக இணைந்திருப்பது பற்றி அறிவித்துள்ளன
கோரக்பூர், இந்தியா, Jan. 14, 2020 /PRNewswire/ -- புனித நகரான கோரக்பூரின் வரலாற்றில் மிகப்பெரிய கலாச்சார ஆடம்பர நிகழ்வான Gorakhpur Mahotsav 2020-யும் Pan India Internet Pvt. Ltd-ன் அங்கமாக உள்ள நகரின் நம்பர் 1 வலைதள மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் சொலூஷன்ஸ் நிறுவனமான www.GorakhpurOnline.in-ம் கோரக்பூரை ஒரு உலகளாவிய தொழில், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கின் மையமாக பிராண்ட் செய்யும் நோக்கத்துடன் தொடர்ந்து 3-வது ஆண்டாக கைகோர்த்திருப்பதாக அறிவித்துள்ளன.
Gorakhpur Mahotsav 2020 நிகழ்ச்சி வரும் 2020 ஜனவரி 11 முதல் 17-வரை DDU கோரக்பூர் யுனிவர்சிட்டி கிரௌண்ட்ஸில் நடைபெற உள்ளது. இதில் GorakhpurOnline.in -தான் அதிகாரப்பூர்வமான டிஜிட்டல் மீடியா பார்ட்னராக இருக்கும், இந்த மகோத்சவ் Department of Tourism (UP), Department of Culture (UP) மற்றும் District Administration of Gorakhpur ஆகியவற்றின் ஒத்துழைப்போடு நடத்தப்படுகிறது.
உத்திரப் பிரதேசத்தில் நடைபெறும் பல்வேறு சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதேஇந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக இருக்கும். உத்திரப் பிரதேசத்தின் முதலமைச்சரான திரு. Yogi Adityanath-ன் சிந்தனையில் உதித்ததுதான் இந்த மகோத்சவ். Sonu Nigam, Anuradha Paudwal, Raju Srivastav போன்ற பிரபலமான பாலிவுட் பாடகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கோரக்பூரைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட உள்ளூர் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த மகோத்சவ்-ஐ சமூக ஊடகத் தளங்கள் போன்ற இணைய சேவைகள் வழியாக பிரச்சாரம் செய்வதோடு, தன்னுடைய பிளாட்ஃபார்ம்கள் வழியாக GorakhpurOnline.in மகோத்சவ் பற்றிய நேரடி ஒளிபரப்பையும் செய்யும். இந்த மாபெரும் நிகழ்ச்சியின் ஒவ்வொரு நிமிட நேரடி அப்டேட்களையும் நாடு முழுவதும் உள்ள மக்கள் பார்க்கும்படியான ஒரு சேனலை உருவாக்கும். மகோத்சவுக்கு வரும் பார்வையாளர்களுக்கு ஒரு செல்ஃபி போட்டியையும் நிறுவனம் நடத்தும்.
GorakhpurOnline.in மற்றும் IndiaOnline.in Network-ன் CEO-வும் MD-யுமான, திரு. Raj Kumar Jalan பேசும்போது, "முந்தைய ஆண்டுகளில் நாங்கள் செய்த புரோமோஷனல் ஆக்டிவிட்டீஸ் காரணமாக இந்த ஆண்டும் எங்களுடைய பங்கேற்புக்கு வழி வகுத்துள்ளன. எம்முடைய டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி நாட்டின் ஒவ்வொரு நகரிலும் புரொமோட் செய்வதில் உறுதியாக இருக்கிறோம். மாநிலத்திலும், நாடு முழுவதிலும் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கான முயற்சியில் கோரக்பூர் மகோத்சவ்வுடன் (Gorakhpur Mahotsav) இணைந்திருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
மகோத்சவ் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, தயவுசெய்து, https://www.facebook.com/GorakhpurMahotsav2020/ என்ற வலைதளத்தை தயவுசெய்து பார்க்கவும்.
GorakhpurOnline.in பற்றி:
www.GorakhpurOnline.in என்பது இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட IT & இன்டெர்நெட் கம்பெனிகளில் ஒன்றான Pan India Internet Private Limited (PIIPL)-ன் ஒரு அங்கமாகும். 2000-க்கும் மேற்பட்ட வலைதளங்களை நடத்தி வருவதோடு, உலகெங்கும் உள்ள 4000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றியுள்ள பரந்த அனுபவத்தைக் கொண்டிருக்கிறது.
நிறுவனத்தைப் பற்றிய கூடுதல் விவரங்களைக் காண்பதற்கான அதன் அதிகாரப்பூர்வமான வலைதளம்: www.panindia.in
ஊடகத் தொடர்பு:
Siddharth Jalan
மின்னஞ்சல் - [email protected]
கைப்பேசி - +91-9811554192
Share this article