Food Ingredients India & Health Ingredients (Fi India & Hi) மற்றும் ProPak India தங்களுடைய விர்ச்சுவல் கண்காட்சிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளன
- 17 நாடுகளிலிருந்து 5470-க்கும் மேற்பட்ட வாங்குபவர்கள் கலந்து கொண்டனர்
மும்பை, இந்தியா மற்றும் புது டெல்லி, அக். 30, 2020 /PRNewswire/ -- Informa Markets in India-வினால் நடத்தப்படும் உணவு, ஆரோக்கியம் மற்றும் பேக்கேஜிங்குக்கான இந்திய துணைக் கண்டத்தின் அதிக ஒருங்கிணைந்த B2B கண்காட்சியான Food Ingredients India & Health Ingredients (Fi India & Hi) மற்றும் ProPak India-வின் மெய்நிகர் கண்காட்சிகள் கடந்த வாரத்தில் மிக வெற்றிகரமாக நடந்து முடிந்தன. Fi India & Hi-யானது அதிக தரமான உட்பொருட்களை வாங்கும் வாய்ப்புகளை துறைக்கு அளிக்கும் அதே நேரம், ProPak India கண்காட்சியானது மருந்துகள், அழகூட்டும் பொருட்கள், அப்ளையன்ஸ்கள், தொழில்துறை சிஸ்டம்கள் மற்றும் எந்திரங்கள் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் தயாரிப்புகள் சார்ந்த பேக்கேஜிங் தீர்வுகளை அளித்துள்ளது.
இந்த விர்ச்சுவல் கண்காட்சிகளின் தொடக்க நிகழ்ச்சியில் FSSAI-யின் தலைவரான திருமதி. Rita Teotia; Informa Markets in India-வின் மேனேஜிங் டிரெக்டரான திரு. Yogesh Mudras, மற்றும் Informa Markets in India-ன் குரூப் டிரெக்டர் - இன்கிரேடியன்ட்ஸ் போர்ட்ஃபோலியோ-வான திரு. Rahul Deshpande ஆகியோர் கலந்துகொண்டனர்.
Food Ingredients India & Health Ingredients (Fi India & Hi) மற்றும் ProPak India மெய்நிகர் கண்காட்சியில் பேசிய Informa Markets in India-வின் Managing Director-ஆன திரு. Yogesh Mudras, "விழிப்புணர்வை அளித்தல் மற்றும் உணவு உட்பொருட்கள், பதனிடுதல் மற்றும் பேக்கேஜிங் சந்தையைப் பயன்படுத்திக் கொள்ளுதல், பல உயர் விளைச்சல் பயிர்களை உருவாக்குதல், தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் மற்றும் வர்த்தகக் கொள்கைகளை குறிப்பாக சிறுதொழில் நிறுவனங்கள் சார்ந்த கொள்கைகளை அதிக எளிதாக்குதல் போன்றவையே துறையின் தற்போதைய தேவைகளில் சில. COVID-19-னால் தேவையில் ஏற்பட்டுள்ள தகர்ப்புகள் நுகர்வோரின் நடத்தை முறையை முழுமையாக மாற்றியிருக்கிறது. இதனால், நோயெதிர்ப்புத்திறன் மற்றும் சுகாதாரத் துறைகளில் அதிகமான வாய்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இறுதியாக, இந்திய அரசின் Atmanirbharta திட்டத்தினால் கிடைக்கும் பல வாய்ப்புகள் இந்தியாவில் கிடைக்கவிருக்கிறது. ஏனெனில், இது இத்துறையினருக்கு உகந்த சூழலை உருவாக்க உதவும். உணவுப் பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் தொழில்நுட்பம் மற்றும் உணவு உட்பொருட்கள் போன்றவற்றை சர்வதேச பார்வைக்கு வழங்கி, உணவுப் பதப்படுத்துதல் துறைக்கான மூலப்பொருள் அடித்தளத்திற்கு உந்துசக்தியாக இந்த ஆண்டு நடைபெற்ற மெய்நிகர் Fi India & Hi கண்காட்சி அமைந்தது" என்றார்.
செப்டம்பர் & அக்டோபர் 2020-ல் Informa Markets in India-னால் நடத்தப்படும் தொடர்ச்சியான டிஜிட்டல் கண்காட்சிகள் மற்றும் இ-மாநாடுகள் கொண்ட 'விர்ச்சுவல் B2B கொண்டாட்டத்தின்' ஒரு அங்கமாக இந்த டிஜிட்டல் நிகழ்வுகள் அமைந்தன. உரிய சமூகங்களும் தொழில்களும் பொதுமுடக்கத்தின் கட்டுப்பாடுகளை வெற்றிகொள்ளவும், தொழில் இலக்குகளை எட்டவும் பொருளாதாரம் தன்னுடைய பாதையில் திரும்பி வரத் தயாராகும் வேளையில் ஒரு உந்துதலைத் தரவும் இந்த விர்ச்சுவல் B2B கொண்டாட்ட முயற்சி உதவின.
Association of Food Scientists & Technologists (INDIA) (AFST - Mumbai Chapter), Indian Flexible Packaging & Folding CartonManufacturers Association (IFCA), Authentication Solution Providers' Association (ASPA), All India Food Processors' Association (AIFPA), SIES School of Packaging, Indian Institute of Food Processing Technology (IIFPT), Suman Consultants, Health Foods and Dietary Supplements Association (HADSA) ஆகிய நிறுவனங்களும் அமைப்புகளும் ஆதரவு வழங்கிய Fi India & Hi மற்றும் ProPak India விர்ச்சுவல் கண்காட்சிகள் உணவு, ஆரோக்கியம் மற்றும் பேக்கேஜிங் சம்பந்தமான புகழ்பெற்ற பிராண்டுகள், ஆலோசகர்கள், தொழில் நிபுணர்கள் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகளை ஒருங்கிணைத்தன.
Fi India and Hi
Ajanta Chemical Industries, Ajanta Food Products Company, Azelis (India) Private Ltd, Brenntag Ingredients (India) Pvt. Ltd, Cargill India Pvt. Ltd., Gujarat Enterprise, Hexagon Nutrition Pvt. Ltd, Mintel (Consulting) India Pvt. Ltd, Roquette India Pvt. Ltd மற்றும் Universal Oleoresins போன்ற மிகச் சிறந்த பிராண்டுகள் Fi India and Hi மெய்நிகர் கண்காட்சியில் கலந்துகொண்டன. கண்காட்சியில் இடம் பெற்ற தயாரிப்புகளில் உணவு மற்றும் சுகாதார உட்பொருட்கள், ஸ்பைஸ் ஆயில்கள், இயற்கை நிறமிகள், தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் சிறப்பு உணவுகள், ஊட்டச்சத்து உட்பொருட்கள் முதலானவை அடங்கும்.
கண்காட்சியின்போது இரண்டு நாள் மாநாடும் நடத்தப்பட்டது. அதில் பிரபலமான உலகளாவிய பேச்சாளர்கள் கலந்துகொண்டு பேசிய தலைப்புகளில் சில: 'எ ஹெல்தி ஹார்ட்டி பிரேக்ஃபாஸ்ட்: இன்னோவேஷன் த்ரூ ஃபார்முலேஷன்'; 'தி பிளான்ட்-பேஸ்டு ரெவலூஷன் அன்டு தி ஆப்பசூனிட்டி ஃபார் இன்டியா'; 'இம்பாக்ட் ஆஃப் கன்சூமர் பிஹேவியர் ஆன் நியூட்ராசியூட்டிக்கல் இன்டஸ்ட்ரி - அமிட்ஸ்ட் அன்டு போஸ்ட் பேண்டமிக்'; 'கரண்ட் டிரெண்ட்ஸ் & ஃபியூச்சர் பிராஸ்பெக்டிவ் இன் பிளாண்ட் பேஸ்டு சப்ளிமெண்ட்ஸ் & எக்ஸ்ட்ராக்ட்ஸ்'; 'ஹெல்த் அன்டு வெல்னஸ் இன் எ போஸ்ட்-COVID-19 வேர்ல்டு';
'பிளாக்செயின் இன் ஃபுட் இன்டஸ்ட்ரி'; 'நியூ இன்கிரேடியன்ட்ஸ் அன்டு தெயர் அப்ளிக்கேஷன் இன் ஃபுட் பிராடக்ட்ஸ் குரேட்டட் பை AFSTI'; 'ஸ்டார்ட் அப்ஸ் இன் இன்கிரேடியன்ட்ஸ்', 'நியூட்ரவா சிட்ரஸ் ஃபைபர் - எ கிளீன் லேபிள் சொலூஷன்'; 'பூன் ஆஃப் பிளாண்ட் பேஸ்டு புரோட்டீன்ஸ், சுகர் ஆல்டர்நேட்டிவ்ஸ் & ஹை குவாலிட்டி கார்ப்ஸ்';
'பிரைட், பெட்டர் & நியூ லுக் டு யுவர் எடிபுள் பிராடக்ட்ஸ்'.
ProPak India
ProPak Virtual Expo-யில் V-Shapes, Koch Pac-System / Uhlmann India Pvt Ltd., Mespack India மற்றும் Emerge Glass போன்ற நிறுவனங்கள் கலந்துகொண்டன. இதில், உணவு, மருந்து, தனிநபர் பராமரிப்பு, அழகூட்டும் பொருட்கள், தொழில்துறை மற்றும் நுகர்வோர் பண்டங்கள் தொழில்களுக்கான தயாரிப்பு முதல் இறுதி பேக்கேஜிங்வரை உள்ள ஒரு தயாரிப்பின் ஒருங்கிணைந்த வழிமுறைகளையும் உள்ளடக்கிய பொருட்கள் இடம்பெற்றன.
ProPak-லும் இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. Fi India and Hi மாநாடு நடக்கும் அதே சமயத்தில் இந்த மாநாடும் நடைபெற்றது. 'டிஹைட்ரேஷன் டெக்னாலஜி & குளோபல் ஆப்பசூனிட்டீஸ்'; 'கொல்லாபரேஷன் & டெக்னாலஜி டிரான்ஸ்ஃபர் ஆப்பசூனிட்டீஸ் அன்டர் Atmanirbhar Bharat'; 'சேலஞ்சஸ் அன்டு ஆப்பசூனிட்டீஸ் ஃபிரம் கொரோனா பாண்டமிக்';
'ரெகுலேஷன்ஸ் அன்டு சஸ்டெய்னபுள் பேக்கேஜிங்' போன்ற தலைப்புகளில் உரைகள் இடம்பெற்றன.
உண்மையான கண்காட்சிகளை நடத்திக்கொள்ளும்படி அரசு GOI சமீபத்தில் கடுமையான வழிகாட்டு நெறிகளைக் கொடுத்துள்ள சூழ்நிலையில் Informa Markets in India 14-வது Food Ingredients & Health Ingredients (Fi India & Hi) கண்காட்சியையும் 3-வது ProPak India கண்காட்சியையும் வரும் 8-10 டிசம்பர் 2020-ல் புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடத்தத் தயாராகி வருகிறது. இந்தியாவின் இரு உணவு மையங்களாக உள்ள மும்பை மற்றும் டெல்லி-NCR வட்டாரத்தில் இந்த கண்காட்சிகள் மாற்றி மாற்றி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகின்றன.
Informa Markets பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை Informa Markets உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் 365 நாட்களும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்
Informa Markets மற்றும் இந்தியாவில் எம்முடைய தொழில் பற்றி
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும். Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் எலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம். இந்தியாவில் Mumbai, New Delhi, Bangalore மற்றும் Chennai-யில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து https://www.informamarkets.com/en/regions/asia/India.html என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்
எந்த ஒரு ஊடக விசாரணைகளுக்கும் தயவுசெய்து இவர்களைத் தொடர்பு கொள்ளவும்:
Roshni Mitra -[email protected]
Mili Lalwani -[email protected]
லோகோ: https://mma.prnewswire.com/media/1310045/Fi_India_Logo.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/1310048/ProPak_India_Logo.jpg
Share this article