Food Ingredients India & Health Ingredients (Fi India & Hi) மற்றும் ProPak India தங்களுடைய விர்ச்சுவல் கண்காட்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளன
- உணவு, ஆரோக்கியம் மற்றும் பேக்கேஜிங்குக்கான இந்திய துணைக் கண்டத்தின் மிக ஒருங்கிணைந்த B2B கண்காட்சி Informa Markets in India-வினால் ஏற்பாடு செய்யப்படவிருக்கிறது
மும்பை, இந்தியா, அக்., Oct. 13, 2020 /PRNewswire/ -- Informa Markets in India இந்த ஆண்டு Food Ingredients India & Health Ingredients (Fi India & Hi) கண்காட்சியையும் ProPak India-வின் கண்காட்சியையும் மெய்நிகர் வடிவில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு B2B கண்காட்சிகளும் இணைந்து, இத்துறையைச் சார்ந்த நிறுவனங்களுக்கும் இதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் உணவு உட்பொருட்கள், பிராசஸிங் தொழில்நுட்பம் மற்றும் பேக்கேஜிங் சம்பந்தமான தயாரிப்புகளையும் தீர்வுகளையும் காண சரியான வாய்ப்பை இந்தக் கண்காட்சிகள் அளிக்கும் விதத்தில் சிறப்பாக அமைந்துள்ளன. Fi India & Hi-யானது அதிக தரமான உட்பொருட்களை வாங்கும் வாய்ப்புகளை துறைக்கு அளிக்கும் அதே நேரம், ProPak India கண்காட்சியானது மருந்துகள், அழகூட்டும் பொருட்கள், அப்ளையன்ஸ்கள், தொழில்துறை சிஸ்டம்கள் மற்றும் எந்திரங்கள் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் தயாரிப்புகள் சார்ந்த பேக்கேஜிங் தீர்வுகளை அளிக்கிறது.
செப்டம்பர் & அக்டோபர் 2020-ல் Informa Markets in India-னால் நடத்தப்படும் தொடர்ச்சியான டிஜிட்டல் கண்காட்சிகள் மற்றும் இ-மாநாடுகள் கொண்ட 'விர்ச்சுவல் B2B கொண்டாட்டத்தின்' ஒரு அங்கமாக இந்த டிஜிட்டல் நிகழ்வுகள் இருக்கும். உரிய சமூகங்களும் தொழில்களும் பொதுமுடக்கத்தின் கட்டுப்பாடுகளை வெற்றிகொள்ளவும், தொழில் இலக்குகளை எட்டவும் பொருளாதாரம் தன்னுடைய பாதையில் திரும்பி வரத் தயாராகும் வேளையில் ஒரு உந்துதலைத் தரவும் இந்த விர்ச்சுவல் B2B கொண்டாட்ட முயற்சி உதவும்.
Association of Food Scientists & Technologists (INDIA) (AFST - Mumbai Chapter), Indian Flexible Packaging & Folding Carton Manufacturers Association (IFCA), Authentication Solution Providers' Association (ASPA), All India Food Processors' Association (AIFPA), SIES School of Packaging, Indian Institute of Food Processing Technology (IIFPT), Suman Consultants, Health Foods மற்றும் Dietary Supplements Association (HADSA) ஆகியோரால் ஆதரிக்கப்படும் Fi India & Hi மற்றும் ProPak India விர்ச்சுவல் கண்காட்சிகள் உணவு, ஆரோக்கியம் மற்றும் பேக்கேஜிங் சம்பந்தமான புகழ்பெற்ற பிராண்டுகள், ஆலோசகர்கள், தொழில் நிபுணர்கள் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகளை ஒருங்கிணைக்கும். இந்த விர்ச்சுவல் தொடக்க நிகழ்ச்சியில் FSSAI-யின் தலைவரான திருமதி. Rita Teotia; Informa Markets in India-வின் மேனேஜிங் டிரெக்டரான திரு. Yogesh Mudras, மற்றும் Informa Markets in India-ன் குரூப் டிரெக்டர் - இன்கிரேடியன்ட்ஸ் போர்ட்ஃபோலியோ-வான திரு. Rahul Deshpande ஆகியோர் கலந்துகொள்வார்கள்.
Fi India & Hi மற்றும் ProPak India விர்ச்சுவல் எக்ஸ்போ ஆகியவற்றைப்பற்றி அறிவித்து Informa Markets in India-வின் Managing Director-ஆன திரு. Yogesh Mudras பேசும்போது, "COVID-19 பெருந்தொற்று எல்லாச் சமூகங்களையும் பெருமளவு பாதித்திருக்கிறது. உலகம் முழுவதிலும் உள்ள தொழில்களும் பணியிடங்களும் பெருந்தொற்றிலிருந்து மீண்டு வரும் பயணத்தின் விளிம்பில் உள்ளன. இந்தப் பெருந்தொற்று காரணமாக நுகர்வோரின் உணவு விருப்பம் பெருமளவிலான மாற்றங்களைச் சந்தித்துள்ளது. உண்ணும் முறைகள், உணவு எடுத்துக்கொள்ளும் ஒட்டுமொத்த ஆர்வம், சுகாதாரம், தனிநபர் பாதுகாப்பு மற்றும் சமூக இடைவெளி விதிகள் போன்றவை பற்றிய புதிய கவலைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உணவு உட்பொருட்கள் துறையைப் பாதித்துள்ளன. இந்த மாற்றங்கள் காரணமாக, சுகாதாரமான உணவு, ஊட்டச்சத்துமிக்க உணவு மற்றும் நோயெதிப்பாற்றலை அதிகரிக்கும் உணவுகளுக்கு வரும் ஆண்டுகளில் அதிக வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் விவசாயத்துக்கு உகந்த சூழல் இருந்தாலும், புத்தாக்கம், தொழில்நுட்பம், தரப்படுத்தல் மற்றும் உகந்த சூழல் அமைப்பு ஆகியவை காலத்தின் தேவையாக உள்ளது. நீண்ட காலத்தில், இந்திய அரசின் Atmanirbharta திட்டத்தினால் பல வாய்ப்புகள் உருவாகும். இது ஒரு உகந்த சூழலை உருவாக்கி, உட்கட்டமைப்பு, கொள்கைகள் மற்றும் பங்கு போன்றவற்றைப் பொருத்தவரை அதிகமான வாய்ப்பு வளங்களை உருவாக்கும். உணவுப் பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் தொழில்நுட்பம் மற்றும் உணவு உட்பொருட்கள் போன்றவற்றை சர்வதேச பார்வைக்கு வழங்குவதும், உணவுப் பதப்படுத்துதல் துறைக்கான மூலப்பொருள் அடித்தளத்திற்கு உந்துசக்தியாக அமைவதுமே இந்த ஆண்டு நடைபெறும் மெய்நிகர் Fi India & Hi கண்காட்சியின் நோக்கம்" என்றார்.
"பேக்கேஜிங் துறையைப் பொருத்தவரை, குறிப்பாக உணவுத் துறையில், பெருந்தொற்றுக்கு மத்தியில் சுத்தம் மற்றும் நீடித்ததன்மைக்கு அதிக கவனம் கொடுக்கப்படுகிறது. Fi India and Hi-யுடன் ஒரே இடத்தில் 2 நாட்கள் நடைபெறும் இந்த ProPak India Virtual Expo ஒரு பொருத்தமான நேரத்தில் நடைபெறுகிறது. உலகம் முழுவதும் நடப்புச் சூழலில் பேக்கேஜிங் தயாரிப்பாளர்கள் சப்ளை செயின் முறிந்திருப்பதை அனுபவிக்கிறார்கள், இதனால் உலகின் பல பகுதிகளில் உற்பத்தி குறைந்திருக்கிறது. இந்த கண்காட்சி பல்வேறு நெட்வொர்க்கிங் நடவடிக்கைகள் வழியாக தொடர்ந்து ஈடுபடுவதை உறுதி செய்யும், மாநாடுகள் வழியாக உணவு உட்பொருட்கள், பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் துறையில் தொடர்ந்து வரும் சவால்களைப் பற்றியும் தீர்வுகளைப் பற்றியும் விவாதிக்கும்" என்றார்.
Fi India and Hi
Fi India and Hi, என்ற இரண்டு நாட்கள் நடைபெறும் மெய்நிகர் கண்காட்சியில் Ajanta Chemical Industries, Ajanta Food Products Company, Azelis (India) Private Ltd, Brenntag Ingredients (India) Pvt. Ltd, Cargill India Pvt. Ltd., Gujarat Enterprise, Hexagon Nutrition Pvt. Ltd, Mintel (Consulting) India Pvt. Ltd, Roquette India Pvt. Ltd மற்றும் Universal Oleoresins போன்ற மிகச் சிறந்த பிராண்டுகள் கலந்துகொள்கின்றன. கண்காட்சியில் இடம் பெறும் தயாரிப்புகளில் உணவு மற்றும் சுகாதார உட்பொருட்கள், ஸ்பைஸ் ஆயில்கள், இயற்கை நிறமிகள், தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் சிறப்பு உணவுகள், ஊட்டச்சத்து உட்பொருட்கள் முதலானவை அடங்கும்
தொடர்ச்சியாக மேம்பட்டுவரும் உணவுத் தொழில் நேர்மறையான முறையில் உணவு உட்பொருட்கள் துறையைப் பாதிக்கிறது. செயல்நிலை உணவு உட்பொருட்களின் சந்தையில் வளர்ந்து வரும் புத்தாக்கங்கள் மற்றும் மேடம்பாடுகளும் சந்தையில் சேர்ந்து வருகிறது. Fi India and Hi 2 நாள் மாநாட்டையும் கண்காட்சியுடன் சேர்த்து நடத்துகிறது. இதில், பிரபலமான சர்வதேச பேச்சாளர்கள் கலந்துகொள்கிறார்கள். முன்னணி பிராண்டுகள் தங்களுடைய தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துவதோடு கருத்துப்பட்டறைகளையும் நடத்துகின்றன. மாநாட்டில் பேசப்படவிருக்கும் சில தலைப்புகள்: 'எ ஹெல்தி ஹார்ட்டி பிரேக்ஃபாஸ்ட்: இன்னோவேஷன் த்ரூ ஃபார்முலேஷன்'; 'தி பிளான்ட்-பேஸ்டு ரெவலூஷன் அன்டு தி ஆப்பசூனிட்டி ஃபார் இன்டியா'; 'இம்பாக்ட் ஆஃப் கன்சூமர் பிஹேவியர் ஆன் நியூட்ராசியூட்டிக்கல் இன்டஸ்ட்ரி - அமிட்ஸ்ட் அன்டு போஸ்ட் பேண்டமிக்'; 'கரண்ட் டிரெண்ட்ஸ் & ஃபியூச்சர் பிராஸ்பெக்டிவ் இன் பிளாண்ட் பேஸ்டு சப்ளிமெண்ட்ஸ் & எக்ஸ்ட்ராக்ட்ஸ்'; 'ஹெல்த் அன்டு வெல்னஸ் இன் எ போஸ்ட்-COVID-19 வேர்ல்டு'; 'பிளாக்செயின் இன் ஃபுட் இன்டஸ்ட்ரி'; 'நியூ இன்கிரேடியன்ட்ஸ் அன்டு தெயர் அப்ளிக்கேஷன் இன் ஃபுட் பிராடக்ட்ஸ் குரேட்டட் பை AFSTI'; 'ஸ்டார்ட் அப்ஸ் இன் இன்கிரேடியன்ட்ஸ்', 'நியூட்ரவா சிட்ரஸ் ஃபைபர் - எ கிளீன் லேபிள் சொலூஷன்'; 'பூன் ஆஃப் பிளாண்ட் பேஸ்டு புரோட்டீன்ஸ், சுகர் ஆல்டர்நேட்டிவ்ஸ் & ஹை குவாலிட்டி கார்ப்ஸ்'; 'பிரைட், பெட்டர் & நியூ லுக் டு யுவர் எடிபுள் பிராடக்ட்ஸ்'.
இந்திய அரசின் Medicinal Plant Board-ன் சிஇஓ-வான டாக்டர் J. L. N. Shastri; Amway India-வின் VP - Technical & Regulatory-யான திரு. Vinay Kumar; Brenntag-ன் கன்ட்ரி மேனேஜர் ஏசியா-வான திரு. Barney LIU; Abbott Nutrition-ன் மூத்த இயக்குநரான டாக்டர். Vaibhav Kulkarni; Dabur India Ltd-ன் மெடிகல் அஃபையர்ஸ் அன்டு கிளினிக்கல் ரிசர்ச்சின் தலைவரான டாக்டர். Arun Gupta போன்றவர்கள் இந்த நிகழ்ச்சியில் பேசும் பேச்சாளர்கள் ஆவர்.
ProPak India
ProPak Virtual Expo-யில் V-Shapes, Koch Pac-System / Uhlmann India Pvt Ltd., Mespack India மற்றும் Emerge Glass போன்ற நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. இதில், ஃபீடிங் முதல் உணவு, மருந்து, தனிநபர் பராமரிப்பு, அழகூட்டும் பொருட்கள், தொழில்துறை மற்றும் நுகர்வோர் பண்டங்கள் தொழில்வரை ஒரு தயாரிப்பின் ஒருங்கிணைந்த வழிமுறைகளையும் உள்ளடக்கிய பொருட்கள் இடம்பெறும்.
ProPak-லும் இரண்டு நாள் மாநாடு நடைபெறும். Fi India and Hi மாநாடு நடக்கும் அதே சமயத்தில் இந்த மாநாடும் நடைபெறும். 'டிஹைட்ரேஷன் டெக்னாலஜி & குளோபல் ஆப்பசூனிட்டீஸ்'; 'கொல்லாபரேஷன் & டெக்னாலஜி டிரான்ஸ்ஃபர் ஆப்பசூனிட்டீஸ் அன்டர் Atmanirbhar Bharat'; 'சேலஞ்சஸ் அன்டு ஆப்பசூனிட்டீஸ் ஃபிரம் கொரோனா பாண்டமிக்'; 'ரெகுலேஷன்ஸ் அன்டு சஸ்டெய்னபுள் பேக்கேஜிங்' போன்ற தலைப்புகளில் உரைகள் இடம்பெறும்.
மாநாட்டில் உரையாற்றும் சில பேச்சாளர்களில் Suman Food Consultants-ன் எம்டி-யான திரு. Sagar Kurade; Consulate General of Italy (South East India)-யின் Hon Consul-ம், Indo-Italian Chamber of Commerce and Industry (Southern Region-ன் சேர்மேனுமான டாக்டர். Sauro Mezzetti; VDMA India-வின் மேனேஜிங் டிரெக்டரான திரு. Rajesh Nath; U.S. Department of Agriculture-ன் Agricultural Attaché-யான திரு Mark A. Rosmann; FSSAI-யின் உதவி இயக்குநரான டாக்டர். Irmia Katamgari; Siegwerk India-வின் துணைத் தலைவரான திரு. Vinay Bhardwaj மற்றும் Sai Packaging-ன் சி.இ.ஓ-வான திரு. Arvind Sekhar ஆகியோர் அடங்குவார்கள்.
பதிவு செய்வதற்கு, தயவுசெய்து கீழ்க்காணும் இணைப்பில் கிளிக் செய்யவும் - https://bit.ly/36OqqP9
Informa Markets பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை Informa Markets உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் 365 நாட்களும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்
Informa Markets மற்றும் இந்தியாவில் எம்முடைய தொழில் பற்றி
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும். Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் எலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம். இந்தியாவில் Mumbai, New Delhi, Bangalore மற்றும் Chennai-யில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து https://www.informamarkets.com/en/regions/asia/India.html என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்
எந்த ஒரு ஊடக விசாரணைகளுக்கும் தயவுசெய்து இவர்களைத் தொடர்பு கொள்ளவும்:
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
லோகோ: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/1310045/Fi_India_Logo.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/1310048/ProPak_India_Logo.jpg
Share this article