Facilities Show India வரும் நவம்பர் 2020-ல் தன்னுடைய முதல் கண்காட்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளது
- வசதி மேலாண்மை தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு Informa Markets in India-வினால் நடத்தப்படும் இந்தியாவின் முதன்மையான கண்காட்சி மற்றும் மாநாடு
மும்பை, Feb. 6, 2020 /PRNewswire/ -- ஒரு முன்னணி B2B நிகழ்ச்சி ஏற்பாட்டளரான Informa Markets in India (முன்னர் UBM India), வரும் நவம்பர் 2020-ல் வசதி மேலாண்மை துறைக்காக இங்கிலாந்தில் உதயமான "Facilities Show"-வை இந்தியாவிற்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. 'Facilities Show India'-ன் முதல் கண்காட்சியானது, வசதிகள் மற்றும் களச் சேவை மேலாண்மை தொழில்புரிபவர்களுக்கான உலகளாவிய நடுவமாகச் செயல்படும். அதற்கு வரும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இதில் உள்ள புதுமைகள், தீர்வுகள் மற்றும் யோசனைகளைப் பற்றி அறிந்துகொள்வதோடு, இத்துறை சார்ந்த முன்னணியாளர்களுடன் தொடர்பு கொள்ளவும் உதவும்.
வசதி மேலாண்மை (FM) என்பது ஒரு கட்டட வசதியின் ஒரு பகுதியையோ அல்லது முழுவதையுமோ தொழில்முறை முறையில் பராமரிப்பதற்காக வழங்கப்படும் மூன்றாம் தரப்பினரின் சேவையைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. FM இரு வகையாக வகைப்படுத்தப்படுகிறது - அவை ஹார்டு ஃபசிலிட்டீஸ் மேனேஜ்மெண்ட் சர்விசஸ் மற்றும் சாஃப்ட் ஃபசிலிட்டீஸ் மேனேஜ்மெண்ட் சர்விசஸ். ஹார்டு சர்விசஸ் என்பது கட்டடத்தின் பகுதிகளைப் பராமரிப்பதைக் குறிக்கிறது. இதை அகற்ற இயலாது. ஹீட்டிங், லைட்டிங், பிளம்பிங், தீ பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கட்டட பராமரிப்பு போன்ற தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிப்படுத்துகிறார்கள். இவை சட்டப்படி தேவைப்படுபவை. அடுத்த பக்கம், சாஃப்ட் சர்விசஸ் என்பது வேலை செய்யும் இடத்தை மகிழ்ச்சிகரமானதாக, அல்லது பாதுகாப்பானதாக ஆக்கும் சேவைகள். இவற்றுள் சில கட்டாயமானவையல்ல. இவற்றைச் சேர்க்கலாம் அல்லது அவசியமானால் அகற்றவும் செய்யலாம். கழிவு மேலாண்மை, உணவளித்தல், ஜன்னல் சுத்தம், பாதுகாப்பு மற்றும் அஞ்சல் மேலாண்மை.
இரண்டு நாட்கள் நடைபெறும் Facilities Show India பல்வேறு வசதி மேலாண்மை நிறுவனங்களிலிருந்து உள்ளூர் மற்றும் உலகளாவிய தயாரிப்பாளர்கள், சப்ளையர்கள், ஆலோசகர்கள், சேவையாளர்கள் மற்றும் முடிவெடுப்பவர்கள் சந்தைப்படுத்த அல்லது சமீபத்திய தயாரிப்புகளையும் சேவைகளையும் கொள்முதல் செய்யவும் சங்கமிக்கும் இடமாக இருக்கும். இது, வேலை வளர்ச்சி, நெட்வொர்க்கிங், அலுவலக வடிவமைப்பு முதல் ஸ்மார்ட் எனர்ஜி மற்றும் லைட்டிங்வரை துறைகளில் விலை குறைந்த தீர்வுகளை அளிப்பது போன்றவற்றுக்கு உதவுகிறது. பசுமை ஆற்றல் மற்றும் ஸ்மார்ட் பில்டிங்ஸ் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் வாய்ப்புகளை வாரி வழங்குகின்றன. தொடர்ந்து மாறிவரும் வளர்ச்சிக்கு ஏற்ப தொழில்துறை நிபுணர்கள் கற்றுக்கொள்ளவும் சிந்திக்கவும் வாய்ப்பளிக்கும். தெலுங்கானா எலக்ட்ரானிக் மேனுஃபேக்சரிங் இன்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் (Telangana Electronic Manufacturing Industries Association) இந்தக் கண்காட்சிக்கு ஆதரவளிக்கிறது.
Facilities Show India-வின் முதல் கண்காட்சி பற்றி அறிவித்து Informa Markets in India-வின் Managing Director-ஆன Mr. Yogesh Mudras பேசும்போது, "உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் தங்களுடைய சொத்துக்களில் பெரும்பாலானவற்றைப் பயன்படுத்த தொடர்ந்து முயற்சிக்கின்றன. அக மற்றும் புற உறவுகளை மேம்படுத்தவும், அதிக உற்பத்திதரும் வகையிலும் கவர்ச்சிகரமாகவும் இருக்கும் வகையில் வேலை செய்யும் இடத்தை தொடர்ந்து மாற்றியமைக்க விரும்புகின்றன. அடிப்படையில், வசதி மேலாண்மை துறை என்பது ROI-களை அதிகரிப்பதுதான். நடப்புச் சூழ்நிலையில், நீடித்த வளர்ச்சிக்காகத் தேவைப்படும் கருவிகளில் முதலீடு செய்ய நிறுவனங்கள் கவலைப்படுவதில்லை. தொடர்ந்து இந்த விஷயத்தில் முதலீடு செய்பவர்கள்தான் நிலைத்திருக்கிறார்கள். இந்திய வசதி மேலாண்மை சந்தை நாட்டின் GDP-யில் 3.2% அளவுக்கு பங்களிக்கிறது. இது தற்போதைய நிலையில் 5 லட்சம் கோடியாகும். இது ஒவ்வொரு ஆண்டும் 20-25% அளவுக்கு வளர்ச்சி விகிதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விகித விளர்ச்சியினால், வசதி மேலாண்மையை முன்னிருத்துவது அர்த்தம் பெறுகிறது. இந்திய துணைக்கண்டத்திற்கு Facilities Show-வின் முதல் கண்காட்சியைக் கொண்டுவருவது என்பது Informa Markets in India-வின் வசதி மேலாண்மையின் முக்கியத்துவத்தின்மீதும் தொழில் நடவடிக்கையை ஸ்டிரீம்லைன் செய்வதன்மீதும் கவனம் செலுத்தும் பல முயற்சிகளில் இதுவும் ஒன்று. தேவைப்படும் இடைவெளியை சேர்ப்பதற்கு இந்த நிகழ்ச்சி உதவும் என்றும், இன்னும் அதிகம் பயன்படுத்தப்படாத வசதி மேலாண்மையின் பல முகங்களை அளிக்கும் என்றும் நாம் உறுதியாக இருக்கிறோம்.
இந்தக் கண்காட்சியின்போது இரண்டு நாட்கள் மாநாடும் நடத்தப்படும். வசதி மேலாளர்கள், நிருவாகத்தில் உள்ளவர்கள் மற்றும் செயல்பாட்டு மேலாளர்கள், கொள்முதல் மேலாளர்கள், வசதி தொழில்நுட்ப தலைவர்கள் சந்திக்கும் செலவு மேலாண்மை, ஒருங்கிணைந்த வசதி மேலாண்மை, ஆட்டோமேஷன், பாதுகாப்பு மற்றும் புதிய தொழில்நுட்பம் / மென்பொருள் சவால்கள்மீது இந்த மாநாடு கவனம் செலுத்தும். இரு நாட்கள் நடைபெறும் மாநாட்டின்போது பேசுப்படும் தலைப்புகளில் சில: "வாட்ஸ் மேக்கிங் இன்டியா எ ஹாட் ஸ்பாட் ஃபார் கோ-ஒர்க்கிங் குரோத்? ('What's making India a hot-spot for co-working growth?'); "அப்ஸ்கில்லிங் தி ஃபசிலிட்டீஸ் மேனேஜ்மெண்ட் ஸ்டாஃப் - நீட் ஆஃப் தி ஹவர்" ('Upskilling the facilities management staff - Need of the hour'); "தி ஃபியூச்சர் ஆஃப் டிஜிட்டல் - ஆர் வி ரெடி டு எம்ப்ரேஸ் தி சேஞ்ச்" ('The Future of Facilities is Digital - Are we ready to embrace the change?'); ஸ்மார்ட் பில்டிங் டெக்னாலஜி ஷேப்பிங் தி ஃபியூச்சர் ஆஃப் ரியல் எஸ்டேட்" ('Smart building technology shaping the future of Real Estate'); "ரீஅலைனிங் ஒர்க்பிளேய்ஸ் ஸ்டிராடஜி ஃபார் ஒர்க்பிளேய்ஸ் வெல்பீயிங்" ('Realigning workplace strategy for workplace wellbeing')
தற்போது, இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட FM சேவைகள் துறையின் மதிப்பு INR 50000 கோடி.. இது மொத்த உலகச் சந்தையின் 10% ஆகும். இது 2022-க்குள் INR 1.25 லட்சம் கோடியாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், FM சேவை நிறுவனங்கள் இந்தச் சந்தையில் 25% மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள். எஞ்சிய 75% இன்னும் பயன்படுத்தப்படாமலேயே உள்ளது. இது உலக அளவில் 49% உள்ளதற்கு நேர்மாறாக உள்ளது.
Facilities Show இங்கிலாந்தில் லண்டனில் இந்த ஆண்டு தன்னுடைய 18-வது கண்காட்சியை நடத்துகிறது. உலகின் தனிப்பயனாக்கப்பட்ட மிகப்பெரிய மூன்று நாட்கள் நடைபெறும் வசதி மேலாண்மை நிகழ்ச்சி என்ற முறையில், Facilities Show, London, UK உலகெங்குமிருந்து 12,000 FM தொழில்முறையாளர்களை சமீபத்திய தொழில்நுட்பத் தீர்வுகளை அனுபவிப்பதற்கும், தொழில்துறை தலைவர்ளின் உரையைக் கேட்கவும் வரவேற்கிறது.
Informa Markets பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை Informa Markets உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் 365 நாட்களும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
Informa Markets மற்றும் இந்தியாவில் எம்முடைய தொழில் பற்றி
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும். Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் எலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம். இந்தியாவில் மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informa.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
எந்த ஒரு ஊடக விசாரணைகளுக்கும் தயவுசெய்து இவர்களைத் தொடர்பு கொள்ளவும்:
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
+91-9833279461
Informa Markets in India
புகைப்படம்: https://mma.prnewswire.com/media/1085811/Facilities_Show_India.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
Share this article