D3code ஹேக்கத்தான் போட்டியின் வெற்றியாளர்களை UST அறிவித்தது; அதன் வருடாந்திர உலகளாவிய தொழில்நுட்ப D3 மாநாட்டை இந்தியாவின் திருவனந்தபுரத்தில், தனது ஆதரவில் நடத்த உள்ளது
~கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான இந்தியாவின் மிகப்பிரமாண்டமான ஹேக்கத்தான் போட்டியில், புதுமையான கூட்டு மெட்டாவெர்ஸ் தீர்வுகளைக் கண்டறிவது முன்னிலைப்படுத்தப்பட்டது~
~போட்டியில் வெற்றிபெற்று சாதனை புரிந்து முதல் 5 இடத்தைப் பெற்ற அணிகளுக்கு முதலாவது பரிசாக ரூபாய் 7 இலட்சம், இரண்டாவது பரிசாக ரூபாய் 5 இலட்சம் மூன்றாவது பரிசாக ரூபாய் 3 இலட்சம் மற்றும் இதர இரண்டு அணிகளுக்கும் தலா ரூபாய் 2 இலட்சம் பரிசாக வழங்கப்பட்டதைத் தவிரக் கூடுதலாக அந்த அணிகளைச் சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினருக்கும் UST நிறுவனத்தில் பணியில் சேர்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது. ~
திருவனந்தபுரம், இந்தியா, Dec. 16, 2022 /PRNewswire/ -- இந்தியா முழுவதுமுள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தனது D3code' -இன் இரண்டாவது பதிப்பின் ஹேக்கத்தான் போட்டி வெற்றியாளர்களை டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் தீர்வுகளுக்கான முன்னணி நிறுவனமான UST இன்று அறிவித்தது. மெட்டாவெர்ஸ் ஊடே ஆன்லைன் அனுபவங்களை பன்முகப்படுத்தவும், உள்ளூர் மயமாக்கவும், நிர்வகிக்கவும் மற்றும் சூழ்நிலை சார்ந்த மாற்றங்களை உருவாக்கவும் உதவும் வகையிலான தொழில்நுட்பங்களை ஆராய்ந்தறிவதற்கு பங்கேற்பாளர்கள் பணிக்கப்பட்டனர். இந்த ஆண்டுக்கான போட்டியில், புதிய தலைமுறையைச் சேர்ந்த டிஜிட்டல் பொறியாளர்கள், தங்களுக்கான நிரலாக்க மற்றும் பொறியியல் திறன்களைக் கற்றுத்தெளிந்து கொண்டு தங்களை மேம்படுத்திக்கொள்ள திருவனந்தபுரத்தில் ஒன்றுகூடினர்.
திருவனந்தபுரத்திலுள்ள 'O by Tamara' -இல் டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெறவிருக்கும், UST நிறுவனத்தின் வருடாந்திர தொழில்நுட்ப மாநாடு – D3: கனவு காண், மேம்படுத்து மற்றும் தகர்த்தெறி (Dream, Develop, and Disrupt) என்ற இலக்குகளை நோக்கி செல்கையில் அதனிடையே நடந்த பல்வேறு நிகழ்வுகளில் D3code ஒன்றாக அமைந்தது.
இந்த 5வது வருடாந்திர தொழில்நுட்ப மாநாடு டிசம்பர் 15 அன்று நாள் முழுவதுமான மாநாட்டு நிகழ்ச்சிகளோடு நிறைவு பெறுவதற்கு முன்பாக, 24 மணி நேர ஹேக்கத்தான் போட்டி, தொழில்நுட்ப கண்காட்சி மற்றும் விரிவுரைகள் உட்பட அட்டவணைப்படுத்தப்பட்ட ஒரு வார கால நிகழ்ச்சிகள் அனைத்தும் நடந்தேறியது. UST நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Krishna Sudheendra அவர்களின் உரை இந்த மாநாட்டின் ஒரு முக்கிய அங்கமாக விளங்கிய அதே சமயம், விருந்தினர்களான புகழ்பெற்ற தலைசிறந்த டிஜிட்டல் வியூக வல்லுநர்களான Intrepid Ventures நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை மேம்பாட்டு அதிகாரியான Zach Piester, Totality Corp நிறுவனர், Anshul Rustaggi ஆகியோரின் உரைகளும், Google India -இன் தொழில்முறை சேவைகளின் இயக்குநர் Shalu Jhunjhunwala பங்குபெறும் குழுக் கலந்துரையாடலும் முக்கிய அம்சங்களாக விளங்கும். அத்துடன் கூடுதலாக இந்த நிகழ்வுகளின் போது, தலைமை தொழில்நுட்ப அதிகாரி Niranjan Ramsunder, தலைமை இன்னோவேஷன் ஆர்க்கிட்டெக்ட் Kuruvilla Mathew, தலைமை வடிவமைப்பாளர் David Thorpe, தலைமை கிளவுட் அட்வைசரி, Rick Clark மற்றும் குளோபல் ஹெட் ஆஃப் ப்ளாக்செயின் Daniel Field, தலைமை தொழில்நுட்ப சேவை அதிகாரி Varghese Cherian போன்ற UST நிறுவனத்தின் முக்கிய தொழில்நுட்பத் தலைவர்கள் பல்வேறு பிரிவுகளுக்குத் தலைமை தாங்கி வழிநடத்துவார்கள்.
இந்த ஆண்டுக்கான மூன்று சுற்றுக்களைக் கொண்ட D3code போட்டிகளுக்கு இந்தியா முழுவதும் 146 அணிகளிடமிருந்து 840 -க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. வாடிக்கையாளர்கள் மற்றும் நுகர்வோருக்கான அர்த்தமுள்ள அனுபவங்களை எவ்வாறு நிறுவனங்களால் யுக்தி பூர்வமான வழிகளில் உருவாக்க முடியும் என்பது குறித்து UST நிறுவனத்தின் உள்ளக கருப்பொருள் நிபுணர்கள் மற்றும் முன்னணி புத்தாக்க நிபுணர்களை நேரில் சந்தித்து இதன் பங்கேற்பாளர்கள் கற்றுக்கொண்டனர். ஒரு புரோகிராமிங் சுற்றில், பங்குபெற்ற பிறகு அடுத்த கட்ட வீடியோ நேர்காணலுக்கு செல்ல அதிலிருந்து பத்து அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றிலிருந்து இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து அணிகள் டிசம்பர் 11 மற்றும் 12, 2022 அன்று UST Thiruvananthapuram campus -இல் நடைபெற்ற 24 மணிநேர ஆன்சைட் ஹேக்கத்தான் போட்டியில் பங்கு பெற்றன.
Indian Institute of Technology, Roorkee -இன் Orsted Corp. முதலிடத்தை வென்றது Sree Chitra Thirunal College of Engineering, Thiruvananthapuram -இன் Meta4 அணி மற்றும் College of Engineering, Thiruvananthapuram (CET) -இன் GAAD அணிகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தன. National Institute of Technology - Silchar -இன் BlackMirror2.1 அணி மற்றும் Indian Institute of Technology, Roorkee -இன் LaxmiChit Fund அணிகள் கௌரவ சிறப்புத் தகுதியைப் பெற்றன.
அணி |
பங்கேற்பாளர்கள் |
கல்லூரி |
நிலை |
LaxmiChit Fund |
Mahak Gupta (TL) |
Indian Institute of Technology, Roorkee |
கௌரவ சிறப்புத் தகுதி |
Saurabh Sangam |
|||
Vansh Uppal |
|||
Kritika |
|||
BlackMirror2.1 |
Nihar Jyoti Basisth (TL) |
National Institute of Technology, Silchar |
கௌரவ சிறப்புத் தகுதி |
Biley Roy |
|||
Tushar Sachan |
|||
Shikhar Katiyar |
|||
GAAD |
Allen Y (TL) |
College of Engineering, Thiruvananthapuram |
3 ஆம் பரிசு |
GiftyTreesaIju |
|||
Divina Josy |
|||
Alvin Antony . K |
|||
Meta4 |
Anirudh Dayanandan (TL) |
Sree Chitra Thirunal College of Engineering, Thiruvananthapuram |
2 ஆம் பரிசு |
M Adithya Sajith |
|||
Jovin Joy Arakkal |
|||
Manas Manoj |
|||
Orsted Corp. |
Aditya Bisht (TL) |
Indian Institute of Technology - Roorkee |
1 ஆவது பரிசு |
Anshul Singh |
|||
Mayank Mittal |
|||
ArchitGosain |
"இயலாற்றல் மிக்க சாத்தியக்கூறுள்ள பணியாளர்களைச் சந்திக்கவும், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த தங்கள் வெற்றிக்காக பாடுபடவும் மாற்றம் மிகுந்த வகையில் தொழில் வாழ்க்கை வளர்ச்சியில் வெற்றிகாணவும் மக்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு தன்னிகரில்லா பணியிடமாக UST நிறுவனத்தைக் காட்சிப்படுத்தவும் D3code எங்களுக்கு உதவிகரமாக அமைந்தது. ஹேக்கத்தான் போட்டி வெற்றியாளர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள். வணிக சவால்களுக்குத் தீர்வு காணுதல், புத்தாக்கங்களை உருவாக்குதல் மற்றும் மெட்டாவெர்ஸில் வளர்ச்சி காணுதல் ஆகியவற்றில் இந்திய வணிகங்களுக்கு உதவும் வகையிலான புத்தாக்க சிந்தனைகள் மற்றும் இந்த செயலாக்கங்களின் இயலாற்றல் அளவுகளைக் காண்பது மிகவும் உற்சாகமளிக்கிறது" என்று UST நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி Manu Gopinath கூறினார்.
முதல் இடத்தை வென்ற அணிக்கு ரூபாய் ஏழு லட்சம், இரண்டாம் இடம் வென்ற அணிக்கு ரூபாய் ஐந்து லட்சம், மூன்றாவது அணிக்கு ரூபாய் 3 லட்சம் பரிசுகளும், மற்ற இரண்டு அணிகளுக்கும் கௌரவ சிறப்புத் தகுதி அளிக்கப்பட்டு தலா ரூபாய் இரண்டு லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. அத்துடன் கூடுதலாக, போட்டியில் வெற்றிபெற்று முதல் 5 இடத்தைப் பெற்ற அணிகளை சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினருக்கும் UST India நிறுவனத்தில் பணியில் சேர்ந்து கொள்ள நிபந்தனைக்குட்பட்ட வாய்ப்புக்கள் வழங்கப்பட்டது.
UST பற்றி
UST, தொடர்ந்த நிலைமாற்றங்கள் மூலமாக உண்மையான தாக்கத்தை விளைவிக்கும் பொருட்டு 22 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் தலை சிறந்த நிறுவனங்களுடன் மிக நெருக்கமாக ஒன்றிணைந்து பணியாற்றியுள்ளது. தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்டு, மக்களால் மன எழுச்சிபெற்று, எங்கள் நோக்கங்களால் வழிநடத்தப்பட்டு இயங்கிவரும் நாங்கள், வடிவமைப்பு முதல் இயக்கச் செயல்பாடு வரை எங்கள் வாடிக்கையாளர்களுடன் கூட்டிணைந்து பணியாற்றுகிறோம். எங்களின் சுறுசுறுப்பான அதி வேகமான அணுகுமுறை வழியாக, அவர்கள் எதிர்கொள்ளும் அடிப்படை சவால்களை அடையாளம் கண்டு, அவர்களின் வாழ்க்கையை ஒளிரச்செய்யும் வகையில் ஊடுருவும் புதுமையான தீர்வுகளை நுட்பமாக வடிவமைத்து வழங்குகிறோம். ஒரு ஆழமான தள நிபுணத்துவம் மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்துக்கான தத்துவத்துடனும் செயல்படும் நாங்கள், —அளவிடக்கூடிய மதிப்பு மற்றும் நீண்ட நிலைத்த மாற்றங்களுக்கான தீர்வுகளை அனைத்து தொழில்கள் மற்றும் உலகம் முழுவதும் வழங்கி - எங்கள் வாடிக்கையாளர்களின் நிறுவனங்களில் புத்தாக்கங்களையும் மற்றும் விரைந்த இயக்க செயல்பாடுகளையும் நிலைநாட்டுகிறோம் 30+ நாடுகளில் 30,000 -க்கும் மேற்பட்ட பணியாளர்களோடு இயங்கிவரும் நாங்கள், எல்லையில்லா தாக்கத்தை விளைவித்து மேம்படுத்துகிறோம் — எங்கள் செயல்பாடுகளினூடே பில்லியன் எண்ணிக்கையிலான மக்களின் வாழ்வை தொட்டுப் பயணிக்கிறோம். எங்களின் www.UST.com இணைய தளத்திற்கு வருகை தாருங்கள்:
UST ஊடகத் தொடர்பாளர்கள்:
Tinu Cherian Abraham
+1 - (949) 415-9857
+91-7899045194
Neha Misri
+91-9284726602
Merrick Laravea
+1 (949) 416-6212
[email protected]
ஊடகத் தொடர்பாளர்கள், U.S.:
S&C PR
+1-646.941.9139
[email protected]
Makovsky
[email protected]
ஊடகத் தொடர்பாளர்கள், Australia:
Team Lewis
[email protected]
ஊடகத் தொடர்பாளர்கள், U.K.:
FTI ஆலோசகர்கள்
[email protected]
Share this article