சூப்பர் செப்டம்பர் - விர்ச்சுவல் B2B கொண்டாட்டத்தைத் தொடங்கியிருப்பதாக Informa Markets in India அறிவித்துள்ளது
- 6 முக்கிய துறைகளுக்கும், 6 பிரபல பிராண்டுகள் மற்றும் 6 வெவ்வேறு சமூகங்களுக்கும் விரிவடைந்திருக்கும் டிஜிட்டல் சலுகைகளின் கொண்டாட்டம், இவை அனைத்துமே ஒரே பவர் பூஸ்டர் மாதத்தில் நடக்கிறது
மும்பை, இந்தியா, Sept. 2, 2020 /PRNewswire/ -- 6 முக்கிய துறைகளுக்கான 6 டிஜிட்டல் கண்காட்சிகளை செப்டம்பர் 2020-ல் ஏற்பாடு செய்து சூப்பர் செப்டம்பர் - விர்ச்சுவல் B2B கொண்டாட்டத்தைத் தொடங்கியிருப்பதாக இந்தியாவின் முன்னனி B2B கண்காட்சி ஏற்பாட்டளரான Informa Markets in India அறிவித்துள்ளது. இவற்றைத் தொடர்ந்து வலுச்சேர்க்கும் வகையில் பல கருத்தரங்குகள், பயிற்சிகள், வெபினார்கள் மற்றும் விருதுவழங்கும் நிகழ்ச்சிகளும் அதே செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கின்றன.
இந்த விர்ச்சுவல் வர்த்தகக் கண்காட்சிகள், அவை நடைபெறும் நாட்கள் மற்றும் துறை பற்றிய விவரங்களாவன:
- புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இந்தியா கண்காட்சி: 2-3 செப்டம்பர் (பசுமை ஆற்றல்)
- இன்னோபேக் பார்மா கான்ஃபெக்ஸ்: 3-4 செப்டம்பர் (பேக்கேஜிங்)
- OSH இந்தியா விர்ச்சுவல் எக்ஸ்போ: 17-18 செப்டம்பர் (தொழில் பாதுகாப்பு & சுகாதாரம்)
- IFSEC இந்திய விர்ச்சுவல் எக்ஸ்போ: 17-18 செப்டம்பர் (பாதுகாப்பு & கண்காணிப்பு)
- SATTE GenX: 23 செப்டம்பர் (பயணம் & சுற்றுலா)
- பார்மாலிடிக்கா விர்ச்சுவல் எக்ஸ்போ கணெக்ட்: 30 செப்டம்பர்-2 அக்டோபர் (பார்மா).
இந்த மாதத்தில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள கருத்தரங்குகளாவன:
- ஃபியூர்ச்சர் பாக்கெட் டிரான்ஸ்போர்ட் நெட்வொர்க்: 18 செப்டம்பர்
- பார்மா சப்ளை செயின்: 17-18 செப்டம்பர்
- பயோபார்மா கான்கிளேவ்: 24-25 செப்டம்பர்
- கிளீனிங் வாலிடேஷன்: 29-30 செப்டம்பர்
உரிய சமூகங்களும் தொழில்களும் பொதுமுடக்கத்தின் கட்டுப்பாடுகளை வெற்றிகொள்ளவும், தொழில் இலக்குகளை எட்டவும் பொருளாதாரம் தன்னுடைய பாதையில் திரும்பி வரத் தயாராகும் வேளையில் ஒரு உந்துதலைத் தரவும் இந்த விர்ச்சுவல் B2B கொண்டாட்டம் உதவும்.
பாதுகாப்பு வழிகாட்டு நெறிகளுக்குக் கட்டுப்பட்டு இந்த ஆண்டின் இறுதியில் உண்மையான பிளாக்பஸ்டர் கண்காட்சிகளை Informa Markets in India நடத்தவுள்ள நிலையில் செப்டம்பரில் நடைபெறவுள்ள டிஜிட்டல் தொழில் கொண்டாட்டங்களானது பல்வேறு துறைகளும் தங்களுடைய முக்கியமான தொழில் கலந்துரையாடல்களை நடத்தவும், தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் பயிற்சிகளை நடத்தவும் உதவும். அரசு நடத்திவரும் 'டிஜிட்டல் இந்தியா' பிரச்சாரத்தின் 5-வது ஆண்டு நிறைவடையும் சமயத்தில் இந்த 'சூப்பர் செப்டம்பர்' MSME-களுக்கு முன்னுரிமை, நீடிப்புத்திறன், அதிகாரப் பகிர்வு, சுகாதாரம் மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு போன்றவற்றின் வழியாக சுயசார்புடைய இந்தியாவைக் கட்டமைக்கும் 'Atmanirbhar Bharat Abhiyan'-ன் COVID-19 முன்முயற்சிக்கு ஆதரவளிக்கிறது.
ஏன் இந்த சூப்பர் செப்டம்பர் - விர்ச்சுவல் B2B கொண்டாட்டம்:
- உலகளாவிய GDP 7.6 % அளவுக்கு சரிவைக் காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது. (ஒப்பீட்டளவில் 2008-9 உலகளாவிய சரிவு 1.79 %).
- India INC-ல், ஜூலை - செப்டம்பர் 2020-கான ஆப்டிமிசம் இன்டெக்ஸ் வரலாறு காணாத அளவில் குறைவாக சுமார் 35 %-ஆக இருந்தது, விற்பனை அளவு, நிகர ஆதாயம், விற்பனை விலை, புதிய ஆர்டர்கள், சரக்கு இருப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு எனும் அனைத்து 6 இன்டெக்ஸ்களும் சரிந்திருந்ததாகக் காட்டியது.
- தொழில் மாதிரிகளில் ஒரு மாற்றம் இல்லாவிட்டால், இந்தியாவின் முன்னணி பிராண்டுகள் தங்களுடைய பிராண்டு மதிப்பில் 15 % சரிவை காணும் என தொழில்துறை மதிப்பிடுகிறது.
- கண்காட்சித்து துறை தன்னுடைய உண்மையான கண்காட்சிகளை நடத்த முடியாமல் போனதால் 3 லட்சம் கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள தொழிலை இழந்திருக்கிறது. இதில், மார்ச் 2020 முதல் இன்றுவரை கண்காட்சிகளை நடத்தாததினால் மட்டும் இந்திய ரூ. 1.25 லட்சம் கோடி தேசியப் பொருளாதாரத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
- 15 லட்சம் வாழ்க்கைத்தொழில் இழக்கப்பட்டிருக்கிறது.
பொருளாதாரத்தின் வினையூக்கிகளாகவும், அதன் பங்காளர்களின் பரிந்துரைகளின்படியும், கண்காடசித் துறை மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியிலும் இந்தப் புதிய வழிமுறையைப் பின்பற்றுகிறது. COVID-19 உருவாக்கியுள்ள உலகளாவிய அளவிலும் இந்தியாவிலும் ஏற்படுத்தியிருக்கும் இந்த இடைவெளியைப் போக்க Informa Markets in India தன்னுடைய தொலைநோக்குமிக்க தலைமைத்துவத்தைக் கொண்டும், தன்னுடைய மாற்றமளிக்கும் டிஜிட்டல் சேவைகளைக் கொண்டும் தொழில்துறைக்கு உதவவும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவும் முனைந்திருக்கிறது.
விர்ச்சுவல் ஸ்பேஸின் முன்னோடி: இதன் அர்த்தம் என்ன
உலகளாவிய அளவில் டிஜிட்டல் தளத்தில் தன்னுடைய தாய் நிறுவனமான Informa Plc-ன் குறிப்பிடத்தக்க முதலீடுகளைக்கொண்டு Informa Markets in India தேசிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட 25 மார்ச்-க்குப் பின்னர் தன்னுடைய டிஜிட்டல் சேவையைப் பெருக்கியிருக்கிறது. கால நெருக்கடி இருந்தாலும் ஜூன் மாதத்தில் தன்னுடைய முதலாவது விர்ச்சுவல் கண்காட்சியான IFSEC விர்ச்சுவல் எக்ஸ்போ-வை நடத்தியது. அதைத் தொடர்ந்து தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், அழகு மற்றும் அழகுசாதனங்கள், மற்றும் ஜெம் மற்றும் ஆபரணத் துறைகளுக்கான விர்ச்சுவல் எக்ஸ்போக்களையும் நடத்தியது. அதன் டிஜிட்டல் நிகழ்வுகளின் வரிசையில் பல தொடர்ச்சியான ஆன்லைன் கருத்தரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டன.
- உலகளாவிய அளவல் COVID-19 தாக்கம் தொடங்கியதிலிருந்து, Informa Markets ஏறக்குறைய 25-க்கும் மேற்பட்ட துறைகளுக்கு வெற்றிகரமாக சேவையாற்றியிருக்கிறது.
- Informa Markets வாடிக்கையாளர் ஆய்வு ஒன்று APAC நாடுகளில், வெறும் பாரம்பரியமான தளங்களுக்குப் பதிலாக 60% வாடிக்கையாளர்கள் பாரம்பரியமான தளங்களுடன் சேர்த்து டிஜிட்டல் தளங்களையும் விரும்புவதாகத் தெரிவிக்கிறது.
- பாரம்பரிய தளங்களின் மதிப்பு மேம்படுத்தப்பட்ட விகிதம்: சந்தைகளால் உணரப்பட்டபடி ஹைபிரிட் பிளாட்ஃபார்ம்ஸ் 1: 1.5.
- ஆசிய நாடுகளில், வாங்குபவர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் இடையில் நேரடி அல்லது ஆன்சைட் தொடர்பை விரும்புவதில் இந்தியா முன்னணியில் உள்ளது.
- கடந்த ஜூன் முதல், கண்காட்சியாளர்கள், தொழில்துறைத் தலைவர்கள், சங்கத் தலைவர்கள், தொழில்முனைவோர் மற்றும் நிபுணர்கள் உட்பட சுமார் 15,000 பேருக்கு Informa Markets in India தன்னுடைய விர்ச்சுவல் வர்த்தகக் கண்காட்சி மூலம் இன்றுவரை சேவையாற்றியிருக்கிறது.
கடந்த சில மாதங்களாக, இந்தத் தளத்தில் கிடைத்திருக்கும் குறிப்பிடத்தக்க பாடங்களைக்கொண்டு இந்த சூப்பர் செப்டம்பர் - விர்ச்சுவல் B2B கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தரம், பிரச்சனையைத் தீர்க்கும் திறன், தடையற்ற வாடிக்கையாளர் அனுபவம், பாதுகாப்பு, புத்தாக்கம் ஆகியவற்றின்மீது தொய்வில்லாத கவனம் செலுத்தப்படுகிறது.
சூப்பர் செப்டம்பர் விர்ச்சுவல் B2Bகொண்டாட்டத்தை அறிவித்துப் பேசிய Informa Markets in India-வின் நிர்வாக இயக்குநரான திரு. Yogesh Mudras பேசும்போது, "தனித்துவமான விர்ச்சுவல் B2B கொண்டாட்டத்தை முன்வைப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். ஒரு நிறுவனம் என்ற முறையில் எங்களுடைய முதலாவது e-expo InterOp-ஐ கடந்த 2011-ல் நடத்தினோம். இந்தத் துறையில் நம்பகத்தன்மை மற்றும் மரபுரிமையைக்கொண்டிருப்பதால் இந்த விர்ச்சுவல் B2B கொண்டாட்டமானது அதன் வீச்செல்லை, சாத்தியக்கூறு மற்றும் முயற்சியின் முத்தாய்ப்பாக செப்டம்பர் தொடக்கத்தில் பொதுமுடக்கம் 4.0-விலிருந்து தொடங்கும். இந்தக் கொண்டாட்டம் பொருளாதாரத்தின் சக்கரத்தைச் சுழலச் செய்வதில் சந்தேகமே இல்லாமல் மிகப்பெரிய பங்காற்றும். இந்த முக்கியமான தருணத்தில் 'Atmanirbharta'-ஐ ஊக்குவிப்பது முக்கியம். இந்த முக்கியமான சமயத்தில் துறை முன்னணியாளர்கள், பிராண்டுகள், தொழில்கள், அரசு அதிகாரிகள், மற்றும் நிபுணர்கள் தங்களுடைய கருத்துக்களைப் பகிர்வதற்கும், பல தொழில்கள் நடைபெறவும் நாங்கள் உதவுகிறோம். இந்தியாவின் மீட்சி என்பது U அல்லது W வடிவில் இருக்கும் எனத் தோன்றினாலும், கண்காட்சிகள் வழியாக பொருளாதார மீட்சியை V வடிவிலானதாக மாற்றுவதற்கும் பொது நலத்தை உயர்த்தவும் முயற்சிக்கிறோம்" என்றார்.
மேலும், "செப்டம்பர் என்பது இந்தியாவில் முக்கியமான விழாக்காலத்தின் தொடக்கமாக உள்ளது. நல்லெண்ணம், அமைதி மற்றும் செழுமைக்கான நேரம். Informa Markets in India-விற்கு ஒவ்வொரு ஆண்டின் கடைசி முக்கியமான காலாண்டின் தொடக்கமாகவும் உள்ளது. பல முக்கியமான வர்த்தகக் கண்காட்சிகள் தொடர்ந்து இந்த சமயத்தில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு முதல், ஒரு மேம்பட்ட கண்காட்சிகளை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். செப்டம்பரில் நாங்கள் திட்டமிட்டிருக்கும் டிஜிட்டல் கொண்டாட்டம் எம்முடைய உண்மையான கண்காட்சிகளுக்கு இணையாகவும் ஊக்கமளிப்பதாகவும் நிச்சயமாக இருக்கும்" என்று மேலும் அவர் தெரிவித்தார்.
Informa Markets பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை Informa Markets உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் 365 நாட்களும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
Informa Markets மற்றும் இந்தியாவில் எம்முடைய தொழில் பற்றி
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும். Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம். இந்தியாவில் Mumbai, New Delhi, Bangalore மற்றும் Chennai-யில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து https://www.informamarkets.com/en/regions/asia/India.html என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
எந்த ஒரு ஊடக விசாரணைகளுக்கும் தயவுசெய்து இவர்களைத் தொடர்பு கொள்ளவும்:
Roshni Mitra - [email protected]
Mili Lalwani - [email protected]
புகைப்படம்: https://mma.prnewswire.com/media/1245301/Super_September.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
Share this article