CPhI & P-MEC Indiaன் 14 வது பதிப்பு இப்போது 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27-29 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது
- தனிப்பட்ட தலைமை வரிசை, வர்த்தகம், அறிவு, நெட்வொர்க்கிங் & கண்டுபிடிப்புகளுடன் தொழில்துறைக்கு தூண்டுகோலாக செயல்பட Informa Markets in India மூலம் நடத்தப்படும் ஆசியாவின் மிகப்பெரிய ஃபார்மா நிகழ்ச்சி
புது டெல்லி, Oct. 6, 2020 /PRNewswire/ -- இந்தியாவின் முன்னணி B2B நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளரான Informa Markets in India, தனது முக்கிய நிகழ்ச்சியான CPhI & P-MEC India - Greater Noida, Delhi-NCRன் India Expo Centerல் 27-29 ஆம்தேதி ஜனவரி,2021 அன்று நடைபெறும் என அறிவித்தது. ஆசியாவின் மிகப்பெரிய ஃபார்மா நிகழ்வான இந்த கண்காட்சி, உண்மையில் 25-27 ஆம்தேதி நவம்பர் 2020 அன்று நடைபெறுவதாக இருந்தது. SOP காரணமாக B2B கண்காட்சிகளை நடத்த Ministry of Home Affairs (MHA), Govt of India அனுமதி அளித்த பிறகு இந்த அறிவிப்பு வருகிறது. தற்போது நடைமுறைக்கு வரும் ஊரடங்கு தளர்வு 5.0க்கான இந்த புதிய உத்தரவை கருத்தில் கொண்டு CPhI & P-MEC India தொழில்துறைக்கு தூண்டுகோலாக நடைபெற உள்ளது மற்றும் பொருளாதாரத்தை மறுபடியும் ஊக்குவிக்க உதவ உள்ளது.
ஊரடங்கு தொடங்கியதிலிருந்து, கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் பிரச்சினைகளில் தப்புவதற்கு எடுக்க வேண்டிய முயற்சிகள் பற்றி முக்கிய தொழில்துறை பங்குதாரர்கள், கூட்டாளிகள் மற்றும் உள்ளூர் அரசாங்கம் ஆகியவற்றுடன் CPhI & P-MEC India கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தொடர்ந்து கலந்துரையாடி வருகின்றனர். புதிய தேதிகள் நமது சாதாரண வாழ்க்கைக்கு கூடுதல் நேரத்தை அனுமதிக்கும் மற்றும் சந்தை மறுபடியும் பழைய நிலைக்கு திரும்ப நேரம் அளிக்கும் மற்றும் அனைத்து கண்காட்சியாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு நல்ல அனுபவத்தை அளிக்கும். Informa's AllSecure health and safety standardsபடியும் CPhI & P-MEC India ஒருங்கிணைக்கப்படும். உலகின் முன்னணி நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளரான, Informa மிக அதிக தரம் வாய்ந்த சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை அதன் நிகழ்ச்சிகளுக்கு வழங்க விரிவான மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை செயல்படுத்த உள்ளது, ஒவ்வொருவரும் பாதுகாப்பான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் பங்கேற்கிறார்கள் என்ற நம்பிக்கையையும் உறுதியையும் வழங்கும்.
Mr. Yogesh Mudras, Managing Director, Informa Markets in India, CPhI & P-MEC India expoன் புதிய தேதிகளை அறிவிக்கும்போது பின்வருமாறு கூறினார், ''தற்போது நிகழ்ந்துவரும் நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் எங்களது முக்கிய நிகழ்ச்சி நடக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த அறிவிப்பு, துறையின் நிதியையும் தொழில்துறையையும் பெரிதளவில் மேம்படுத்தும் மேலும் தளர்வு 5.0 தொடங்கிய உடன் B2B வர்த்தக கண்காட்சிகளை அனுமதியளித்ததில் அராசங்கத்தால் அளிக்கப்பட்ட உற்சாகத்திற்கு நாங்கள் மிகவும் நன்றி தெரிவிக்கிறோம். நமது முக்கிய பங்குதாரர்களுடன் நடத்தப்பட்ட விவாதத்திற்கு பிறகு புதிய தேதிகள் பற்றிய முடிவெடுக்கப்பட்டது, இந்தியாவின் மிகப்பெரிய ஃபார்மா சந்தை, ஃபார்மா தொழில்துறை தனக்குத்தானே தயார் செய்து கொள்ளவும் கோவிட்-19ன் பாதிப்புகளை குறைப்பதில் கவனம் கொள்ளவும் உறுதிப்படுத்துகிறது.''
''எப்போதும்போல, CPhI & P-MEC Indiaல் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன அவை ஃபார்மா கனெக்ட், ஃபார்மாவில் பெண்கள், இந்திய ஃபார்மா விருதுகள் மற்றும் மிகச்சிறந்த பேச்சாளர்கள் நிறைந்த CEO வட்டமேசை, அறிவுப்பகிர்தல் மற்றும் இணையற்ற நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் போன்றவை. மருந்துத் துறையில் 'Atmanirbhar Bharat'ற்கான ஒட்டுமொத்த கோட்பாட்டை உருவாக்க இது உதவும். எங்களது பங்குதாரர்களுக்கு அவர்களின் ஆதரவு, உற்சாகம் மற்றும் பரிந்துரைகளுக்காக நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம் மற்றும் இப்போது அடுத்து வரும் கண்காட்சியை நன்றாக ஒருங்கிணைப்போம் என உறுதியளிக்கிறோம்'' என்றும் அவர் கூறினார்.
Informa Markets பற்றி
வியாபாரம், கண்டுபிடிப்பு மற்றும் வளர்ச்சி பெறுவதற்கான, தொழிற்சாலைகள் மற்றும் சிறப்பு சந்தைகளை Informa Markets உருவாக்குகிறது. எங்களது போர்ட்ஃபோலியோவில், ஹெல்த்கேர் & ஃபார்மாசூட்டிகல்ஸ், உட்கட்டமைப்பு, கட்டமைப்பு & ரியல் எஸ்டேட், ஃபேஷன் & ஆடை, ஹாஸ்பிடாலிட்டி, உணவு & பானங்கள் மற்றும் ஹெல்த் & ஊட்டச்சத்து உள்ளிட்ட சந்தைகளின் 550க்கும் அதிகமான சர்வதேச B2B நிகழ்ச்சிகள் மற்றும் பிராண்டுகள் அடங்கியுள்ளன. உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு இணையவும் நேரடி கண்காட்சிகள் மூலம் வியாபாரம் செயயவும், டிஜிட்டல் கன்டென்டில் நிபுணராகவும் மற்றும் செயல்படு தரவு தீர்வுகளை வழங்கவும் செய்கிறோம். உலகின் முன்னணி கண்காட்சிகள் ஒருங்கிணைப்பாளராக, நாங்கள் பலவிதமான சிறப்பு சந்தைகளுக்கு உயிரூட்டுகிறோம் மற்றும் தளர்வு காலத்தின்போது பல வியாபார வாய்ப்புகளை வழங்குகிறோம் மற்றும் வருடத்தின் 365 நாட்களுக்கும் அவர்கள் இயங்க உதவிசெய்கிறோம். கூடுதல் தகவலுக்கு தயவுசெய்து www.informamarkets.com க்கு வருகை தரவும்
Informa Markets மற்றும் இந்தியாவில் எங்களது வியாபாரம் பற்றி
உலகின் முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் மிகப்பெரிய B2B நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான Informa PLCக்கு சொந்தமானது Informa Markets. இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளரான Informa Markets in India (முன்னர் UBM India), சிறப்பு சந்தைகள் மற்றும் வாடிக்கையாளர் சமூகங்களுக்கு உதவவும், உள்ளூரிலும் உலகமெங்கும் வர்த்தகம் செய்யவும், கண்காட்சிகள் மூலமாக கண்டுபிடிக்கவும் மற்றும் வளர்ச்சியடையவும், டிஜிட்டல் கன்டென்ட் & சேவைகள் மற்றும் மாநாடுகள் & கலந்துரையாடல்களை வழங்கவும் செயல்படுகிறது. ஒவ்வொரு வருடமும் நாங்கள் 25க்கும் அதிகமான பெரிய அளவு கண்காட்சிகள், 40 மாநாடுகள் அவற்றுடன் தொழில்துறை விருதுகள் மற்றும் நாடெங்கும் பயிற்சிகள் ஆகியவற்றை நடத்துகிறோம். அதன்மூலம் பல தொழில்துறைகளுக்கு இடையே வர்த்தகத்தை தூண்டுகிறோம். இந்தியாவில் , மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் Informa Marketsக்கு அலுவலகங்கள் உள்ளன. கூடுதல் விவரங்களுக்கு தயவுசெய்து www.informamarkets.com/en/regions/asia/India.html க்கு வருகை தரவும்
ஏதேனும் ஊடக கேள்விகளுக்கு தயவு செய்து தொடர்பு கொள்ளவும்:
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
Informa Markets in India
லோகோ: https://mma.prnewswire.com/media/1307067/CPhI_PMEC_Logo.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
Share this article