COVID-19 நோயாளிகளுக்காக Critical Medical Infra-யினை PMC-க்காகக் கட்டிக்கொடுப்பதற்கு மிகச்சிறந்த பங்களிப்புக்காக Panchshil Foundation-க்கு Pune Municipal Corporation பாராட்டுதல்களைத் தெரிவித்தது
பூனே, இந்தியா, டிச., Dec. 15, 2020 /PRNewswire/ -- Pune Municipal Corporation (PMC)-ன் மரியாதைக்குரிய மாநகராட்சி ஆணையரான திரு. Vikram Kumar அவர்கள் பூனே நகரில் COVID-19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க அவசியமாகத் தேவைப்பட்ட முக்கியமான மருத்துவ உட்கட்டமைப்பினை உருவாக்குவதற்கான PMC-யின் முயற்சிக்கு ஆதரவு வழங்கியதற்காக Panchshil Realty-யின் CSR பிரிவான Panchshil Foundation-க்கு தனது பாராட்டுக்களை இன்று தெரிவித்தார்.
PMC-யின் கூடுதல் ஆணையரான செல்வி Rubal Agarwal, கூடுதல் ஆணையர்-PMC மற்றும் PMC-யின் நகர் பொறியாளரான திரு. Prashant Waghmare உட்பட்ட முக்கிய அரசு அதிகாரிகளின் முன்னிலையில் Panchshil Realty-யின் தலைவரான Atul Chordia அவர்களிடம் இதற்கான ஒரு பாராட்டுக் கேடயம் வழங்கப்பட்டது.
Panchshil Realty-யின் தலைவரான திரு. Atul Chordia அவர்கள் இதுகுறித்துப் பேசும்போது, "கார்ப்பரேட் குடிமக்கள் என்ற முறையில் நாங்கள் எங்களுடைய கடமையைத்தான் செய்திருக்கிறோம். அதிகமான மக்களைப் பாதுகாப்பதற்கும் மேற்பட்ட பெரிய காரணம் இருக்க முடியாது. PMC-யின் பாராட்டுதல்களை தாழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன், திரு. Kumar அவர்களுக்கும் அவருடைய குழுவினருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்."
PMC-யின் மாநகராட்சி ஆணையர் தன்னுடைய பாராட்டுக் கடிதத்தில், "அந்த சமயத்தில் COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை பூனேயில் தொடர்ந்து வேகமாக அதிகரித்து வந்தது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்ததால், மிகவும் சவாலான சூழல் நிலவியது. ஆக்சிஜன் மற்றும் ICU / வென்டிலேட்டர் படுக்கைகள் போன்ற மருத்துவ உதவி தேவைப்படும் COVID-19 நோயாளிகள் கஷ்டங்களைச் சந்தித்து வந்தனர். Panchshil Foundation இந்த மையத்திற்குத் தேவையான ஏர் கண்டிஷனிங் அமைப்பினை ஏற்படுத்தி மருத்துவமனைக்குத் தேவையான படுக்கை வசதிகளை அளித்து, ஆக்சிஜன் பைப்பிங் அமைப்பினை முழுமையாக அமைத்து, பிற சார்புடைய வேலைகளையும் செய்து கொடுத்து PMC-க்கு உதவியது. 21 நாட்களுக்குள் இந்த மருத்துவ வசதியை ஏற்படுத்தி இயக்குவதற்கு Panchshil Foundation-ன் பங்களிப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இந்த மருத்துவமனைக்கு அளிக்கும் நிதி உதவிக்கும் ஒட்டுமொத்த ஆதரவுக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் PMC-யுடன் இணைந்து Panchshil Realty பூனேயில் பானேர்-ல் ஒரு தனியானதொரு COVID பராமரிப்பு மையத்தை ஏற்படுத்தியது. இந்த மையத்தில் 270 ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகளும் 44 வென்டிலேட்டர் / ICU படுக்கைகளும் உள்ளன. 48,000 சதுரடி பரப்பளவில் 6 தளங்களைக்கொண்ட சிறந்த மேற்கட்டுமானமானது முழுமையாக Panchshil Realty-யினால் அதன் C2 Reservation Development-ன் ஒரு அங்கமாகக் கட்டப்பட்டு & Pune Municipal Corporation-யிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஒட்டுமொத்த கட்டடத்தின் உட்புறத்தை Panchshil Foundation சிகிச்சையளிப்பதற்கேற்ப மாற்றி PMC-யின் வழிகாட்டுதல்களின்படி கீழ்க்காணும் வசதிகள் உட்பட ஒட்டுமொத்த மருத்துவ உட்கட்டமைப்பையும் அவசியமான சாதனங்களையும் வழங்கியது:
- ஒட்டுமொத்த கட்டிடத்திற்கு சுமார் 2 கிலோமீட்டர் நீள ஆக்சிஜன் பைப்பிங் வசதியும் ஆக்சிஜன் சேமிப்பு உட்பட்ட அவசியமான சாதனங்களையும் வழங்கியது.
- 270 ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் பிற பகுதிகள் மற்றும் செவிலியர் பகுதிகள் போன்ற அவசியமான சாதனங்கள்
- 44 ICU படுக்கைகள் - ஒட்டுமொத்த ICU பிரிவுக்குத் தேவையான ஏர் கண்டிஷனிங் உட்பட அவசியமான மருத்துவ சாதனங்களுடன்
- அரசு வழிகாட்டுதல்களின்படி பிற உட்புற வேலைகள்.
COVID-19 பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து Panchshil Foundation-னால் எடுக்கப்பட்ட பல தொடர் முன்முயற்சிகளில் மிகச்சமீபத்தியதுதான் PMC-யுடன் செய்துகொண்ட இந்தக் கூட்டு முயற்சி. இதுவரை, Panchshil Foundation செய்துள்ளவை:
- நாவல் கொரோனாவைரஸ் தொற்றுப் பரவலின் காரணமாக எல்லா பொருளாதார நடவடிக்கைகளும் முடங்கிப் போனதன் காரணமாக எல்லா வருவாய் ஆதாரங்களையும் இழந்து தவிக்கும் தினக்கூலிகளுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் முட்டைகள் அடங்கிய அடிப்படையான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 40,000-க்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்களை வழங்கியது.
- Pune-யில் இருக்கும் 5th Battalion of the elite National Disaster Response Force (NDRF)-உடன் இணைந்து COVID-19 பற்றிய விழிப்புணர்வையும், சமூக அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பொதுமக்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வையும் அளித்தது.
- COVID-19 தொற்றுள்ள நோயாளிகளைக் கையாளும் Pune-யில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள மருத்துவக் குழுக்களுக்கு 15,000 Personal Protection Equipment (PPE) கிட்டுகளை Panchshil Foundation அளித்தது.
ஆசிய-பசிபிக் வட்டாரம் முழுவதிலும் குறிப்பாக இந்தியாவில் உள்ள ரியல் எஸ்டேட் குழுக்களில் British Safety Council விதித்திருக்கும் கடுமையான உலகளாவிய பாதுகாப்புத் தரங்களின்படி தன்னுடைய அலுவலகப் பூங்காக்களில் COVID-19 சார்ந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு தரக்குறியிட்டு தனியாக மதிப்பீடு செய்திருக்கும் ஒரே நிறுவனம் Panchshil Realty மட்டுமே.
பூனேயில் Panchshil Realty-யின் அலுவலகப் போர்ட்ஃபோலியோவில் EON Free Zone, World Trade Centre, Business Bay மற்றும் International Convention Centre ஆகியவை அடங்கும், இதன் வளாகங்களில் உலகப் பெரிய கார்ப்பரேஷன் நிறுவனங்களான Allianz, Citibank, Cognizant, Concentrix, Credit Suisse, Deutsche Bank, HSBC, MasterCard, Michelin, T-Systems, UBS, VMWare மற்றும் Vodafone போன்ற பல நிறுவனங்கள் அமைந்துள்ளன.
Panchshil-ன் தொழில்கள் - முக்கியமான விஷயங்கள்
- Panchshil Realty-யின் ரியல் எஸ்டேட் 23 மில்லியன் சதுர அடிக்கும் அதிகமாக உள்ளது. இன்னும் 20 மில்லியன் சதுர அடிப் பரப்பு கட்டுமானத்தில் உள்ளது.
- Panchshil Realty-யின் மூன்று பிரதான தொழிலாக வர்த்தக அலுவலக கட்டடங்கள், விருந்தோம்பல் மற்றும் இருப்பிட ரியல் எஸ்டேட் தொழில் உள்ளன.
- Panchshil Realty-யின் குறிப்பிடத்தக்க ஆஃபீஸ் போர்ட்ஃபோலியோவில் Blackstone Group LP-யினால் நிர்வகிக்கப்படும் Blackstone Real Estate Private Equity Fund அடங்கும்.
Panchshil Realty பற்றி
2002-ல் நிறுவப்பட்ட Panchshil Realty என்பது இந்தியாவின் மிகச்சிறந்த சொகுசு ரியல் எஸ்டேட் பிராண்டுகளில் ஒன்றாகும். திட்டமிடப்பட்ட வளர்ச்சி, மதிப்புமிக்க சொத்துக்களை உருவாக்குதல், மற்றும் வடிவமைப்பு மற்றும் கட்டடக்கலை வழியாக வாழ்க்கைப்பாணி அனுபவங்களை ஏற்படுத்துவதில் ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் தன்னுடைய முன்னிலைக்கும் செயல்திறனுக்கும் புகழ்பெற்ற இக்குழுவின் அணுகுமுறையாக உள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.panchshil.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்
புகைப்படம் 1: https://mma.prnewswire.com/media/1373080/Mr_Vikram_Kumar_Mr_Atul_Chordia.jpg
புகைப்படம் 2: https://mma.prnewswire.com/media/1373081/Trophy_of_Appreciation.jpg
Pdf: https://mma.prnewswire.com/media/1373079/Appreciation_letter_from_PMC.pdf
லோகோ: https://mma.prnewswire.com/media/1169295/Panchshil_Foundation_Logo.jpg
Share this article