COVID-19 சார்ந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான British Safety Council-ன் உலகளாவிய திறன் மதிப்பினை APAC-ல் Panchshil Realty-யின் அலுவலகப் போர்ட்ஃபோலியோ முதலில் பூர்த்தி செய்துள்ளது
பூனே, இந்தியா, Aug. 6, 2020 /PRNewswire/ -- Panchshil Realty -யும் British Safety Council-ம் இணைந்து இந்தியாவில் COVID-19 மற்றும் பாதுகாப்பான முறையில் வேலைக்குத் திரும்புவதற்கான சூழலில் கார்ப்பரேட் ரியல் எஸ்டேட் துறையில் பணியிடப் பாதுகாப்பில் ஒரு புதியதொரு மைல்கல்லை எட்டியிருப்பதாக அறிவித்துள்ளன.
ஆசிய-பசுபிக் வட்டாரம் முழுவதிலும் குறிப்பாக இந்தியாவில் உள்ள ரியல் எஸ்டேட் குழுக்களில் British Safety Council விதித்திருக்கும் கடுமையான உலகளாவிய பாதுகாப்புத் தரங்களின்படி தன்னுடைய பணியிடங்களில் COVID-19 சார்ந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு தரக்குறியிட்டு தனியாக மதிப்பீடு செய்திருக்கும் ஒரே நிறுவனம் Panchshil Realty மட்டுமே.
கடுமையான தணிக்கை செயல்முறைகளைத் தொடர்ந்து, British Safety Council-ன் உறுதிமொழிக் கூற்றின்படி தணிக்கை செய்யப்படும்போது, Panchshil Realty தன்னுடைய பணியிடங்களில், 15 மில்லியன் சதுரடி உள்ள தன்னுடைய அலுவலகப் பூங்கா பகுதியில் COVID-19-ஐ கட்டுப்படுத்துவதற்கான சரியான மற்றும் போதுமான கொள்கைகளையும், செயல்முறைகளையும் ஏற்பாடுகளையும் நடைமுறைப்படுத்தியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பூனேயில் Panchshil Realty-யின் அலுவலகப் போர்ட்ஃபோலியோவில் EON Free Zone, World Trade Centre, Business Bay மற்றும் International Convention Centre ஆகியவை அடங்கும், இதன் வளாகங்களில் உலகப் பெரிய கார்ப்பரேஷன் நிறுவனங்களான Allianz, Citibank, Cognizant, Concentrix, Credit Suisse, Deutsche Bank, HSBC, MasterCard, Michelin, T-Systems, UBS, VMWare மற்றும் Vodafone போன்ற பல நிறுவனங்கள் அமைந்துள்ளன.
British Safety Council-ன் Assurance Assessment கூறுவது போன்று, "Panchshil Realty-யின் மூத்த அதிகாரிகள் COVID-19-ஐ மேலாண்மை செய்யவும், தடுக்கவும், பரவலைக் கட்டுப்படுத்தவும் உறுதிபூண்டுள்ளனர், பொது முடக்கம் முடிந்து தங்களுக்கு உரிய பணியிடங்களுக்கு ஊழியர்களும் குடியிருப்போரும் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்திருக்கின்றனர். தேசிய அளவிலான பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் முன்னரே, மார்ச் 2020-லேயே உரிய சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இயற்கைச் சூழலுக்கும் செய்யப்படும் நடவடிக்கைகளுக்கும் ஏற்ற முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டன."
"தன்னுடைய பணியிடத்திற்குள்ளும் தொடர்புடைய வேலைகள் நடைபெறும் இடங்களிலும் இந்திய அரசு மற்றும் British Safety Council-ன் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு COVID-19 சார்ந்த அபாயங்களைக் கையாள பொருத்தமான திறம்பட்ட நடவடிக்கைகளை Panchshil எடுத்திருக்கிறது" என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
Panchshil Realty-யின் ஃபசிலிட்டி மேனேஜ்மெண்டின் துணைத் தலைவரான Vijitsingh Thopte பேசும்போது, "இந்த முன்னெப்போதும் நடந்திராத பெருந்தொற்றுக்கு மத்தியில், எம்முடைய பணியாளர்கள், துணை அமைப்புகள் மற்றும் சார்ந்த பயனர்களின் சுகாதாரமும் நலனும் எம்முடைய முன்னுரிமையாக இருந்தது. எம்முடைய வளாகங்களுக்கும் பணியிடங்களுக்கும் வருவது, வெளியேறுவது, அவசர நிகழ்வு மேலாண்மை, PPE, சுத்தம் செய்தல், மின்தூக்கிகளைப் பயன்படுத்துவது, வளாகத்திற்குள் நபர்களின் நகர்வு, கழிவு மேலாண்மை, சமூக இடைவெளிக் கட்டுப்பாடுகள், சுகாதாரக் கட்டுப்பாடுகள் போன்றவை நாங்கள் எடுத்த இருபத்து நான்குக்கும் மேற்பட்ட நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்கவையாகும்" என்றார்.
இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள், World Health Organisation (WHO), The Organisation for Economic Co-operation and Development (OECD) மற்றும் UK Health and Safety Executive (HSE) ஆகியவற்றிடமிருந்து தகவல்களையும் நடப்பு நல்ல நடைமுறைகளையும்கூட British Safety Council வழிகாட்டுதல் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
Panchshil Realty உலகளாவிய பாதுகாப்பு தரக்குறியை அடைந்ததைப் பாராட்டிப் பேசிய British Safety Council-ன் தலைமை செயல் அதிகாரியான Mike Robinson பேசும்போது, "பொது முடக்கத்தில் தளர்வுகள் செய்யத் தொடங்கியதும், அதிகமான ஊழியர்கள் பணிக்குத் திரும்பும் வேளையில், பணியிடத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக நம்பிக்கையைப் பெற ஊழியர்கள் விரும்புவது சரிதான். Panchshil Realty முன்னெடுத்திருக்கும் நெறிமுறைகளும், தொடர்புடைய கட்டுப்பாட்டு ஏற்பாடுகளும் அரசின் மற்றும் துறைக்கேயுரிய குறிப்பிட்ட தற்போதைய வழிகாட்டுதல்களின் மதிப்பாய்வின்போது இருப்பதை COVID-19 உறுதிமொழி மதிப்பீடு உறுதிப்படுத்தியுள்ளது. அவை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கான கண்காணிப்பு நடைமுறைகளும் உள்ளன" என்றார்.
தங்களுடைய பணியிடங்களுக்குள் நியாயமாக நடைமுறைப்படுத்தும் அளவிற்கு COVID-19 பரவும் அபாயத்தை திறம்படக் கையாள சிறந்த உரிய நெறிமுறைகளையும் ஏற்பாடுகளையும் நிறுவனங்கள் ஏற்படுத்தி நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு கட்டமைப்பை British Safety Council-ன் COVID-19 உறுதிமொழி மதிப்பீடு அளிக்கிறது.
அபாயங்களை மதிப்பிடுவது, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் திட்டமிடுதல், பணிகளையும் பொறுப்புகளையும் ஒதுக்குதல், கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி பராமரித்தல், தகவல் தொடர்பு மற்றும் பயிற்சி, செயல்திறனைக் கண்காணித்தல் மற்றும் சீராய்வு செய்தல் மற்றும் தேவைப்படும்போது ஏற்பாடுகளை மாற்றியமைத்தல் ஆகியவை எடுக்கப்பட்ட COVID-19 இடர் மேலாண்மை செயல்முறைகளுள் அடங்கும்.
British Safety Council 1957-ல் தொடங்கப்பட்டது முதல், விபத்துகள், இடர்கள் மற்றும் பாதுகாப்பற்ற நிலைகளிலிருந்து பணியாளர்களைப் பாதுகாப்பதற்கு ஓய்வின்றிப் பணியாற்றி வருகிறது, குறிப்பிடத்தக்க சுகாதார மற்றும் பாதுகாப்புச் சட்டங்களை ஏற்படுத்தச் செய்த செயல்முறைகளில் ஒரு முக்கியமான பணிகளை ஆற்றியிருக்கிறது. 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள அதன் உறுப்பினர்கள் தொழிலாளர்களைப் பாதுகாக்கவும், அவர்களுடைய நலனை மேம்படுத்தவும் உறுதிபூண்டுள்ளனர். ஒரு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான வேலைச் சூழல் தொழில்களுக்கும் நல்லது என்று நம்புகின்றனர்.
Panchshil-ன் தொழில்கள் - முக்கியமான விஷயங்கள்
- Panchshil Realty-யின் ரியல் எஸ்டேட் 23 மில்லியன் சதுர அடிக்கும் அதிகமாக உள்ளது. இன்னும் 20 மில்லியன் சதுர அடிப் பரப்பு கட்டுமானத்தில் உள்ளது.
- Panchshil Realty பிரதான தொழிலாக வர்த்தக அலுவலக கட்டடங்கள், விருந்தோம்பல் மற்றும் இருப்பிட ரியல் எஸ்டேட் தொழில் உள்ளன.
- Panchshil Realty-யின் குறிப்பிடத்தக்க ஆஃபீஸ் போர்ட்ஃபோலியோவில் Blackstone Group LP-யினால் நிர்வகிக்கப்படும் Blackstone Real Estate Private Equity Fund அடங்கும்.
Panchshil Realty பற்றி
2002-ல் நிறுவப்பட்ட Panchshil Realty என்பது இந்தியாவின் மிகச்சிறந்த சொகுசு ரியல் எஸ்டேட் பிராண்டுகளில் ஒன்றாகும். திட்டமிடப்பட்ட வளர்ச்சி, மதிப்புமிக்க சொத்துக்களை உருவாக்குதல், மற்றும் வடிவமைப்பு மற்றும் கட்டடக்கலை வழியாக வாழ்க்கைப்பாணி அனுபவங்களை ஏற்படுத்துவதில் ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் தன்னுடைய முன்னிலைக்கும் செயல்திறனுக்கும் புகழ்பெற்ற இக்குழுவின் அணுகுமுறையாக உள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.panchshil.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
வீடியோ: https://www.youtube.com/watch?v=B37utRtiLjQ
புகைப்படம்: https://mma.prnewswire.com/media/1223626/Safety_Procedures_in_Panchshil.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/1223625/Panchshil_BSC_Logo_Logo.jpg
Share this article