சொத்துப் பரிவர்த்தனையில் முத்திரை வரியைக் குறைப்பது என்ற மகாராஷ்ர அரசின் தைரியமான முடிவை Panchshil Realty வரவேற்கிறது
பூனே, இந்தியா, Aug. 31, 2020 /PRNewswire/ -- சொத்துப் பரிவர்த்தனையில் முத்திரை வரியை நகர்ப்புறங்களில் 40% அளவுக்கும் கிராமப்புறங்களில் 75% அளவுக்கும் குறைப்பது என்ற மகாராஷ்ர அரசின் தைரியமான முடிவை - Panchshil Realty வரவேற்பதாக இன்று தெரிவித்தது.
இந்த முடிவை ஒரு தைரியமான வளர்ச்சி நோக்கிலான முடிவு என்று விவரித்துப் பேசிய Panchshil Realty-யின் தலைவரான Atul Chordia பேசும்போது, "மகாராஷ்ர அரசின் இந்த முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது. ரியல் எஸ்டேட் துறைக்கு இது ஒரு உந்துதலைக் கொடுப்பதோடு அல்லாமல், பல இணைந்த துறைகளும் நேரடியாக ரியல் எஸ்டேட் துறையுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் ஒட்டுமொத்த பொருளாதாரச் செயல்பாடுகளுக்கும் ஊக்கமளிப்பதாக அமையும்." என்றார்.
மேலும் பேசும்போது, "மதில்மேல் பூனையாக இது காலம்வரை இருந்த பல வாங்குபவர்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார்கள். இதனால் நேரடி நிதிச் சேமிப்பு அவர்களுக்குச் சேரும். மேலும், நிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் தொடங்க முடியும். மகாராஷ்ர அரசின் இந்த முடிவினைப் பின்பற்றி பிற மாநில அரசுகளும் இத்தகைய தைரியமான முடிவுகளை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.
மாநில அரசின் இந்த நிவாரணமளிக்கும் முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் விழாக்காலத்திற்கு முன்னர் எடுக்கப்பட்டிருக்கிறது. முடங்கிப்போன ரியாலிட்டி விற்பனைக்கு நிச்சயமாக உத்வேகம் அளிக்கும். வட்டி வீதம் வரலாறு காணாத அளவு குறைந்திருக்கிறது, அமெரிக்க டாலர் விலை உச்சத்தில் உள்ளது, இந்திய ரூபாய் மதிப்பு மிகவும் குறைந்திருக்கிறது என்பதால் வெளிநாடுவாழ் இந்தியர்கள் (NRIs) இப்போது இந்தியாவில் முதலீடு செய்ய கவர்ந்திழுக்கப்படுவார்கள்.
Panchshil Realty-ன் தொழில்கள் - முக்கியமான விஷயங்கள்
- Panchshil-ன் பிரதான தொழிலாக வர்த்தக அலுவலக கட்டடங்கள், விருந்தோம்பல் மற்றும் இருப்பிட ரியல் எஸ்டேட் தொழில் உள்ளன.
- Panchshil Realty-யின் ரியல் எஸ்டேட் 23 மில்லியன் சதுர அடிக்கும் அதிகமாக உள்ளது. இன்னும் 20 மில்லியன் சதுர அடிப் பரப்பு கட்டுமானத்தில் உள்ளது.
- Panchshil Realty-யின் குறிப்பிடத்தக்க ஆஃபீஸ் போர்ட்ஃபோலியோவில் Blackstone Group LP-யினால் நிர்வகிக்கப்படும் Blackstone Real Estate Private Equity Fund அடங்கும்.
Panchshil Realty பற்றி
2002-ல் நிறுவப்பட்ட Panchshil Realty என்பது இந்தியாவின் மிகச்சிறந்த சொகுசு ரியல் எஸ்டேட் பிராண்டுகளில் ஒன்றாகும். திட்டமிடப்பட்ட வளர்ச்சி, மதிப்புமிக்க சொத்துக்களை உருவாக்குதல், மற்றும் வடிவமைப்பு மற்றும் கட்டடக்கலை வழியாக வாழ்க்கைப்பாணி அனுபவங்களை ஏற்படுத்துவதில் ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் தன்னுடைய முன்னிலைக்கும் செயல்திறனுக்கும் புகழ்பெற்ற இக்குழுவின் அணுகுமுறையாக உள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.panchshil.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
லோகோ: https://mma.prnewswire.com/media/1042836/Panchshil_Realty_Logo.jpg
Share this article