Cosmoprof India கண்காட்சி வரும் 2021-க்கு ஒத்திப்போடப்பட்டுள்ளது
- Signature Event by Cosmoprof India - எனப்படும் உண்மையான மற்றும் மெய்நிகர் கண்காட்சியின் ஒரு தனித்துவமான சேர்க்கை - 22-23 பிப்ரவரி 2021-ல் நடைபெற உள்ளது
மும்பை, இந்தியா, Oct. 22, 2020 /PRNewswire/ -- அழகு மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சந்தைக்கான Cosmoprof network-ன் நிகழ்வான Cosmoprof India ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உண்மையான மற்றும் மெய்நிகர் கண்காட்சியின் ஒரு தனித்துவமான சேர்க்கையான 'Signature Event by Cosmoprof India' - என அழைக்கப்படும் இந்தக் கண்காட்சி மும்பையில் உள்ள Hotel Sahara Star-ல் வரும் 22-23 பிப்ரவரி 2021-ல் நடைபெற உள்ளது. இந்தக் கண்காட்சியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிபுணர்கள் கலந்துகொண்டு தொடர்புகொள்ள இத்துறையைச் சார்ந்தவர்களுக்கு ஒரு தொழில்முறை நெட்வொர்க்கிங் தளமாக அமையும். COVID-19 பெருந்தொற்றின் காரணமாக உருவான வெற்றிடத்தை நிரப்பும் வகையில் இந்தக் கண்காட்சியில் ஏற்கனவே இருக்கும் தொழில் உறவுகளை புதுப்பிப்பதோடு புதிய தொழில் உறவுகளை உருவாக்கவும் வழிவகை செய்யும். இதன் முதன்மையான கண்காட்சி 2021-ன் இரண்டாவது அரையாண்டில் நடைபெறும். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களான BolognaFiere மற்றும் Informa Markets இணைந்து மிக உயர்ந்த மற்றும் பாதுகாப்பான தொழில் அனுபத்தை உத்தரவாதம் அளிக்கும் வகையில் Cosmoprof India-வின் இரண்டாவது கண்காட்சியை தள்ளி வைக்க முடிவெடுத்துள்ளன. இந்திய அரசின் Ministry of Home Affairs (MHA) உரிய SOP-யுடன் B2B கண்காட்சிகளை நடத்திக்கொள்ள அனுமதிக்கத் தொடங்கியவுடனேயே இந்த அறிவிக்கை வெளிவந்திருக்கிறது.
பொது முடக்கம் தொடங்கியதிலிருந்தே Cosmoprof India-வின் ஒருங்கிணைப்பாளர்கள் துறையின் முக்கிய தரப்புகள், கூட்டாளிகள் மற்றும் உள்ளாட்சி அரசுத் தரப்பிடம் தொடர்ந்து தொடர்புகொண்டு, COVID-19 காரணமாக ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் சிக்கல்கள் பற்றித் தெரிவித்து வந்தனர்.
பிப்ரவரி மாதத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்துவதால் சந்தை இயல்புநிலையை அடையவும் நம்பிக்கையை ஏற்படுத்தவும் அதிக நேரம் கிடைக்கும். கண்காட்சியாளர்களும் பார்வையாளர்களும் ஈடுபடுவதற்கு சிறந்த ஒட்டுமொத்த நிலையை ஏற்படுத்தும். ஒருங்கிணைப்பாளர்களின் சுகாதார மற்றும் பாதுகாப்புத் தரங்களின்படி இந்த வர்த்தகக் கண்காட்சி நடத்தப்படும். மேம்பட்ட நடவடிக்கைகள் காரணமாக நிகழ்ச்சிக்கு மிகச் சிறந்த சுகாதார மற்றும் பாதுகாப்பு வசதிகள் கிடைக்கும். பாதுகாப்பான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில்தான் பங்கேற்கிறோம் என்று கலந்துகொள்ளும் உணர்வும் நம்பிக்கையும் ஏற்படும்.
"நாட்டில் நிலவும் பெருந்தொற்றும் உலகளாவிய அளவில் விதிக்கப்பட்டிருக்கும் பயணக் கட்டுப்பாடுகளும் Cosmoprof India-வினை 2021-க்கு ஒத்திவைக்கும்படி செய்துள்ளன," என்றார் BolognaFiere-யின் தலைவரான Gianpiero Calzolari, மேலும் அவர் பேசும்போது, "மும்பையில் நடைபெறிவிருக்கும் கண்காட்சிக்கு வரும் அழகுக்கலைத் துறையினருக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் Cosmoprof பிராண்டை தனித்துவமானதாக ஆக்கிய தரத்தையும், தொழில்முறை தன்மையையும் உத்தரவாதம் அளிப்பதே எமது இலக்கு" என்றார்.
Informa Markets in India-வின் மேனேஜிங் டிரெக்டரான Mr. Yogesh Mudras பேசும்போது, "அழகு மற்றும் அழகு சாதனப் பொருட்களின் துறைக்கு இந்தியா ஒரு பெரிய, பன்மயமான சந்தையாகும், பல்வேறு பிரிவினருக்கு பல்வேறு விதத்தில் சேவையாற்ற வேண்டியதிருக்கிறது. சுமார் 18% CAGR-ல் அழகு மற்றும் அழகுசாதனச் சந்தை வளர்ந்துவருகிறது. பெருந்தொற்றும் அதைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட பொதுமுடக்கமும் இத்துறையை குறிப்பிடத்தக்க அளவு கடுமையாகப் பாதித்திருக்கிறது. இதன் வருவாய் இழப்பு சுமார் 30-35% என மதிப்பிடப்படுகிறது. இந்தக் குறிப்பிடத்தக்க கண்காட்சி இத்துறையை மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்ப உதவும் என்று நம்புகிறோம்" என்றார்.
"அழகுப் போக்கினைப் பற்றிய ஒரு பகுப்பாய்வில் அறநெறிக் கொள்கைகளின்படியும், ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டும் தயாரிக்கப்படும் தரமான தயாரிப்புகளுக்கும், நச்சற்ற, பாதுகாப்பான மற்றும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் தயாரிப்புகளுக்கும் வரவேற்பு இருக்கும் என்றும் தெரிகிறது. சந்தைப் போக்குகள், தனிப்பட்ட பராமரிப்பினைத் தயாரிப்பதில் உள்ள சவால்கள், புத்தாக்கங்கள் மற்றும் துறையைக் காப்பதற்கான புதிய தயாரிப்புகளை உருவாக்கும் வாய்ப்புகள்மீது எமது கண்காட்சி கவனம் செலுத்தும். அழகு & தனிப்பட்ட பராமரிப்புக்கான பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், கூட்டாளிகளைத் தேர்ந்தெடுத்து தங்களுடைய தொழில் உறவுகளை வலுப்படுத்த விரும்பும் தொழில்முறையாளர்களுக்கும் இந்தக் கண்காட்சி ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். பயனர்கள் மத்தியிலும் புதிய நிறுவனங்களுக்கும் மத்தியில் தங்களை வெளிக்காட்டும் வாய்ப்பாகவும் இக்கண்காட்சி அமையும்" என்று மேலும் தெரிவித்தார்.
BolognaFiere Group பற்றி (www.bolognafiere.it)
BolognaFiere Group என்பது அழகுசாதனப் பொருட்கள், அழகுநயப்புக் காட்சிகள், கட்டடக்கலை, கட்டுமானம், கலை மற்றும் கலாச்சார வர்த்தகக் கண்காட்சிகளை நடத்தும் உலகின் முன்னணி அமைப்பாகும். உலகின் மிக மேம்பட்ட கண்காட்சி மையங்களுள் ஒன்று இருப்பது இதன் பெருமையளிக்கும் அம்சமாகும். BolognaFiere Group மூன்று கண்காட்சி மையங்களை (பொலோஞா, மொடெனா, மற்றும் ஃபெர்ராரா) நடத்தி வருகிறது. இத்தாலியிலும் வெளிநாடுகளிலும் 80-க்கும் மேற்பட்ட கண்காட்சிகளை நடத்துகிறது. BolognaFiere Group-ல் பல நிறுவனங்கள் இணைந்துள்ளன. பல நிகழ்ச்சி சேவைகளை வழங்கி வருகிறது. தன்னுடைய கண்காட்சிகளில் வெற்றிகரமாகப் பங்கேற்கத் தேவையான எல்லா சிறப்பு சேவைகளையும் விளம்பர நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது.
BolognaFiere Cosmoprof பற்றி (www.cosmoprof.com)
BolognaFiere Cosmoprof என்பது BolognaFiere Group-ன் ஒரு அங்கமாக Cosmoprof Worldwide Bologna-வை நடத்திவருகிறது. Cosmoprof Worldwide Bologna என்பது 1967-ல் நிறுவப்பட்டு இத்தாலியின் பொலோஞா-வில் ஏற்பாடு செய்யப்பட்டுவரும் உலகின் அழகு தொழில்முறையாளர்கள் கூடும் ஒரு மிக முக்கியமான சந்திப்புத் தளமாக உள்ளது. 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட Cosmoprof-ல் 265.000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் உலகெங்குமிருந்து 150 நாடுகளிலிருந்து கலந்துகொண்டார்கள். முந்தைய ஆண்டுகளைவிட 10% அதிகமாக வெளிநாட்டினர் கலந்துகொண்டனர், 3,033 கண்காட்சியாளர்கள் 70 நாடுகளிலிருந்து கலந்துகொண்டனர். Cosmoprof உலகெங்கும் நடத்தப்பட்டு வருகிறது. பொலோஞா, லாஸ் வெகாஸ், மும்பை மற்றும் ஹாங்காங், சீனா போன்ற பல இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது (Cosmoprof Worldwide Bologna, Cosmoprof North America, Cosmoprof India, மற்றும் Cosmoprof Asia இவற்றை ஏற்பாடு செய்கின்றன). சமீபத்தில் நெட்வொர்க்கின் ஐந்தாவது கண்காட்சி அறிவிக்கப்பட்டுள்ளது: தாய்லாந்தில் நடத்தப்படவிருக்கும் Cosmoprof CBE ASEAN தென்கிழக்கு ஆசியாவில் உள்ள அழகூட்டும் பொருட்கள் துறையின்மீது கவனம் செலுத்தும். Cosmoprof தளம் தென் அமெரிக்காவில் German group Health and Beauty-யினை வாங்கியிருப்பதால் ஐரோப்பாவில் தன்னுடைய தாக்கத்தை வலுப்படுத்தும். Beauty Fair -Feira Internacional De Beleza Profissional-யின் கூட்டு முயற்சிக்கு நன்றி.
Informa Markets பற்றி
Informa Markets Beauty ஆசியாவில் 11 நகரங்களில் B2B நிகழ்ச்சிகளை நடத்துவதன்மூலம் ஒரு விரிவான நெட்வொர்க்கைக் கொண்டிருக்கிறது (பேங்காங், செங்குடு, ஹோ சி மின் சிட்டி, ஹாங்காங், ஜகார்த்தா, கோலா லம்பூர், மணிலா, மும்பை, ஷாங்காய், ஷென்ஜென், டோக்யோ). இதுதான் உலகின் மிகவேகமாக வளர்ந்துவரும் சந்தையாக உள்ளது. தன்னுடைய வலுவை இன்னும் விரிவாக்கும் வகையில் Beauty Portfolio இப்போது ஒரு புதிய B2B நிகழ்ச்சியை Miami 2021-ஐ நடத்துகிறது. இதன்மூலம் கிழக்குக் கடற்கரை மற்றும் அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் கரீபியத் தீவுகள் வட்டாரங்களுக்கு சேவையளிக்கிறது. தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை Informa Markets உருவாக்கி வருகிறது. நேரடி கண்காட்சிகள், இலக்கு டிஜிட்டல் சேவைகள் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் உலகெங்கும் வாய்ப்புகளை சந்தைப் பங்கேற்பாளர்களுக்கு நாங்கள் அளித்து வருகிறோம். மருந்து, உணவு, மருத்துவத் தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டமைப்பு உட்பட்ட ஒரு டஜனுக்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் நாங்கள் இணைக்கிறோம். உலகின் முன்னணி சந்தை-உற்பத்தி நிறுவனம் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் 365 நாட்களும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
Informa Markets மற்றும் இந்தியாவில் எம்முடைய தொழில் பற்றி
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும். Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம். இந்தியாவில் மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னை-யில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com/en/regions/asia/India.html என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
ஊடகத் தொடர்பு
ஆசியா: Informa Markets in India:
Ms. Roshni Mitra
[email protected]
Ms. Mili Lalwani
[email protected]
உலகளாவிய: BolognaFiere Cosmoprof Spa:
Mr. Paolo Landi
[email protected]
Ms. Arianna Rizzi
[email protected]
எங்களைப் பின்தொடர! www.cosmoprofindia.com l Facebook l LinkedIn l Instagram
லோகோ: https://mma.prnewswire.com/media/1316281/BolognaFiere_and_Informa_Markets_Logo.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/1316282/Cosmoprof_India_logo.jpg
Share this article