Children Baby Maternity Expo India தனது 7வது பதிப்பில் நிகரற்ற வியாபார வாய்ப்புகளை வழங்க தயாராகிறது
மும்பை, April 1, 2019 /PRNewswire/ --
UBM India ஆல் தனிப்பட நிலைப்படுத்தப்பட்ட B2B கண்காட்சி
மும்பை கன்வென்ஷன் மற்றும் கண்காட்சி மையம், கோரேகாவ், மும்பையில் 10 ஆம்தேதி- 12 ஆம்தேதி ஏப்ரல், 2019 வரை Children Baby Maternity Expo India (CBME India)ன் தனிப்பட நிலைப்படுத்தப்பட்ட 7 வது பதிப்பை UBM India கொண்டு வருகிறது. விநியோகஸ்தர்கள், இறக்குமதியாளர்கள், டீலர்கள், தாக்கம் ஏற்படுத்துபவர்கள் மற்றும் நவீன சில்லரை வியாபாரத்தின் விற்பனை தலைமைகள், ஆன்லைன் சில்லரை விற்பனையாளர்கள், திரட்டுபவர்கள்,சேவை வழங்குநர்கள், வியாபார முதலீட்டாளர்கள் மற்றும் கிளை உரிமையாளர்கள் போன்றவர்களின் தேர்வுடன் உள்ளூர் மற்றும் உலகளாவிய உற்பத்தியாளர்கள் மற்றும் குழந்தை பொருட்களின் விற்பனையாளர்களை இணைக்க, நெட்வொர்க் செய்ய மற்றும் வியாபாரத்தை நடத்த இந்தியாவிலேயே மிகப்பெரிய குழந்தை மற்றும் குழந்தைப்பேறு தயாரிப்பு B2B கண்காட்சியான CBME India இணையில்லாத வியாபார வாய்ப்புகளை வழங்கும். குழந்தை, குழந்தை ஆடைகள்,குழந்தை காலணி கடைகள், குழந்தைப்பேறு ஆடைகளின் கடைகள், பொம்மை கடைகள், சூப்பர்மார்க்கெட்டுகள், ஹைபர்மார்க்கெட்டுகள், டிபார்ட்மென்ட் கடைகள், ப்ரீ-ஸ்கூல்கள்,நர்சிங் ஹோம்கள், தனிப்பட்ட வாங்குபவர்கள்,சேவை நிறுவனங்கள்,வ டிவமைப்பாளர்கள், அமைப்புகள் மற்றும் ஆலோசனையாளர்கள் போன்றவர்கள் இந்த தொழில்நுட்ப வல்லுநர்களில் இடம்பெற்றுள்ளனர்.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/843470/CBME_Logo.jpg )
சீனா, கொரியா, ஹாங்காங், ஆஸ்திரேலியா,கனடா, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், ரஷ்யா மற்றும் தைவான் போன்ற 10 கண்காட்சி நாடுகளிலிருந்து சர்வதேச கண்காட்சியாளர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட தேசிய கண்காட்சியாளர்களின் பங்களிப்பை மூன்று நாள் கண்காட்சி காணும். குழந்தை பராமரிப்பு தயாரிப்புகள், பொம்மைகள், குழந்தை உணவு, ஆர்கானிக் உடைகள், ஊட்டச்சத்து பொருட்கள், எர்கோனாமிக் ஃபர்னிச்சர்கள், உரிமம் பெற்ற பிராண்டுகள், ஸ்டேஷனரிகள், பரிசுகள், குழந்தை பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் மூளை மேம்பாட்டு கருவிகள் போன்றவற்றில் மிகவும் உயர்ந்த தரமுடைய, தொழில்நுட்ப அளவில் மிகவும் மேம்பட்ட மற்றும் பார்ப்பதற்கு கண்ணை கவரும் தோற்றத்தை கொண்ட தயாரிப்புகளின் அணிவரிசையை 450க்கும் அதிகமான பிராண்டுகள் காட்சிபடுத்த உள்ளன. மிகவும் குறிப்பாக, முக்கிய அமைப்புகளான All India Association of Industries (AIAI); Indian Imports Chamber of Commerce and Industry (IICCI); Franchising Association of India and Licensing Industry Merchandisers' Association (LIMA)ஆல் கண்காட்சிக்கு முழு அளவில் ஆதரவு தர உள்ளன.
சில முக்கிய கண்காட்சியாளர்களாக Artsana India Pvt Ltd - Chicco, Nobel Hygiene Pvt Ltd, Mitsui & Co. India Pvt. Ltd. - Merries, PUR Thailand, Tiny Twig Apparel Pty Ltd., Softsens Consumer Products Private Limited, NOVATEX GmbH, First Care India Private Limited - BuddsBuddy, Azafran Innovacion Ltd., American Hygienics Corporation, Mother and Babycare Inc. - Little Angel, Indify Ventures - OK Baby & BEABA, Maiden Distributors மற்றும் பலரும் பங்குகொள்வர், அவர்கள் இந்த வளர்ந்துவரும் தொழில்துறையில் தங்கள் புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் நவீன தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளனர்.
வரப்போகும் CBME 2019 பற்றி Mr. Yogesh Mudras, Managing Director, UBM India பேசும்போது, "இந்தியாவில் 2020வரை 17% (CAGR) உத்தேச வளர்ச்சி விகிதம் கொண்ட குழந்தைப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு தயாரிப்பு தொழில்துறை, சமீபத்திய வருடங்களில் முழுமையான புதிய மாற்றங்களுக்கு உட்பட்டு வருகிறது. பிற வளரும் நாடுகளை விட இந்தியாவை மதிப்புமிக்க சந்தையாக இவை உருவாக்கியுள்ளன. முன்னதாக, இந்த தொழில்துறை தோன்றிய நிலையிலேயே இருந்தது மேலும் இந்திய நோக்கில் முக்கிய பங்கு வகித்தது, ஆனால் சந்தையில் கிடைக்கும் சமீபத்திய குழந்தை கவனிப்பு உபகரணங்களை பயன்படுத்த விரும்பும் தற்கால நவீன பெற்றார்களின் அதிகரித்த விருப்பத்தினால் இது இயக்கப்படுகிறது. அதன்படி முக்கிய தயாரிப்பாளர்கள் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட சந்தைப்படுத்தல் அணுகுமுறைகளை பயன்படுத்துவதன் மூலம் புதிய உத்திகளை மேம்படுத்தி சந்தையை விரிவுபடுத்தியுள்ளனர்.'
அவர் மேலும், 'குழந்தை வளர்ப்பை எளிதாகவும் மகிழ்ச்சியாகவும் உண்மையிலேயே மாற்றும் தரமான தயாரிப்புகளுக்கான விழிப்புணர்வை மற்றும் தேவையை இந்த சந்தையில் உருவாக்குவதில் CBME முக்கிய பங்கு வகிக்கிறது. ஊடுருவல், அடைதல் மற்றும் குழந்தை, குழந்தைப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளின் வகைகளை அதிகரித்து வியாபாரத்தை விரிவுபடுத்த ஒட்டுமொத்த வாங்குபவர் மற்றும் விற்பவர் சமூகத்தை இணைக்கிறது.' என்று கூறினார்.
இந்தியாவில் விரைவாக விரிவடைந்து வரும் மற்றும் பலவகையான சில்லரை பிரிவுகளை கொண்ட தொழில்துறையில், ஆற்றல் நிறைந்த அறிவு அமர்வுகள், கருத்தரங்குகள், புதிய டிரென்டுகள் மற்றும் பல்வேறு சர்வதேச காட்சிக்கூடங்களின் கலந்தாலோசனைகள் அடங்கியதாக CBME 2019 மூன்று நாள் கண்காட்சி நடைபெற உள்ளது. பல்வேறு உரிமம் வழங்கும் தொழில்துறையுடன் இணைந்து சிறப்பு உரிமம் பெற்ற காட்சிக்கூடம் LIMA ஆல் துவக்கப்பட்டு பல்வேறு தரப்பினரையும் கவரக்கூடியதாக அமையும். இந்த அம்சமானது உலகெங்கிலுமுள்ள உரிமம் வழங்கும் நிறுவனங்களின் வளர்ச்சியை அதிகபடுத்தி, உரிமம் வழங்கும் பயிற்சியாளர்களின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தி மேலும் இந்திய வியாபார சமூகத்தில் உரிமம் பெறுவது பற்றிய சிறந்த விழிப்புணர்வையும் அளிக்கும். இந்த காட்சிக்கூடமானது பல்வேறு உரிமம் வழங்கும் வாய்ப்புகளையும் மேலும் உலகளவில் பிராண்டு உரிமம் பெறுவது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க உரிமம் வழங்கும் வல்லுநர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பையும் வழங்கும். குழந்தை ஃபேஷன் டிரென்டுகள், பொம்மை டிரென்டுகள் மற்றும் ரீடெய்ல் கருத்து பற்றி CBME India 2019 ன் மற்றொரு டிரென்டு கூட்டாளியான WGNS ஆல் வழங்கப்படும் பல்வேறு கருத்தரங்குகளும் இதன் சிறப்பான அம்சமாக விளங்கும். 'குழந்தை ஆடை சந்தை மீதான விரைவு ஃபேஷன் தாக்கம்' மற்றும் 'நீடிப்புத் திறனை ஒருங்கிணைக்க பிராண்டுகள் எவ்வாறு மூடிய சுற்று ரீசைக்கிளிங் முறையை தேர்வு செய்கின்றன' போன்ற தலைப்புகள் தொழில்துறை பேச்சாளர்களால் இரு நாள் மாநாட்டில் கலந்துரையாடப்பட உள்ளன.
பிரபலமான மற்றும் வளர்ந்துவரும் வடிவமைப்பாளர்கள், பிராண்டுகள் மற்றும் உற்பத்தியாளர்களிடமிருந்து தரமான குழந்தைகளுக்கான(வயது 0-14 வருடங்கள்) ஃபேஷன் தயாரிப்புகள் மற்றும் ஆடைகளை Cool Kids Fashion India உடன் இணைந்து UDAAN கண்காட்சியில் காட்சிப்படுத்தும் .
900க்கும் அதிகமான நகரங்களுக்கிடையே 300 k சில்லரை வியாபாரிகளுடன் நாட்டிலேயே மிகப்பெரிய காலணி விநியோக தளமாக Udaan உருவாகியுள்ளது. Udaan தொழில்துறையில் அதன் இணைப்பை மேலும் வலுப்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறது, மேலும் CBME India ஐ சிறந்த தளமாக கண்டறிந்துள்ளது. 'Udaan க்கான முக்கிய நுகர்வோர் வகையாக குழந்தைகளின் காலணிகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு மாதமும் 1மில்லியனுக்கும் அதிகமாக விற்பனை செய்து காலாண்டுக்கு 100% வளர்ச்சி நாங்கள் வளர்ச்சியடைந்துள்ளோம். 2019 இறுதிக்குள் 1.5 இலட்சத்துக்கும் அதிகமான குழந்தை காலணிகள் கடைகளுடன் கூட்டிணைந்து Udaan ஐ நாட்டின் மிக விரும்பப்படும் குழந்தை காலணி விநியோகஸ்தராக உருவாக்க முயற்சித்து வருகிறோம்.' இவ்வாறு Ankit Agarwal - Business Head - Apparels & Accessories, Udaan கூறுகிறார்.
தனிப்பட்ட மற்றும் புதுமையான மதிப்பு கொண்ட கண்காட்சியாளர்கள் மற்றும் வருகையாளர்களின் தேடலில் இந்த வருடம் CBME India, கொரியாவின் காட்சிக்கூடமான Korea Federation of Clothing Merchant Federation மற்றும் Hong Kong Children Babies Maternity Industries Association (HKCBMIA) காட்சிக் கூடத்தையும் காண உள்ளது.
CBME India பற்றி :
ஜூன் 2018ல் Informa PLC உடன் சமீபத்தில் கூட்டணைந்துள்ள ஒரு உலகின் முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் மிகப்பெரிய B2B நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் UBM Asia ஆல், CBME India ஒருங்கிணைக்கப்படுகிறது. CBME India பற்றி அதிக தகவல்களுக்கு தயவுசெய்து (http://www.cbmeindia.com) வருகை தரவும் மேலும் ஆசியாவில் எங்களது இருப்பை பற்றி தெரிந்து கொள்ள https://www.ubm.com/global-reach/ubm-asiaக்கு வருகை தரவும்.
UBM Asia பற்றி:
Informa PLC உடன் சமீபத்தில் கூட்டணைந்துள்ள UBM Asia, ஒரு உலகின் முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் மிகப்பெரிய B2B நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆகும். ஆசியாவில் எங்களது இருப்பை பற்றி மேலும் தகவல் அறிய தயவுசெய்து வருகை தரவும் http://www.ubm.com/asia.
ஊடக கேள்விகளுக்கு தயவுசெய்து தொடர்பு கொள்ளவும் :
UBM India
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
+91-9833279461
Share this article