8-வது டெல்லி ஆபரண மற்றும் ஜெம் கண்காட்சி ஜொலிக்கிறது
ஜெம் & ஆபரண தொழில்துறையிலிருந்து 650-க்கும் மேற்பட்ட முன்னணி பிராண்டுகளையும் 300-க்கு மேற்பட்ட கண்காட்சியாளர்களையும் ஒன்றிணைத்தது.
புது டெல்லி, Oct. 14, 2019 /PRNewswire/ -- வட இந்தியாவின் மிகப்பெரிய மூன்று நாள் Delhi Jewellery & Gems Fair (DJGF) 2019, ஒரு முன்னணி B2B நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக உள்ள Informa Markets in India-வினால் (முன்னர் UBM India) வெற்றிகரமாக நடத்தப்பட்டு 30 செப். 2019 அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. 10 நாடுகளிலிருந்து வந்த 300-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களும் 650-க்கும் மேற்பட்ட பிராண்டுகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்தக் கண்காட்சியை சிறப்பு விருந்தினர்களான பாலிவுட் நடிகை Radhika Apte அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது; இதில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்களில் திரு. Yogesh Singhal - President, The Bullion and Jewellers Association; திரு Michael Duck - Executive Vice President Asia Informa Markets Group Chief Representative for China; திரு, Yogesh Seth, Regional Chairman North India, GJEPC; திரு. Yogesh Mudras, Managing Director for Informa Markets in India மற்றும் திரு Abhijit Mukherjee - Group Director for Informa Markets in India ஆகியோர் அடங்குவர்.
கண்காட்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றிய நடிகை Radhika Apte, "பெரும்பான்மையான பெண்களைப் போன்று நானும், ஆபரணங்களை விரும்புகிறேன். என்னுடைய அம்மாவும் பாட்டியும் விரும்பிய பாரம்பரியமிக்க பழைய ஆபரணங்களை நான் விரும்புவேன். இந்த ஆண்டும்கூட, பாரம்பரியமான மற்றும் கிளாசிக்காக உள்ள பல்வேறு வகைப்பட்ட ஆபரணங்களின்மீது கவனம் செலுத்தியிருக்கிறோம். பல வடிவமைப்புகளில் உள்ள நெக்லேஸ்கள், ஆங்க்லெட்ஸ்கள், மற்றும் வெய்ஸ்ட் பெல்ட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நவீன காலங்களில், ஆபரணம் என்பது மேம்பட்டதாகி விட்டது. இன்று அது ஒரு உணர்வு ரீதியான மதிப்பையும், ஃபேஷனையும், தன்னுடைய அடையாளத்தைக் குறிப்பதாகவும் அமைந்து விட்டது. ஆகவே, சரியான ஆபரணத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியமாகிவிட்டது. ஃபேஷன் டிரெண்டுகள் அடிக்கடி மாறிக்கொண்டிருக்கும் நிலையில், உங்களிடம் சொந்தமாக கிளாசிக் மற்றும் காலத்தால் அழியாத ஆபரணங்கள் எல்லாக் காலங்களிலும் அணியக்கூடிய வகையில் இருக்க வேண்டும்."
"வட இந்தியர்கள் எப்போதும் பாரம்பரியமான, கிளாசிக்கான மற்றும் போல்டான வடிவமைப்புகளை எப்போதும் விரும்புவதால், நீங்கள் எப்போதும் DJGF-ல் மிகச் சமீபத்திய ஸ்டைல்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம். அது சரியான பொருத்தமாக இருக்கும்" என்று மேலும் ஆப்தே பேசினார்.
கண்காட்சியில் பேசிய Informa Markets in India-வின் நிருவாக இயக்குநரான திரு. யோகேஷ் முத்ராஸ் பேசும்போது, "8-வது டெல்லி ஜெம்ஸ் & ஆபரண கண்காட்சியை சரியான சமயத்தில் தொடங்கி வைத்திருக்கிறோம். நிதி அமைச்சகத்திடமிருந்து ஜொலிக்கும் விழாக்காலப் பரிசாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள GST வரிக் குறைப்பு நடவடிக்கை வந்திருக்கிறது. ஜெம்ஸ் மற்றும் ஆபரணத் துறையில் வெட்டப்பட்டு பாலிஷ் செய்யப்பட்ட செமி-பிரஷியஸ் ஆபரணங்களுக்கான GST வரி 0.25 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது தற்போது 3 விழுக்காடாக உள்ளது. இதனால், ஆபரணங்களின் தேவை அதிகரிக்கும் என நம்புகிறோம்."
"இந்த சீராக்க நடவடிக்கைகள் காரணமாக ஜெம்ஸ் மற்றும் ஆபரணத் துறையில் பல வழிகளில் அதன் பொலிவைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய நடவடிக்கைகள் இந்தியாவில் மிகப்பெரிய தொழில்களில் ஒன்றாக, நாட்டின் GDP-யில் 7 விழுக்காடு அளவுக்கும், இந்தியாவின் மொத்த வர்த்தக ஏற்றுமதியில் 15.71 விழுக்காடு அளவுக்கும் பங்களிக்கும் இந்தத் துறைக்கு ஊக்கமளித்து, நம்பிக்கையோடு பன்முகத்தன்மை வாய்ந்த, அதிகாரப்பூர்வமான, வெளிப்படைத்தன்மையுள்ள சலுகைகளை அளிக்க உதவுவதோடு, சிறு மற்றும் புதிய வர்த்தகர்களுக்கு கடன் சலுகைகளையும் வழங்கும். அமைப்புசார் ஆபரணத் துறையில் அதிகமான பணப் புழக்கத்தையும் கொண்டு வரும். இந்த மிக வேகமாக வளர்ந்து வரும், ஏற்றுமதி சார்ந்த மற்றும் தொழிலாளர் அதிகமுள்ள ஜெம்ஸ் மற்றும் ஆபரணத் துறை மிக அதிகமான வெளிநாட்டுச் செலாவணியைக் கொண்டு வருவதோடு, அமைப்பு சார்ந்து மற்றும் அமைப்புசாராத 4.64 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்குகிறது" என்று மேலும் அவர் தெரிவித்தார்.
"DJGF 2019 சர்வதேச ஜூவல்லர்களுக்கும் & வர்த்தகர்களுக்கும் இணைப்புப் பாலமாக அமைந்தது மட்டுமல்லாது, இந்திய ஜூவல்லர்களுக்கும் வடிவமைப்பாளர்களுக்கும் தங்களுடைய பிராண்டுகளையும் வடிவமைப்புகளையும் உலகுக்குக் காட்ட வாய்ப்பாகவும் அமைந்தது. இந்திய ஜெம்ஸ் & ஆபரணச் சந்தை மதிப்பு INR 7500 கோடியாகும். எதிர் காலத்தில் விரைவிலேயே மிக வேகமாக வளர்ச்சியடையும் எல்லா சாத்தியங்களும் உள்ளன. நம்முயைட நிறுவனங்களுக்கும், ஏற்றுமதி & இறக்குமதி வர்த்தகர்களுக்கும் வளர்ச்சியடையும் பெருகவும் பெரிய வாய்ப்பை இது அளிக்கிறது" என்றால் திரு. முத்ராஸ்
டிரென்டிங் ஜூவல்லரி மற்றும் அதன் வடிவமைப்புகளுக்கான தேவை உலக அளவில் இத்துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப அதிகரித்திருக்கிறது. DJGF சர்வதேச பிராண்டுகளை இந்தியாவில் அதன் முக்கிய முடிவெடுக்கும் அதிகாரமுடையவர்களுடனும், இறுதிப் பயனர்களுடனும் இவை இணைக்கிறது என்பதால், இந்தியாவில் தொழில்களை ஏற்படுத்த இந்தியாவின் ஃபேஷன், லைஃப்ஸ்டைல், உற்பத்தி மற்றும் சில்லறை வர்த்தகத் துறைகளுக்கு ஒரு நல்ல தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இந்த மூன்று நாள் கண்காட்சியில் தனித்துவமான மற்றும் டிரெண்டிங் ஜூவல்லரிகள் இடம் பெற்றன. துபாய், சிங்கப்பூர், நேப்பாளம், மலேசியா மற்றும் சீனாவிலிருந்து கொள்முதலாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.
இந்தக் கண்காட்சியின்போது, பல உலகத் தரமிக்க ஒர்க்ஷாப்களும், கருத்தாழமிக்க கருத்தரங்குகளும் துறை சார்ந்த நிபுணர்களால் நடத்தப்பட்டன. முக்கியமான பங்குரிமையாளர்கள் இதில் கலந்துகொண்டனர். 5-வது Retail Jewellers Guild Awards (RJGA)-யும் இந்தக் கண்காட்சியில் வழங்கப்பட்டன.
இந்தக் கண்காட்சியில் அங்கம் வகித்த முக்கியமான நிறுவனங்களின் பட்டியலில் Shree Balaji Gold, Beera Jewellers, I P Jewellers, The Bank Street Jewellers, Vijay Enterprises, Goel Jewellers, N.K Chain Pvt Ltd., Unique Chain, Swaranshilp, Vikas Chain & Jewellery Pvt Ltd., Uphaar, Zar, Rohtak Chain & Jewellery, Royal Chain, Blue Stone and Vimal Diamond, Zeya by Kundan ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கண்காட்சியின் தொடக்கமாக ஹால்டுவானி (உத்தராகண்ட்), வாரணாசி (உ.பி), அம்பாலா (ஹரியானா) பொன்றவட இந்திய நகரங்களில் Informa Markets in India பல வரிசையான வெற்றிகரமான ரோடு ஷோக்களை நடத்தி கண்காட்சியை பிரபலமாக்கியிருக்கிறது. இன்னும், குவாலியர் (ம.பி), ஜோத்பூர் (ராஜஸ்தான்) மற்றும் மீரட் (உ.பி) ஆகிய இடங்களில் நடத்தவும் திட்டமிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள ஜூவல்லரி கடைகளிலும் பல நடவடிக்கைகள் இதன் அங்கமாக நிகழ்ச்சிக்கு முந்தைய நிகழ்வுகளாக நடத்தப்பட்டன.
இந்தக் கண்காட்சி தொழில்துறையினரால் ஆபரணத் துறையின் ஒரு அங்கமாகக் கருதப்படுகிறது. இதற்கு, 150-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவளித்துள்ளன. அவர்களில் The Bullion & Jewellers Association; Delhi Jewellers Association; Maliwara Jewellers Association, Delhi; Karol Bagh Jewellers Association மற்றும் Meerut Traders Association ஆகியோர் முக்கியமானவர்களாகக் குறிப்பிடலாம்.
தன்னுடைய முதலாவது எடிஷனில் பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் இன் இன்டியா (Informa Markets in India) ரீட்டெய்ல் ஜூவல்லரி துறைக்காக இன்டியாஸ் மோஸ்ட் பிரிஃபெர்டு (IMP)-ஐ நடத்தியுள்ளது. IMP முன்முயற்சியின் நோக்கம் ஒரு தேசிய அளவிலான இந்தியாவின் மிகவும் பிரபலமான ஜூவல்லரி பிராண்டுகளை அடையாளம் காண்பதும், 2 ஆண்டு காலத்திற்கு பெருமைமிக்க ÍMP லோகோவைக் கொண்டிருக்கும் தனித்துவமான சிறப்புரிமையை அவர்களுக்கு அளிப்பதும் ஆகும்.
Informa Markets (இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ்) பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை இன்ஃபோர்மா மார்க்கெட் உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் (Informa Markets) மற்றும் இந்தியாவில் எம்முடைய தொழில் பற்றியும்
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும். Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் எலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம். இந்தியாவில் மும்பை, புது டில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது.
எந்த ஒரு ஊடக விசாரணைகளுக்கும் தயவுசெய்து இவர்களைத் தொடர்பு கொள்ளவும்:
ரோஷினி மித்ரா
[email protected]
மிலி லால்வாணி
[email protected]
+91-9833279461
இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் இன் இன்டியா (Informa Markets in India)
புகைப்படம்: https://mma.prnewswire.com/media/1009572/Radhika_Apte_Yogesh_Mudras_DJGF.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/960525/DJGF.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
Share this article