2025 ஆம் ஆண்டிற்குள் துபாய்க்கு 25 மில்லியன் பயணிகள் வந்து செல்வதை உறுதி செய்வதற்காக துபாயின் DET உடன் Akbartravels.com இணைகிறது.
மும்பை, இந்தியா மற்றும் துபாய், Nov. 2, 2022 /PRNewswire/ -- துபாய் 2022 ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே கிட்டத்தட்ட 71.2 லட்சம் சர்வதேச பயணிகளை ஈர்த்துள்ளது, துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் (DET) அறிக்கையின்படி இது 2021 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் வருகைபுரிந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையான 25.2 லட்சத்தை விட மூன்று மடங்கு அதிகம். சுற்றுலாப் பயணிகளின் அதிக கருத்தில் கொண்டு, DET 2025 ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு 25 மில்லியன் பயணிகள் வருகைபுரிவதையும் உலகில் அதிகம் வருகைபுரியப்பட்ட மற்றும் மறு வருகைபுரியப்பட்ட இடம் என துபாயின் நிலையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய ஆன்லைன் பயணத் தளமான Akbartravels.com, துபாயின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறையுடன் இணைந்து 2025 ஆம் ஆண்டுக்குள் உலகில் அதிக பயணிகள் வருகைபுரிந்த இடம் என்ற அந்தஸ்தை பெற விரும்பும் துபாயின் லட்சிய இலக்கை அடைய உதவுகிறது. "நாடு முழுவதும் தடையற்ற துபாய் விசா செயலாக்கத்தை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தங்களின் வேலைப்பளு, கால அட்டவணை அல்லது இருப்பிடத்தைப் பற்றிய கவலையில்லாமல் நெறிப்படுத்தப்பட்ட விசா விண்ணப்ப செயல்முறைக்கான முழு அணுகலை எங்கள் வாடிக்கையாளர்கள் அவர்களின் வீடு, அல்லது அலுவலகத்தில் இருந்து பெறுவதை எங்கள் ஆன்லைன் விசா தளம் உறுதி செய்கிறது. மேலும் அவர்கள் விரும்பும் கூடுதல் உதவிகள் மற்றும் பேப்பர்லெஸ் அனுபவத்தையும் வழங்குகிறது. எங்களுடைய விரிவான அனுபவத்தின் அடிப்படையில், பயண வணிகத்தில் மற்றவர்களை விட அதிக எண்ணிக்கையில் துபாய் விசாக்களை செயலாக்கியதற்கான சாதனைப் பதிவு எங்களிடம் உள்ளது. பயண முன்பதிவு தளம் என்ற நிலையை விட, Akbartravels.com என்பது மக்களின் பயணக் கனவுகளை நனவாக்கும் ஒரு ஊடகமாகும். எங்கள் அனுபவம் மற்றும் பயணத்தின் மீதான காதலும் இணைந்து, வாடிக்கையாளர்களுக்கு மிகவும் அற்புதமான அனுபவங்களை வழங்குகிறது" என்று தனது கருத்துக்களை Akbartravels.com நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி. பெனாசிர் நாசர் பகிர்ந்து கொண்டார்.
டிராவல் போர்ட்டல் முழு டிஜிட்டல் மயமாக்கப்பட்ட விசா விண்ணப்ப முறையை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் இந்தியப் பயணிகள் தங்கள் துபாய் விசா தேவைகளை ஒரு சில கிளிக்குகளில் ஆன்லைனில் பெறலாம், இது மிகவும் வசதியானது, சிக்கனமானது, உதவிகரமானது, நேரத்தை மிச்சப்படுத்துகிறது மற்றும் சுலபமானது. சுற்றுலா மற்றும் வணிக நோக்கத்திற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்குப் பயணத்தை எளிதாக்குவதற்கு ஆன்லைன் விசா தளம் முக்கியமானது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்தியப் பயணிகள் 30 முதல் 90 நாள் விசாவிற்கு தேர்வு செய்து, விசாவின் வகை அல்லது காலத்தைப் பொருட்படுத்தாமல், ஒரே தளத்தில் விசா கட்டணத்தை செலுத்துவது உட்பட அனைத்திற்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
Tripadvisor's 2022 Travellers Choice Awards -இன் படி, துபாய்க்கு மூன்று மதிப்புமிக்க தலைப்புகள் வழங்கப்பட்டன: சிறந்த உலகளாவிய இடத்திற்கான Tripadvisor Travellers' Choice Awards -களின் உலகளாவிய பட்டியலில் #1, நகரப் பிரியர்களுக்கான பட்டியலில் #1 மற்றும் 'உணவு பிரியர்களுக்கான பட்டியலில் #4. '2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஹோட்டல்களில் தங்குவதில் எமிரேட் 82% உடன் உலகளவில் நம்பர்.1 இடத்தை அடைந்தது. இந்த உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகளிடையே துபாயின் மோகம் நன்கு புரிகிறது.
Akbartravels.com அறிமுகம்
Akbartravels.com என்பது பாரம்பரிய அக்பர் குழுமத்தின் ஒரு பகுதியாகும், இது சுற்றுலா மற்றும் கார்ப்பரேட் பயணிகளுக்கு மிகச்சிறந்த பயண திட்டமிடல் அனுபவத்தை வழங்குகிறது, அதே நேரத்தில் தொழிற்துறையில் கிடைக்க கூடிய அனைத்து பயண சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்குகிறது. உங்கள் பயணம் அருகில் இருக்கும் நாட்டிற்கு அல்லது வெகுதொலைவில் இருக்கும் நாட்டிற்கு என எதுவாக இருந்தாலும், அக்பர் டிராவல்ஸ் விமான டிக்கெட்டுகள், விசா சேவைகள், ஹோட்டல் முன்பதிவுகள், குழுப் பயணம், அனைத்தையும் உள்ளடக்கிய உலக சுற்றுப்பயணங்கள், கப்பல் உல்லாச பயணங்கள், வாடகை கார்கள், அந்நிய செலாவணி மற்றும் பல சேவைகளை முழுமையாக வழங்குகிறது மேலும் சிறந்த விலை மற்றும் சலுகைகளுடன் கூடுதல் சிறப்புடையதாகவும் மாற்றுகிறது. உயர் பயிற்சி பெற்ற விசா நிபுணர் குழுவினர் பணிபுரியும் Akbartravels.com, துபாய் அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு விசா தேவைகளின் அனைத்து அம்சங்களிலும் தனிநபர்கள் மற்றும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதிலும் வழிகாட்டுவதிலும் வலுவான உலகளாவிய நற்பெயரைப் பெற்றுள்ளது. அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து, சமர்ப்பித்து சரியான நேரத்தில் ஒப்புதல் பெறப்படுவதை உறுதி செய்கிறது.
ஊடகத் தொடர்பு:
மார்க்கெட்டிங் மற்றும் PR குழு
தொடர்பு எண் : +91-(0)22-40666444
மின்னஞ்சல் ID: [email protected]
லோகோ: https://mma.prnewswire.com/media/1902849/Akbar_Travels_Logo.jpg
Share this article