13-வது CPhI & P-MEC India Expo உலகளாவிய மருந்துத் துறையியில் மிகப்பெரிய மாற்றத்தை முன்னெடுத்தது
மிக அதிகமான பாராட்டைப் பெற்ற India Pharma Week-ஆனது Informa Markets in India-வினால் Greater Noida-வில் உள்ள India Expo Centre-ல் இணைத்து நடத்தப்பட்டது
புது டெல்லி, Nov. 27, 2019 /PRNewswire/ -- இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் இன் இன்டியா (Informa Markets in India) (முன்னர் UBM India) தெற்காசியாவின் மிகப்பெரிய 13-வது CPhI & P-MEC India expo-வின் மூன்ற நாள் கண்காட்சியை நவம்பர் 26 முதல் நவம்பர் 28, 2019-வரை Greater Noida-வில் உள்ள India Expo Centre-ல் நடத்தியது. Informa Markets-ன் இந்த முக்கியமான நிகழ்ச்சியில் உலகெங்கிருந்தும் 44 நாடுகளிலிருந்து 1,600 கண்காடசியாளர்களும் துறையின் முன்னணியாளர்களும் கலந்துகொண்டனர். உலகெங்கும் மருந்துத் துறையில் ஏற்பட்டுள்ள மிகச் சமீபத்திய வளாச்சிகளை இந்தக் கூட்டம் பிரதிநிதித்துவம் செய்தது. Pharmexcil, CIPI மற்றும் IDMA போன்ற மருந்து ஆட்சிக்குழுக்கள் இந்த கண்காட்சிக்கு ஆதரவளித்து மற்றொரு மிகச்சிறந்த நிகழ்ச்சியாக ஆக்கினார்கள்.
Pharmexcil-ன் Chairman-ஆன Dr. Dinesh Dua; Indian Pharmaceutical Machinery Manufacturers Association-ன் President-ஆன Mr. Mahendra Mehta; IPMME-யின் Vice President-ஆன Mr. Samir Limaye; Pharmexcil-ன் Director-General-ஆன Mr. Ravi Uday Bhaskar; Supriya Lifesciences-ன் CMD-யான Dr. Satish Wagh; Informa Markets in Asia-ன் Executive VP-யான Mr. Michael Duck, Managing Director-ஆன Mr. Yogesh Mudras மற்றும் Group Director-ஆன Mr. Rahul Deshpande மற்றும் உலகெங்கிலுமிருந்து வந்த துறை நிபுணர்கள் பலரும் இணைந்து இந்தக் கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.
இந்த ஆண்டு நடைபெறும் 13-வது CPhI & P-MEC India expo-வைப் பற்றிப் பேசிய Informa markets in India-ன் Managing Director-ஆன Mr. Yogesh Mudras பேசும்போது, "CPhI & P-MEC India-ன் கடந்த 12 கண்காட்சிகளுமே மருந்துத் துறையின் மேம்பாட்டுக்கு வழிவகுத்திருக்கின்றன. மருந்துத் துறையில் உள்ள முன்னணியாளர்கள் தங்களுடைய பங்களிப்பை அந்தத் துறைக்கு சமர்ப்பிக்கவும், அதே சமயம் தங்களுடைய இணை நிறுவனங்களின் பங்களிப்புகளைப் பார்க்கவும் ஒரு தளத்தை அளிப்பதில் எப்போதும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 12% ஆண்டு வளர்ச்சியைக் காணும் இந்திய மருந்துச் சந்தை உலகச் சந்தையின் வளர்ச்சியோடு ஒப்பிடுகையில் சுமார் இருமடங்கு அளவுக்கு சீரான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இப்படிச் சொல்லும் அதே சமயம், புதிய சந்தைப் போக்குகளை அறிந்து, புத்தாக்கம் செய்து புதிய வாய்ப்புகளுக்கு ஏற்ப தகவமைத்துக்கொண்டாலன்றி, இந்த மாறிவரும் உலகச் சந்தையில் நமது இடத்தை இழந்துவிடும் அபாயம் உள்ளது" என்றார்.
"PhI & P-MEC India Expo என்பது, மருந்துத் துறையின் பல நிகழ்வுகளைக் கொண்டாடும் India Pharma Week (IPW)-ன் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாக உள்ளது. இது நேற்று தொடங்கிய 4-வது Pre-Connect Congress-உடன் தொடங்கியுள்ளது. மருந்துத் துறையின் உண்மையான போக்கிற்கு இணங்க இந்திய மருந்துத் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியை எட்டும் நோக்கில் இந்த ஆண்டு 'Adapt, Collaborate and Reinvent' என்பது IPW-வின் குறிக்கோளாக உள்ளது. 'நாம் தகர்க்கப்படுவதைத் தவிர்க்க தகர்ப்பைத் தழுவிக் கொள்வது' அவசியமாகிறது. இதைச் சாதிக்க, இந்திய நிறுவனங்கள் குறைந்த விலை நிர்ணயிக்கும் போக்கைத் தவிர்க்க வேண்டும், தங்களுடைய தயாரிப்புகளை பன்மையாக்க வேண்டும், மருத்துவ ஆய்வுச் சந்தை, உயர் வகை மருந்துகள், கிராமப்புறச் சந்தையை அடைதல், மற்றும் Contract Research and Manufacturing Services (CRAMS) ஆகியவற்றின் வழியாக வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் விரிவாக இந்த அதிக தாக்கம் செலுத்தக்கூடிய பிரபலமான கண்காட்சியின்போது விவாதிக்கப்படும்".
India Expo Centre-ல் நடைபெறும் IPW-யில், தொழில்துறை பங்காளர்களும் நிபுணர்களும் கண்காட்சியில் கலந்துகொண்டு, ஒரே தளத்தின்கீழ் நெட்வொர்க் ஏற்படுத்திக்கொண்டு துறையின் வளர்ச்சியைக் கொண்டாடலாம். Delhi-NCR வட்டாரத்தில் நடத்தப்படுவதால், மைய அரசின் அதிகார வட்டாரம் உட்பட்ட வடக்குப் பிரிவு மையங்களில் முழுமையான மருந்துசார் சூழலமைப்பை ஏற்படுத்தி வளர்க்க முக்கியமான காரணியாக அமைந்துள்ளது.
CPhI & P-MEC India expo-வில் கலந்து கொள்ளுபவர்களில் ACG, Excellence United, Aurobindo Pharma, Nectar Lifesciences, Hoong-A Corporation, Supriya Lifesciences, IMA, GEA Group, Optel Group, Bosch, Bowman & Archer, Solace Engineers, Morepen Laboratories, Hetero Labs, Neogen Chemicals, Akums Drugs & Pharmaceuticals, Granules India, Acebright Pharma, Zim Laboratories, Nitika Pharmaceuticals Specialities, Scope Ingredients, Evonik India, Colorcon Asia, Pioma Chemicals, IMCD India, Accupack Engineering, Pharmalab India, Ace Technologies, Gerresheimer, Uflex, Nipro PharmaPackaging, மற்றும் Indo German Pharma Engineers போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
கண்காட்சியின் 1-வது நாளில், IPW-வின் கீழ்க்காணும் நிகழ்வுகளும் நடக்க உள்ளன:
CEO வட்டமேசை: துறையின் தலைவர்கள் ஒருங்கிணையும் விதத்தில் நடத்தப்பட்ட CEO வட்டமேசை துறையில் மாற்றத்தை உருவாக்கும் தலைவர்களின் மாநாடாகும். இந்த வட்டமேசை அமர்வில் துறையைச் சார்ந்த Fermenta Biotech Ltd.-ன் CEO-வான Mr. Prashant Nagre; RPG Life Sciences Ltd-ன் Managing Director-ஆன Mr. Yugal Sikri; Abbott Specialty Care-ன் Managing Director and General Manager-ஆன Mr. Vivek Vasudev Kamath; Amneal Pharmaceuticals- India-வின் President-ஆன Mr. Sanjay Kumar Jain; Eisai Pharmaceuticals India Pvt. Ltd.-ன் Managing Director-ஆன Dr. Sanjit Singh Lamba; Nectar Lifesciences Limited-ன் Chairman-ஆன Dr. Dinesh Dua; Fourrts (India) Laboratories Private Limited-ன் Chairman & Managing Director-ஆன Mr. S. V. Veerramani போன்றவர்கள் துறையில் உள்ள பிரச்சனைகள் பற்றியும் அவற்றைத் தீர்ப்பதற்கான சிறந்த வழிகள் பற்றியும் பேசுவார்கள்.
India Pharma Awards (IPA) & நெட்வொர்க்கிங் இரவு: மருந்துத் துறையின் சாதனையாளர்களுக்கான இரவு. துறைக்கு தங்களுடைய மேலான பங்களிப்பை ஆற்றியவர்களை அங்கீகரிக்கும் விதத்தில் இந்த சமீபத்திய India Pharma Awards வழங்கப்படுகிறது. Biocon-ன் CEO-வான Dr. Arun Chandavarkar தன்னுடைய தலைமை உரையை ஆற்றுவார்.
CPhI & P-MEC expo பற்றி:
CPhI Worldwide-லிருந்து உதித்த - CPhI India தெற்காசியாவின் முன்னணி மருந்து நிறுவனங்கள் சந்திக்கும் முக்கிய இடமாக மாறியுள்ளது. மருந்துக் கண்டுபிடிப்பு முதல் சப்ளை செயினின் மருந்து விற்கப்படும்வரை API-யின் CROs, CMOs மற்றும் உற்பத்தியாளர்கள், ஜெனரிக்ஸ், எக்ஸிபியன்ட்ஸ் மற்றும் மருந்து இணைவு, இரசாயனங்கள், பயோசிமிலர்ஸ், தயாரிக்கப்பட்ட மருந்துகள், ஆய்வக இரசாயனங்கள் மற்றும் உயிரித் தொழில்நுட்பம் போன்ற எல்லா பிரிவினரும் இதில் இடம் பெறுகின்றனர்.
மற்றொரு பக்கம் P-MEC என்பது பார்மா எந்திரங்கள் மற்றும் சாதனங்கள், பகுப்பாய்வு சாதனம், ஆட்டோமேஷன்& ரொபாட்டிக்ஸ், பேக்கேஜிங் சாதனங்கள் & சப்ளைஸ், தொழிற்சாலை / ஃபசிலிட்டி எக்கியூப்மெண்ட், ஆட்டோமேஷன் & கன்ட்ரோல்ஸ், பிராசஸிங் எக்கியூப்மெண்ட், RFID, டேப்லெட்டிங் / காப்சூல் ஃபில்லர்ஸ், கிளீன் ரூம் எக்கியூப்மெண்ட், ஃபில்லிங் எக்கியூப்மெண்ட் மற்றும் ஆய்வகத் தயாரிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும்.
Informa Markets பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை இன்ஃபோர்மா மார்க்கெட் உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் இன் இன்டியா (Informa Markets in India) பற்றி
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும்.
Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம். இந்தியாவில் மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informa.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
எந்த ஒரு ஊடக விசாரணைகளுக்கும் தயவுசெய்து இவர்களைத் தொடர்பு கொள்ளவும்:
இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் இன் இன்டியா (Informa Markets in India)
ரோஷினி மித்ரா
மிலி லால்வாணி
[email protected]
+91-22-61727000
இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் இன் இன்டியா (Informa Markets in India)
புகைப்படம்: https://mma.prnewswire.com/media/1035838/13th_edition_of_CPhI_and_P_MEC.jpg
நிகழ்வு லோகோ: https://mma.prnewswire.com/media/1034304/CPHI_and_P_MEC_India_Logo.jpg
Informa லோகோ: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
Share this article