'SATTE GenX' பயணம் & சுற்றுலா துறைக்கு புத்துணர்வளிக்கிறது
- பயண சுற்றுலாத் துறையின் மிகச் சிறந்த பங்கேற்புடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது
- இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தம் 6051 பார்வையாளர்கள் பங்கேற்றனர்
மும்பை, இந்தியா மற்றும் புது டெல்லி, அக். 22, 2020 /PRNewswire/ -- தெற்காசியாவின் மிகப்பெரிய பயண மற்றும் சுற்றுலா கண்காட்சியான SATTE Informa Markets in India-வுடன் இணைந்து தெற்காசியாவின் முதன்மையான விர்ச்சுவல் பயணக் கண்காட்சியான SATTE GenX-ஐ வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இந்தக் கண்காட்சியில் பயண வர்த்தகத் துறையைச் சேர்ந்த 122 கண்காட்சியாளர்களும் 6051 பார்வையாளர்களும் ஒரே தளத்தில் கூடி அவர்களுடைய துறையில் உள்ள சவால்களைப் பற்றிக் கலந்துரையாடினர். பொது முடக்கத்தின் மத்தியில் துறையை முன்னெடுத்துச் செல்லுவதற்கான தீர்வுகளைப் பற்றியும் சிந்தித்தனர்.
இந்த SATTE GenX கண்காட்சியை மத்திய அரசின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறையின் அமைச்சரான (I/C) Shri Prahalad Singh Patel; கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சரான Shri Mansukh Mandaviya (I/C); மாலத்தீவின் சுற்றலாத்துறை அமைச்சரான டாக்டர் Abdulla Mausoom; கிரீஸ் நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சரான Mr. Harris Theoharis; இந்திய அரசின் முன்னாள் சுற்றுலாத்துறையின் செயலரும், Hotel Association of India-வின் பொது மேலாளருமான MP Bezbaruah; SEPC-யின் தலைவரான Mr. Maneck Dawar; FAITH-ன் துணைத்தலைவரான Ms. Jyoti Mayal மற்றும் FAITH-ன் கௌரவச் செயலாளரான Mr. Subhash Goyal முதலியோரால் இணைந்து தொடங்கி வைக்கப்பட்டது. துறையின் மூத்த தலைவர்களும் இந்தத் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
SATTE GenX-ன் தொடக்க நிகழ்ச்சியில் அனைவரையும் வரவேற்று Informa Markets in India-வின் மேனேஜிங் டிரெக்டரான Mr. Yogesh Mudras பேசும்போது, "இந்தப் பெருந்தொற்று பயணம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் தொழிலை முடக்கி விட்டது. உலகளாவிய GDP-யில் இத்துறையின் பங்களிப்பு சுமார் US$5.543 டிரில்லியன் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக WTTC மதிப்பிடுகிறது. பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தால் 197 மில்லியன் வேலை இழப்புகள் ஏற்படும் என்றும் மதிப்பிட்டுள்ளது. இந்தியா இதற்கு விதிவிலக்கல்ல; 2020-ல் சுற்றுலா குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளது. உலக அளவில் 90% மக்கள் பயணக் கட்டுப்பாடுகளுடன் வாழப் பழகி விட்டதோடு, வைரஸ் தொற்றுக்குப் பயந்து வீட்டிலேயே தங்கி விட்டனர். இத்துறை ஏறக்குறைய முழுமையாகவே நின்று விட்டது. இருப்பினும், இந்த எதிரான காலத்திலும் பயணம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையைச் சேர்ந்த தலைவர்கள் உறுதியாக இருக்கின்றனர். இத்துறைக்கான முன்முயற்சியாக இருக்கும் SATTE GenX எந்தெந்த சர்வதேச மற்றும் உள்நாட்டு தளங்கள் திறக்கப்பட்டுள்ளன, வரும் பருவத்தில் எவையெல்லாம் திறக்கப்பட வாய்ப்புள்ளது என்ற பட்டியல் தொடர்ந்து காட்டப்படுவதை உறுதி செய்கிறது. நெருக்கடியான சூழலிலும், சீரான மறுதொடக்கத்திலும் வர்த்தகத்தை நடத்த ஒரு ஒழங்குபடுத்தப்பட்ட அமைப்பை வழங்குவதும் சந்தை மாற்றங்களுக்கு உதவுவதுமே இந்த முயற்சியின் நோக்கம்" என்றார்.
"உரிய SOP-யுடன் கண்காட்சிகளை நடத்திக்கொள்ளலாம் என்ற அரசின் சமீபத்திய சம்மதத்தைத் தொடர்ந்து, "தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு பெரிய ஊக்கமளிப்பது" B2B கண்காட்சிகளுக்கு அங்கீகாரமும் அளித்துள்ளது.
"2021-ன் தொடக்கத்தில் SATTE உட்பட எங்களுடைய உண்மையான கண்காட்சிகளைப் பாதுகாப்பாகத் தொடங்கலாம் என்று நினைக்கிறோம். இதன்மூலம் அரசும், பயணம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் உள்ள எங்களுடைய பயனர்களின் நம்பிக்கையையும் தக்க வைக்க முடியும்" என்று மேலும் அவர் தெரிவித்தார்.
செப்டம்பர் & அக்டோபர் 2020-ல் Informa Markets in India-னால் நடத்தப்படும் தொடர்ச்சியான மெய்நிகர் வர்த்தகக் கண்காட்சிகள் மற்றும் இ-மாநாடுகள் கொண்ட 'விர்ச்சுவல் B2B கொண்டாட்டத்தின்" ஒரு அங்கமாக இந்த டிஜிட்டல் நிகழ்வு அமைந்தது. உரிய சமூகங்களும் தொழில்களும் பொதுமுடக்கத்தின் கட்டுப்பாடுகளை வெற்றிகொள்ளவும், தொழில் இலக்குகளை எட்டவும் பொருளாதாரம் தன்னுடைய பாதையில் திரும்பி வரத் தயாராகும் வேளையில் ஒரு உந்துதலைத் தரவும் இந்த விர்ச்சுவல் B2B கொண்டாட்ட முயற்சி உதவியது.
இந்த மெய்நிகர் வர்த்தகக் கண்காட்சியில் இந்தோனேசியா, சவுதி அரேபியா, மாலத்தீவுகள், தாய்லாந்து, துபாய், பங்களாதேஷ் மற்றும் MakeMyTrip ஆகியோர் பிளாட்டினம் கூட்டாளிகளாகவும்; ஃபிஜி, கிரீஸ், உட்டா மற்றும் TravelBoutiqueOnline ஆகியோர் கோல்டு கூட்டாளிகளாகவும் மொரீசியஸ், ஜெர்மனி, Somatheeram & Guideline Travels ஆகியோர் சில்வர் கூட்டாளிகளாகவும் இருந்தனர். இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் ஒரு ஆலோசனை அமைப்பான Services Export Promotional Council (SEPC) இந்தியாவின் உள்நாட்டுச் சுற்றுலாவைப் புதுப்பிக்கும் முயற்சியைத் தொடங்கும் நோக்கத்தில் இந்த விர்ச்சுவல் கண்காட்சியில் ஒரு தனித்துவமான காட்சிக்கூடத்தை அமைத்திருந்தது. இந்திய பெருந்துறைமுகங்களும் க்ரூய்ஸ் லைன்களும் பங்கேற்பதற்கு உதவும் வகையில் ஒரு "க்ரூய்ஸ் பவிலியன்"-ஐ நடத்தி SATTE GenX-க்கு இந்திய அரசின் கப்பல் போக்குவரத்துத் துறை தன்னுடைய ஆதரவை அளித்தது.
SATTE GenX கண்காட்சியின்போது அருமையான பல அமர்வுகளும், உரையாடல்களும், பிரசன்டேஷன்களும் நடைபெற்றன. 'அவுட்பவுண்டு டிராவல்: ரீஇன்வென்டிங் ஸ்டிராடஜி', 'குரூய்ஸ் டூரிசம்: இஸ் இன்டியா ரெடி டு ரைட் தி வேவ்?', 'டூரிசம் அசோசியேஷன்ஸ்: மேனேஜிங் எ குளோபல் கிரைசிஸ்', மற்றும் 'ஹாஸ்பிட்டாலிட்டி: தி ஃபியூச்சர் ஆஃப் ஹோட்டல் இன்டஸ்ட்ரி', போன்ற தலைப்புகளில் இந்த மாநாட்டின்போது பேச்சாளர்களின் உரைகளும் இடம் பெற்றன.
Indian Association of Tour Operator (IATO), Skal Asia, Travel Agents Association of India (TAAI), Association of Domestic Tour Operators of India (ADTOI), Travel Agents Federation of India (TAFI), IATA Agents Association of India (IAAI), India Convention Promotion Bureau (ICPB), India Golf Tourism Association (IGTA), Network of Indian MICE Agents (NIMA), Outbound Tour Operators Association of India (OTOAI), Pacific Asia Travel Association (PATA), Association of Bhutanese Tour Operators (ABTO), Universal Federation of Travel Agent Association (UFTAA), BD Inbound மற்றும் Enterprising Travel Agents Association (ETAA) போன்ற சர்வதேச மற்றும் இந்திய பயண வணிகக் கழகங்களின் ஆதரவை SATTE GenX பெற்றிருந்தது.
SATTE GenXல் துறை நிபுணர்களின் உரைகள்
"உலகளாவிய சுற்றுலா தொழிலை மீண்டும் தொடங்க சர்வதேச மற்றும் உள்நாட்டுக் கண்காட்சியாளர்கள் பங்கேற்ற SATTE GenX ஒரு நல்ல முயற்சியாக உள்ளது. இந்த மெய்நிகர் முன்முயற்சி என்பது ஒரு புதிய முயற்சியாகவும், தொழில்துறைக்கு உதவுவதற்கான வழக்கத்திற்கு மாறான தீர்வாகவும் உள்ளது. இந்தக் கண்காட்சியில் பங்கேற்ற சர்வதேச சுற்றுலா வாரியங்கள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் அனைத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். சுற்றுலாத் துறையை மீட்டெடுப்பதற்கான ஒரு நல்ல வழிமுறையாக உள்ளது" என்றார் Prahalad Singh Patel, இந்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் (I/C).
"SATTE GenX-ன் அங்கமாக இருப்பதில் எனக்கு மிகவும் மகிழச்சி. எங்களுடைய அரசு ஆரம்பத்திலிருந்தே, இந்தியாவில் கப்பல் சுற்றுலாவை மேம்படுத்துவது என்ற குறிக்கோளைக் கொண்டிருந்தோம். துறைமுகம், குடியேற்றம், சுற்றுலாத் துறை, சுகாதாரத் துறை, சுங்கத் துறை, வரிவிதிப்பு அமைப்புகள், சுற்றுலாச் செயலாளர்கள் முதலான எல்லாப் பயனர்களையும் ஒரே பொதுத் தளத்தில் இணைக்க முயற்சி செய்து வந்தோம்... உலகளாவிய கப்பல் சுற்றுலா வரைபடத்தில் இந்தியாவையும் சேர்க்க விரும்புகிறோம். SATTE GenX கப்பல் சுற்றுலாத் துறையை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றும்" என்றார் Mansukh Mandaviya, இந்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் (I/C).
"SATTE GenX-ன் அங்கமாக இருப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். எங்களுக்கு SATTE மிக முக்கியமான கண்காட்சிகளில் ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. இந்தச் சவாலான நேரங்களை வெற்றிகொள்ள நாம் இணைந்து வேலை செய்ய வேண்டும். இந்தக் கண்காட்சி மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. கூடுதல் செயல்திறனுக்காக நெட்வொர்க்கிங்குக்கு நாம் இத்தகைய பலமான மெய்நிகர் வழிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும்... SATTE போன்ற கண்காட்சிகள் நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல உதவும். நம்முன் உள்ள வழிபற்றி நமக்கு உறுதியாகத் தெரியாது, ஆனால், ஒரு புதிய வழியில் நம்முடைய தொழிலை நடத்துவதற்கு இது ஒரு வாய்ப்பு" என்றார் மாலத்தீவின் சுற்றுலாத்துறை அமைச்சர் Abdulla Mausoom.
"இந்தியாவிற்கும் கிரீஸிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கு பயணத்துறை என்பது மிக முக்கியமான துறையாக உள்ளது. இந்த பெருந்தொற்று நம்மை வித்தியாசமாகச் சிந்திக்கச் செய்துள்ளது, புதிய இயல்பில் நம்முடைய வழிமுறைகளை நாம் எப்படி மாற்றி அமைத்துக்கொள்ளலாம் எனவும் சிந்திக்கச் செய்துள்ளது. சுகாதார நெறிமுறைகளும், எல்லைகளில் பயிற்சி மற்றும் பரிசோதனை முறைகள் பயணிகள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை நிச்சயமாக உறுதிப்படுத்தும். எல்லாருக்குமே இந்த ஆண்டு கஷ்டமான ஆண்டாக அமைந்துள்ளது. SATTE போன்ற முன்முயற்சிகள் மக்களை ஒன்றிணைக்க உதவுவதோடு தொழில் செய்ய ஒரு நல்ல தளமாகவும் உள்ளது" என்றார் Harris Theoharis, கிரீஸ் நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர்.
"SATTE GenX-க்கு Informa-வுடன் கூட்டாளியாக இருப்பதில் நாங்கள் உண்மையிலேயே மகிழச்சியடைகிறோம். SEPC-யில் உள்நாட்டுச் சேவைகளுக்கு உதவுவதில் உறுதியாக உள்ளோம். பயணம் மற்றும் சுற்றுலாத் துறையில்தான் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இந்தத் துறை மீண்டுவர மிக நீண்ட காலம் ஆகும் என்பதை நாம் அறிவோம். SEPC சுற்றுலாத் துறையை பிரதிநிதித்துவம் செய்து வந்திருக்கிறோம். அரசு செய்ய வேண்டிய அளவுக்குச் செய்திருக்கிறது. SATTE GenX-ல் ஒரு காட்சிக்கூடத்தை அமைத்து 75 கண்காட்சியாளர்கள் காட்சிப்படுத்த வழிவகை செய்யப்பட்டிருந்தது" என்றார் Maneck Dawar, தலைவர், SEPC
"SATTE GenX வழக்கத்திற்கு மாறான சமயத்தில் நடந்தாலும், SATTE இத்துறையை மீண்டும் அமர்த்துவதில் ஒரு முக்கியமான பணியை ஆற்றும். நாம் செல்லவிருக்கும் புதிய பணத்திற்கு அடித்தளத்தை இது அமைக்கும். 9/11, SARS மற்றும் சுனாமிக்குப் பின்னர் மீண்டு வந்ததுபோன்று சுற்றுலாத்துறை மீண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை… வட்டாரச் சுற்றுலாவை ஊக்குவிப்பதில் SATTE முக்கியமான பணியை ஆற்றுகிறது" என்றார் இந்திய அரசின் முன்னாள் சுற்றுலாத்துறை செயலரும் Hotel Association of India-வின் பொதுச் செயலாளருமான MP Bezbaruah.
"மிகச் சிறியதாகத் தொடங்கிய ஒரு அமைப்பு இன்று தெற்காசியாவில் மிகப்பெரிய பயணக் கண்காட்சியாகவும், மிக வெற்றிகரமான வாங்குபவர்-விற்பவர் சந்திக்கும் தளமாகவும் ஆகியிருக்கிறது. அடுத்து, வரும் ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய பயணக் கண்காட்சியாக SATTE இருக்க வேண்டும் என விரும்புகிறோம். தெற்காசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் மையமாக இந்தியா உள்ளது, வர்த்தகக் கண்காட்சிகளின் மையமாக இருக்க வேண்டும்.... SATTE மிக முக்கியமான சக்தியாக மாறியிருப்பதில் பெருமையடைகிறேன்" என்றார் FAITH-ன் கௌரவச் செயலாளரான Subhash Goyal.
"உலகெங்கிலுமிருந்தும் 122-க்கு மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்ற SATTE GenX நிச்சயமாக பயண வர்த்தகத் துறையினர் நெட்வொர்க்கை ஏற்படுத்தவும், இந்த இக்கட்டான நிலையை வெற்றிகொண்டு தொழிலை மீண்டும் தொடங்கவும் நிச்சயமாக சிறந்த வாய்ப்பாக உள்ளது. இந்த நெருக்கடி நம்மை வித்தியாசமாகச் சிந்திக்கவும், நம்மையே மறுசீரமைக்கவும் செய்திருக்கிறது" என்றார் FAITH-ன் துணைத்தலைவரான Jyoti Mayal.
Informa Markets பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை Informa Markets உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் 365 நாட்களும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
Informa Markets மற்றும் இந்தியாவில் எம்முடைய தொழில் பற்றி
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும். Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம். இந்தியாவில் மும்பை, புது தில்லி, பெங்களூர் மற்றும் சென்னை -யில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து https://www.informamarkets.com/en/regions/asia/India.html என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
எந்த ஒரு ஊடக விசாரணைகளுக்கும் தயவுசெய்து இவர்களைத் தொடர்பு கொள்ளவும்:
Roshni Mitra - [email protected]
Mili Lalwani - [email protected]
லோகோ: https://mma.prnewswire.com/media/1317060/SATTE_Gen_X_logo.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
Share this article