'நல்ல உடல்நலம் மற்றும் ஹோமியோபதி' என்ற அறிவு -தொடர் மூலம் டாக்டர். முகேஷ் பத்ரா அவர்கள் 25 மில்லியன் மக்களின் வாழ்க்கைக்கு உயிரூட்டுகிறார்
மும்பை, March 15, 2019 /PRNewswire/ --
5 நிமிடங்களில் 45 ஆண்டு கால மருத்துவ அனுபவத்தை பெற்றிடுங்கள்
வலைத்தளத்தில் கிடைக்கப்பெறும் மருத்துவம் பற்றிய தவறான தகவல்களை சரி செய்வதற்கும், அறிவு புகட்டுவதற்கும் மேலும் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில், பத்ம ஸ்ரீ விருது பெற்ற புகழ்மிக்க ஹோமியோபதி மருத்துவரான டாக்டர். முகேஷ் பத்ரா அவர்கள், 2019, மார்ச் 7 ஆம் தேதி முதல் சுவாரஸ்யமான தகவல் தரும் வலை-தொடரை தொடங்க உள்ளார். ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாக்ராம் மற்றும் யூ ட்யூபில் ஒவ்வொரு வாரமும் இரவு 9 மணிக்கு 'நல்ல உடல்நலம் மற்றும் ஹோமியோபதி' தொடரானது ஒளிபரப்பப்படும்; இதில் இந்தியாவில் வாழும் மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் பல்வேறு நோய்களைப் பற்றி கூறப்படும்.
(Logo: https://mma.prnewswire.com/media/664189/Dr_Batra_s_Multi_Specialty_Homeopathy_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/830812/Dr_Batras_Web_Series.jpg )
மருத்துவத்துறையில் 45 ஆண்டுகளாக கவனத்துடன் ஒன்று சேர்க்கப்பட்ட அனுபவம் என்னும் செல்வத்துடன், டாக்டர் பத்ரா அவர்கள், ஆரோக்கியமான வாழ்க்கையே மகிழ்ச்சிக்கு முக்கியம் என்று நம்புகிறார். மேலும் இன்றைக்குள்ள பெரும்பாலான நோய்களுக்கு வாழ்க்கைமுறையே காரணம் என்றும், சுய கவனிப்பு மூலம் இதை எளிதில் குணமாக்கலாம் என்றும் அவர் நம்புகிறார்.
வலை - தொடரின் தொடக்கவிழாவில் பேசிய டாக்டர். முகேஷ் பத்ரா அவர்கள், "நோய் தடுப்புப் பராமரிப்பு பற்றி மக்களுக்கு சரியான தகவல் அளிப்பது, நோய் வந்த பின்னர் அதை சமாளிப்பதைக் காட்டிலும் பயன் வாய்ந்ததாக நான் எண்ணுகிறேன். 1 மில்லியன் மக்களுக்கும் மேல் சிகிச்சை அளித்திருப்பதால், முழுமையான ஆரோக்கிய பராமரிப்பு சிகிச்சைகள் வழங்குவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அந்த கடமைப்பாட்டின் விரிவே இந்த வலை - தொடர். அடுத்த ஒரு வருடத்தில் 25 மில்லியனுக்கும் அதிகமான மக்களை சென்றடைந்து அவர்கள் ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வழிவகுப்பதே எங்கள் இலக்காகும். ஒவ்வொரு லைக் மற்றும் ஷேர் செய்வதால், மகிழ்ச்சியின் செய்தியை நாங்கள் பரப்புவோம். இதனால் நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையிலான வாழ்க்கையை மாற்ற எங்களுக்கு வழிவகுக்கிறது."
தகவலளிக்கும் 12- பகுதியிலான இந்த வலை -தொடர், முடி உதிர்தல், தோல் பராமரிப்பு -சிரங்கு, முகப்பரு, பூஞ்சை நோய்தொற்று, சொரியாசிஸ், விட்டிலிகோ, மன அழுத்தம், உடல் பருமன் மற்றும் பிசிஓஎஸ் போன்ற பல்வேறு வியாதிகள் ஏற்படும் காரணங்கள், அறிகுறிகள், சுய உதவி குறிப்புகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவமுறை போன்ற தகவல்களை வழங்கும்.
ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்திட, 'நல்ல உடல்நலம் மற்றும் ஹோமியோபதி' தொடரை ஒவ்வொரு வியாழக்கிழமை இரவு 9 மணிக்குக் காணவும்; ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாக்ராம் மற்றும் யூட்யூப் - ஐ க்ளிக் செய்யவும்.
டாக்டர் பத்ரா'ஸ் பற்றி
இந்தியா முழுவதும் 225 கிளினிக்குகள், ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அரபு எமிரேட், பஹ்ரைன் மற்றும் பங்களாதேஷ்-ல், டாக்டர் பத்ரா'ஸ் என்பது உலகின் மிகப்பெரிய ஹோமியோபதி க்ளீனிக்குகளின் சங்கிலித்தொடராகும். உலகம் முழுவதிலும் 400 ஹோமியோபதி மருத்துவர்கள், சுமார் 1.5 மில்லியன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருந்த இந்த பிராண்ட் அண்மையில், 'இந்தியாவின் மிக நம்பகமான பிராண்ட் 2017' என அமேரிக்காவின் சர்வதேச பிராண்டு கன்சல்டிங் கார்ப்பரேஷனால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவலுக்கு, செல்லவும்:http://www.drbatras.com
மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ளவும்:
டானியல் க்ரேசியஸ்
+91-9819180717
[email protected]
இணையதளம்: http://www.drbatras.com
Share this article