வங்கிகள் மற்றும் பிராண்டுகளுடனான இணை-விளம்பர வாய்ப்புகள் வழியாக சிறு விற்பனையாளர்கள் விற்பனையை அதிகரிப்பதற்கு உதவுவதற்காக ONDC தளத்துடன் Innoviti இணைகிறது
பெங்களூர், இந்தியா, Aug. 5, 2022 /PRNewswire/ -- இந்தியாவின் மிகப்பெரிய கூட்டு வணிகத் தளங்களில் ஒன்றான Innoviti, ONDC வலைப்பின்னலில் இணைவதாகவும் அதற்கான தொழில் நுட்ப ஒருங்கிணைப்பை நிறைவு செய்யும் செயல்முறையில் ஈடுபட்டுள்ளதாகவும் இன்று அறிவித்தது. பேமண்ட் பரிவர்த்தனைகளை சிறந்த தயாரிப்புகள் மற்றும் கூடுதல் தயாரிப்புகளை வாங்குவதற்கு வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் புதிய மற்றும் தனித்துவமான கொள்வனவுக் கருவியாக மாற்றுவதன் மூலம் குறைந்த முயற்சியிலேயே தொழில்கள் வேகமாக வளர்வதற்கு Innoviti உதவுகிறது. Innoviti கிட்டத்தட்ட 2000+ நகரங்களிலிருந்து ரூ. 75,000 கோடி டிஜிட்டல் கொள்வனவுகளை ஆண்டுதோறும் செயலாக்குகிறது.
மில்லியன் கணக்கான சிறு விற்பனையாளர்களை மில்லியன் கணக்கான டிஜிட்டல் நுகர்வோர்களுடன் இணைப்பதன் மூலம் அவர்கள் டிஜிட்டல் புரட்சியில் பங்கேற்பதற்கு ONDC வலைப்பின்னல் உதவும். அதேநேரம், ஓர் திறந்த வலைப்பின்னல் வழியாக அதிகமான விற்பனையாளர்களை அணுகுவதற்கு நுகர்வோர்களுக்கும் உதவுவதன் மூலம், விற்பனையாளர் மற்றும் வாங்குபவர்களுக்கு இடையே சிறந்த கொள்வனவு இணைப்புகளை ஏற்படுத்தி டிஜிட்டல் சந்தையை மக்கள்மயப்படுத்துகிறது.
எனினும், சிறு விற்பனையாளர்கள் திறம்படப் போட்டியிடுவதற்கு முதிர்ச்சியடைந்த மின்-வணிகச் சந்தைகள் வழங்கக்கூடிய டிஜிட்டல் கருவிகள் அவர்களுக்குத் தேவைப்படலாம். வங்கிகள் மற்றும் பிராண்டுகள் மூலம் நிதி உதவி அளிக்கப்படும் பூச்சிய கட்டண ஈ.எம்.ஐ, கேஷ்பேக்குகள் மற்றும் புதுப்பிப்புச் சலுகைகள் போன்ற டிஜிட்டல் கருவிகள் மிகப்பெரிய மின்-வணிகச் சந்தைகளில் விற்பனைகளை அதிகரிப்பதற்கான முக்கியக் காரணியாக உள்ளன.
Innoviti தனது கூட்டு வணிகத்தளத்தின் மூலமாக சிறு விற்பனையாளர்களுக்கான இணை-நிதி உதவியளிக்கும் சலுகைகளின் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க இயலும் என நம்புகிறது. ONDC வலைப்பின்னலுடன் ஒருங்கிணைக்கப்பட்ட தனது விற்பனையாளர் செயலியின் வழியாக Innoviti, விற்பனையாளர்கள் தங்களின் தயாரிப்புகளை வலைப்பின்னலில் வெளியிடுவதற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் வங்கிகள் மற்றும் பிராண்டுகள் இணை-நிதி உதவியளிக்கப்பட்ட கவர்ச்சிகரமான கொள்வனவுக் கருவிகளுடன் தயாரிப்புகளை இணைப்பதன் மூலம் கூடுதலாக விற்பனை செய்வதற்கும் உதவும். இது சிறு விற்பனையாளர்களுக்கு சமமான போட்டிக் களத்தை உருவாக்க உதவும், விற்பனைச் செலவுகளைக் குறைக்கும் அதே வேளையில் விற்பனைக்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும்.
இந்நிகழ்ச்சியில் பேசிய Innoviti -யின் நிறுவனம் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி இராஜீவ் அகர்வால் கூறியதாவது, "சிறு விற்பனையாளர்கள் ONDC வலைப்பின்னல் வழியாக தங்களின் கண்டறியும் தன்மையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாது, கூடுதல் வாடிக்கையாளர்கள், கூடுதல் விற்பனைகள் மற்றும் கூடுதல் இலாபத்தை வழங்க உதவும் வங்கிகள் மற்றும் பிராண்டுகள் இணை-நிதி உதவியளிக்கப்பட்ட கொள்வனவுச் சலுகைகளுக்கான அணுகலையும் கொண்டுவருவதன் மூலம் சிறு விற்பனையாளர்களுக்கு மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களின் அணுகலைத் திறக்கக்கூடிய மிகப்பெரிய வாய்ப்பினை Innoviti காண்கிறது."
T கோஷி - ONDC தலைமை செயல் அதிகாரி கூறுகையில், "ONDC வலைப்பின்னலில் Innoviti யைக் கொண்டுவருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ONDC -இல் Innoviti -யின் பங்கேற்பு சிறு விற்பனையாளர்களுக்கு உதவும் மேலும் இதுபோன்ற சிறு விற்பனையாளர்களுக்காக சிறப்புத் தீர்வுகளை உருவாக்குவதற்கான அவர்களின் முன்மொழிவு தற்போது சவாலாக இருக்கக்கூடிய தடைகளைத் தாண்டி வலைப்பின்னலிலிருந்து முழுமையாக நன்மையடைய அவர்களுக்கு உதவும் ஓர் கூடுதல் மதிப்புக்கூட்டாக இருக்கும்."
About Innoviti Payment Solutions Pvt. Ltd., பெங்களூர், இந்தியா ஓர் அறிமுகம்:
Innoviti Payment Solutions Pvt. Ltd.. இந்தியாவின் மிகப்பெரிய கூட்டு வணிகத் தளங்களில் ஒன்றாகும், இது வங்கிகள், தயாரிப்பு பிராண்டுகள், மற்றும் விற்பனையாளர்கள் போன்ற பலதரப்பட்ட தொழில்கள் ஒன்றிணைந்து கூட்டாக வாடிக்கையாளர்களைப் பெற உதவுகிறது. இந்தத் தொழில்கள் பேமண்ட் பரிவர்த்தனைகளைக் கவர்ச்சிகரமான கொள்வனவுச் சலுகைகளாக விற்பனைப் புள்ளியில் மாற்றி, சிறந்த தயாரிப்புகள் மற்றும் கூடுதல் தயாரிப்புகளை வாங்குவதற்கு நுகர்வோர்களைத் தூண்ட இத்தளம் உதவுகிறது. Innoviti இந்தியாவின் மத்திய வங்கியான ஆர்.பி.ஐயிடமிருந்து பேமண்ட் அக்ரிகேட்டர் உரிமத்தை "கொள்கை-அளவில்" பெற்றுள்ளது. இந்நிறுவனம் இதுபோன்ற கொள்வனவுத் தீர்வுகளை இந்தியாவின் முன்னணி நிறுவனங்களுக்கு வழங்குவதில் >70% ஆதிக்கம் செலுத்துகிறது, ஆண்டுதோறும் 10B$ க்கும் அதிகமான கொள்வனவுகளை நிர்வகிக்கிறது. Bessemer Venture Partners, FMO, Catamaran Ventures, Panthera Growth Partners மற்றும் Alumni Ventures ஆகியோர் இந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் ஆவர். இந்நிறுவனம், ஓர் அமெரிக்கக் காப்புரிமை உள்ளிட்ட நான்கு காப்புரிமைகளைக் கொண்டுள்ளது மேலும் Mastercard's Innovation Wizards Award, Reliance's Most Promising Growth Consumer Finance Award மற்றும் Deloitte-டின் ஆசியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவன விருது ஆகியவற்றை வென்றுள்ளது. பரிவர்த்தனைகளின் தனியுரிமை, பாதுகாப்பு, இரகசியத்தன்மை, கிடைக்கும்தன்மை மற்றும் செயலாக்கத்திற்கான நம்பிக்கைக் கொள்கைகளைப் பின்பற்றியதற்காக மிகப் பாராட்டப்படும் SOC3 சீல் ஆப் எக்சலன்ஸ் விருதுபெற்ற ஓரே இந்திய பேமண்ட் SaaS நிறுவனம் இன்னோவிடி மட்டுமே ஆகும். இந்நிறுவனம் பணியாற்றுவதற்குச் சிறந்த இடம் என சான்றிதழ் பெற்றதாகும் மேலும் அதிகம் கற்றுக்கொள்வதறும் அதிகம் சம்பாதிப்பதற்குமான ஓர் சிறந்த பணியிடத்தை உருவாக்க முயற்சிக்கிறது.
மேலும் தகவல்களுக்கு: http://www.innoviti.com
ONDC அறிமுகம்:
Open Network for Digital Commerce (ONDC) என்பது டிஜிட்டல் மற்றும் மின்னணு வலைப்பின்னல் வழியாக நடைபெறும் சரக்குகள் மற்றும் சேவைகள் பரிமாற்றங்களின் அனைத்து அம்சங்களுக்கும் திறந்த வலைப்பின்னலை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஓர் முன்னெடுப்பு ஆகும். ONDC என்பது எந்தக் குறிப்பிட்ட தளத்தையும் சாராமல் திறந்த விவரக்குறிப்புகள் மற்றும் திறந்த வலைப்பின்னல் நெறிமுறைகளைப் பயன்படுத்தும் திறந்த மூல முறைமையின் (ஓபன் சோர்ஸ்) அடிப்படையில் அமைந்துள்ளது. மின்-வணிகத்தை அதிகம் உள்ளடக்கியதாகவும் நுகர்வோர்கள் எளிதில் அணுகக்கூடியதாகவும் ONDC மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்தவொரு இணக்கமான பயன்பாடு அல்லது தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நுகர்வோர்கள் எந்தவொரு விற்பனையாளர். தயாரிப்பு அல்லது சேவைகளையும் தேடலாம், இதன்மூலம் நுகர்வோர்களின் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் அதிகரிக்கிறது. தேவைகளையும் கிடைப்பதில் சிறந்த விநியோகத்தையும் இணைப்பதற்கு இது நுகர்வோர்களுக்கு உதவுகிறது. இது நுகர்வோர்கள் தங்களின் விருப்பமான உள்ளூர் வணிகத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரத்தையும் வழங்குகிறது. ஆகவே, ONDC செயல்பாடுகளைத் தரப்படுத்துகிறது, உள்ளூர் வழங்குநர்களை இணைப்பதை ஊக்குவிக்கிறது, லாஜிஸ்டிக்சில் செயல்திறனை இயக்குகிறது மற்றும் நுகர்வோர்களுக்குக் கிடைக்கும் மதிப்பினை அதிகரிக்க வழிவகுக்கிறது.
மேலும் தகவல்களுக்கு: https://ondc.org
லோகோ: https://mma.prnewswire.com/media/1041869/Innoviti_Logo.jpg
![](https://rt.prnewswire.com/rt.gif?NewsItemId=TA36343&Transmission_Id=202208050605PR_NEWS_EURO_ND__TA36343&DateId=20220805)
Share this article