UST 2023 'D3CODE' -ஐ அறிமுகப்படுத்துகிறது - கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான இந்தியாவின் மிகப்பெரிய Hackathon-ன் மூன்றாவது பதிப்பு
இந்தியா முழுவதிலுமுள்ள மாணவர்கள் ரூபாய் 19 லட்சம் பரிசுத் தொகை, அங்கீகாரம் மற்றும் தொழில் முன்னேற்ற வாய்ப்புகளைப் பெற வழிவகுக்கும் போட்டியில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்
திருவனந்தபுரம், இந்தியா, Aug. 9, 2023 /PRNewswire/ -- ஒரு முன்னணி டிஜிட்டல் உருமாற்ற தீர்வுகளை வழங்கும் நிறுவனமான UST, இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்புகளை படிக்கும் மாணவர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் அதை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தவும் வாய்ப்பளிக்கும் Hackathon நிகழ்வின் D3CODE ("decode" என்று உச்சரிக்கப்படுகிறது) மூன்றாவது பதிப்பை அறிமுகப்படுத்துகிறது. D3CODE என்பது UST நிறுவனத்தின் முன்முயற்சியாகும், இது மாணவர்களுக்கு மிகவும் தேவையான நிஜ உலக சிக்கல்களைத் தீர்ப்பது, புதிய கண்டுபிடிப்புகள், சிக்கல்களைத் தீர்ப்பது, வடிவமைப்பு சிந்தனை மற்றும் நிரலாக்க திறன்கள் போன்றவற்றை வளர்த்துக்கொள்ளும் அவர்களின் ஆர்வத்திற்கு தீர்வு காணவும் தயார்ப்படுத்திக் கொள்ளவும் ஒரு தளத்தை வழங்க முயல்கிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள் "செயற்கை நுண்ணறிவை (AI) ஆராய்தல்: எதிர்காலத்தை வடிவமைக்க" மற்றும் பங்கேற்க D3 வலைத்தளத்தில் அல்லது HackerEarth ஆகஸ்ட் 15 க்கு முன்பு 2023 Hackathon-க்கு பதிவு செய்யலாம்.
முதல் D3CODE hackathon 2019 -இல் நடைபெற்றது மற்றும் அடுத்தது 2022 -இல் நடைப்பெற்றது. இந்த ஆண்டு போட்டி செயல்படுத்தப்படக்கூடிய செயற்கை நுண்ணறிவு (AI) தீர்வுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள UST நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்ப வளாகத்தில் UST நிறுவனத்தின் வருடாந்திர D3 தொழில்நுட்ப மாநாட்டை முன்னிட்டு இது நடைபெறும். இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் ரூபாய் 19 லட்சம் பரிசுத் தொகையின் ஒரு பகுதியைப் பெறுவதற்கு போட்டியிடலாம்.
"D3CODE 2023 -இல் பங்கேற்க இந்தியாவில் உள்ள திறமையான மற்றும் மிகவும் நம்பிக்கைக்குரிய மாணவர்களை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். டைனமிக் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த தீர்வுகள் வாழ்க்கையை மாற்றியமைத்து வரும் இந்த நேரத்தில், தொழில்துறையில் உள்ள சில மிகப்பெரிய சவால்களை ஆக்கப்பூர்வமாக தீர்க்க அடுத்த தலைமுறை உண்மையான பிரச்சினைகளை எவ்வாறு எடுத்துக் கொள்ளும் என்பதைப் பார்க்க நாங்கள் ஆவலாக உள்ளோம். செயற்கை நுண்ணறிவை (AI) உருவாக்குவதில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்த ஆண்டு பங்கேற்பாளர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள எங்கள் அழகான வளாகத்தில் புதுமை செய்வதற்கான அவர்களின் திறனை முன்னிலைப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்" என்று UST நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி Niranjan Ramsunder தெரிவித்தார்.
D3CODE 2023 முக்கிய தேதிகள்:
- பதிவு மற்றும் கருத்து சமர்ப்பிப்பு - ஆகஸ்ட் 15 அன்று முடிவடைகிறது
- சுற்று 1 - புரோகிராமிங் சவால் - ஆகஸ்ட் 18 - ஆகஸ்ட் 27
- இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் 10 நபர்கள் அறிவிப்பு – ஆகஸ்ட் 30
- சுற்று 2 - வீடியோ நேர்காணல் - ஆகஸ்ட் 31 - செப்டம்பர் 14
- இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட அணிக்கு அழைப்பு - செப்டம்பர் 15
- ஆன்சைட்டில் இறுதிப் போட்டி – செப்டம்பர் 30 – அக்டோபர் 1
- வெற்றியாளர்கள் அறிவிப்பு – அக்டோபர் 1
D3CODE 2023 மூன்று தகுதி சுற்றுகளை உள்ளடக்கியது, இது ஆன்சைட்டில் நடைபெறும் Hackathon உடன்முடிவடைகிறது. முதல் ஐந்து இடங்களைப் பிடிக்கும் அணிகள் UST நிறுவனத்தின் திருவனந்தபுரம் வளாகத்தில் நடைபெறும் 24 மணி நேரப் இறுதி சுற்று Hackathon போட்டியில் நேரில் கலந்துகொள்ள அழைக்கப்படுவார்கள், இதில் தகுதி பெறும் அணிகள் தங்கள் கருத்துகளின் முன்மாதிரிகளை நடுவர்கள் குழுவுக்கு முன் வழங்குவார்கள். முதல் பரிசு பெறும் அணிக்கு ரூபாய் 7 லட்சம், இந்திய ரூபாய் (INR) இரண்டாம் பரிசு பெறும் அணிக்கு ரூபாய் 5 லட்சம் INR, மூன்றாம் பரிசு பெறும் அணிக்கு ரூபாய் 3 லட்சம் INR, மற்றும் அடுத்த இரண்டு அணிகளுக்கு தலா ரூபாய் 2 லட்சம் INR, பரிசுத்தொகையும் வழங்கப்படும். கூடுதலாக, இறுதி சுற்றில் பங்குப்பெற்ற ஐந்து அணிகளின் அனைத்து உறுப்பினர்களுக்கும் UST நிறுவனத்தின் இந்திய வளாகங்களில் பணிபுரியும் வாய்ப்பையும் பெறுவார்கள் (விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது), மேலும் முதல் பரிசு வென்ற அணி 2023 UST D3 மாநாட்டில் பங்குபெறும் வாய்ப்பைப் பெறும்.
UST ஓர் அறிமுகம்
23 ஆண்டுகளுக்கும் மேலாக, UST நிறுவனம் உலகின் சிறந்த நிறுவனங்களுடன் இணைந்து மாற்றத்தின் மூலம் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்டு, ஊழியர்களால் ஈர்க்கப்பட்டு, நிறுவன நோக்கத்தால் வழிநடத்தப்படும் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுடன் இணைந்து, வடிவமைப்பு முதல் செயல்பாடு வரை அனைத்து செயல்களையும் மேற்கொள்கிறோம். எங்கள் வேகமான அணுகுமுறையின் மூலம், அவர்களின் முக்கிய சவால்களை நாங்கள் அடையாளம் காண்கிறோம், மேலும் அவர்களின் நோக்கத்தை உயிர்ப்பிக்கும் தீர்வுகளை உருவாக்குகிறோம். ஆழமான டொமைன் நிபுணத்துவம் மற்றும் எதிர்கால-ஆதார தத்துவத்துடன், எங்கள் வாடிக்கையாளர்களின் நிறுவனங்களில் புதுமையையும் சுறுசுறுப்பையும் உட்பொதிக்கிறோம்- தொழில்துறைகள் மற்றும் உலகெங்கிலும் அளவிடக்கூடிய மதிப்பையும் நீடித்த மாற்றத்தையும் வழங்குகிறோம். ஒன்றிணைந்து, 30+ நாடுகளில் 30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன், நாங்கள் எல்லையற்ற தாக்கத்தை உருவாக்குகிறோம் - இந்த செயல்பாட்டில் பில்லியன் கணக்கான மக்களை வாழ வைக்கிறோம். www.UST.com -ஐப் பார்வையிடவும்
ஊடக தொடர்புகள், UST:
Tinu Cherian Abraham
+1 (949) 415-9857
Merrick Laravea
+1 (949) 416-6212
Neha Misri
+91-9284726602
[email protected]
ஊடக தொடர்புகள், U.S.:
S&C PR
+1-646.941.9139
[email protected]
Makovsky
[email protected]
ஊடக தொடர்புகள், U.K.:
FTI ஆலோசனை
[email protected]
Share this article