தெலுங்கானாவின் கனவை நனவாக்குகிறது MEIL-ன் பொறியியல் அதிசயம்
- உலகின் மிகப்பெரிய லிஃப்ட் பாசனத் திட்டம்: KLIP - பேக்கேஜ் 8 பம்பிங் ஸ்டேஷன்கள்
ஹைதராபாத், இந்தியா, Aug. 12, 2019 /PRNewswire/ -- தென் இந்தியாவின் வறண்ட பகுதியான தெலுங்கானாவின் நீண்ட காலக் கனவு இப்போது நனவாகியுள்ளது. காலீஷ்வரம் லிஃப்ட் பாசனத் திட்டம் (KLIP) செயல்படத் தொடங்க தயாராக இருப்பதால் இந்தப் பகுதி மக்களின் தண்ணீர் பிரச்சனைகள் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. பெருமைமிக்க காலீஷ்வரம் லிஃப்ட் பாசனத் திட்டத்தின் (KLIP) முக்கியமான கட்டமான கரிம்நகர் மாவட்டத்தின் லக்ஷ்மிபூர் கிராமத்தின் ராமடுகுவில் உள்ள பேக்கேஜ் 8 பம்பிங் ஸ்டேஷன், கோதாவரி ஆற்றுப் படுகையில் உள்ள அணைகளில் நீரை ஆண்டு முழுவதும் சேமித்து வைக்க உதவும். KLIP இன் இதயமாகக் கருதப்படும் இந்த மகத்தான பம்ப் ஹவுஸ் ஒரு சிறந்த பொறியியல் அற்புதமாகும், ஏனெனில் இது பூமியின் மேற்பரப்பிலிருந்து 330 மீட்டர் கீழே கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய நிலத்தடி உந்தி நிலையமாகும்.. பாசனத்திற்கு நீர் கிடைப்பதாலும், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதாலும், விவசாயம் சார்ந்த வேலைகள், மீன்பிடித்தல், சுற்றுலா போன்ற அதிகரித்த வாழ்வாதார வேலைவாய்ப்புகளினாலும், ஒட்டுமொத்த தெலுங்கானாவின் தோற்றத்தையே இது மாற்றிவிடும். இந்தத் தனித்துவமான பம்ப் ஹவுஸ் கோதாவரி நீரை மீண்டும் ஆற்றுக்கு பம்ப் செய்து வறண்ட நிலப் பகுதிகளை செழிப்படையச் செய்யும்.
பேக்கேஜ் 8 நிலத்தடி பம்ப் ஹவுஸை விவரித்து MEIL-ன் இயக்குநரான திரு. B. Srinivas Reddyபேசும்போது, "இது ஒரு வியத்தகு நிலத்தடி பம்ப்ஹவுஸ். நிலத்தின் அடியில் 330 மீட்டர் ஆழத்தில் இரு சுரங்கங்களையும் உலகிலேயே மிகப்பெரிய நீரூற்றுக் குளங்களையும் கொண்ட மிகப்பெரிய திட்டமாக உள்ளது. இது உலகில் ஒரு அல்ட்ரா மெகா திட்டமாகும், இதில் 7 மோட்டார்கள் உள்ளன, ஒவ்வொன்றும் 139 மெகாவாட் திறன் கொண்டது.இந்த மோட்டார்களால் ஒரு நாளில் 2 டிஎம்சி நீரை இறைக்க முடியும். இது ஒரு உண்மையான "இந்தியாவில் தயாரிப்போம்" திட்டமாக உள்ளது. இந்த மாபெரும் மோட்டார்கள் காம்புட்டேஷனல் ஃபுளூயிட் டைனமிக்ஸ் (கணிப்பிய பாய்ம இயக்கவியல் - CFD) எனப்படும் தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. KLIP-யின் மிகவும் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவெனில், 400KV மற்றும் 220KV துணைமின்நிலையங்கள் டிரான்ஸ்ஃபார்மர்கள் மற்றும் 260 கிலோமீட்டர் டிரான்ஸ்மிஷன் லைன்கள், 400 KV XLPE புவியடி கேபிள்கள் 7 கிலோமீட்டர் ஆகியவற்றை உள்ளடக்கிய 3057 MWs திறன்கொண்ட மின்சார உட்கட்டமைப்பை கட்டி முடித்திருக்கிறது. எந்த அளவுருக்களில் பார்த்தாலும், இந்தத் திட்டம் உலகிலேயே மிகவும் புதுமையான மிகப்பெரிய திட்டமாக அமைந்துள்ளது. இந்த மாபெரும் பணியை நிறைவேற்றிய பெருமை MEIL-க்கு உள்ளது."
பூமிக்கடியில் செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் அமைப்பும் அளவும் மெய்சிலிர்க்க வைப்பவை. பம்ப்ஹவுஸை சுற்றிப் பார்த்தால் பல அடுக்கு மாடிகளைக்கொண்ட மாபெரும் புவியடி ஷாப்பிங் மாலிற்க்குள் சென்றது போன்ற பிரமிப்பை அளிக்கும். பொதுவாக, லிஃப்ட் பாசனத் திட்டத்திற்கான பம்ப்ஹவுஸ்கள் புவி மட்டத்திலேயே ஆற்றங்கரைகளில் கட்டப்பட்டு உயர்ந்த இடங்களுக்கு நீரை ஏற்றும் வகையில் கட்டப்பட்டிருக்கும். ஆயினும், இந்த தனித்துவமான சூப்பர் கட்டமைப்பு, உலகிலேயே இவ்வகையான முதலாவது கட்டமைப்பு, ஒரு கிலோமீட்டரில் மூன்றில் ஒரு பங்கு ஆழத்தில் கட்டப்பட்டுள்ளது. ஒரு நாளில் 2 டிஎம்சி தண்ணீரை பம்ப் செய்யும் திறன் கொண்டதாக உள்ளது.
மாபெரும் நிலத்தடி நிலவறைக் குகைகள் தோண்டப்பட்டு அதில் பம்ப்ஹவுஸ்கள் கட்டப்பட்டுள்ளன. உள் வரும் நிலத்தடிநீரை இறைக்க நீரூற்று குளங்களும் மிகப்பெரிய அளவில் தோண்டப்பட்டு கட்டப்பட்டுள்ளன. அங்கிருந்து நீரை இறைக்க பம்ப்களும் மோட்டார்களும் நிறுவப்பட்டுள்ளன. விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அடிப்படையில் இந்த மனிதனால் உருவாக்கப்பட்ட பொறியியல் அதிசயத்திற்கு, 4.75 லட்சம் கன மீட்டர் கான்கிரீட்டைப் பயன்படுத்தி ஒரு சக்தி இல்லத்தை உருவாக்க பூமியின் மேற்பரப்பிலிருந்து 330 மீட்டர் தூரத்திலிருந்து 21.6 லட்சம் கன மீட்டர் மண் தோண்டப்பட்டுள்ளது.140 மீட்டர் ஆழமும், 25 மீட்டர் அகலமும் 65 மீட்டர் உயரமும் கொண்ட இத்தகைய மிகப்பெரிய நிலவறைக் குகை உலகில் வேறு எங்கும் இல்லை. பம்ப்ஹவுஸ் தளம் நிலத்தடியில் 221 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது. பம்ப் தளம் 190.5 மீட்டர் ஆழத்திலும், டிரான்ஸ்ஃபார்மர் தளம் 215 மீட்டர் ஆழத்திலும், கன்ட்ரோல் அறை புவிக்கடியில் 209 மீட்டர் ஆழத்திலும் அமைந்துள்ன. பம்ப்ஹவுஸில் தனித்துவமான இரட்டை சுரங்கங்கள் அருகருகில் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுரங்கத்தின் நீளமும் 4,133 மீட்டர்கள். அவற்றின் விட்டம் 10.5 மீட்டர்கள். ஒவ்வொரு மோட்டாரையும் இயக்க 139 மெகாவாட் மின்சாரம் தேவை என்பதால் 160 KVA திறனுள்ள டிரான்ஸ்ஃபார்மரும் கம்பிரெஸர் யூனிட்டுகளும் வெற்றிகரமாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
பம்ப்ஹவுஸில் உள்ள நீரூற்றுக் குளங்கள்தான் இந்த நிலத்தடி கட்டுமானத்தின் மிகவும் ஆச்சரியமளிக்கும் அம்சமாகும். தடையற்ற முறையில் பம்ப் செய்யப்படுவதை உறுதிப்படுத்த, போதுமான நீரைச் சேமிக்க மூன்று நீரூற்றுக் குளங்கள் கட்டப்பட்டுள்ளன. பூமிக்கடியில் 138 மீட்டர் ஆழத்தில் டர்பைன் பம்ப்களை நிறுவியிருப்பது இந்தத் திட்டத்தின் மற்றொரு தனித்துவமான அம்சமாகும். ஒவ்வொரு மோட்டார் பம்பும் சுமார் 2,376 மெட்ரிக் டன் எடை கொண்டவை. ஒவ்வொரு பம்ப் யூனிட்டின் மாபெரும் பருமனை கற்பனை செய்ய வேண்டும். இந்தக் காரணத்திற்காக, இந்த மோட்டார்கள் "பாகுபலி மோட்டார்கள்" என அழைக்கப்படுகின்றன.
இத்தகைய சிக்கலான மற்றும் உயர் நுட்ப எலக்ட்ரோ மெக்கானிக்கல் வேலைகளில் 30 ஆண்டுகள் சிறந்த தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் அனுபவத்தையும் கொண்டுள்ள மெகா இன்ஜினியரிங் இன்ஃப்ராஸ்டிரக்சர் லிமிடெட் (Megha Engineering Infrastructure Limited (MEIL)) தெலுங்கானாவில் உள்ள விவசாய நிலங்களுக்குத் தடையின்றி பாசன நீரை அளிக்கவும் அதன் தாகத்தைத் தீர்க்கவும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
"தெலுங்கானாவின் கனவுத் திட்டத்தின் அங்கமாகவும், உலகின் மிகப்பெரிய லிஃப்ட் பாசனத் திட்டமான KLIP-யின் அங்கமாகவும் இருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். உலகின் மிகச்சிறந்த பொறியியல் வழங்குநர்களுடன் ஒருங்கிணைப்பதன் மூலமும் தெலுங்கானாவின் தண்ணீர் பற்றிய கனவை நனவாக்குவதன் மூலமும் உலகத் தரமுள்ள தொழில்நுட்பத்தை நிறைவேற்றுவதற்கு எங்களுக்குக் கிடைத்த நல்வாய்ப்பாக நாங்கள் கருதுகிறோம்," என MEIL-ன் இயக்குநரான திரு B. Srinivas Reddy கூறினார்.
The Fact Sheet
https://svrao.wetransfer.com/downloads/5f18db4015ebdccd3de0d595f9802bf520190808050353/83ee61
Photo: https://mma.prnewswire.com/media/958220/MEIL_Package_8.jpg
Video: https://mma.prnewswire.com/media/958221/MEIL_Package_8.mp4
Logo: https://mma.prnewswire.com/media/958718/MEIL_Logo.jpg
Photo: https://mma.prnewswire.com/media/959114/MEIL_Gravity_Canal.jpg
Share this article