புதுடெல்லி, October 15, 2018 /PRNewswire/ --
DJGF 2018 ஒரு பார்வை:
- 700 க்கும் மேற்பட்ட ப்ராண்ட்கள் காட்சிப்படுத்தப்பட்டன
- 45 % க்கு மேற்பட்ட புதிய பங்கேற்பாளர்களின் வளர்ச்சி
- 30% க்கும் மேல் தனிப்பட்ட பார்வையாளர்களின் எண்ணிக்கையின் வளர்ச்சி
- 10,000 ஸ்டோர்கள் வரை கொள்ளளவு உடைய ஒரு மிகப்பெரிய அளவிலான ஜ்வெல்லெரி டெக் பார்க் தலைநகரில் அமையவிருப்பது பற்றிய அறிவிப்பு
- ட்ரெண்ட்-செட்டிங் தயாரிப்பு வடிவமைப்பு & தொழில்நுட்பங்கள் நிறுவுதல் மற்றும் காட்சிப்படுத்தல்
- ரீடெய்ல் ஜ்வெல்லர்ஸ் கில்ட் அவார்ட்களின் 4வது பதிப்பு
Delhi Jewellery மற்றும் Gem Fair (DJGF)இன் 7வது பதிப்பை, ப்ரகதி மைதான், புதுடெல்லியில் UBM India வெற்றிகரமாக நிறைவு செய்தது. டெல்லி சட்டசபை உறுப்பினரான திரு ராம் நிவாஸ் கோயல் அவர்களால் கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டது; திரு கர்னெய்ல் சிங், BJP தேசிய தலைவர் - USA வணிகம்; திரு யோகேஷ் சிங்கால், தலைவர் - TBJA; திரு. மைக்கேல் டக், செயல்பாட்டு துணைத்தலைவர், UBM Asia Ltd. ; திரு. யோகேஷ் முத்ராஸ், நிர்வாக இயக்குநர், UBM India மற்றும் Mr. Abhijit Mukherjee, குழும இயக்குநர், ஆகியோர் மற்றும் UBM இன் பிற நகை வர்த்தக பிரமுகர்கள் முன்னிலையில் முன்னிலையில் நடைபெற்றது.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/742912/Delhi_Jewellery_Gem_Fair.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/767548/DJGF_2018_UBM_India.jpg )
இந்த B2B கண்காட்சியானது நகைகள் தொழிற்துறையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரிக்கப்பட்டு நகைகளின் மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள், நகை உற்பத்தியாளர்கள், வைர, ரத்தின, முத்து சப்ளையர்கள் மற்றும் வர்த்தகர்கள், விலைமதிப்பற்ற உலோக மற்றும் நகைகள் பெருகிவரும் வர்த்தகர்கள் மற்றும் சப்ளையர்கள், மற்றும் வர்த்தகம் & அரசாங்கம் ஆகியவற்றை ஒன்றாக கொண்டு ஒரே கூரையின் கீழ் உள்ள நிறுவனங்களின் சந்திப்பாக அமைந்தது. ஆறு தளங்களில் அமைக்கப்பட்ட இந்த நிகழ்வில் 300+ பங்கேற்பாளர்கள் மற்றும் 700 + மேற்பட்ட பிராண்ட் வரிசையில் ஒரு ஒளிமிக்க காட்சியாக இருந்தது. அண்டை மாநிலமான பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து ஒரு பெரும் வரவேற்பைப் பெற்றது, மேலும் இது புகழ்பெற்ற தொழில்துறை களமாகவும், நகைக்கடைகள் மற்றும் கல் நகைகள் மற்றும் அனைத்து விதமான நகைகளின் காட்சிப்படுத்தலின் ஒரே மையமாக அமைந்து இருப்பதை அனைத்து வகையிலும் உறுதிப்படுத்தியது.
National Institute of Diamond & Gems (NIDG) மற்றும் Delhi Gem & Jewellery Institute (DGL) ஆகியோரால் நடத்தப்பட்ட மூன்று நாட்கள் கருத்தரங்கம் இதன் முக்கிய சிறப்பம்சமாக விளங்கியது. நாள் 1 இல் வைரம் வகைப்படுத்துதல் மற்றும் மதிப்பிடுதலும் மேலும் ரத்தின கற்கள் அடையாளங்காணுதல் (Diamond Assortment and Valuation and Gemstone Identification) என்ற தலைப்பின் கீழ் கற்கள் பற்றிய கருத்துக்கள் ரூபி, எமரால்டு மற்றும் சபீரெர் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது அவற்றின் பொதுவான மாற்று / தூண்டுதல்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. நாள் 2 மற்றும் நாள் 3 அமர்வுகளில் செயற்கை வைரங்கள் (Synthetic Diamonds (HPHT & CVD)) மற்றும் அவற்றின் பண்புகள், Lab Grown Diamonds, HPHT Synthetic, CVD Synthetic மற்றும் வைரம் க்ரேடிங் மற்றும் வர்த்தகம் (வைரம் பார்சல் வர்த்தகம்) [Diamond Grading to Trading (Diamond Parcel Trade)] பற்றி பேசப்பட்டவை அனைத்தும் வைர பார்சல் வணிகம் மற்றும் உள்ளூர் 4C's இன் வைரம் க்ரேடிங் செய்தல் போன்றவற்றுக்கு உதவி செய்வதாக இருந்தது.
இந்த ஆண்டு இடம் பெற்ற முக்கியமான கண்காட்சியாளர்களாக Shilpi Jewels, Vikas Chain, Unique Chain, Riddhima Chain, Swarnshilp, Rohtak Chain, Heera Jewellers, Shri Balaji Gold, Royal Chain மற்றும் Classic Solitaires உள்ளிட்டவர்கள் இடம்பெற்றனர். இந்த கண்காட்சியின் முன்னோடிகளான, UBM India ஆனது வட இந்திய நகரங்களான பேரேலி, சண்டிகர் மற்றும் டேராடூனில் வெற்றிகரமான ரோட் ஷொ வரிசையை நடத்தியுள்ளது. இந்த கண்காட்சியானது The Bullion & Jewellers Association, Delhi Jewellers Association, Maliwara Jewellers Association & Karol Bagh Jewellers Association ஆகிய சிறந்த சங்கங்களால் ஆதரவளிக்கப் பட்டது.
DJGF 2018 இன் துவக்க விழாவில் பேசிய, தலைமை விருந்தினர் திரு. ராம் நிவாஸ் கோயல், டெல்லி சட்டசபை ஸ்பீக்கர் கூறியதாவது, " DJGF போன்ற புகழ்பெற்ற தளங்களைப் பயன்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன், தலைநகரில் விரைவில் நகை தொழில்நுட்ப பூங்காவை அறிவிக்கவுள்ளோம். இந்த நகை தொழில்நுட்ப பூங்கா வட இந்தியாவின் மிக சிறந்த நகை மையமாக இருக்கும் என்பதில் எந்த ஐயத்திற்கு இடமில்லை, மேலும் இது தேசிய மற்றும் சர்வதேச தொழில்துறை வல்லுநர்களை ஈர்க்கும். சமீபத்திய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு நகை தொழில்நுட்ப பூங்காவில் 10,000 கடைகள் வரை இடமளிக்க முடியும் என்பதால் இது அனைத்து விதமான நகை தேவைகளுக்குமான ஒற்றைப்புள்ளியாகும்." என்றார்.
திரு. யோகேஷ் முத்ராஸ், நிர்வாக இயக்குநர், UBM India, கூறியதாவது, "வரவிருக்கும் ஆண்டுகளில், கற்கள் மற்றும் நகைத் துறையின் வளர்ச்சிக்கு சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பிராண்டுகளின் வளர்ச்சியால் பெருமளவில் பங்களிப்புச் செய்யப்படும். நிறுவப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட சந்தைகளைத் திசைதிருப்பி, வளர்ச்சிக்கு வாய்ப்புக்களைத் திறக்கின்றன. நுகர்வோர் மற்றும் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறு இருப்பதால் ஒழுங்கமைக்கப்பட்ட துறையானது ஒரு அடிப்படை பங்கை தொடரும். Delhi Jewellery மற்றும் Gem Fair ஆகியவை ஒழுங்கமைக்கப்பட்ட இந்திய நகரின் சந்தைக்கு நுழைவாயிலாக அமைந்துள்ளன. இது வடக்கில் கவனம் செலுத்துவதோடு, சிறப்பு நிகழ்வுகள் - கருத்தரங்குகள், பட்டறைகள், குழு விவாதங்கள், மற்றும் பேஷன் ஷோ ஆகியவற்றின் சிறந்த அனுபவத்தை வழங்கும்."
"UBM Indiaவின் ஐந்து நகர நகை கண்காட்சியில் ஒன்றாக இது இருப்பதால், DJGF நகை சந்தை உடன் நம்பிக்கையூட்டும் பொருட்கள் வழங்குவதை உறுதிப்படுத்துகிறது. நகைகள் அதிக விற்பனை செய்வது வரவிருக்கும் திருமணம் மற்றும் பண்டிகை பருவத்திற்கு இது மிகவும் நன்றாக இருக்கும். இந்த ஆண்டின் பதிப்பில் பார்க்கும் போது 700க்கும் மேற்பட்ட முன்னணி ப்ராண்டுகள் மற்றும் தனித்துவமான நகைகளை காட்சிப்படுத்தும் போக்குகளைக் காண்பிக்கிறது. புதிய கண்காட்சி பங்கேற்பில் 45 % வளர்ச்சி கண்டுள்ளது, மேலும் தனிப்பட்ட பார்வையாளர்களில் 30 % வளர்ச்சி கண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியானது சில்லறை விற்பனையாளர் கில்ட் விருதுகள் (RJGA) இன் நான்காவது பதிப்பு, இந்தியா முழுவதும் சில்லறை நகை வியாபாரிகளின் சிறந்த திறமைகளை மதிக்கும் ஒரு பிரத்யேக முயற்சியாகும் " என்றார்.
இந்த தொழில் துறையின் ரீடெய்ல் ஜ்வெல்லெர்ஸ் கில்ட் அவார்ட்ஸ் ஈவினிங் ஆஃப் 30வது செப்டம்பர் நான்காவது பதிப்பின் சாட்சியாகும். UBM India வின் ஒரு தனித்துவமான முன்னெடுப்பான இது, விருது பெற்ற தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் சில்லறை வணிகம் ஆகியவற்றின் முயற்சிகளை ஒரு பான் இந்தியா மட்டத்தில் இந்த விருதுகள் அங்கீகாரம் பெற்றவை. 3 ஆண்டுகால கால முடிவில், நாட்டின் பல்வேறு மூலைகளிலிருந்தும் பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களுக்கு சமமானவற்றை வழங்குவதற்காக தொழில்துறைக்கு மிகவும் வெளிப்படையான மற்றும் செயல்முறை இயக்க விருதுகளை RJGA வளர்த்துள்ளது.
ரீடெய்ல் ஜ்வெல்லெர்ஸ் கில்ட் அவார்ட்ஸ் உடன் சேர்ந்து எர்னெஸ்ட் & யங் செயல்முறை ஆலோசகர்கள் ஒரு முறையான, தொழில்முறை செயல்முறை மூலம் சில்லறை நகை துறையில் நாட்டின் திறமை வாய்ந்த வல்லுநர்களை ஈர்த்தது. இந்த ஆண்டுக்கான பரந்து விரிந்த விருதுப் பிரிவுகளில் பார்க்கையில், சில்லறை நகை தொழில்முறையின் பல்வேறு நடவடிக்கைகளை, நினைவில் வைத்து, 'Store of the Year', 'Excellence in Design', 'Marketing Excellence' மற்றும் 'Operational Excellence' ஆகியவை அளிக்கப்படுகின்றன.
500க்கும் மேற்பட்ட சில்லறை நகைவிற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள், HNIs மற்றும் பலர் பங்கேற்ற தலைநகரின் நாகரீக நகை அணிவகுப்பில், விருது வழங்கும் விழா இரவின் போது Aditi Hundia - Yamaha Fascino - Miss Diva Supranational 2018; Shraddha Shashidhar - Yamaha Fascino Miss Diva 2017 - Miss Universe India; Priyadarshini Chatterjee - Fbb Femina Miss India World 2016 மற்றும் Peden Ongmu Namgyal - Yamaha Fascino - Miss Diva Supranational 2017 ஆகிய நான்கு ஃபேஷன் ஷோக்கள் நடத்தப்பட்டன. அவர்கள் பளபளப்பான உடைகளை அணிந்து கணிசமான பார்வையாளர்களைக் கவர்ந்தனர், மேலும் வரவிருக்கும் ஃபெச்டிவல் பருவத்தின் போது முக்கிய சில்லறை நகை கடைகளில் தங்கள் வருமானத்தை அதிகரிக்கும் விதமான மிகச்சிறந்த நகைகளை காட்சிப்படுத்தல் பற்றிய ஒரு பார்வை வழங்கப்படுகிறது. RJGA 2018 இன் முக்கிய நிகழ்வாக Shri Balaji Gold, Vikas Chains, Savio மற்றும் Savya jewels ஆகிய நிறுவனங்களின் முதன்மை பிராண்டுகளின் Walk of Fame for the Jewellery Industry - என்ற ஒரு தனிப்பட்ட கண்கண்காட்சி பார்வைக்கு வைக்கப்பட்டது. தொழில்துறை பிரபலங்களின் பொழுதுபோக்கு காட்சிகள், இணைப்பு அமர்வுகள் போன்றவை நிகழ்வில் இடம்பெற்ற மேலும் சில முக்கிய நிகழ்ச்சிகள் ஆகும்.
DJGF 2018 இல் பங்கேற்ற தொழில்துறையின் முக்கிய பேச்சாளர்கள்:
அருன் கார்க், இயக்குநர், Tirumala Jewellers கூறியதாவது, "Delhi Jewellery மற்றும் Gems Fair (DJGF) என்ற ஒன்றை நல்ல துவக்கமாக கொண்டு, நாம் நாள் 1 முதற்கொண்டே பல்வேறு வணிக விசாரணைகளை நாம் பெற்றோம். B2B பிரிவை நோக்கமாக கொண்டு அமைக்கபட்ட இந்த கண்காட்சியின் மூலம் நாங்கள் எங்கள் ஸ்டாலுக்கு பல்வேறு சில்லறை விற்பனையாளர்கள் வருகை புரிந்ததை எதிர் கொண்டோம். DGJF ஒரு அங்கமாக நாங்கள் கடந்த 4 ஆண்டுகளாக இருந்து வருகிறோம் மேலும் நிகழ்வின் வளர்ச்சி ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதை கண்கூடாக நாங்கள் காண்கிறோம். வரும் ஆண்டுகளிலும் இதே போன்ற ஒரு வளர்ச்சி இருக்கும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம்" என்றார்.
சுரேந்திர ரத்தோட், CEO, Yash Gold கூறியதாவது, "கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் எக்ஸ்போவின் ஒரு அங்கமாக இருந்திருக்கிறோம். கடந்த 3 நாட்களுக்கு மேலாக ஒரு நல்ல கண்காட்சியை நாங்கள் பெற்றுக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல எக்ஸ்போவை அமைத்ததற்காக அதன் அமைப்பாளர்களை வாழ்த்துகிறோம், இது கடந்த 3 நாட்களுக்கு நல்ல வணிகத்திற்கான வாசல்திறந்துள்ளது. எக்ஸ்போவில் ஒரு கூடுதல் நாள் செலவழிக்க விரும்ப நினைக்கிறோம், ஆகையால், அமைப்பாளர்கள் நிகழ்வுகளுக்காக குறைந்தபட்சம் மேலும் கூடுதலாக ஒரு நாளை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்"
அப்பீ பிண்டால், இயக்குநர், Vimal Diamonds கூறியதாவது, "ஒரு நல்ல மற்றும் உயர் தரமான பார்வையாளர்கள் எங்கள் ஸ்டாலுக்கு வருகை புரிந்தததால் உண்மையில் கண்காட்சியை மகிழ்ச்சியாக உணர்கிறோம். கடந்த 4 ஆண்டுகளாக இந்த எக்ஸ்போவில் நாங்கள் பங்கேற்று வருகிறோம். இது வரும் ஆண்டுகளில் நல்ல வாடிக்கையாளர்களைப் பெற்றுக் கொள்ள உதவுவதோடு எதிர்காலத்திற்கான கண்காட்சியின் ஒரு பகுதியாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். பெரிய மிகச்சிறந்த ஒரு அனுபவத்தை நாங்கள் எதிர்நோக்குகிறோம்". என்றார்
N.K ஜெயின், இயக்குநர், Savya Jewels கூறியதாவது, "எக்ஸ்போவில் 3 ஆண்டுகளாக நாங்கள் பங்கேற்றுள்ளோம். தொழில்துறையின் முன்னணி எக்ஸ்போவில் இதுவும் ஒன்றாகும். 3 நாள் நிகழ்வு நன்றாக இருந்தது, நகை மற்றும் வளரும் வணிகங்கள்,எங்கள் எதிர்பார்ப்புகளை மீறியதாகவே இருந்தது"என்றார்.
ஆதிஷ் சோனி, இயக்குநர், Rohtak Chain கூறியதாவது, "Delhi Jewellery மற்றும் Gems Fair (DJGF) இல் பங்கேற்றது உண்மையிலேயே மிகச் சிறந்த அனுபவமாகும் மேலும் எங்கள் ஸ்டாலுக்கு மிகச்சிறந்த பார்வையாளர்களை நாங்கள் பெற்றோம். We are confident that the expo will have a huge impact on theஇந்த தொழில்துறையின் B2B பிரிவில் இந்த கண்காட்சியானது ஒரு மிகச்சிறந்த தாக்கத்தை ஏற்படுத்து என எங்களால் உறுதிகூற முடியும். மேலும் UBM ஆல் நடத்தப்பெறும் இந்த நிகழ்வை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம், ஒரு மிக உன்னதமான இந்த கண்காட்சியை அளித்தமைக்கு நன்றி கூறுகிறோம். "
DJGF பற்றி:
DJGF என்பது UBMஆல் ஒருங்கிணைக்கப்படும் ஒரு நிகழ்வாகும், which in June 2018ம் ஆண்டு ஜூன் மாதம் combined with Informa PLC உடன் இணைந்து ஒர் முன்னணி B2B தகவல் சேவை குழுமமாக வளர்ச்சியடைந்துள்ளது மேலும் உலகிலேய மிகப்பெரிய B2B நிகழ்ச்சி ஒருங்கிணப்பாளர் இவர்கள் தான். DJGF பற்றிய மேலும் தகவல்களுக்கு https://delhi.jewelleryfair.in/ பார்வையிடவும் மேலும் ஆசியாவில் எங்களை http://www.ubm.com/global-reach/ubm-asia என்ற முகவரியில் பார்க்கலாம்.
UBM Asia பற்றி:
UBM Asia சமீபத்தில் Informa PLCஇன் ஒரு அங்கமானது, இதுதான் உலகிலேயே ஒரு மிகப்பெரிய B2B நிகழ்ச்சி ஒருங்கிணப்பாளர் ஆவர். மேலும் விவரங்களுக்கு ஆசியாவில் எங்களை http://www.ubm.com/asia என்ற முகவரியில் பார்க்கலாம்.
எந்த ஒரு ஊடக சம்பந்தமான விசாரணைகளுக்கும் தொடர்பு கொள்ளவும்:
UBM India
ரோஷினி மித்ரா
[email protected]
மிலி லால்வானி
[email protected]
+91-22-61727000
ப்ரச்சி குமார்
[email protected]
+91-7718866668
UBM India
Share this article