புதுடெல்லி, August 3, 2018 /PRNewswire/ --
இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் பேக்கேஜிங் மற்றும் பதப்படுத்தும் தொழிலுக்கு ஒரு வலுவான நுழைவாயில்
இந்தியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளர்களான UBM India, ProPak India எக்ஸ்போவின் முதல் பதிப்பை, இந்தியாவின் வளர்ந்து வரும் உணவு பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் தொழிற்சாலைகளுக்கு வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவிலும், வெளிநாடுகளிலுமுள்ள சர்வதேச அளவில் புகழ்பெற்ற தொழில் வல்லுனர்களின் ஒரு விரிவான சந்தை கண்ணோட்டத்தையும், அதன் கூட்டமைப்பையும் கொண்டுவருவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/726236/ProPak_India_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/726235/ProPak_India_Press_Conference.jpg )
ProPakஆனது, தனது களத்தில் ஆசியாவின் மிகப்பெரிய தளமாக உள்ளது, மேலும் 26 ஆண்டுகள் அதன் நிரூபிக்கப்பட்ட வரலாறான ProPak உலக மாதிரியை இந்தியாவுக்கு கொண்டுவருகிறது. தாய்லாந்து, சீனா, மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் அளித்த அதே தரம், தொழில்முறை மற்றும் சேவையுடன், இந்தியாவில் ProPak அளிக்கும் வெளியீட்டு பதிப்பு இந்தியத் தேவைகள் அனைத்திற்கும் பொருந்தக்கூடியதாக இருக்கும். இது Association of Food Scientists and Technologists (I) Mumbai Chapter (உணவு அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் (I) மும்பை பகுதி) (AFSTI), All India Food Processors' Association (அனைத்திந்திய உணவு பதபடுத்துவோர் சங்கம்) (AIFPA) மற்றும் Active and Intelligent Packaging Industry Association (செயலாக்க மற்றும் இண்டலிஜெண்ட் பேக்கேஜிங் தொழில் சங்கம்) (AIPIA) போன்ற முக்கிய சங்கங்களால் நன்கு ஆதரிக்கப்படுகிறது.
ProPak India ஆனது, ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 1, 2018, கிரேட்டர் நொய்டா, India Expo Martஇல் நன்கு நிறுவப்பட்ட Fi India & Hi expo வுடன் இணைந்து நடைபெறும். Fi India & Hi உடன் இணைந்து, ProPak India ஆனது தொழில்துறையினருக்கு ஒரே குடையின் கீழ் உணவு பொருட்கள், பதப்படுத்துதல், தொழில்நுட்பம் மற்றும் பேக்கேஜிங் தொடர்பான தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை கொண்டு வருகிறது. நிகழ்ச்சியில் 80 நிறுவனங்கள் ஆட்டோமேஷன், சோதனை மற்றும் அளவீட்டு பொருட்கள், அடைத்தல் மற்றும் சீலிங் இயந்திரங்கள், கார்ட்டூனிங் இயந்திரங்கள், தெர்மோபார்மிங், ரோபாட்டிக்ஸ், சேமிப்பு மற்றும் போக்குவரத்து, பொருட்கள் மற்றும் நுகர்பொருட்கள், மற்றும் முழுமையான உற்பத்தி லைன்கள் மற்றும் அதனுடன் இணைந்த சேவைகள் போன்றவற்றை வழங்குகின்றன.
இந்தத் துறையில் தொடர்புடைய வெளிப்பாடுகள் தவிரவும், ProPak India ஆனது உணவு, குளிர்பானங்கள், மருந்துகள், அழகுசாதன பொருட்கள், சுயபராமரிப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் பேக்கேஜிங் மற்றும் பதப்படுத்தல் தீர்வுகளை அளிக்கிறது. இதில், UBM Indiaவின் வலுவான காலடிகளைப் பின்பற்றி உணவு, பானங்கள், மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் போன்ற முன்னணி துறைகளில் Innopack F&B, Innopack Pharma, CPhI - P-MEC India, மற்றும் Cosmoprof India, உடன் Fi India & Hi ஆகியவற்றின் தொழில் நிகழ்வுகள் இந்தக் கண்காட்சியில் நிகழ்த்தப்பட உள்ளது.
இந்தக் கண்காட்சியில் Clearpack India, IWK Thailand, Ishida India, Gandhi Automations, Ace Technologies, Goma Engineering, IMA-PG, போன்ற முக்கிய நிறுவனங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளன. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், அரசு நிறுவனங்கள், மற்றும் தயாரிப்பு மேம்படுத்தலுடன் தொடர்புடைய தொழில்நுட்ப வல்லுநர்கள், R&D, QC/QR லேபிளிங், பேக்கேஜிங் மேம்படுத்தல், கொள்முதல், மற்றும் சந்தைப்படுத்துதல் மற்றும் நெட்வொர்க்குக்கு உதவி, சந்தைபோக்குகள் மற்றும் தீர்வுகள் பற்றிய கருத்து பரிமாற்றங்கள், மற்றும் ஒரே இடத்தின் கீழ் வணிகம் என்பது போன்று அனைவருக்கும் பல்வேறு நன்மைகளை இந்த கண்காட்சி வழங்குகிறது.
கண்காட்சியுடன் இணைந்து, ProPak India 2018 இல் Active and Intelligent Packaging Industry Association (AIPIA) மற்றும் World Packaging Organisation (WPO) ஆல் 'New ways to promote healthy consumption, Fight counterfeiting and Engage consumers' என்ற சிறப்பான ஈடுபாட்டுடன் கூடிய ஊடாடும் கருத்தரங்கு நிகழ்த்தப்படவுள்ளது. தொழில்துறையின் நிபுணர்கள் அவர்களது கருத்துக்களை 'Economic Impact of Trade Barriers on Indian Food Processing Sector' மற்றும் 'Novel Ideas for Start-up in Food Processing & Packaging Sector' என்ற தலைப்புகளின் கீழ் அளிக்கவுள்ளதால் இந்த நிகழ்ச்சி அறிவு(தொழில்துறை) பரிமாற்றத்துக்கு உதவுவதோடு, தொழில்துறையில் பல அம்சங்களை வழங்குவதற்கும் காத்திருக்கிறது எனலாம்.
இந்தியாவில் தொழில்துறை நிலப்பரப்பு:
2015ம் நிதியாண்டில் 32 பில்லியன் டாலராக இருந்த பேக்கேஜிங் தொழில்துறையின் வளர்ச்சி 2020ம் நிதியாண்டில் $73 billion ஆக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. தொழில்துறையானது ஆண்டுதோறும் 18% வளர்ச்சியை எட்டும் என கணிப்பிடப்பட்டுள்ளது (ஃப்ளக்சிபிள் பேக்கேஜிங் 25% மற்றும் வலிமையான பேக்கேஜிங் 15%). ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனையும் அதிகரித்துவரும் மின்வணிகமும் இந்திய பேக்கேஜிங் துறையில் பெரும் வளர்ச்சியைக் கொண்டுவருகிறது. இதன் அதிவேக வளர்ச்சியானது நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பாக்கெட்டுகளை (thousands of packets) வழங்கியுள்ளது மற்றும் தரமாக பேக்கேஜிங் செய்யப்பட்ட தயாரிப்புகளின் தேவை சந்தையில் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் வாழ்க்கைமுறை மாற்றம் (Changing consumer lifestyles) காரணமாக ரெடி-டு-ஈட் (ready-to-eat) தயாரிப்புகள் ஃப்ளெக்சிபிள் பேக்கிங் துறை வளர்ச்சியை அதிகரிப்பதோடு, உணவுத்துறை மட்டுமே சுமார் 38% ஃப்ளெக்சிபிள் பேக்கேஜிங் சந்தையை தனக்கு கீழ் கொண்டுள்ளது.
ProPak India 2018 துவக்கவிழா பற்றிய அறிவிப்பில் பேசிய, UBM India மேலாண் இயக்குநர் Mr Yogesh Mudras கூறுகையில், "உணவு முதற்கொண்டு, மருந்துகள் மற்றும் ஊசிமருந்துகள், பதப்படுத்தப்பட்ட மற்றும் அரை பதப்படுத்தப்பட்ட உணவுகள், பழங்கள் மற்றும் காய்கறிகள், சமையல் எண்ணெய், ஆகியவை மட்டுமல்லாது பல்வேறு பிற உபகரணங்கள் மற்றும் தொழில்துறை இயந்திரங்கள் ஆகியவற்றைக் கொண்டு பொருட்களின் தரத்தைப் பாதுகாப்பதன் மூலம், இந்திய பொருளாதாரத்துக்கு பேக்கேஜிங் துறையானது உதவி புரிந்து வருகிறது. வருடாந்தரம் 15-18% என்ற விகிதத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி விகிதம் இருந்தபோதிலும், இந்தியாவின் தனிநபர் பேக்கேஜிங் நுகர்வு 4.3 கிலோவுக்கும் மிகக் குறைவானது, இந்த களத்தில் ஜெர்மனி மற்றும் தைவான் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது முறையே 42 கிலோ மற்றும் 19 கிலோ ஆகும்" என்றார்.
மேலும் அவர்d, "UBM India உடன்ProPak இணைந்து - உலகளவில் 1,00,000 க்கும் அதிகமான வாங்குபவர்களுக்கும் சப்ளையர்களுக்கும் 3,000 க்கும் மேற்பட்ட கண்காட்சிகளைக் கொண்டுவருவதை நோக்கமாக கொண்டுள்ளது - உணவு, குளிர்பான மற்றும் மருத்துவதுறை நிறுவனங்கள் பங்குபெறும் இதில் பங்கேற்பாளர்களுக்கான வெற்றிகரமான கூட்டங்கள், அறிவு பரிமாற்றங்கள், நெட்வொர்க்கிங் மற்றும் வணிக வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இந்த முக்கிய, ஆனால் வளர்ந்து வரும் இந்தியத் தொழில்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். இந்த முதல் சந்தர்ப்பத்தில் தொழில்துறையின் ஒரு உற்சாகமான பங்களிப்பை நாங்கள் எதிர்நோக்குகிறோம்" என்றார்.
UBM Asia பற்றி
சமீபத்தில் Informa PLCஇன் ஒரு அங்கமாக இணைக்கப்பட்ட UBM Asia, உலகிலேயே ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுமம் மற்றும் மிகப்பெரிய B2B நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆகும். ஆசியாவில் எங்கள் பங்களிப்பு மற்றும் மேலதிக தகவல்களைப் பெற http://www.ubm.com/asia க்கு வருகை புரியவும்.
ProPak India பற்றி
UBM ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட ProPak India, உலகிலேயே முன்னணிB2B தகவல் சேவை குழுமம் மற்றும் மிகப்பெரிய B2B நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான Informa PLC உடன் ஜூன் 2018 இல் இணைந்தது. இந்தியாவில் எங்கள் பங்களிப்பு மற்றும் மேலதிக தகவல்களைப் பெற http://www.ubm.com/india க்கு வருகை புரியவும்.
ஊடகம் தொடர்பான கேள்விகளுக்கு, தொடர்புகொள்ளவும்:
UBM India
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
Prachi Kumar
[email protected]
+91-22-61727172
Share this article