ஹைதராபாத், இந்தியா, July 9, 2018 /PRNewswire/ --
தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல்மயமாக்கம் ஆகியவற்றின் வளார்ச்சி கணக்கியல் மற்றும் வணிகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது பற்றிய கலந்தாய்வு
ஜூலை 6-14 முதல், Dennis Whitney, CMA, CFM, CAE, IMA® (இன்ஸ்டியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் அக்கவுண்ட்டண்ட்ஸ்) இன் முதுநிலை துணைத் தலைவர் தனது ஹைதராபாத், பெங்களூர், கொச்சி, மும்பை, டெல்லி பயணங்களில் இந்தியாவின் நிதித்தலைவர்கள் மற்றும் மேலாண்மை கணக்கியல் நிபுணர்களை சந்தித்து தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கம் ஆகியவற்றின் வளார்ச்சி கணக்கியல் மற்றும் வணிகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது பற்றி கலந்தாலோசனை செய்ய உள்ளார்.
(Photo: https://mma.prnewswire.com/media/715329/Dennis_Whitney_IMA.jpg )
"நிதி குழுவின் பங்கு, நடவடிக்கைகள் மற்றும் மூலோபாயங்களில் வளர்ந்து வரும் பொறுப்புகளை விரிவுபடுத்துகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) - அல்லது நான் அதிகரித்த புலனுணர்வு என்று அழைக்க விரும்புகிறேன் - இங்கே உள்ளது மற்றும் இது இங்கேயே இருக்க வேண்டும். அனைத்து நிறுவனங்களும் தனி மேலாண்மை கணக்காளர்களும் தங்கள் திறமையின் தனித்திறனை உயர்த்த வேண்டும் மற்றும் புதிய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்," என்று CMA® (சான்றளிக்கப்பட்ட மேலாண்மை கணக்காளர்)திட்டத்தின் பொறுப்பாளரான Whitney கூறுவதோடு, வணிகத்தில் கணக்காளர்கள் மற்றும் நிதி வல்லுநர்களுக்கான IMA இன் உலகளாவிய அங்கீகாரம் பெற்ற அளவிலான சான்றளிப்பு கிடைக்கிறது என்றும் தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் பயணம் மேற்கொள்ளவிருக்கும் Whitney மேலாண்மை கணக்கியல் வேலைப் பணிகளின் இயல்பை தொழில்நுட்பம் மூலம் மாற்றியமைப்பது எப்படி; தரவு பகுப்பாய்வு போட்டியிடும் நன்மைகளை உருவாக்கக்கூடிய வழிகளை வரையறுத்தல்; தரவு மேலாண்மை, தரவு செயலாக்கம், முன்கணிப்பு மாதிரியாக்கம், மற்றும் தரவு காட்சிப்படுத்தல் மற்றும் உதவி நிர்வாகம் ஆகியவை தொழில்முறையில் வெற்றிபெற தரவு பகுப்பாய்வு போன்ற திறன்களைத் தயாரிக்க ஏன் தேவை என்பதை பற்றி விளக்கமளிக்கிறார்.
கடந்த மாதம் முன்பு, IMA அதன் மேம்பட்ட வெளிப்பாடு வரைவான Management Accounting Competency Framework ஐ வெளியிட்டது. மேலாண்மை கணக்காளர்கள், இயந்திர கற்றல் மற்றும் ரோபாட்டிக்ஸ் செயல்முறை தொழிலில் தானியக்கங்களின் தாக்கம் போன்ற புதிய தொழில்நுட்பங்களுன் பொருத்தமானதாக இருக்க வேண்டிய திறமைகளை பிரதிபலிக்க இருக்க வேண்டிய கட்டமைப்பானது மேம்படுத்தப்பட வேண்டும்.
அவர் கூறிய இந்த கட்டமைப்பு நிதி மற்றும் கணக்கியல் நிபுணர்களுக்கு தேவைப்படும் முக்கிய திறன்களை ஆறு களங்களில் அடையாளம் காட்டுகிறது, அவற்றில் பல CMA® (சான்றளிக்கப்பட்ட நிர்வாக கணக்கர்) சான்றளிப்பு பாடத்திட்டத்தில் உள்ளது:
• மூலோபாய முகாமைத்துவம்
• அறிக்கை மற்றும் கட்டுப்பாடு
• தொழில்நுட்பம் மற்றும் பகுப்பாய்வு
• தலைமைத்துவம்
• வணிக நுண்ணறிவு மற்றும் செயல்பாடுகள்
• நிபுணத்துவ கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகள்
புதிய சேர்த்தல் அல்லது விரிவாக்கங்கள், மூலோபாய மேலாண்மை, தரவு பகுப்பாய்வு, தரவு ஆளுமை மற்றும் தரவு காட்சிப்படுத்தல் போன்றவை வணிகத்தில் சிறந்த முறையில் தன்னியக்கத்தைப் பயன்படுத்துவதற்கான திறன்களை உள்ளடக்கியுள்ளது. கணக்கியல் தொழிலில் நெறிமுறை நடத்தை மற்றும் முக்கியத்துவத்தை வலியுறுத்தி "நிபுணத்துவ நெறிமுறைகள் மற்றும் மதிப்புகள்" ஒரு திறமையான களமாக சேர்க்கப்பட்டுள்ளது.
தற்போது திறந்த கட்டமைப்பு கருத்துரை மற்றும் பயிற்சியாளர்களுக்காக, கல்வியாளர்கள் மற்றும் மற்ற பங்குதாரர்கள் இப்போது முதல் செப்டம்பர் 17-21018 வரை தங்கள் கருத்துக்களை http://www.imanet.org/framework இல் பகிர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
"எதுவாக இருந்தாலும் "ரோபோ" சொல்வது சரியானது என்று நினைப்பதை விட, அது சொல்வது எல்லாமே சரி என்ற நிலைதான் ஆபத்தானது. ஒரு நல்ல தகவல் மற்றும் சமூக முடிவுகளை எடுக்கும் பொருட்டு கணக்காளர்களுக்கு மென்மையான திறன்களை பயிற்றுவிக்க வேண்டும். ஒரு "தரவு மொழிபெயர்ப்பாளர்" தரவு விஞ்ஞானியுடனும் மேல் நிர்வாகத்திற்கும் இடையேயான பாலமாக இருப்பது என்பது தான் அது - மேலாண்மைக் கணக்கியலாளர்களுக்கு வலுவான தகவல்தொடர்பு திறன்கள், விமர்சன சிந்தனைகள், தொழில்சார் எதிர்பார்ப்புகள் மற்றும் நெறிசார்ந்த முடிவெடுக்கும் திறன் ஆகியவைத் தேவைப்படும்"என்று Whitney முடித்தார்.
IMA® (Institute of Management Accountants) பற்றி
கணக்காளர்கள் மற்றும் நிதித் துறையைச் சேர்ந்தவர்களின் சங்கமான IMA®, நிர்வாக கணக்கியல் தொழிலை மேம்படுத்துவதில் பிரத்யேகமாக கவனம் செலுத்தும் மிகப் பெரிய, மிக கெளரவமான சங்கங்களுள் ஒன்றாகும். உலகளவில், IMA ஆராய்ச்சி, CMA® (Certified Management Accountant) பயிற்சி நிகழ்ச்சி, தொடர்ச்சியான கல்வி, நெட்வொர்க்கிங் மற்றும் மிகச் சிறந்த நன்னெறி வணிக நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பது ஆகியவற்றின் மூலம் இந்தத் தொழிலுக்கு ஆதரவளிக்கிறது. IMA 140 நாடுகளில் உள்ள 100,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், 300 தொழில் மற்றும் மாணவர் குழுக்கள் ஆகியோரின் நெட்வொர்க்கை உலகளவில் கொண்டுள்ளது. Montvale- N.J., USA-வை தலைமையகமாகக் கொண்டிருக்கும் IMA உலகளவில் நான்கு பகுதிகளின் மூலம் குறிப்பிட்ட சேவைகளை அளிக்கிறது: அமெரிக்கா, ஆசியா/பசிஃபிக், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு/இந்தியா. IMA பற்றிய மேலும் தகவலுக்கு http://www.imanet.org-யைப் பாருங்கள்.
ஊடகத் தொடர்பு:
Media Contact:
Janice Sevilla
[email protected]
+91-9847005818
Communication Specialist
Institute of Management Accountants
<end_indent
Share this article