மும்பை, May 21, 2018 /PRNewswire/ --
செக் குடியரசின் Prague-ல், சமீபத்தில் நடைபெற்ற BIZZ விருதுகள் நிகழ்ச்சியில் வணிகங்களின் உலக கூட்டமைப்பு- World Confederation of Businesses (WORLDCOB), Dr Batra's[TM] Healthcare நிறுவனத்திற்கு ' மிகவும் தூண்டுதலான நிறுவனம்' என்ற விருதை அளித்தது. இந்தியா, UAE, UK, பஹ்ரைன் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் பரவியுள்ள 225 ஹோமியோபதிக் க்ளினிக்குகள் கொண்ட மிகப்பெரிய தொடராக விளங்கும் Dr Batra's[TM] Healthcare, 120 நாடுகளிலிருந்து பங்குபெற்ற கம்பெனிகளிடையே, இந்த வருடம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஹெல்த்கேர் நிறுவனமாகும். Dr Batra's[TM] குழு நிறுவனங்களின் ஸ்தாபகர் மற்றும் சேர்மன் மரியாதைக்குரிய Dr. Mukesh Batra, விருதைப் பெற அங்கே இருந்தார்.
(Logo: https://mma.prnewswire.com/media/664189/Dr_Batra_s_Multi_Specialty_Homeopathy_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/694092/Dr_Batra_with_Bizz_award.jpg )
தங்கள் நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க வகையில் பங்குகொள்ளும், சில முக்கிய வர்த்தகங்களை அங்கீகரிக்க WORLDCOB ஆல் BIZZ விருதுகள் உருவாக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசும்போது, Dr. Mukesh Batra, உலகத்தில் மிகவும் தூண்டுதலான நிறுவனம் என அங்கீகரிக்கப்பட்டது மிகவும் பூரணமாக உணர வைத்தது மேலும் உலகில் ஹோமியோபதி மருத்துவம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதை இது காட்டுகிறது என்று கூறினார். மேலும் அவர், 'எங்களுக்கு விருது வழங்கியமைக்காக நாங்கள் WORLDCOB-க்கு நன்றி கூறுகிறோம். இது ஹோமியோபதிக் ஹெல்த்கேரில் புதுமை மற்றும் தனிச்சிறப்பு மூலம் வெற்றியை தொடர எங்களது நிறுவனத்திற்கு ஒரு புதிய தூண்டுதலாக அமையும்." என்றும் கூறினார்.
உலக ஹோமியோபதி வரைபடத்தில் இந்தியாவை முன்னணிப்படுத்தும் முன்னோடி பாத்திரத்தை வகிக்கும் Dr Batra's[TM] Healthcare, அதன் சமரசமற்ற மேம்பட்ட நிபுணத்துவம் மற்றும் ஒப்பிடமுடியாத அனுபவத்தின் மூலமாக உலகெங்கிலுமுள்ள 1மில்லயனுக்கும் அதிகமான மக்களின் நோய்களை குணப்படுத்தி அவர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது.
Dr Batra's® நிறுவனங்களின் குழுவைப்பற்றி
மும்பையில் 1982ல் Dr. Mukesh Batra ஆல் Dr Batra's[TM] Health Care குழு உருவாக்கப்பட்டது. இந்த குழுவானது, அபுதாபி, துபாய்,டாக்கா, இந்தியா, லண்டன் மற்றும் மனாமா போன்ற 133 நகரங்களில் 225 க்ளினிக்குகள் அமைத்து இன்று ஹோமியோபதிக் ஹெல்த்கேர் கார்ப்பரேட்டில் முன்னணியில் உள்ளது. 2009ல் நிறுவனமானது, அழகியல் சார் சேவைகளை அதன் தலைமை பிராண்டான Dr Batra's[TM] Aesthetic Solutions Pvt. Ltd மூலம் அறிமுகப்படுத்தியது. தலைமுடி வளர்ச்சி, தோல் கவனிப்பு, Hair Transplantation மற்றும் உடல் மெலியும் தீர்வுகள் போன்ற பலதரப்பட்ட சேவைகளை அழகியல் துறை மூலம் Dr Batra's[TM] வழங்கியது.
பிராண்டானது, தன்னுடைய நன்கு விரிவடைந்த பிரிவான Dr Batra's[TM] Positive Health Products Private Limited-ன் கீழ் குறிப்பிட்ட விதத்தில் தனிநபர் ஹெல்த்கேர் தயாரிப்புகளில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தையும் உருவாக்கியது. Dr Batra's[TM] வின் உலகெங்கும் உள்ள 10 இலட்சத்துக்கும் அதிகமான நோயாளிகளிடத்தில் தனிப்பட்ட சிகிச்சை மற்றும் கவனிப்பு, இதனுடன் 3.5 இலட்சம் தலைமுடி நோயாளிகள் மற்றும் 1.4 இலட்சம் தோல் நோயாளிகளையும் கொண்டுள்ளதால் தனிப்பட்ட பங்களிப்பை இது கொண்டுள்ளது.
Dr Batra's[TM] Cyber Clinic, ஒவ்வொரு வருடமும் 4.5 இலட்சம் நோயாளிகளுக்கும் அதிகமான நபர்களுக்கு ஆன்லைன் ஆலோசணை வழங்கும் முதன்முதல் இணைய க்ளினிக்காக விளங்கியமையால், லிம்கா புக் ஆஃப் ரெகார்ட்ஸில் (பதிப்புகள் 2004 மற்றும் 2005)இடம்பெற்றது. இது உலகின் முதல் டெலி- ஹோமியோபதியை அறிமுகப்படுத்தியதால் நிகழ்நேர பல இருப்பிட இணைப்பையும் கொண்டுவந்துள்ளது. The Brand Trust Report - India Study 2013 ல் மிகவும் நம்பகமான நிறுவனங்களின் வரிசையில் முதலாவதாக இடம்பெற்ற ஒரே ஹோமியோபதிக் பிராண்டாக இது உள்ளது, மேலும் Planman Media ஆல் 2012ல் ஆற்றல் மிக்க பிராண்டாக கொண்டாடப்பட்டது. மிகவும் முக்கியமான ISO 9001-2008 சான்றிதழை பெற்ற உலகின் முதல் ஹோமியோபதிக் ஹெல்த்கேர் நிறுவனம் Dr Batra's[TM] மட்டுமே. மேலும் சமுதாயத்தின் கீழ்தட்டு மக்கள் இலவச சிகிச்சை பெறுவதற்கு கொடை பண்புள்ள வேலையை செய்யும் ஒரு நன்கு அறியப்பட்ட பிராண்டாக இது விளங்குகிறது.
மீடியா தொடர்பு :
Rachna Sunder
[email protected]
+91-80-80789076
Deputy General Manager - Marketing
Dr Batra's Healthcare
Share this article