இந்திய பல்கலைக்கழகம் டைம்ஸ் உயர்கல்வி ஆசிய பல்கலைக்கழகங்கள் உச்சி மாநாடு 2018 ல் உரை நிகழ்த்த அழைக்கப்பட்டுள்ளது
சோனிபட், இந்தியா, February 9, 2018 /PRNewswire/ --
உச்சிமாநாட்டில் உரை நிகழ்த்திய 25 துணைவேந்தர்களுள் ஒருவராக ஓ.பி .ஜின்டால் குளோபல் யுனிவர்சிட்டியின் துணைவேந்தரும் உரையாற்றினார்
சீனாவின் ஷென்ஜென் நகரில், 2018, பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் 7 ஆம்தேதி வரை சதர்ன் யுனிவர்சிட்டி ஆஃப் சைன்ஸ் அன்ட் டெக்னாலஜி பங்களிப்புடன் நடைபெற்ற டைம்ஸ் உயர்கல்வி ஆசியா பல்கலைக்கழக உச்சிமாநாடு 2018 ல் ஓ.பி. ஜின்டால் குளோபல் யுனிவர்சிட்டி பங்கேற்றது. உச்சிமாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டட ஒரே இந்திய பல்கலைக்கழகம் JGU மட்டுமே. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்ற வந்திருந்த 25 துணை வேந்தர்களுடன் JGU நிறுவன துணை வேந்தர் பேராசிரியர் (டாக்டர்)C. ராஜ் குமார் பங்கேற்றுப் உரையாற்றினார்.
இந்த உச்சிமாநாட்டில் ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள், முதன்மை ஆய்வாளர்கள், உயர்கல்வி தலைவர்கள். கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்துறையின் முன்னணித் தலைவர்கள் உட்பட 400 க்கும் அதிகமான தலைவர்கள் பங்கேற்றார்கள்.
ஆக்ஸ்ஃபோர்டு மற்றும் ஹார்வர்ட் சட்டப்பள்ளி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரும் மற்றும் ஒரு இந்திய கல்வி நிறுவனத்தின் துணை வேந்தரும் மற்றும் ரோட்ஸ் அறிஞருமான பேராசிரியர் ராஜ் குமார் மட்டுமே இந்தியாவிலிருந்து இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்ட ஒரே நபராவர். மேலும் ஜிண்டால் பல்கலைக்கழக பிரதிநிதிகள் குழுவில் உள்ள டாக்டர். சஞ்சீவ் பி.சாஹ்னி, பேராசிரியர் மற்றும் முதன்மை டைரக்டர், ஜின்டால் இன்ஸ்டிடியுட் ஆஃப் பிஹேவியரல் சைன்சஸ்; அர்ஜ்யா மஜும்தார், துணை பேராசிரியர் மற்றும் டைரக்டர், கல்வி திட்டமிடல் அலுவலகம், ஒருங்கிணைப்பு மற்றும் உள்- ஒழுங்குமுறை; வென்ஜுவான் ஜேங், துணை பேராசிரியர், உதவி டீன்- சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் நிர்வாக டைரக்டர்- இந்திய மையம்- சீனா ஆய்வுகள்; மற்றும் திரு. பிரக்ஞா பரமிதா மோஹந்தி, மேனேஜர்- நிறுவன ஆய்வு, உயர்வகல்வி ஆய்வு மற்றும் கட்டிட திறன் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.
'நகரங்களை இணைத்தல், உலகை மாற்றுதல் : ஆசியாவை உருவாக்கும் ஆய்வு பல்கலைக்கழகங்கள்' இதுவே இந்த வருட உச்சிமாநாட்டில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆய்வுக்கருத்தாகும். பல்கலைக்கழகங்கள் மற்றும் நகரங்கள்- கட்டிட கூட்டணிகள், பகுதிகளை வரையறுத்தல், உலகளாவிய ஆய்வு மற்றும் கல்வி- முறைகள், வாய்ப்புகள் மற்றும் சவால்கள்; பல்கலைக்கழக கூட்டணி- பிராந்திய வலிமையை பறைசாற்றும் ஆய்வு வெளியீடு; தேசிய கண்டுபிடிப்பு- வினையூக்கிகளாகவும் இணைப்பை ஏற்படுத்துபவராகவும் பல்கலைக்கழகங்கள்; கூட்டுறவின் சக்தி; சர்வதேச ஆய்வு பல்கலைக்கழகங்கள் பொருளாதாரத்தில் என்ன புதுமையை கொண்டு வந்துள்ளன; நான்காவது தொழில்துறை புரட்சி மற்றும் உயர் கல்வி- சுய தொழில் முறையை ஊக்குவித்தல், எதிர்காலத்தை முன்னின்று நடத்துதல் ;மேலும் பிரிவுகளை ஒருங்கிணைத்தல்- சர்வதேச விஞ்ஞான பொருளாதாரத்தால் ஆய்வு பல்கலைக்கழகங்கள் போன்ற பல்வேறு ஆய்வுக்கருத்துக்கள் உச்சிமாநாட்டில் விவாதிக்கபட்டன.
'எல்லைகளை உடைத்தல்- 21 ஆம்நூற்றாண்டில் ஆய்வு பல்கலைக்கழகங்கள்' என்ற தலைப்பில் பேராசிரியர் ராஜ் குமார் உரையாற்றினார். இந்த உரை விஞ்ஞான பொருளாதாரத்தின் வளர்ச்சியில் பல்கலைக்கழகத்தின் முக்கிய பங்கு மேலும் சர்வதேச எல்லைகள் மற்றும் பிராந்திய எல்லைகளை உடைத்து ஒருங்கிணைப்பதில் சர்வதேசமயமாக்கலின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைக்கும்படி இருந்தது.
பேராசிரியர் உச்சிமாநாட்டில் உரையாற்றியபோது, 'சமூக மேம்பாட்டில் பல்கலைக்கழகங்கள் அதிகளவு பங்கு வகிக்கின்றன. தேசிய எல்லைகளை கடந்து செல்லும் தலைமைத்துவ பாத்திரத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் மேலும் பிரிவு மற்றும் பன்முகத்தன்மையின் பல்வேறு வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். சமூகத்தில் தங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்பதை பல்கலைக்கழகங்கள் புரிந்துகொள்ள வேண்டும்' என கூறினார்.
'சமூகங்கள் முன்னோக்கி பார்க்காதபோது, கல்வியாளர்கள் தொடர்ந்து முன்னோக்குகளை பொதுமக்கள் கருத்தை பாதிக்கும் வகையில் தெரிவிக்க வேண்டும்' என்றும் அவர் கூறினார். மதிப்புவாய்ந்த சவால்கள் இருக்கும்போது அரசியல் தலைவர்களின் சவால்கள் விடுப்பது பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில் , பேராசிரியர் குமார் கூறியதாவது; பொது விழாக்களில் பேசுகையில் துணவேந்தர்கள் கவனமாக இருக்க வேண்டும், பல்கலைக்கழகங்களில் அர்ப்பணிப்புடன் வலிமைகொடுக்கும் விதத்தில் அவர்களின் கருத்து இருக்க வேண்டியது அவசியம். பல்கலைக்கழகத்தில் கல்வி சுதந்திரம் என்பதே மையக்கருத்தாக இருக்க வேண்டும், ஆனாலும் சுதந்திரம் என்பது பொறுப்புடன் கூடியதாக இருக்க வேண்டும். மேலும் உண்மைக்கான வழியின் முன்னணியில் பல்கலைக்கழகங்கள் இருக்க வேண்டும் மற்றும் உண்மையை சான்றுகளுடன் மேம்படுத்தவும் வேண்டும்- இதுதான் 21 ஆம் நூற்றாண்டில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் வழியில் நாம் செய்ய வேண்டிய முக்கிய பணியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
சர்வதேசமயமாக்கலை பற்றிய வேறொரு கேள்வியில், JGU சர்வதேசமயமாக்கலின் ஒரு தனிப்பட்ட உதாரணமாக விளங்குகிறது. உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களுடன் கூட்டுறவை சர்வதேச ஒப்பந்தங்களின் மூலம் கட்டமைப்பதில் இது ஆழ்ந்து செயல்படுகிறது. இந்த கூட்டுறவை பல்கலைக்கழகங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் மற்றும் உலகளாவிய புரிந்துகொள்ளுதல் மற்றும் கல்வி கூட்டுறவு மூலம் எதிர்காலத்தை பற்றிய கணக்கீடுகளை நாம் உருவாக்க முடியும், என்று பேராசிரியர் பதிலளித்தார்.
பல்கலைக்கழக தரவரிசையை பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில், " பல்கலைக்கழகங்கள் தங்களை தாங்களே தரவரிசைப்படுத்திக்கொள்ள பல்கலைக்கழக தரவரிசை மிக முக்கியம் என நான் நம்புகிறேன் மேலும் இதனால் தரம் மற்றும் நிபுணத்துவம் மேம்படும். விஞ்ஞான சமூகத்தின் மேம்பாட்டிற்கான புதிய நிறுவன கற்பனைகளை மேம்படுத்த பல்கலைக்கழகங்கள் தங்கள் நோக்கம் மற்றும் குறிக்கோள்களை மாற்றவேண்டிய அவசியத்தை தரவரிசை அளிக்கிறது" என்று அவர் கூறினார்.
உயர் கல்வி, அரசாங்கம் மற்றும் உலக அளவிலான தொழில்துறையின் பிரதிநிதிகளாக , ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களின் மூத்த தலைவர்கள், முதன்மை ஆய்வாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்துறையின் முன்னணி தலைவர்கள் ஆகியோர் இந்த சர்வதேச மன்றத்தில் பங்கெடுத்தனர்.
உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களாக தங்களை உருவாக்க முயலும் இந்திய பல்கலைக்கழகங்கள் எதிர்நோக்கும் முக்கிய சவால்களை பற்றி புரிந்துகொள்ள இந்த உச்சிமாநாடு ஒரு தளமாக அமைந்தது.
உச்சிமாநாட்டின் ஒரு நிகழ்ச்சியாக 2018 ஆசியா பல்கலைக்கழகங்களின் தரவரிசை முடிவுகள் அறிவிக்கப்பட்டன. சிறந்த பல்கலைக்கழகமாக- சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்- சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதன்மை இடத்தை பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 'கற்பிக்கும் மற்றும் ஆய்வு சூழ்நிலைகளில் மேம்பாடு, அதிக மேற்கோள் தாக்கத்தை அடைதல் மேலும் தொழில் வருவாயை பெருக்குதல்' போன்றவற்றின் அடிப்படையில் டைம்ஸ் இந்த தரவரிசை செய்துள்ளது. முதல் முறையாக சீனாவின் முதன்மை பல்கலைக்கழகங்களில் ஒன்றான சிங்க்வா பல்கலைக்கழகம் பெகிங் பல்கலைக்கழகத்தைவிட முன்னணி மதிப்பை பெற்றுள்ளது. டைம்ஸ் கருத்துப்படி' பெகிங்கைவிட சிங்க்வா வலிமையான வெளியீடுகளை கொண்டுள்ளது மேலும் அதனுடைய பெய்ஜிங் போட்டியாளரைவிட அதிகஅளவில் ஆய்வு வெளியீடுகளை கொண்டுள்ளது'. தரவரிசைப்பட்டியலில் சீனாவின் 63 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன, சென்ற வருடத்தைவிட இந்த வருடம் அனைத்து பல்கலைக்கழகங்களின் மதிப்பெண்களும் முன்னேற்றமடைந்துள்ளன. 89 பல்கலைக்கழகங்களுடன் ஜப்பான் முன்னணி நாடாக விளங்குகிறது. தரவரிசைப்பட்டியலில் இந்தியாவின் 42 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன, அதில் இந்தியன் இன்ஸ்டிடியுட் ஆஃப் சைன்ஸ் 29வது இடம் பெற்று இந்திய அளவில் முதலில் உள்ளது.
ஓ.பி. ஜின்டால் குளோபல் யுனிவர்சிட்டியை பற்றி
ஹரியானா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட இலாப நோக்கமல்லாத ஓ.பி. ஜின்டால் குளோபல் யுனிவர்சிட்டி (JGU) யுனிவர்சிட்டி கிரான்ட்ஸ் கமிஷனால் (UGC)அங்கீகரிக்கப்பட்டுள்ளது. JGU அதன் நிறுவன ஸ்தாபகர் திரு. நவீன் ஜின்டால் அவர்களால் தனது தந்தை திரு. ஓ.பி . ஜின்டால் நினைவாக ஒரு தொண்டு நிறுவனமாக தொடங்கப்பட்டது. JGU தேசிய அங்கீகாரம் மற்றும் மதிப்பீடு கவுன்சிலால்(NAAC) உயர்ந்த கிரேடுடன் பாராட்டப்பட்டுள்ளது. ஆசியாவில் 1:13 ஆசிரியர்- மாணவர் விகிதத்தை பராமரிக்கும் வெகு சில யுனிவர்சிட்டிகளில் JGUவும் ஒன்று மேலும் இந்தியாவிலிருந்தும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறந்த கல்வித்தகுதி மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களையும் நியமித்துள்ளது. ஆய்வை முக்கிய நோக்கமாக கொண்ட JGU வானது ஆழ்ந்த முறையில் உள்-ஒழுங்குமுறை மற்றும் புதுமையான கல்விமுறை ; பன்முகத்தன்மை மற்றும் சிறந்த ஸ்காலர்ஷிப்; அதனுடன் சர்வதேசமயம் மற்றும் சர்வதேச தொடர்பு போன்றவற்றை அதன் முக்கிய நிறுவன கொள்கையாக கொண்டுள்ளது.
JGU 8 பள்ளிகளை உருவாக்கியுள்ளது: ஜின்டால் குளோபல் லா ஸ்கூல் (JGLS), ஜின்டால் குளோபல் பிசினஸ் ஸ்கூல்(JGBS), ஜின்டால் ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் அஃபேர்ஸ்(JSIA), ஜின்டால் ஸ்கூல் ஆஃப் கவர்ன்மென்ட் அன்ட் பாலிசி(JSGP), ஜின்டால் ஸ்கூல் ஆஃப் லிபரல் ஆர்ட்ஸ் & ஹ்யுமானிட்டிஸ்(JSLH), ஜின்டால் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசம் & கம்யுனிகேஷன்(JSJC) , ஜின்டால் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்& ஆர்க்கிடெக்சர் (JSAA) மற்றும் ஜின்டால் ஸ்கூல் ஆஃப் பேங்கிங் & ஃபினான்ஸ்(JSBF)
மேலும் அதிக தகவல்களுக்கு தயவுசெய்து வருகை தரவும்-- http://www.jgu.edu.in/.
மீடியா தொடர்பு :
Devadeep Konwar
[email protected]
+91-7027850344
Assistant Director
Communication and Public Affairs
O.P. Jindal Global University
Share this article