உலக வரைபடத்தில் நகரத்தை வெளிக்கொணற கோரக்பூர்ஆன்லைன்.இன் மற்றும் கோரக்பூர் மஹோத்ஸவ் இணைந்து தன் கூட்டு முயற்சியை அறிவிக்கின்றது
கோரக்பூர், இந்தியா, January 2, 2018 /PRNewswire/ --
புனித நகரமான கோரக்பூரின் வரலாற்றில் மிகப்பெரிய கலாச்சார அம்சம் வாய்ந்த, கோரக்பூர் மஹோத்ஸவ் 2018 மற்றும் நகரின் முதன்மையான டிஜிட்டல் மார்க்கெட்டிங் தீர்வுகள் நிறுவனம், பான் இந்தியா இன்டர்நெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பகுதியான www.GorakhpurOnline.in, ஆகியவை இணைந்து சுற்றுலா, உலகளாவிய வர்த்தகம் மற்றும் பொழுதுபோக்கிற்கு கோரக்பூரை மையமாகக் கொள்ளும் நோக்கத்துடன் ஒரு ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டு ஜனவரி 11 முதல் 13 வரை தீன் தயால் உபாத்யாயா (டி.டி.யூ.) கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் மஹொத்சவ் நடைபெறவுள்ளது மேலும் அதன் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் மீடியா கூட்டாளராக www.GorakhpurOnline.in இருக்கும். இந்த மஹோத்ஸவம் சுற்றுலாத் துறை (உ.பி.), கலாச்சார துறை (உ.பி.) & கோரக்பூரின் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படுகிறது.
உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் பல்வேறு சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதே இந்த மஹோத்ஸவத்தின் முக்கிய நிகழ்ச்சியாகும். இந்த மஹோத்ஸவம் உத்திரப்பிரதேச முதல்வர் ஸ்ரீ யோகி ஆதித்யநாத் அவர்களது சிந்தனையின் விளைவாகவும், மேலும் மஹொஸவ் சமிதி மற்றும் ஆணையர், திரு. அனில் குமார் (ஐ.ஏ.எஸ்), மஹோத்ஸவ் சமிதியின் துணைத் தலைவர் (டிஎம்) மற்றும் மஹோத்ஸவ் சமிதியின் செயலாளர் மற்றும் ஆர் டி ஓ. திரு. ரவீந்திர குமார் ஆகியோரின் ஆதரவுடனும் செயல்பட்டது.
சங்கத்தில் பேசிய திரு ரவீந்திர குமார் அவர்களின் கருத்துகள், "கோரக்பூர் மஹோத்ஸவ் 2018 இன் நோக்கம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சுற்றுலாவை ஊக்குவிப்பதோடு மேலும் மாநிலத்தின் புகழ்பெற்ற கோரக்நாத் கோயிலின் கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதுமாகும். www.GorakhpurOnline.in உடன் இந்த ஒப்பந்தம் நிகழ்விற்குத் தேவையான டிஜிட்டல் முன்னிலையையும் ஊக்குவிப்பையும் எங்களுக்குத் தரும் என்பதில் உறுதியாக உள்ளோம்."
www.GorakhpurOnline.in சமூக ஊடக தளங்கள் போன்ற சேனல்களால் மஹோத்ஸவத்தை டிஜிட்டல் முறையில் விளம்பரப்படுத்தி, அதன் தளங்களில் மஹோத்ஸவத்தை நேரடியாக ஒளிபரப்பி மேலும் நாடு முழுவதிலுமிருந்தும் மக்கள் இப்பெரும் நிகழ்வின் புதுப்பித்தல்களை நிமிடத்திற்கு நிமிடம் பெறும் ஒரு சேனலை உருவாக்கும். மஹோத்ஸவ பார்வையாளர்களுக்காக ஒரு செல்ஃபீ போட்டியை நிறுவனம் ஏற்பாடு செய்யும்.
மேலும் www.GorakhpurOnline.in மற்றும் இந்தியாஆன்லைன்.இன் நெட்வொர்க்கின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனருமான, திரு. ராஜ் குமார் ஜலன் கூறுகையில், "எங்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி நாட்டிலுள்ள ஒவ்வொரு நகரத்தையும் ஊக்குவிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். கோரக்பூர் மஹோத்ஸவத்தோடு மாநிலத்தில் மற்றும் நாடு முழுவதும் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக நாங்கள் முயற்சி செய்வதில் பெருமிதம் கொள்கிறோம்." என்றார்.
விவாதங்கள், ஓவியங்கள், படப்பிடிப்பு போட்டிகள் போன்ற பல நிகழ்வுகள் மற்றும் போட்டிகள், பள்ளி மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்படும், மேலும் வர்த்தக நிறுவனங்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு தங்கள் தயாரிப்புகளை வெளிப்படுத்தவும் விற்கவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. வர்த்தக கண்காட்சியில் ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், நிதி நிறுவனங்கள், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கல்வி & உடல்நலம், முதலியற்றிக்கு தனித்து அரங்குகள் இருக்கும்.
மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து பல்வேறு உணவு வகைகளை உள்ளடக்கிய காஸ்ட்ரோனமிக் டிலைட்ஸ் விற்பனை வரம்பிற்குட்பட்ட விற்பனை நிலையங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் பார்வையாளர்களின் சுவை மொட்டுகளுக்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 'போஜ்பூரி நைட் மற்றும் பாலிவுட் நைட்' ஆகியவை இந்த நிகழ்வின் முக்கிய அம்சங்களாகும். புகழ்பெற்ற பல்வேறு பிரபல தேசிய மற்றும் சர்வதேச கலைஞர்கள் இந்த நிகழ்வின் வெற்றிக்கு பெரும் வரவேற்பை வழங்கியுள்ளனர்.
IndiaOnline.in நெட்வொர்க் பற்றி:
www.GorakhpurOnline.in மற்றும் IndiaOnline.in நெட்வொர்க்குடன் 480+ வலைத்தளங்கள் பான் இந்தியா இன்டர்நெட் பிரைவேட் லிமிடட்டின் ஒரு பகுதியாகும். IndiaOnline.in நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தையும் / நகரத்தையும் / ஊரையும் சேர்த்து மேலும் அவற்றை ஒரு பிரத்யேக வலைத்தளத்துடன் இணைக்கிறது. இது சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SME) துறை மீது கவனம் செலுத்துகிறது, மேலும் அதன் மாநிலத்தின்-கலையான டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் ஆன்லைனில் தொடர உதவுகிறது.
ஊடக தொடர்புக்கு:
ருத்ரதீப் கோஷ்
ஈ.மெயில் - [email protected]
கைப்பேசி- +91-9643105045
Share this article