புது டெல்லி, December 14, 2017 /PRNewswire/ --
தலைநகரில் UBM India வழங்கும் தெற்கு ஆசியாவின் மிகப் பெரிய பாதுகாவல் மற்றும் கண்காணிப்பு கூட்டம்
IFSEC India 2017 ஒரு பார்வை:
UBM India வெற்றிகரமாக International Fire & Security Exhibition and Conference (IFSEC) India Expoவின் 11 வது பதிப்பு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது, இது புது டெல்லியில் (டிசம்பர் 6 முதல் 8 வரை) மூன்று நாட்கள் நடைபெற்ற பாதுகாவல் மற்றும் தீ பாதுகாப்பு நிகழ்ச்சியாகும் . இந்தக் கண்காட்சி உலகளாவிய சிறந்த நடைமுறைகள் மற்றும் ஸ்மார்ட் நகரங்கள் போன்ற கருத்தாக்கங்கள் குறித்து கலந்துரையாடவும், பாதுகாவல் மற்றும் தீ பிரிவுகளில் உள்ள சவால்களை சமாளிப்பதற்கானத் தீர்வுகளைப் பெறவும் ஒரு பொதுவான மேடையின் கீழ் சர்வதேச அளவில் பிரபலமான கண்காட்சியாளர்கள், ஆலோசகர்கள், வணிக நிபுணர்கள் மற்றும் முக்கிய அரசாங்க அதிகாரிகள் ஆகியோரை ஒன்றிணைத்துள்ளது. இது பார்வையாளர்கள் நெட்வொர்க்கை ஏற்படுத்திக் கொள்ளவும், நவீனத் தொழில்நுட்பங்கள், துறையின் போக்குகள், சவால்கள், சந்தைத் தகவல்கள் ஆகியவற்றைப் பற்றிக் கற்றுக் கொள்ளவும், வணிகத்தையும் வாடிக்கையாளர்களையும் பாதுகாக்கச் சிறந்த தீர்வுகளை அளிக்கவும் தகவல் நிறைந்த செயல்முறை விளக்கங்களையும் நிறைய வாய்ப்புக்களையும் அளித்தது.
(Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/524706/IFSEC_India_Logo.jpg )
மதிப்புவாய்ந்த துறைக் கூட்டத்தில் நடைபெற்ற IFSEC India 2017ன் துவக்க விழாவில் முக்கிய பிரமுகர்களான இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் தரவு பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரும் முன்னாள் செயலாளருமான Shri Gopal K Pillai, Asian Professional Security Association (APSA)யின் தலைவர் Shri Shiv Charan Yadav, President; ASSOCHAM Homeland Securityயின் துணைத் தலைவர் Mr. Anil Dhawan; Pricewaterhouse Coopers (PwC)யின் இயக்குநர் கமாண்டர் Deepak Uppal; UBM Indiaவின் நிர்வாக இயக்குநர் Mr. Yogesh Mudras, மற்றும் UBM Indiaவின் குழும இயக்குநர் Mr. Pankaj Jain ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த ஆண்டு, இந்தக் கண்காட்சியில் வர்த்தக பாதுகாவல் துறையிலிருந்து UK, USA, சீனா, தாய்வான், மலேசியா, ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், லித்துனியா, தென்னாப்பிரிக்கா, ரஷியா மற்றும் துருக்கி போன்ற நாடுகள் பங்கேற்றன. இந்த முயற்சிக்கு Asian Professional Security Association (APSA), American Society for Industrial Security (ASIS), Electronic Security Association of India (ESAI), Central Association of Private Security Industry (CAPSI) மற்றும் Overseas Security Advisory Council (OSAC), போன்ற அமைப்புகள் மூலோபாய பங்குதாரரான ASSOCHAM மற்றும் அறிவு பங்குதாரரான PwCயுடன் இணைந்து சிறந்த ஆதரவை அளித்துள்ளன.
இந்தக் கண்காட்சியின் 11வது ஆண்டுவிழாவில் பேசிய Mr. Yogesh Mudras, Managing Director, UBM India கூறியதாவது, "வளர்ந்துவரும் பொருளாதாரம் மற்றும் விமான நிலையங்கள், கட்டுமானம், ஆற்றல், துறைமுகங்கள், தொலைதொடர்பு, இரயில்வே, சாலை மற்றும் சில்லறை விற்பனை போன்ற துறைகளின் விரைவான வளர்ச்சி ஆகியவை பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால், பாதுகாவல் துறையின் தேவை அதிகரிப்பதற்கு காரணமாக இருந்துவருகிறது. புதிய விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்களைக் கட்டியெழுப்புவதன் மூலம் நாட்டின் நலிவுற்ற உள்கட்டமைப்பை சீரமைக்க இந்தியாவின் அரசாங்கம் தயாராக உள்ளது. இந்தத் திட்டங்களை செயல்படுத்துகையில், நகர்ப்புற பகுதிகளில் முக்கிய பிரச்சனையாக இருக்கும் 'பாதுகாப்பு' மற்றும் 'பாதுகாவல்' அம்சங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டியது அவசியமாகும். ஒவ்வொரு நாளும் வலுவான மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் தேவை அதிகரித்துவருவதால், IFSEC India 2017 மூலம் UBM India துறையின் நவீன கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளது மற்றும் உலகளாவிய பாதுகாவல் சந்தை குறித்த உகந்த தகவல்களை அடையாளம் கண்டுள்ளது. காட்சியாளர்களும் வருகையாளர்களும் இந்தப் புதுமையான ப்ராடக்ட்களின் கண்காட்சியில் தங்களின் வணிகத்தையும் வாடிக்கையாளர்களையும் தக்கவைத்து கொள்வதற்கானச் சிறந்த தீர்வுகளை கண்டுபிடிக்க வாய்ப்பளித்தது."
இந்த ஆண்டு, இந்தக் கண்காட்சியில் IFSEC Indiaவின் அறிவு பங்குதாரரான PwC தனது தகவல் அறிக்கையை வெளியிட்டது. இது முக்கியமாக நடவடிக்கைகளின் கருத்தாக்கத்தைப் பயன்படுத்துவதிலும், ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்கான பல்வேறு கட்டளை மையங்களைக் கண்டுபிடிப்பதிலும் இன்றைய கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு (CCC) உள்ள முக்கிய சவால்களைப் பற்றி 'கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் ஆதாயங்களை அதிகரிப்பது (CCC)' என்கிற தலைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தியாவில் உள்நாட்டு பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்படும் இந்தக் காலக்கட்டத்தில், IFSEC India, 2017, இந்தக் கண்காட்சியில் "பாதுகாப்பான தேசம் மற்றும் பாதுகாப்பானச் சூழல்' என்கிற தலைப்பில் உலகளாவிய பாதுகாப்பு சந்தையில் பெறப்பட்ட பொருத்தமான நுண்ணறிவு பற்றி ஒரு நாள் மாநாட்டில்கலந்துரையாடியது. இந்த மாநாட்டில் முக்கிய பிரமுகர்களான இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் தரவு பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரும் முன்னாள் செயலாளருமான Shri Gopal K Pillai, APSA தலைவர் Shri Shiv CharanMathur, மற்றும் ASSOCHAM Homeland Securityயின் துணைத் தலைவர் Shri Anil Dhawan போன்றோர் பங்கேற்று, சிறப்பு உரையையும், முக்கிய தகவல்களையும் அளித்தனர். இந்த மாநாட்டில் ஸ்மார்ட் எல்லை மேலாண்மை - நாட்டின் எல்லைகளில் உள்ள சவால்களையும் அச்சுறுத்தல்களையும் சமாளிப்பதற்கான விரிவான உத்திகள், இந்திய கடற்கரை அச்சுறுத்தல்கள் மற்றும் கடல் பாதுகாவல் சவால்கள் ஆகிய சில சுவாரஸ்யமான தலைப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்த ஆண்டின் மாநாட்டு பங்குதாரர்கள் Sandisk, Videocon மற்றும் Western Digital ஆகியோர் ஆவர்.
இந்த மாநாட்டின் முக்கிய அம்சங்கள்:
இந்தக் கண்காட்சியில் 300க்கும் அதிகமான பிராண்டுகள் கலந்து கொண்டன. அவற்றில் சில -- Aditya Infotech, Dahua, eSSL, Globus Infocom, Hanwha Techwin, Hikvision, Mark Electronics, Realtime, Roadpoint, Secureye, Techsmart, Tenda, TVT, Uniview&Zkteco ஆகியோர் பிரீமியர் பிளஸ் பார்ட்னர்கள். பிரீமியர் பார்ட்னர்களாக -- Advik, Axestrack, Biomax, Delta, Dlink, Face ID, Hifocus, Idemia, Mantra Softech, Orbit, Panasonic, Seagate, Slingshot, Tansa, Timewatch, Unique Electrovision மற்றும் Western Digital மாற்றவர்களுக்குள் அடங்குவர்..
இந்த ஆண்டு, IFSEC India, IFSEC இந்தியா விருதின் 2வது பதிப்பை வழங்குகிறது. இந்தியாவில் மின்னணு பாதுகாப்புத் தொழில்துறை பெருகி வருகிறது மேலும் இந்த விருதுகள் BFSI, சில்லறை விற்பனை, உற்பத்தி, ஆற்றல், உடல்நலம், பொதுத்துறை நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற பல்வேறு தொழில்துறைகளின் பின்னால் உள்ள மின்னணு பாதுகாவலை கெளரவிக்கும் விதத்தில் வழங்கப்பட்டன. இந்த விருதுகள் கடுமையான பாதுகாவலை உறுதிசெய்வதற்காகத் தொடர்ந்து பணிபுரியும் CSOக்கள் மற்றும் பாதுகாவல் அதிகாரிகளின் சிறப்பான செயல்பாட்டையும் புதுமையான கண்டுபிடிப்புகளையும் அங்கீகரித்தன. Ernst and Young இந்த செயல்முறையின் ஆலோசகர்களாகவும் IFSEC India Awards 2017க்கான தொலைக்காட்சி பங்குதாரர்களாக CNBC TV18 ஆகியோர் இருந்தனர். இந்த விருதினை வழங்கிய பங்குதாரர்கள் - Dahua, Hikvision,Western Digital, மற்றும் துணைப் பங்குதாரர் Videocon.
IFSEC இந்தியா விருதுகளின் வெற்றியாளர்களில் சிலர்:
1. இந்த ஆண்டிற்கான சைபர் செக்யூரிட்டி குழு - வெற்றியாளர் - Capgemini Technology Services India Pvt Ltd
2. இந்த ஆண்டிற்கான சைபர் செக்யூரிட்டி குழு - இரண்டாம் இடம் - Fidelity Information Services Pvt Ltd
3. சைபர் பாதுகாப்பில் சிறந்தச் செயல்பாடு - வெற்றியாளர் - Hindustan Petroleum Corporation Ltd
4. சைபர் பாதுகாப்பில் சிறந்தச் செயல்பாடு - இரண்டாம் இடம் - Tata Power Delhi Distribution Limited
5. அணுகல் கட்டுப்பாடு மற்றும் சுற்றளவு பாதுகாப்பில் சிறந்தச் செயல்பாடு - வெற்றியாளர் - Tata Communications Ltd
6. அணுகல் கட்டுப்பாடு மற்றும் சுற்றளவு பாதுகாப்பில் சிறந்தச் செயல்பாடு - இரண்டாம் இடம் - Essar Oil Limited
7. தீ பாதுகாப்பில் சிறந்தச் செயல்பாடு - வெற்றியாளர் - Bharti Airtel Ltd
8. தீ பாதுகாப்பில் சிறந்தச் செயல்பாடு - இரண்டாம் இடம் - Tata Communications Ltd
9. இயல் பாதுகாப்பில் சிறந்தச் செயல்பாடு - வெற்றியாளர் - BSES Yamuna Power Limited
10. இயல் பாதுகாப்பில் சிறந்தச் செயல்பாடு - இரண்டாம் இடம் - Hero Motocorp Ltd
11. வீடியோ IP அடிப்படையிலான கண்காணிப்பில் சிறந்தச் செயல்பாடு - வெற்றியாளர் - Bharat Diamond Bourse
12. வீடியோ IP அடிப்படையிலான கண்காணிப்பில் சிறந்தச் செயல்பாடு - இரண்டாம் இடம் - IDFC Bank
13. பாதுகாப்பு தொழில்நுட்ப நடைமுறையில் சிறந்தச் செயல்பாடு - வெற்றியாளர் - Medley India Infosolution Pvt Ltd
14. பாதுகாப்பு தொழில்நுட்ப நடைமுறையில் சிறந்தச் செயல்பாடு - இரண்டாம் இடம் - Hexxa Geo
15. பாதுகாப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வில் சிறந்தச் செயல்பாடு - வெற்றியாளர்கள் - Bharat Diamond Bourse
16. பாதுகாப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வில் சிறந்தச் செயல்பாடு - வெற்றியாளர்கள் - Sasan Power Limited
17. பாதுகாப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வில் சிறந்தச் செயல்பாடு - இரண்டாம் இடம் - Cairn Oil & Gas
18. பாதுகாப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வில் சிறந்தச் செயல்பாடு - சிறப்பு அங்கீகாரம் - Maharashtra Cyber Police
19. இந்த ஆண்டின் துறை வீரர் - Capt. B. N. Yadav
20. வாழ்நாள் சாதனையாளர் விருது - Mr. Gopal Chaudhary
UBM India பற்றி:
UBM India, இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராகும். இது உலகம் முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களையும் விற்பனையாளர்களையும் பல கண்காட்சிகள், மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் இணைப்பதற்கான மேடைகளை வழங்குகிறது, UBM India ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதிலும் பெரிய அளவில் 25 கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் நடத்துகிறது; இதனால் பல துறைகளின் வணிகத்திற்கு வழிவகுக்கிறது. UBM Asia கம்பெனியின் UBM India மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM Asia-வின் உரிமையாளர் UBM plc லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM Asia என்பது ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராகும். இது மெய்ன்லேண்ட் சீனா, இந்தியா மற்றும் மலேசியாவில் உள்ள மிகப் பெரிய வர்த்தக ஏற்பாட்டாளராகும். மேலும் விவரங்களுக்கு, பார்க்கவும்: http://www.ubmindia.in.
UBM plc பற்றி:
UBM plc என்பது உலகிலேயே மிகப் பெரிய பிரத்யேக B2B நிகழ்ச்சி ஏற்பாட்டாளராகும். வளர்ந்துவரும் டிஜிட்டல் உலகில், மனிதர்கள் ஒரு காரணத்திற்காகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம். UBMல் எங்களின் ஆழமான அறிவும், நாங்கள் செயல்படும் இந்தத் துறையில் எங்களுக்கு உள்ள ஆர்வமும் மக்கள் வெற்றிப் பெறுவதற்கான சிறந்த அனுபவங்களை உருவாக்க எங்களுக்கு உதவுகிறது. எங்களின் நிகழ்ச்சிகளில் மக்கள் உறவுகளைக் கட்டமைத்து, வணிகம் செய்து, தங்கள் தொழிலை வளர்ச்சியடைய செய்கின்றனர். எங்களின் 3,750+ உறுப்பினர்கள் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளனர், இவர்கள் 50க்கும் மேற்பட்ட வெவ்வேறு துறைகளில் செயல்படுகின்றனர். இதில் ஃபேஷன் முதல் மருந்து தயாரிப்பு உட்பொருட்கள் வரை அனைத்தும் அடங்கியிருக்கும். இந்த உலகளாவிய நெட்வொர்க் திறமிக்க, ஆர்வமுள்ளவர்களை ஒருங்கிணைத்து, வியாபாரிகள் தங்கள் இலங்குகளை அடைய அற்புதமான வாய்ப்புக்களை அளிக்கும் நிகழ்ச்சிகளை வழங்குகிறது.
மேலும் தகவலுக்கு, http://www.ubm.com; UBM கார்ப்பரேட் செய்திக்கு, ட்விட்டரில் @UBM, லிங்கெடினில் UBM Plc-யில் பின்தொடருங்கள்.
ஊடகத் தொடர்புக்கு தயவுசெய்து தொடர்பு கொள்ளவும் :
Roshni Mitra
Email: [email protected]
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article