QS பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல்: BRICS 2018 - Jindal Global University உலகத் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது
புது டில்லி, December 4, 2017 /PRNewswire/ --
- இந்தியாவில் முதல் 10 பொது மற்றும் முதல் 10 தனியார் கல்வி நிறுவனங்களுள் ஒன்றாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது
- இது இளம் இந்திய பல்கலைக்கழகம் மற்றும் இந்த தரவரிசையில் இடம்பெறப்போகும் ஹரியானாவின் முதல் மற்றும் ஒரே தனியார் பல்கலைக்கழகம்
- BRICS பிராந்தியத்தில் 9,000 பல்கலைக்கழகங்களில் முதல் 300 இடங்களைப் பிடித்திருக்கும் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக இது திகழ்கிறது.
QS பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல்: BRICS 2018 பதிப்பில் இந்தியாவில் உள்ள முதல் 10 பொது மற்றும் முதல் 10 தனியார் கல்வி நிறுவனங்களுள் ஒன்றாக பல துறைகளைக் கொண்ட O.P. Jindal Global University (JGU) இடம்பிடித்துள்ளது. மிக சமீபத்தில் துவங்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் JGU ஆகும், மேலும் இது, சர்வதேச தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ஹரியானாவில் உள்ள ஒரே தனியார் பல்கலைக்கழகமாகும்.
BRICS பிராந்தியத்தில் (ஐந்து நாடுகளை உள்ளடக்கியது - பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) உள்ள 9,000 பல்கலைக்கழகங்களில் 251-300வது இடத்தைப் பிடித்திருக்கும் JGU, இந்தப் பிராந்தியத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதல் 2.8% இடத்தைப் பிடித்துள்ளது.
கல்விசார்ந்த நற்பெயர், உரிமையாளர் நற்பெயர், PhD முடித்திருக்கும் பணியாளர் விகிதாசாரம், ஆசிரியர்/மாணவர் விகிதம், ஆராய்ச்சி வெளியீடுகள் மற்றும் நற்குறிப்பு விகிதங்கள், மற்றும் சர்வதேச ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விகிதாசாரம் போன்ற எட்டு செயல்திறன் நிலைக்காட்டிகளின் அடிப்படையில் இந்தத் தரவரிசைப் பட்டியல், வேகமாக வளர்ச்சியடைந்துவரும் ஐந்துபொருளாதார ரீதியில் முன்னணி கல்விநிறுவனங்களின் ஒப்பிடத்தக்க பலம் மற்றும் பலவீனங்கள் பற்றிய தரவரிசை மதிப்பீடு அளிக்கிறது.
இத்தகைய சாதனைகளைப் பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட JGUவின் நிறுவனரும், பல்கலைக்கழக வேந்தருமான Mr. Naveen Jindal, "இந்த கெளரவமான QS தரவரிசைப்பட்டியலில் நுழைந்திருப்பது JGUக்கும் ஹரியானாவிற்கும் மிக அற்புதமான, பெருமையான தருணமாகும். சர்வதேச தரவரிசைப்பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்கள் நுழைந்திருப்பது, இதில் இடம்பிடித்திருக்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புக்களை உருவாக்கி இருப்பதோடு மட்டுமல்லாமல், இந்திய உயர்கல்வியின் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. இந்தியாவின் மக்கள் தொகையையும், நாட்டின் வளர்ச்சியையும் வைத்துப் பார்த்தால், இந்தியாவில் கல்வித் துறையில் அதிகமான CSR முதலீடுகளும் அறப்பணிகளுக்கான நன்கொடைகளும் தேவைப்படுகின்றன. இவை இந்தியாவில் உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கு மிகவும் அவசியம். இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் முன்னணியில் உள்ள உலகளாவிய பல்கலைக் கழகங்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். சர்வதேச நிறுவனங்களுடன் போட்டியிடக்கூடிய நிலையிலுள்ள உலகளவில் சிறப்பாகச் செயல்படக்கூடிய நிறுவனங்களை உருவாக்குவதற்கான நம்பிக்கை உணர்வையும் நோக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டிய தேவை உள்ளது. Jindal Group, அதன் நிறுவனர் ஸ்ரீ. O.P. Jindal அவர்களின் தொலைநோக்கு பார்வையாலும், முன்யோசனையாலும் கவரப்பட்டு, CSR மற்றும் இதர சமூக முயற்சிகள் மூலம் கார்ப்பரேட் மனிதநேயத்தை ஊக்குவிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது. தேசத்தின் வளர்ச்சிக்கு CSR எப்படி பங்களிக்க முடியும் என்பதற்கு JGU ஒரு விதிவிலக்கான உதாரணமாகத் திகழ்கிறது" என்று கூறினார்.
உலகளவில் உயர் கல்வியில் JGU செய்திருக்கும் சாதனையையும், அதற்குள்ள பொறுப்பையும் பற்றி பேசிய, JGUவின் நிறுவன துணைத் தலைவருமான பேராசிரியர் (டாக்டர்.) C. Raj Kumar, "இந்தப் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டு எட்டு ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில் இந்த இடத்தைப் பிடித்திருப்பது மிகச் சிறந்த சாதனையாகும். நாங்கள் 200க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களுடனும், உலகம் முழுவதிலும் உள்ள 50க்கும் மேற்பட்ட நாடுகளில் அமைந்துள்ள உயர்கல்வி நிறுவனங்களுடனும் JGU பங்குதாரராக இணைந்து செயல்பட உதவும் சர்வதேச கூட்டுமுயற்சிகளின் விரிவான சாத்தியமான கட்டமைப்பை உருவாக்கி, அதில் வெற்றியடைந்துள்ளோம்," என்று கூறினார்.
மேலும் அவர், "உலகளவில் சிறந்துவிளங்கும் ஒரு கல்வி நிறுவனமாக JGUவின் வளர்ச்சி, பள்ளிகள் மற்றும் திட்டங்களின் விரிவாக்கத்துடன் பொருந்துகிறது. பல துறைகளைக் கொண்ட பல்கலைக் கழகமான JGU, மிகச் சிறந்த வகுப்பறை கற்பித்தல், திறமிக்க மருத்துவ திட்டங்கள், அனுபவமிக்க கற்றல் மற்றும் ஆராய்ச்சி மற்றும் எழுத்து வேலைகள் ஆகியவற்றின் மூலம் மாணவர்கள் பலவிதமான கற்றல் வாய்ப்புக்களைப் பெறுவதற்கு உதவக்கூடிய பாடத்திட்டத்தை அளிக்கிறது." என்று கூறினார்
இதனைத் தொடர்ந்து அவர், "எமது நிறுவனத்தில் 20% க்கும் மேலானோர் 20 வெவ்வேறு நாடுகளில் இருந்து நியமனம் செய்யப்பட்ட இந்திய-அல்லாத நாட்டினர் என்பது எங்களுக்குள்ள கல்வி நிறுவன உறுதிப்பாடு மற்றும் உலகளாவிய எதிர்பார்ப்பை பிரதிபலிக்கிறது. இவர்கள் புதுமையான கற்பித்தல் முறையைப் பின்பற்றுகின்றனர், சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டும் என்கிற நோக்கத்தை நிறைவேற்றும் ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றனர்."
"உலகளவில் சிறந்த கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டுமென்கிற ஆசையைக் கைவிடாமல், பல இளைஞர்களுக்கு உயர்தர கல்விக்கான வாய்ப்பினை அளிப்பதில் ஏற்படக்கூடிய சவால்களை நாம் எப்படி திறமிக்க முறையில் சமாளிக்கிறோம் என்பதில்தான் இந்திய பல்கலைக்கழகத்தின் எதிர்காலம் அமைந்துள்ளது," என்று அவர் கூறினார்.
துணைவேந்தர் உலகளவில் முதல் இடத்தைப் பிடித்திருக்கும், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் திறன் வளர்ச்சி ஆகியவற்றில் சிறந்துவிளங்கும் உலகத்தரமிக்க தனியார் பல்கலைக் கழகங்களை இந்தியாவில் நிறுவ வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். " சிறப்பான உயர் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் லாபநோக்கமற்ற கல்வி நிறுவனமாக நிறுவப்பட்டுள்ள JGU, உலகளவில் எங்களின் முயற்சிகள் அங்கீகரிக்கப்பட்டிருப்பதைப் பார்ப்பது நிறைவை அளிக்கிறது," என்று அவர் கூறினார்.
இந்தியாவில் உலகத்தரமிக்க பல்கலைக்கழங்களை உருவாக்குவதற்காக அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் முயற்சிகளின் கீழ், இந்திய அரசாங்கம் 'சிறந்த கல்வி நிறுவனம்' என்று நிர்ணயிக்கப்படுவதற்கு விண்ணப்பிக்க நாட்டிலுள்ள தகுதி வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களிடமிருந்து முன்மொழிவுகளை வரவேற்றிருக்கும் நேரத்தில் QS பல்கலைக்கழக தரவரிசை பட்டியல்: BRICS 2018 வெளியிடப்பட்டுள்ளது.
QS பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் BRICS 2018 பதிப்பு, University Grants Commission (UGC) தலைவர், பேராசிரியர் (டாக்டர்) V.S. Chauhan அவர்களால் புது டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் Chauhan, "இந்திய கல்விமுறை விரிவடைந்துள்ளது மேலும் நாங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னால் இயற்றப்பட்ட பல கட்டுப்பாடுகளை மாற்ற முயற்சி செய்து வருகிறோம். இந்த முறை தரவரிசைப் பட்டியலுக்கும் இடமளிக்கிறது. இந்திய பல்கலைக்கழகங்கள் இந்த தரவரிசைப் பட்டியலில் இடம்பெறுவது நாட்டிற்கு பெருமைத்தரும் விஷயம் என்பதை அரசாங்கமும் உணர்ந்து வருகிறது. ஆயினும், இந்தியாவில் பல்கலைக் கழகங்கள் இந்த இடத்தைப் பிடிப்பதற்கு மிகவும் ஆரம்ப நிலையில் உள்ளன. BRICS தரவரிசைப் பட்டியலில் 350 பல்கலைக் கழகங்களில் 150 பல்கலைக் கழகங்கள் இந்திய கல்வி நிறுவனமாக இருக்கும் அந்த நாளை நாம் கொண்டாடுவோம்," என்று கூறினார்.
திரு. Ashwin Fernandes, பிராந்திய இயக்குநர் - மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா, QS Intelligence Unit, பார்வையாளர்களுக்கு தரவரிசை பட்டியல் முறையை அறிமுகம் செய்தார். மேலும் பேசிய அவர், "QS பல்கலைக்கழக தரவரிசை பட்டியல்: BRICS, உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் சில பொருளாதாரங்களில் உயர்கல்வியின் நிலைக் குறித்த புரிதலை அளிக்கிறது. மாணவர்கள், தற்போதைய மற்றும் எதிர்கால பெற்றோர், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் ஆகியோர் கல்வி நிறுவனங்களின் தரம் பற்றிக் கொண்டிருக்கும் கருத்துக்களை மாற்றுவதில் தரவரிசைப் பட்டியல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. இது உயர்கல்வி நிறுவனங்களின் சிறந்துவிளங்க வேண்டும் என்கிற ஆசையைத் தூண்டும்."
O.P. Jindal Global University பற்றி
JGU என்பது ஹரியானா பிரைவேட் பல்கலைக்கழகங்கள் (இரண்டாவது சட்டத்திருத்தம்) சட்டம், 2009ஆல் நிறுவப்பட்டுள்ள லாபநோக்கமற்ற உலகளாவிய பல்கலைக்கழகம். JGU திரு. O.P. Jindal-யின் நினைவாக, தலைமை வேந்தர் திரு. Naveen Jindal பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தில் இதனை உருவாக்கினார். உலகளாவிய பாடங்கள், உலகளாவிய பாடநிகழ்ச்சிகள், உலகளாவிய பாடத்திட்டம், உலகளாவிய ஆராய்ச்சி, உலகளாவிய உடனிணைவுகள், மற்றும் உலகளாவிய ஆசிரியர் மூலம் உலகளாவிய உரையாடலை ஊக்குவிப்பது JGU-யின் நோக்கமாகும். JGU டெல்லியில் நேஷனல் கேப்பிட்டல் ரீஜியனில் 80 ஏக்கரிலான அற்புதமான தங்குமிடத்தைக் கொண்ட வளாகத்தில் அமைந்துள்ளது. JGU 1:15 என்கிற ஆசிரியர்-மாணவர் விகிதாசாரத்தைக் கொண்டிருக்கும் ஆசியாவில் உள்ள சில பல்கலைக் கழகங்களுள் ஒன்று. இது உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மிகச் சிறந்த கல்வித் தகுதிகளையும் அனுபவத்தையும் கொண்ட பேராசிரியர்களை நியமித்துள்ளது. JGU ஐந்து பள்ளிகளை நிறுவியுள்ளது: Jindal Global Law School, Jindal Global Business School, Jindal School of International Affairs, Jindal School of Government and Public Policy and Jindal School of Liberal Arts and Humanities.
மேலும் விவரங்களுக்கு, http://www.jgu.edu.inஐ பார்க்கவும்.
ஊடகத் தொடர்பு:
Ms Kakul Rizvi
[email protected]
+91-8396907273
Additional Director
Communications and Public Affairs
O.P. Jindal Global University
Share this article