மும்பை, November 29, 2017 /PRNewswire/ --
- புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் புகைப்பிடிப்பதை நிறுத்தவும் மேலும் அவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட்டு ஒரு புகையில்லா வாழ்க்கை வாழவும் Kwitz® உதவி செய்கிறது.
- Kwitz ® என்பது ஒரு நிகோடின் மாற்று சிகிச்சை (NRT) ஆகும். இது மூன்று மாதங்களுக்கு மேல் புகைபிடிப்பதைக் குறைக்க உதவுகிறது
Glenmark Pharmaceuticals Limited, என்னும் ஒரு ஆராய்ச்சி தலைமையிலான உலகளாவிய ஒருங்கிணைக்கப்பட்ட மருந்து நிறுவனம், இன்று Kwitz® ஐ வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது, ஒரு நிகோடின் மாற்று சிகிச்சை மருத்துவமுறைக்கு ஒப்புக்கொண்டு புகை இல்லாத வாழ்க்கையை நோக்கிய பயணத்தில் ஒரு படி எடுத்து வைக்க இது உதவுகிறது. Kwitz® நிகோடின் கம் இரண்டு வகைகளில் கிடைக்கும். நாள் ஒன்றுக்கு 20 சிகரெட்டுகளுக்கு குறைவாக புகைப்பிடிப்பவர்களுக்கு Kwitz® 2மிகி அளவு ஒரு OTC தயாரிப்பாகவும், நாள் ஒன்றுக்கு 20 சிகரெட்டுகளுக்கு அதிகமாக புகைப்பிடிப்பவர்களுக்கு Kwitz® 4மிகி அளவு ஒரு பரிந்துரைக்கப்பட்ட தயாரிப்பாகவும் கிடைக்கிறது.
(Logo: http://mma.prnewswire.com/media/451507/PRNE_Glenmark_Logo.jpg )
ஒரு நிகோடின் மாற்று சிகிச்சை (NRT) தயாரிப்பான Kwitz®, சிகரெட்டைச் சார்ந்திருப்பதைப் படிப்படியாகக் குறைப்பதன் மூலம் புகைப்பழக்கம் உள்ளவர்கள் முற்றிலும் புகைப்பதில் இருந்து வெளியேற தயாராக இருப்பவர்களுக்குச் சிகிச்சை வழங்குகிறது. NRTக்கள் சிகரெட் புகைப்பதற்கு பதிலாக ஒரு குறைந்த அளவு நிகோடின் கொண்டு சிகரெட் புகைக்க வேண்டும் என்ற ஆவலைக் கட்டுபடுத்தி அதனை நிறுத்தவும் திரும்பவும் புகைக்க வேண்டும் என்ற எண்ணம் மீண்டும் வராமல் கட்டுப்படுத்தவும் உதவி செய்கிறது. புகையிலை போல் அல்லாமல், இம்முறை பயனர்கள் நிகோடின் எடுத்துக்கொள்ளவும், புகை மூலம் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களான கார்பன் மோனாக்சைடு, தார் மற்றும் இதர உறுத்திகள் போன்றவை இல்லாமல் புகையில்லாத வாழ்க்கையை அடைய ஒரு பாதுகாப்பான வழியை அளிக்கிறது.
Glenmark Pharmaceuticals Ltd இன் தலைவர் மற்றும் இந்தியா, மத்தியகிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவுக்கான தலைவர் பொறுப்புக்களை வகிக்கும் Sujesh Vasudevan அவர்கள் இந்த தயாரிப்பின் அறிமுக விழாவின் போது, "ஒரு நிகோடின் மாற்று சிகிச்சையைக் கொண்ட Kwitz® ஐ வழங்குவதில் Glenmark பெருமை கொள்கிறது. தனிநபர்கள் படிப்படியாக ஒரு எளிய வழிமுறைமூலம் புகைப்பதை நிறுத்த ஒரு நிலையான வழியை Kwitz® கண்டுபிடிக்க உதவும் என்று நம்புகிறேன்." மேலும் அவர், "Kwitz ® ஒரு தயாரிப்பு அல்ல, முற்றிலும் புகைப்பிடிப்பதில் இருந்து வெளியேற விரும்புபவர்கள் மற்றும் அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் ஆதரவு அளித்து அவர்களுக்கு உதவி செய்வதாகும் ."
WHO மதிப்பீட்டின்படி புகையிலை பயன்பாடு (புகைபிடித்தல் மற்றும் புகைபிடிக்காத) தற்போது சுமார் 6 மில்லியன் இறப்புக்களை ஏற்படுத்துவதாகவும், இவற்றில் பலவும் முன்கூட்டியே ஏற்படுவதாக அறியப்படுகிறது. உலகின் பெரும்பான்மையான மக்கட்தொகை (80%) குறைந்த அல்லது நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் வாழ்கிறது, மேலும் 49 நாடுகளில் பெண்களை விட பத்து மடங்கு அதிகமாக ஆண்கள் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளது. சராசரியாக, வாழ்நாளில் 12 ஆண்டுகள் வரை புகைபிடிப்பதன் காரணமாக இழக்கப்படுகிறது. உலகளாவிய அளவில் தற்போதைய புகைபிடித்தல் முறைகள் தொடர்ந்து இருந்தால், 2020 ஆம் ஆண்டு வாக்கில் புகைபிடிப்பதன் காரணமக சுமார் 10 மில்லியன் இறப்புகள் ஏற்படும்.
இந்தியாவில், புகையிலை தொடர்பான நோய்களால் தினமும் 2,200 பேர் இறக்கிறார்கள், இது, 2020 ஆம் ஆண்டளவில் 1.5 மில்லியனை எட்டிவிடும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கணித்துள்ளது. இந்தியாவில் வாய்வழியான புகையிலை நுகர்வு அதிகமாக உள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரச் சுமை சுமார் ரூ. 2.5 மில்லியன் வரை நேரடி மருந்து செலவுகள், சிகிச்சையளிப்பதற்கு, புகையிலை தொடர்பான நோய்களால் முன்கூட்டியே இறந்தவர்களின் வருமான இழப்பு ஆகியவற்றின் காரணமாக அதிகரித்துள்ளது.
Glenmark ShwaaS பற்றி:
நோயாளிகளின் வாழ்க்கையை சிறப்பாக்க க்ளென்மார்க் Glenmark உறுதியளித்துள்ளது. ஒவ்வாமை மூச்சுக்குழாய் அழற்சி, இடியோபதிக் நுரையீரல் ஃபைப்ரோஸிஸ், மற்றும் ஆஸ்துமா மற்றும் COPD போன்றவற்றுக்காக தொடர்ந்து புதிய தயாரிப்புக்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
நோயாளிகளின் வாழ்வை மேம்படுத்தவும் சுவாசத்தொடர்பான நோய்களுக்கான புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதை Glenmark மையமாகக் கொண்டுள்ளது. Glenmark ஆனது Airz பிராண்டின் கீழ் துரிதமாய் செயல்படும் முதல் உலர்பொடி இன்ஹேலர்களான Glycopyrronium மற்றும் Digihaler என்ற பிராண்டின் கீழ் முதல் டிஜிட்டல் டோஸ் இன்ஹேலர் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
Glenmark Pharmaceuticals Ltd பற்றி:
Glenmark Pharmaceuticals Ltd (GPL) என்பது ஒரு ஆராய்ச்சி சார்ந்த, உலகளாவிய, ஒருங்கிணைந்த மருந்து நிறுவனமாகும். வருவாய் அடிப்படையில் உலகின் முதல் 75 பார்மா மற்றும் பயோடெக் நிறுவனங்களில் இடம்பிடித்துள்ளது (SCRIP 100 தரவரிசை ஆண்டு 2017 ல் வெளியிடப்பட்டது). புதிய மூலக்கூறுகள் NCE க்கள் (புதிய இரசாயன நிறுவனங்கள்) மற்றும் NBE க்கள் (புதிய உயிரியல் நிறுவனங்கள்) கண்டுபிடிப்பதில் Glenmark ஒரு முக்கியமானதாகும். Glenmark பல மருத்துவ மூலக்கூறுகளைக் கொண்டு மற்றும் புற்றுநோயியல், தோல் நோய் மற்றும் சுவாச மண்டலங்களில் கவனம் செலுத்துகிறது.
இந்தியாவில் உள்ள பிராண்டட் ஜெனரடிக் சந்தையில் இந்நிறுவனம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. Glenmark க்க்கு ஐந்து நாடுகளில் 16 உற்பத்தி வசதிகளும், ஆறு R & D மையங்களும் உள்ளன. Glenmark இன் சேவைகளுக்கு அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய சந்தைகளில் தேவையுள்ளது. API வணிகமானது அமெரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட நாடுகளில் அதன் தயாரிப்புகளை விற்கிறது.
ஆதாரம் -
மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்:
Ramkumar Uppara,
[email protected],
+91-98201-77907,
Sr Manager - Corporate Communication,
Glenmark Pharmaceuticals
Share this article