சென்னை, நவம்பர், November 28, 2017 /PRNewswire/ --
மாசற்ற எரிசக்தியை ஊக்குவிப்பதற்கான நோக்கத்துடன், Technip FMC தனது CSR திட்டத்தின் மூலம் தமிழ்நாடு, இந்தியாவில் உள்ள கரூர் மாவட்டத்தில் மார்னிங் ஸ்டார் உயர்நிலைப் பள்ளியில் 6 கிலோவாட் சூரிய மின்சக்தி அமைப்பை நிறுவுவதற்கான முன்முயற்சியை எடுத்துள்ளது.
(Logo: http://mma.prnewswire.com/media/464564/TechnipFMC.jpg )
(Photo: http://mma.prnewswire.com/media/610434/TechnipFMC_Inauguration_Solar_Panel.jpg )
கரூர் லயன்ஸ் கிளப் தொண்டு நிறுவனம் மூலம்
நடத்தப்படும் மார்னிங் ஸ்டார் உயர்நிலைப்பள்ளி 1960 ல் தொடங்கப்பட்டது. இது சமுதாயத்தில் நலிவுற்ற பிரிவுகளில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி வழங்குகிறது.
சூரிய சக்தி மின்சக்தி அமைப்பை நிறுவுவது பற்றி, Technip India Limited-ன் சென்னை அலுவலகத்தின் தலைமை இயக்க அதிகாரி D Manohar Devadoss கூறுகையில், "புதைபடிவ எரிபொருள்கள் உலகெங்கிலும் ஆற்றலின் பிரதான ஆதாரமாக பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் அது வேகமாக வீழ்ச்சியடைகிறது, தற்போது பூமி உலகளாவிய வெப்பமயமாதலை நோக்கிச் செல்வதால், உலகளாவிய அளவில் மாற்று ஆற்றல் சக்திகளுக்கானத் தேடல் ஆரம்பித்து விட்டது, மேலும் நமது நாடு புதுப்பிக்கத்தக்க ஆற்றலைக் கொண்டபரந்த சூரிய ஆற்றல் வளம் மிக்கது. இதை மனதில் கொண்டு சூரிய சக்தி கிரிட் நிறுவும் கோரிக்கையுடன், எங்களது சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் ஒரு நிலையான தீர்வை வழங்கவும், பள்ளியின் எரிசக்தித் தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டத்தை எடுத்துக்கொள்ளவும்நாங்கள் உடனடியாக உடன்பட்டோம்."
இந்த முறையில், கூரை மேல் பொருத்தப்பட்டுள்ள சூரிய தகடுகளிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் கிரிட்டுக்கு அனுப்பப்பட்டு மேலும் கிரிட்-ல் இருந்து பெறப்படும் மின்சக்திக்கான கட்டணம் கணக்கிடப்படுகிறது. ஆகஸ்ட் 2017 ல் TNEB மூலம் கிரிட் மீட்டர் நிறுவப்பட்ட பிறகு, சோலார் மின்சக்தி உற்பத்தி மூலம் தொடர்ச்சியான அடிப்படையில் மின்சாரம் பள்ளியால் பயன்படுத்தப்படுகிறது.
மார்னிங் ஸ்டார் உயர்நிலைப்பள்ளியின் செயலாளர் திரு லயன் N Karuppusamy அவர்கள், "சூரிய மின்சக்தி அமைப்பை நிறுவியதன் காரணமாக, பள்ளிக்கான மின்சாரத்தேவை போக உபரி மின்சாரம் TNEBக்கு வழங்கப்படுவதால் மின்சார கட்டணம் கணிசமாக குறைந்துள்ளது. எங்கள் மின்சாரத் தேவைகளுக்கு ஒரு நிலையான மற்றும் நிரந்தர தீர்வை வழங்கிய Technip FMC க்கு நன்றி. " என தெரிவித்தார்.
Technip FMC பற்றி
கடலடி, கடலோர/கடல்சார் மற்றும் மேற்பரப்புத் திட்டங்களில் உலகளாவிய தலைவராக Technip FMC உள்ளது. எங்கள் தனியுரிமை தொழில்நுட்பங்கள் மற்றும் உற்பத்தி அமைப்புகள், ஒருங்கிணைந்த நிபுணத்துவம் மற்றும் விரிவான தீர்வுகள் மூலம், நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களின் திட்டப்பணி பொருளாதாரத்தை மாற்றி வருகிறோம்.
நாங்கள் பிரத்யேக திட்டப்பணியை வழங்குவதன் மூலம் கருத்திட்டத்திலிருந்து வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி மற்றும் அதற்கு அப்பால் செயல்படுவதிலும் தனித்துவமாக இருக்கிறோம். எங்களது புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட செயல்திறன் மூலம், எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை வளரும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம்.
எங்கள் 44,000 ஊழியர்களில் ஒவ்வொருவரும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு உறுதியான உறுதிப்பாடு மற்றும் நோக்கத்திற்காக புதுமை, கலாச்சார சவால்களை எதிர்கொள்ளுதல், மற்றும் சிறந்த முடிவுகளை எவ்வாறு மதிப்பிடுவது ஆகியவற்றை மறுபரிசீலனை செய்வதன் மூலம் இயக்கப்படுகிறார்கள்.
எங்களைப் பற்றி மேலும் அறியவும் மற்றும் உலக ஆற்றல் தொழிற்துறையின் செயல்திறனை எப்படி மேம்படுத்துகிறோம் என்பதை தெரிந்துகொள்ளவும், http://www.technipfmc.com/ மிற்கு சென்று பார்க்கவும். மேலும் எங்களை Twitter இல் @TechnipFMC பின்பற்றவும்.
ஊடகத் தொடர்பு:
Swayantani Ghosh
[email protected]
+91-22-6700-2019
Head - Communications, CSR, India
TechnipFMC
Share this article