மும்பை, November 13, 2017 /PRNewswire/ --
- Glenmark என்பது இந்தியாவில் சோரியாசிஸ் நோயை நிர்வகிப்பதற்கான புதுமையான வாய்வழி மருந்தான Apremilastஐ வெளியிடுகின்ற முதல் நிறுவனம் ஆகும்
- Glenmark என்பது இந்தியாவில் Apremilastக்கான DCGI அங்கீகாரத்தையும் சந்தைப்படுத்தல் அங்கீகரிப்பையும் பெற்ற முதல் நிறுவனம் ஆகும்
- Apremilast என்பது ஒரு வாய்வழி சிகிச்சை, இது தற்போது இந்தியாவில் கிடைக்கும் பல்வேறு சிகிச்சைகளின் குறைபாடுகளுக்கு தீர்வு அளிக்கிறது
- Apremilast இந்தியாவிலே API முதல் உருவாக்கங்கள் வரை Glenmark நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும்
Glenmark Pharmaceuticals Limited, ஒரு ஆராய்ச்சி சார்ந்த உலகளாவிய ஒருங்கிணைந்த மருந்து நிறுவனம், இந்தியாவில் Apremilast வெளியீட்டை அறிவித்தது. Apremilast என்பது இந்தியாவில் சோரியாசிஸுக்கான முதல் நவீன வாய்வழி உட்செலுத்தல் சிகிச்சை. Apremilast என்பது ஒரு பாஸ்போடையிஸ்டரேட் 4 (PDE4) தடுப்பான், இது நடுநிலையானது முதல் கடுமையான சோரியாசிஸுக்கு சிகிச்சையளிக்க பரிந்துரைக்கப்படுகின்றது. Apremilast உடைய வெளியீடானது சோரியாசிஸுக்கான சிகிச்சையை புரட்சிகரமாக மாற்றி, இந்த நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 33 மில்லியன் இந்தியர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.
(Logo: http://mma.prnewswire.com/media/451507/PRNE_Glenmark_Logo.jpg )
Apremilas என்பது தற்போது இந்தியாவில் கிடைக்கும் சிகிச்சைகளின் குறைபாடுகளுக்கு தீர்வு அளிக்கின்ற, சோரியாசிஸுக்கான ஒரு மேம்படுத்தப்பட்ட வாய்வழி சிகிச்சை ஆகும். இது நோய் வளர்ச்சியின் ஆரம்ப நிலையிலே ஒரு இலக்குவைக்கப்பட்ட முறையில் செயல்படுகின்றது. மேலும், இது ஒரு நோய்தடுப்பாற்றல் மாற்றி, ஆனால் நாட்டில் கிடைக்கும் பிற மருந்துகள் நோய்தடுப்பாற்றல் அடைக்கிகளாக இருக்கின்றன, அதில் பயாலஜிக்க்குகளும் உள்ளடங்கும், மற்றும் பெரும்பாலும் புற்றுநோயியல் நிலைமைகளின் சிகிச்சைகளுக்காக பரிந்துரைக்கப்படுகின்றன. நோய்தடுப்பாற்றல் அடைக்கிகள் உடலானது பல்வேறு தொற்றுகளுக்கு உட்படும்படியாக உடலை மாற்றுவதன் மூலம் நோய்தடுப்பு மண்டலத்தை அடக்குகின்றன. Apremilast ஒரு நோய்தடுப்பாற்றல் மாற்றி என்கிற வகையில் நோய்தடுப்பு மண்டலத்தை அடக்காமல், சோரியாசிஸ் நிலைமையை ஒரு அணுகளுக்கு இடையேயான நிலையில் சிகிச்சை அளிக்கிறது, இது நாடு முழுவதிலும் உள்ள சோரியாசிஸ் நோயாளிகளுக்கு பலன் அளிக்கும்.
Apremilast என்பது ஒரு வாய்வழி சிகிச்சை, இது சுயமாக மருந்தளிக்கப்பட முடியும், இது தற்போதுள்ள ஊசிபோடக்கூடிய சிகிச்சைகளைப் போல ஒரு மருத்துவ உதவியாளர்களால் மருந்தளிக்கப்பட வேண்டியது கிடையாது. மேலும், Apremilast என்பது ஒரு பாதுகாப்பான மருந்து, இதற்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற பிற உறுப்புகள் மீது எந்த தாக்கமும் கிடையாது மற்றும் CBC, கல்லீரல் மற்றும் சிறுநீரக பரிசோதனை அல்லது TB நோய்கண்டறிதல் போன்ற தற்போது பிற சிகிச்சைகளுக்குத் தேவைப்படுகின்ற வழக்கமான ஆய்வக நோய்கண்டறிதல்கள் தேவைப்படாது.
Glenmark நிறுவனம் Apremilastஐ 'Aprezo' என்கிற பிராண்ட் பெயரின் கீழ் வெளியிட்டுள்ளது, சோரியாசிஸ் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுகின்றது. Glenmark ஒழுங்குசீரமைப்பு தேவைகளுக்கு ஏற்ப மூலக்கூறு மீதான மருத்துவ பரிசோதனைகளை நடத்திய பின்னர் Apremilast க்கான ஒப்புதலை DCGI இடம் இருந்து பெற்றது.
Sujesh Vasudevan, தலைவர் மற்றும் தலைமை - இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா, Glenmark Pharmaceuticals, இவ்வாறு கூறினார், "Glenmark நிறுவனம் Apremilastஐ அறிமுகம் செய்யும் முதல் நிறுவனம் என்பதில் பெருமிதம் கொள்கிறது, இது இந்தியாவில் சோரியாசிசுக்கான ஒரு மேம்பட்ட வாய்வழியான மற்றும் பாதுகாப்பான சிகிச்சை. Glenmark நிறுவனம் தோலியல் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவருகிறது, இந்திய நோயாளிகளுக்கு மேம்பட்ட சிகிச்சைகளை கொண்டு வந்துள்ளது. Apremilast வெளியீட்டுடன், நாட்டிலுள்ள மில்லியன் கணக்கான சோரியாசிஸ் நோயாளிகளின் சிகிச்சை உக்தியை நாங்கள் உருமாற்ற இலக்கு வைக்கின்றோம்."
Rajesh Kapur, மூத்த துணை தலைவர் - விற்பனை & சந்தைப்படுத்தல், Glenmark Pharmaceuticals, இவ்வாறு கூறினார், "Apremilast என்பது தற்போது நாட்டில் கிடைக்கும் சிகிச்சையை காட்டிலும் பாதுகாப்பான மற்றும் திறன்வாய்ந்த சிகிச்சை ஆகும். Apremilast என்பது நாட்டிலே சோரியாசிஸுக்காக கிடைக்கப்பெறும் ஒரே வாய்வழி மருந்து ஆகும். இதோடு கூடுதலாக, இது வழக்கமான ஆய்வக கண்காணிப்பு போன்ற தற்போதுள்ள சிகிச்சைகளின் சில குறைபாடுகளுக்கு தீர்வு அளிக்கிறது. இந்த புரட்சிகரமான சிகிச்சையின் மூலமாக இந்தியாவிலுள்ள மில்லியன் கணக்கான நோயாளிகள் இப்போது ஒரு சிறப்பான வாழ்க்கைத் தரத்தை வாழ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்."
உலக அளவில், சுமார் 3% உலக மக்கள் தொகையினருக்கு ஏதோ ஒரு வகையான சோரியாசிஸ் இருக்கிறது. நாடுகளில் சோரியாசிஸ் நோயின் இருப்புநிலையானது 0.09% முதல் 11.43% வரை இருப்பதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்துகின்றது, இது சோரியாசிஸ் நோயை மோசமான பிரச்சனைகளில் ஒன்றாக மாற்றுகின்றது.
இந்தியா தற்போது உலகில் அதிக நோயாளிகள் இருக்கும் இடமாக மாறிவிட்டது மற்றும் சுமார் 33 மில்லியன் சோரியாசிஸ் நோயாளிகள் இருப்பதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சோரியாசிஸ் மீதான ஒரு ஆய்வில், லக்னவ், திப்ருகார்ஹ், கல்கத்தா, பாட்னா, தர்பங்கா, புது தில்லி மற்றும் அமிர்தசரஸ் ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, மொத்த தோல் நோயாளிகளில் 0.44 மற்றும் 2.2% அளவுக்கு இடையே சோரியாசிஸ் நிகழ்வு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆணுக்கு பெண் விகிதாச்சாரம் (2.46:1) மிகவும் அதிகமாக இருப்பதாகவும் 20-39 வயதினரிடையே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
Apremilast நாட்டிலுள்ள 33 மில்லியன் சோரியாசிஸ் நோயாளிகளின் சிகிச்சையை புரட்சிகரமாக மாற்றும். Apremilast என்பது இந்தியாவில் சோரியாசிஸ் சிகிச்சைக்கு மட்டுமேயான முதல் வாய்வழி சிகிச்சை ஆகும்; இது மருந்தளிப்பதற்கு வசதியானது, இது தற்போதுள்ள சிகிச்சைகளைக் காட்டிலும் பாதுகாப்பானது மற்றும் நாட்டில் சோரியாசிஸ் சிகிச்சை முறையை உருமாற்றும்.
Glenmark தோலியல் குறித்து:
Glenmark என்கிற நிறுவனம் எப்போதுமே தோலியல் துறையிலே ஒரு வல்லமையான முன்னிலையைக் கொண்டுள்ளது, இதில் பல முன்னோடியான உருவாக்கங்கள் முதல் முறையாக இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளன. நாட்டின் எல்லா பகுதிகளிலும் இருந்து வரும் வாடிக்கையாளர்கள் Glenmark - தோலியலை ஒரு புதுமையான மற்றும் தரம் சார்ந்த தொழிலாக, Candid, Candid B, Elovera, Scalpe, Onabet, Syntran உள்ளிட்ட பல பெரிய பிராண்டுகளின் அலகை கொண்டுள்ளதாக பார்க்கின்றனர். இந்நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரிக்கும்விதமான சந்தை பங்கு லாபத்தை காட்டியுள்ளது, 8.3% (MAT ஆகஸ்ட்'15) முதல் 9.3 % தற்போது (MAT ஆகஸ்ட் '17).
Glenmark Pharmaceuticals Ltd குறித்து:
Glenmark Pharmaceuticals Ltd. (GPL) என்பது ஒரு ஆராய்ச்சி சார்ந்த, உலகளாவிய, ஒருங்கிணைந்த மருந்து நிறுவனம். இது வருவாய் அடிப்படையில் உலகின் முதன்மையான 75 மருந்து மற்றும் உயிரிதொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக தரவரிசைப்படுத்தப்பட்டு உள்ளது (SCRIP 100 தரவரிசைகள் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது). Glenmark என்பது NCEகள் (புதிய இரசாயன பொருள்) மற்றும் NBEகள் (புதிய உயிரியல் பொருள்) இரண்டிலும் புதிய மூலக்கூறுகளை கண்டறிவதில் முதன்மையான நிறுவனமாக திகழ்கிறது. Glenmark இடம் பல்வேறு மூலக்கூறுகள் மருத்துவ வளர்ச்சியின் பல்வேறு நிலைகளில் கொண்டுள்ளது மற்றும் புற்றுநோயியல், தோலியல் மற்றும் சுவாசவியல் ஆகிய பகுதிகளில் கவனம் செலுத்துகின்றது.
இந்நிறுவனத்திற்கு பிராண்டட் ஜெனிரிக் சந்தையில் இந்தியா உள்ளிட்ட வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளில் கணிசமான இருப்புநிலையை கொண்டுள்ளது. Glenmark இடம் 16 உற்பத்தி வசதியகங்கள் ஐந்து நாடுகளில் உள்ளன மற்றும் இதனிடம் ஆறு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் உள்ளன. Glenmark உடைய ஜெனிரிக் தொழில் யு.எஸ். மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் தேவைகளுக்கு சேவை செய்கின்றது. API தொழில் தன் தயாரிப்புகளை யு.எஸ், ஐரோப்பிய ஐக்கியத்தில் உள்ள பல்வேறுன் நாடுகள், தென் அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்கின்றது.
ஆதாரம்:
ஊடக தொடர்பு:
Ramkumar Uppara
[email protected]
+91-9820177907
Sr. Manager, Corporate Communications
Glenmark Pharmaceuticals
Share this article